என் மலர்
புதுச்சேரி
- மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார்.
- துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் உப்பளம் தலைமை அலுவலகத்தில் நடந்தது.
அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் தலைமை தாங்கினார். மாநில அவை தலைவர் அன்பானந்தம் முன்னிலை வகித்தார். பேரறிஞர் அண்ணாவின் 115-ம் ஆண்டு பிறந்தநாள் விழாவை கொண்டாடுவது சம்பந்தமாகவும் ஆலோசிக்கப் பட்டது.
கூட்டத்தில் மாநில துணை தலைவர ராஜா ராமன், இணை செயலா ளர்கள் வீரம்மாள், ஆர்.வி.திருநாவுக்கரசு, பொரு ளாளர் ரவிபாண்டுரங்கன், நகரர செயலாளர் அன்பழ கன் உடையார், துணைச் செயலாளர்கள் உமா, எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, மூர்த்தி, காந்தி, மணவாளன், மேற்கு மாநில அம்மா பேரவை செயலாளர் சுத்துக்கேணி பாஸ்கரன்,
மாநில இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன். மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலா ளர் செல்வம், மாநில தொழில்நுட்ப பிரிவு செயலாளர் தினேஷ்குமார், நகர தலைவர்கள் கணேஷ், சிவா.
தொகுதி செயலாளர்கள் ஆறுமுகம், கமல்தாஸ், சிவகுமார், பாஸ்கர், துரை, கருணாநிதி, சம்பத், ராஜா, கோபால், வேலவன், தர்மலிங்கம், குணசேகர், சண்முகதாஸ், பொதுக்குழு உறுப்பினர்கள் லோகநாதன், நாகமுத்து, மாநில மாநில எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் மோகன்தாஸ், இணை செயலாளர் கணேசன்,
ஜெயலலிதா பேரவை இணைச் செயலாளர் சுரேஷ், மாநில எம்.ஜி.ஆர் இளைஞர் அணி துணை தலைவர் குணாளன், மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை, இணை செயலா ளர் கேசவன், துணை செயலாளர் ராசு, சிறுபான்மை பிரிவு இணைச் செயலாளர்கள் ஜானிபாய், ரபீக் உட்பட பலர் திரளாக கலந்து கொண்டனர்.
- முன்னாள் எம்.பி. ராமதாஸ் வலியுறுத்தல்
- விவசாயம் எப்படி முக்கியமோ அதேபோல அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
புதுச்சேரி:
புதுவை முன்னாள் எம்பி பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
புதுவை அரசின் வேளாண் துறையில் பணிபுரியும் பட்டதாரி வேளாண் அலுவலர்கள் கடந்த சில நாட்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருவது துரதிருஷ்ட வசமானது.
புதுவையின் பொருளா தாரத்தில் ஆதார துறையா கவும் முதுகெலும்பாகவும் விவசாயத் துறை உள்ளது. விவசாயம் எப்படி முக்கியமோ அதேபோல அதிகாரிகளும் முக்கியமானவர்கள்.
அவர்கள் மனக்குறை யோடு பணி புரிவது விவசாய வளர்ச்சியை பாதிக்கும். பட்டதாரி வேளாண் அலுவலர்களின் எல்லா கோரிக்கைகளும் நியாயமானவை. உடனடியாக ஏற்றுக்கொள்ள வேண்டியவை.
விவசாய அலுவலர்கள் 32 ஆண்டுகளாக ஒரே பதவியில் உள்ளனர். 8 ஆண்டுக்கு ஒருமுறை பதவி உயர்வு வழங்க வேண்டும் என்ற விதி உள்ளது. இது வழங்கப்பட்டிருந்தால் 4 முறை பதவி உயர்வு பெற்றி ருப்பார்கள்.
ஆனால் ஒரே பதவி யிலிருந்து ஓய்வுபெறு கின்றனர். இது நியாயமற்றது. சீனியாரிட்டி அடிப்படை யில் உடனடியாக துணை இயக்குனர்கள் பதவி உயர்வு வழங்க வேண்டும்.
வேளாண் அலுவலர் காலி பணியிடங்களில் சேர பிஎஸ்சி வேளாண் பட்டப்படிப்பு அவசியம் என பணி நியமன விதிகள் திருத்தப்பட வேண்டும். காலி பணியிடங்கள் அனைத்தையும் விதிக ளின்படி நிரப்ப வேண்டும். தகுதி வாய்ந்த டாக்டர் பட்டம் படித்த கூடுதல் வேளாண் இயக்குனரை முதல்வராக நியமிக்க வேண்டும். கோரிக்கைகளை நிறைவேற்றி வேளாண்துறை ஊழியர்கள் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
- கவர்னருக்கு மாணவர்-பெற்றோர் நலச்சங்கம் மனு
- சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.
