என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
ஜெயிலில் உள்ள பிரபல ரவுடியிடம் செல்போன் பறிமுதல்
- புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் பிரபல ரவுடி வினோத் என்கிற வினோத்குமார் அடைக்கப்பட்டுள்ளார்
- செல்போன் சிறைக்குள் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை காலாப்பட்டு மத்திய சிறையில் பிரபல ரவுடி வினோத் என்கிற வினோத்குமார் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு நடந்த ஒதியஞ்சாலை பாம்ரவி கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட வினோத்குமார் விசாரணை கைதி பிளாக் 1-ல் உள்ளார். சம்பவத்தன்று சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் சந்தேகத்தின் பேரில் வினோத்குமார் அடைக்கப்பட்ட அறையில் சென்று பார்த்த போது அங்கு செல்போன் இருந்தது.
அதனை பறிமுதல் செய்த சிறை சூப்பிரண்டு பாஸ்கரன் இது குறித்து நீதிமன்றத்திற்கு அறிக்கை தாக்கல் செய்தார். நீதிமன்ற உத்தரவினையடுத்து காலாப்பட்டு சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ, வினோத்குமார் மீது வழக்கு பதிவு செய்தார்.
மேலும் கைதி வினோத்குமாரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. செல்போன் சிறைக்குள் எப்படி வந்தது நீதிமன்றத்திற்கு சென்று திரும்பி வந்தபோது கொண்டு வந்தார்களா? அல்லது வேறு ஏதும் வழியாக செல்போன் சிறைக்குள் கொண்டுவரப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