புதுச்சேரி:
புதுச்சேரி கவர்னருக்கு மாணவர் மற் றும் பெற்றோர் நலச்சங்க தலைவர் வை.பாலா அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:-
புதுச்சேரி அரசால் சென்டாக் கலந்தாய்வு மூலம் தனியார் மருத்து வக் கல்லூரியில் சேர்க்கை பெறும் மாணவர்களுக்கு பெருந்தலைவர் காமராஜர் கல்வி உதவித்திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு ரூ.2.25 லட்ச மும், பொறியியல் படிப்புக்கு ரூ.25 ஆயிரமும், செவிலியர் படிப்புக்கு ரூ.16 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் சென்டாக் மூலம் அரசு ஒதுக்கீட்டில் தனியார் கல்லூரிகளில் சேர்க்கை பெறும் எஸ்.சி., எஸ்.டி. பிரிவு மாணவர்களுக்கு ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் முழு கட்டணமும் செலுத் தப்படுகிறது. 2023-24-ம் ஆண்டுக்கான உயர்க்கல்வி கட்டணங்கள் விரைவில் அறிவிக்கப்பட்டு சென்டாக் மூலம் இளநிலை மருத்துவம், பல்மருத்துவம், கால்நடை மருத்துவம், மற்றும் செவிலியர் படிப்பிற்கான கலந் தாய்வு நடைபெற உள்ளது.
தமிழகத்தில் அரசு பள்ளி யில் பயின்று அரசு மற்றும் தனியார் கல்லூரிகளில் உள் ஒதுக்கீட்டில் மருத்துவம், பல் மருத்துவம், கால்நடைமருத்துவம், செவிலியர் மற் றும் பிற படிப்பில் சேரும் மாணவர்களுக்கு தமிழக அரசால் முழுகல்வி கட் ட்ணமும் செலுத்தப்பட்டு வருகிறது.
அதேபோல், புதுவை அரசால் புதிதாக கொண்டுவரப்பட்டுள்ள 10 சதவீத உள்ஒதுக்கீட்டு இடங்களில் சேர்க்கை பெரும் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி கட் டணத்தை முழுவதுமாக அரசே செலுத்த ஆவண செய்ய வேண்டும்.
இவ் வாறு அதில் கூறியுள்ளார்.
- தலித் விடுதலை பேரவை முதலமைச்சருக்கு கோரிக்கை
- பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை வேறு தொகுதி அல்லது கொம்யூன் அளவில் இடமாற்றம் செய்ய வேண்டும்.
புதுச்சேரி:
புதுச்சேரி தலித் விடுதலை பேரவையின் மாநில தலைவர் ரோக.அருள்தாஸ் தலைமையில் பொதுச்செயலாளர் பொன்னிவேல், பேரவை தலைவர் முருகையன், அமைப்புச் செயலாளர் கண்ணன், ஒருங்கி ணைப்பாளர் மகேந்திர வேலன், தலைமை நிலைய செயலாளர் இளவயதன், துணை ஒருங்கிணைப்பாளர் ரஜினி குமார் ஆகியோர் முதல்-அமைச்சர் ரங்கசாமிக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்ப தாவது :-
புதுவை அரசு பள்ளி களில் உள்ளூர் ஆசிரி யர்களை நியமிக்க கூடாது. பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் பணி செய்யும் ஆசிரியர்களை வேறு தொகுதி அல்லது கொம்யூன் அளவில் இடமாற்றம் செய்ய வேண்டும்.
ஆசிரியர்களை கண்காணிக்க குழு அமைக்க வேண்டும். புதுச்சேரி பா.ஜனதா-என்.ஆர். காங்கிரஸ் அரசு தேர்தல் வாக்குறுதியில் 15 ஆயிரம் காலி இடங்களை உடனே நிரப்புவதாக அறிவித்திருந்தனர். ஆனால் இதுவரை நிரப்பப்படாமல் உள்ளது. வேலை கிடைக்காமல் இளைஞர்கள் சீரழிந்து வருகின்றனர். தற்பொழுது பணி ஓய்வு பெற்ற ஆசிரி யர்களை நியமிக்க அறிவிப்பு வெளியிட்டுள்ளதை கண்டிக்கின்றோம்.
படித்த பட்டதாரிகள் வேலை வாய்ப்பிற்காக காத்துக்கி டப்பவர்களை குறைந்தபட்ச சம்பளத்தி லாவது பணியில் அமர்த்த வேண்டும். ஆதிதிராவிடர் நலத்துறையில் 70-க்கும் மேற்பட்ட காலி பணியி டங்களை உடனடியாக நிரப்ப எடுக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.
- புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது.
- 3 மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் இல்லாமல் காத்திருப்பதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி பஸ் நிலையத்தில் இருந்து சென்னைக்கு 15 நிமிடங்களுக்கு ஒருமுறை அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நேற்று இரவு 9 மணிக்கு மேல் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு பஸ்கள் எதுவும் இயக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்தனர்.
ஆனால் இரவு 11.30 மணிக்கு மேலும் பஸ் எதுவும் இயக்கப்படாததால் ஆத்திரமடைந்த 100-க்கும் மேற்பட்ட பயணிகள் பஸ் நிலையம் எதிரே மறைமலை அடிகள் சாலையில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது பற்றி தகவல் அறிந்த உருளையன்பேட்டை போலீசார் அங்கு விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட பயணிகளிடம் பேச்சு வார்த்தை நடத்தினார்.
அப்போது பயணிகள், தாங்கள் 3 மணி நேரத்திற்கு மேலாக பஸ்கள் இல்லாமல் காத்திருப்பதாக தெரிவித்து போலீசாரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் அவர்களை போலீசார் சமாதானம் செய்து பஸ்களை இயக்க நடவடிக்கை எடுத்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- நோயாளிகளிடம் குறை கேட்டார்
- மருத்துவ மனை புதுவை ஜவகர் நகர் 5-வது குறுக்கு வீதியில் ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.
புதுச்சேரி:
புதுவை பஸ் நிலையம் பின்புறம் மங்க லட்சுமி நகரில் மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் ஹோமி யோபதி மருத்துவமனை இயங்கி வந்தது.
தற்போது இந்த மருத்துவ மனை புதுவை ஜவகர் நகர் 5-வது குறுக்கு வீதியில் ஒரு வாடகை வீட்டில் செயல்பட்டு வருகிறது.
இந்த மருத்துவமனையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளதாக பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து பா.ஜனதா எம்.எல்.ஏ. அசோக்பாபு ஹோமியோபதி மருத்துவமனைக்கு சென்று திடீர் ஆய்வு செய்தார்.
அப்போது அங்கு சிகிச்சை பெற வந்த நோயாளிகளிடம் அசோக் பாபு எம்.எல்.ஏ. குறை கேட்டார். அவர்கள் ஹோமி யோபதி மருத்துவமனைக்கு வர போக்குவரத்து வசதி யில்லை. மேலும் டாக்டர்கள் மற்றும் ஊழியர்கள் பற்றாக்குைற உள்ளது.
போதுமான மருந்துகளும் இல்லை என்று அசோக்பாபு எம்.எல்.ஏ.விடம் தெரிவித்தனர்.
இதையடுத்து அசோக்பாபு எம்.எல்.ஏ. இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறையிடம் தெரிவித்து குறைகளை நிவர்த்தி செய்வதாக உறுதி அளித்தார்.
- நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.
- இதையடுத்து அந்த இடத்தில் மணலை கொட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதி பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது.
அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப்பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்பட்டது. இதற்கு தடை விதித்தாலும் தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தது. இதனால் அப்பகுதியில் கடும் நெரிசல் நிலவியது.
இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், நேரு வீதி-காந்தி வீதியில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து மொத்த மீன் வியாபாரம் செய்யும் மீனவர்களுடன் காவல்துறையினர் பேச்சு வார்த்தை நடத்தி முதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர்.
நேற்று குறைந்தஅளவே மீன்கள் நவீன மீன் அங்காடிக்கு வந்தன.இந்த நிலையில் இன்று மாநில எல்லைகளில் மீன் கொண்டுவந்த வாகனங்கள் நவீன மீன் அங்காடிக்கு திருப்பி விடப்பட்டன. 10-க்கும் மேற்பட்ட வேன்களில் கடலூர், நாகை, காசிமேடு போன்ற பகுதிகளில் இருந்து மீன், இறால், கனவா போன்ற மீன்கள் அதிகளவில் வந்தன.
10 வண்டிக்கே போதிய இடவசதியின்றி வியா பாரிகளும் மீனவர்களும் சிரமம் அடைந்தனர். நவீன அங்காடியின் கட்டிடம் பெரிய அளவில் சரியான திட்டமிடல் இன்றி கட்டப்பட்டுள்ளதாக புகார் கூறிய மீனவர்கள், மீன் கொண்டு வரும் வேன், மீன் வாங்க வரும் வியாபாரிகளின் ஆட்டோ, பொது மக்களின் வண்டிகளை நிறுத்த இட வசதியில்லை என தெரிவித்தனர்.அசம்பாவிதங்களை தவிர்க்க போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
நவீன மீன் அங்காடியில் இன்று காலை அதிகளவில் மீனவ பெண்கள் மீன்களை வாங்கி பிரித்து எடுத்து கொண்டிருந்தனர்.
அப்போது 5 பெண்களுக்கு திடீரென மின்சாரம் தாக்கியது. இதனால் அவர்கள் அலறி ஓடினர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அங்கு சோதனை செய்தனர்.
அங்கிருந்த மின் பெட்டியின் ஒயர் வெளியே தெரியும்படி இருந்தது. இதில் ஐஸ் தண்ணீர் பட்டவுடன் புகை மற்றும் நெருப்பு கிளம்பி மின்கசிவு ஏற்பட்டு மீனவ பெண்களை மின்சாரம் தாக்கியது தெரியவந்தது. இதையடுத்து அந்த இடத்தில் மணலை கொட்டி தற்காலிக பாதுகாப்பு ஏற்பாட்டை போலீசார் செய்தனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.
- தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுச்சேரி:
புதுவை திருமுடி சேதுராமன் நகர் பகுதியை சேர்ந்தவர் தீபக் (வயது 26). இவர் சென்னையில் உள்ள தனியார் ஐ.டி நிறுவனத்தில் சாப்ட்வேர் என்ஜினீயராக வேலை செய்து வந்தார்.
கடந்த சில மாதங்களாக வீட்டில் இருந்தே தீபக் வேலை செய்து வந்தார். இதற்கிடையே தீபக்கை திருமணம் செய்து கொள்ளும்படி அவரது பெற்றோர் வற்புறுத்தி வந்தனர்.
ஆனால் தீபக் தான் வேறொரு பெண்ணை காதலிப்பதாகவும் அந்த பெண்ணை தனக்கு திருமணம் செய்து வைக்கும் படி தனது பெற்றோரிடம் கூறினார். ஆனால் அவரது பெற்றோர் அதற்கு சம்மதிக்க வில்லை. இதனால் அடிக்கடி தீபக்குக்கும் அவரது பெற்றோருக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து கொண்டே இருந்து வந்தது.
பின்னர் தீபக்கின் பெற்றோர் சமாதானம் அடைந்து அந்த பெண்ணையே திருமணம் செய்து தருவதாகவும் ஆனால் சில காலம் பொறுத்து கொள்ளும்படி தெரி வித்தினர்.
ஆனால் தீபக் தனது பெற்றோர் வெறும் வார்த்தையால் சொல்கி றார்கள் என்று தவறாக நினைத்து மன உளைச்சலுடன் இருந்து வந்தார். வழக்கம்போல் தீபக் நேற்று காலை வீட்டின் மாடி அறைக்கு சென்றார்.அவர் கம்பெனி வேலை செய்ய செல்கிறார் என்று பெற்றோர் நினைத்து கொண்டனர்.
ஆனால் தீபக் மாலை 5 மணி ஆகியும் கீழே வராததால் சந்தேகம் அடைந்த தீபக்கின் அண்ணன் ஆனந்த் மாடிக்கு சென்று கதவை தட்டினார்.
நீண்ட நேரம் கதவை தட்டியும் திறக்கப்படாததால் ஆனந்த் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது தீபக் தனது வேட்டியால் மின்விசிறியில் தூக்கில் தொங்குவைதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீபக்கை மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிேசாதித்த டாக்டர்கள் தீபக் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தீபக்கின் அண்ணன் ஆனந்த் அளித்த புகாரின் பேரில் கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஆன்லைன்எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
- நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர்.
புதுச்சேரி:
புதுவை கலிதீர்தாள் குப்பம் மணக்குள விநாயகர் இன்ஸ்ட்டியூட் ஆப் டெக்னாலஜி (எம்.ஐ.டி.) கல்லூரியில் சென்னை அமேசான் நிறுவனம் சார்பில் வளாக வேலை வாய்ப்பு முகாமை நடத்தியது.
இந்த வேலை வாய்ப்பு முகாமிற்கு வருகை புரிந்த அந்நிறுவன மனித வளத்துறை மேலாளர் சிவா, அந்நிறுவனத்தின் விவரங்கள், நிறுவனத்தில் வேலை செய்வதற்கு உண்டான சூழல், எதிர்கால குறிகோள்கள், சம்பளம் பற்றிய அனைத்து விவரங்களையும் விளக்கி கூறினர். ஆன்லைன்எழுத்து தேர்வு மற்றும் நேர்முகதேர்வு ஆகிய சுற்றுக்களாக இந்த வளாக வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மணக்குள விநாயகர் கல்வி குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் தனசேகரன், துணை தலைவர் சுகுமாறன், செயலாளர் டாக்டர். நாராயணசாமி கேசவன் மற்றும் பொருளாளர் ராஜராஜன் ஆகியோர் தலைமை தாங்கினர். கல்லூரி முதல்வர் மலர்க்கண் முகாமை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் அனைத்து துறை சார்ந்த வேலை வாய்ப்பு ஒருங்கி ணைப்பாளர்களும் கலந்து கொண்ட னர்.
இந்த முகாமில் கல்லூரியின் 2023-ம் ஆண்டு, இளங்கலை பொறியியல் மற்றும் மேலாண்மை துறை மாணவ- மாணவிகள் 150-ம் மேற்பட்டோர் கலந்து கொண்டு பலர் வேலைவாய்ப்பை பெற்று பயன் அடைந்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கல்லூரி வேலைவாய்ப்பு துறை அதிகாரி ஜெயக்குமார் செய்து இருந்தார்.
- கென்னடி எம்.எல்.ஏ. நடவடிக்கையால் உடனே சீரமைப்பு
- அங்கு மரங்களை அப்புறப்படுத்தி மின்தடையை போக்குமாறு கேட்டு கொண்டார்.
புதுச்சேரி:
உப்பளம் தொகுதிக்கு ட்பட்ட இந்திரா காந்தி விளையாட்டு அரங்கு எதிரே கோலாஸ் நகர் பகுதிகளில் சாலை ஓரங்களில் உள்ள மரங்கள் வளர்ந்து மின் கம்பியில் பட்டு மின்வெட்டு ஏற்பட்டது.
உடனே தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி மின்துறை அதிகாரிகளிடம் இது குறித்து தெரிவித்து அங்கு மரங்களை அப்புறப்படுத்தி மின்தடையை போக்குமாறு கேட்டு கொண்டார்.
இதனை ஏற்று மின்துறை பணியாளர்கள் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து அங்கு சாய்ந்த மரங்களையும் மின்கம்பியில் உரசிய மரக் கிளைகளையும் விரைந்து அப்புறப்ப டுத்தினர். தொடர்ந்து அப்பகுதியில் மின் வினியோகம் அளிக்கப் பட்டது.
இந்நிகழ்ச்சியின் போது கென்னடி எம்.எல்.ஏ.வுடன் தி.மு.க.நிர்வாகிகள் தங்கவேல், சக்திவேல், ஹரிகிருஷ்ணன், ராஜி, செல்வம், காலப்பன், விநாயகம், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
- இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது.
புதுச்சேரி:
நாகப்பட்டினம் நம்பியார் நகர் பழைய காலணித் தெருவைச் சேர்ந்தவர் வினோத் (வயது30). இவர் மீன் பிடிதொழில் செய்து வருகிறார். இவர் தனது நண்பர் சிவக்குமார்(34), அவரது மனைவிலதா, அவரது மகன் லோகேந்தி ரன், சகோதரர் முத்து மாணிக்கம், முத்து மாணிக் கத்தின் மகள் சோபியா மற்றும் உறவினர்கள் அபிஷா, கோபிகா ஆகிய 8 பேர் காரில், காரைக்கால் கடற்கரைக்கு வந்தனர்.
பின்னர் நள்ளிரவு 1 மணிக்கு, நாகப்பட்டினம் திரும்பி கொண்டிருந்தனர். அப்போது திரு.பட்டினம் பைபாஸ் சாலை, நாகப்பட்டி னம்-காரைக்கால் தேசிய நெடுஞ்சாலை சந்திப்பில் சென்றபோது, 2 மோட்டார் சைக்களில் வந்த 4 பேர், நீங்கள் எல்லாம் யார், காரை ஏன் தள்ளிகொண்டு போகிறீர்கள் என அதிகார தோரணையில் விசாரித்த னர்.
அப்போது, இரு தரப்பி னருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. தொடர்ந்து, 4 பேரும், வினோத்தை தாக்கினர். அப்போது தடுக்க வந்த சிவக்குமார் அவரது மனைவி லதா, முத்து மாணிக்கத்தையும் சரமாரியாக தாக்கினர். சத்தம் கேட்டு, அக்கம்பக்கத்தினர் ஓடிவந்தனர். இதை பார்த்த 4 பேரும் கொலைமிரட்டல் விடுத்துவிட்டு தப்பி ஓடி விட்டனர். அவர்கள் வந்த மோட்டார் சைக்கிள் எண்ணை வைத்து விசாரித்தபோது, திரு.பட்டினம் போலகம் புதுகாலணியைச்சேர்ந்த ரித்திக், அவரது தந்தை சுரேஷ், ரித்திக்கின் நண்பர் கள் பிரவீன், வரதராஜன் என்பது தெரியவந்தது. தொடர்ந்து, காயம் அடைந்த 4 பேரும், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றனர். பின்பு திரு.பட்டினம் போலீசில் புகார் அளித்த னர். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி, சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் வழக்கு பதிவு செய்து 4 பேரையும் தேடிவருகின்றனர்.
- நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
- பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.
புதுச்சேரி:
காரைக்கால் மாவட்டத் தில் உள்ள, புதுச்சேரி அரசின் கூடுதல் வேளாண் துறையில், கடந்த பல ஆண்டுகளாக பணிபுரியும் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, புதுச்சேரி வேளாண் பட்ட தாரி அலுவலர் நலசங்கம் சார்பில், பல கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர். அதன் ஒரு பகுதியாக, காரைக்கால் வேளாண் துறையில் பணிபுரியும் அதி காரிகளுக்கு, பதவி உயர்வு வழங்க வலியுறுத்தி, வேளாண் துறை முன்பு அதி காரிகள் உண்ணா விரதப் போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில், நீண்ட காலமாக பணிபுரியும் வேளாண் அலுவலர்களுக்கு உடனடியாக வேளாண் துறை துணை இயக்குனர் பதவி உயர்வு வழங்க வேண்டும். விவசாயத்துறை மற்றும் அதை சார்ந்த நிறு வனங்கள், துறைகளில் கூடுதல் இயக்குனர்கள், இணை பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
விவசாய அதிகாரி பதவிக்கு இன்றியமையாத தகுதியாக பி.எஸ்.சி அக்ரி பட்டத்தை சேர்த்து ஆட்சேர்ப்பு விதிகளை திருத்த வேண்டும். எந்த தாமதமும் இன்றி அனைத்து தொழிற்நுட்ப பதவிகளை யும் முறைபடுத்த வேண்டும். வேளாண்துறை உயர் அதிகாரி களுக்கு இடையே நிலவும் பனிப்போரை கருத்தில் கொண்டு வேளாண் இயக்குனர் பதவியை தகுந்த பி.சி.எஸ், ஐ.ஏ.எஸ் அதிகாரியைக் கொண்டு நிரப்பவேண்டும்.
வேளாண்துறையில் உள்ள தொழிற்நுட்ப பணி யிடங்க ளின் பணியாளர் மதிப்பாய்வு மற்றும் மறு சீரமைப்பு மேற்கொள்ள வேண்டும். இணை வேளாண் இயக்குனர், கூடுதல் வேளாண் இயக்கு னர் மற்றும் வேளாண்துறை இயக்குனர்கள் ஆகியோரை புதுச்சேரி குடிமைப்ப ணி யில் (பி.சி.எஸ்) இணைத்திட வேண்டும். துறையில் உள்ள வேளாண் அலுவலர்களின் காலி பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும். கோரிக்கைகள் நிறை வேறாத பட்சத்தில் இன்று முதல் (12.9.23)தொடர் போராட்டம் நடைபெறும் என அதிகாரிகள் அறி வித்துள்ளனர். அதன்படி இன்று முதல் பணி புறக்க ணிப்பு போராட்டத்தை தொடங்கியுள்ளனர். மேலும், இப்போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அதிகாரி களுக்கு ஆதரவாக, காரைக்கால் மாவட்டத்தில் உள்ள விவசாய சங்கத்தினர் போராட்டத்தில் கலந்து கொண்டு தங்களின் ஆதர வை தெரிவித்து வருகின்ற னர்.






