என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார்.
    • போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வில்லியனூர்:

    புதுவை வில்லியனூர் அருகே அனந்தபுரம் பாரதி வீதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 54) கூலி தொழிலாளி அவரது மனைவி கலையரசி (47). இவர்களுக்கு ராஜசேகர் என்ற மகன் உள்ளார். ராஜேந்திரன் அடிக்கடி மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம். மேலும் அடிக்கடி வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி சென்று மது குடித்து வருவார்.

    நேற்று காலை மகன் ராஜசேகர் மாட்டை ஓட்டிக் கொண்டு வயல்வெளிக்கு சென்று விட்டார். வீட்டில் ராஜேந்திரன், கலையரசி மட்டும் தனியாக இருந்தனர்.

    அப்போது ராஜேந்திரன் மது குடிக்க பணம் கேட்டு மனைவியிடம் தகராறு செய்தார். ஆனால் கலையரசி பணம் கொடுக்க மறுத்து விட்டதாக கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக இருவருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த ராஜேந்திரன் கலையரசியை தாக்கி அவரது சேலையால் கழுத்தை நெரித்தார். இதில் கலையரசி பரிதாபமாக இறந்து போனார்.

    உடனே ராேஜந்திரன் அங்கிருந்து தப்பி ஒடிவிட்டார். மாடு மேய்த்து விட்டு வீட்டுக்கு வந்த ராஜசேகர் தாய் பிணமாக கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் இது குறித்து வில்லியனூர் போலீசில் தகவல் தெரிவித்தார். போலீசார் விரைந்து வந்து கலையரசியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த ராஜேந்திரனை கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மது குடிக்க பணம் கொடுக்கமறுத்ததால் மனைவியை கணவர் கழுத்தை நெரித்து கொலை செய்த சம்பவம் வில்லியனூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • ரஜகுலத்தோர் நலச்சங்கம் வலியுறுத்தல்
    • மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 5 சதவீத உள்ஒதுகீடு வழங்க வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை பிரதேச ரஜகுலத்தோர் நலச்சங்க மாநில தலைவர் ஆறுமுகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுவை சட்டசபை கூட்டத்தொடரில் வண்ணார்குல மக்களை தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்திட கொண்டு வந்த தீர்மானத்தின் மீது மத்திய, மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வண்ணார் என்ற சாதி பெயரை ரஜகுலத்ேதார் என்று பெயர் மாற்றம் செய்ய வேண்டும். மிகவும் பிற்படுத்தப்பட்ட பட்டியலில் இருந்து 5 சதவீத உள்ஒதுகீடு வழங்க வேண்டும்.

    சலவை துறைகளில் வாடகை மற்றும் மின் கட்டணத்தை தள்ளுபடி செய்து இலவசமாக வழங்கவேண்டும்.

    இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    • போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவாவில் நடைபெற்றது.
    • பயிற்சியாளர் கராத்தே முருகன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 24 மாநில தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    இந்திய அரசின் சார்பில் கோவாவில் அடுத்த மாதம் (அக்டோர்) 25- ந் தேதி முதல் நவம்பர் 9-ந் தேதி வரை தேசிய அளவிலான 37-வது ஸ்கொய் தற்காப்பு கலை போட்டி நடைபெறுகிறது. இந்த போட்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் கோவாவில் நடைபெற்றது.

    சங்கத்தின் கிராண்ட் மார்ஸ்டர் டாக்டர் செல்வம் தலைமையிலும், தேசிய பொதுச்செயலாளர் காசிநாத் நாயக் முன்னிலை யிலும் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் புதுவை தலைமை பயிற்சியாளர் கராத்தே முருகன் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள 24 மாநில தலைமை பயிற்சியாளர்கள் கலந்து கொண்டனர்.

    • 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றனர்.
    • பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் சிறப்பு இயன் சிகிச்சை அளித்தனர்.

    புதுச்சேரி:

    பிம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி இணைந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.

    முகாமை, பிம்ஸ் மருத்துவக் கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.

    நகராட்சி சேர்மன் ஜெய மூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மற்றும் எலும்பியல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்.

    உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் சிறப்பு இயன் சிகிச்சை அளித்தனர்.

    முகாமில் பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், பிம்ஸ் வளாக பாதுகாப்பு வளர்ச்சி நிர்வாகி பிரசன்னா, நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

    முகாமில்




    • சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வாணரப்பேட்டையை சேர்ந்தவர் சதீஷ் (வயது 35) ரவுடியான இவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளது.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு இவர் புதுவை திருவள்ளுவர் சாலையில் உள்ள ஒரு சினிமா தியேட்டரில் படம் பார்க்க சென்றார். அப்போது அங்குள்ள லிப்டை அவர் சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

    இதனை தியேட்டர் நிர்வாகம் சி.சி.டி.வி.கேமரா மூலம் கண்டு பிடித்தனர். மறுநாள் சதீஷ் அதே தியேட்டருக்கு சினிமா பார்க்க சென்ற போது தியேட்டர் நிர்வாகத்தினர் சதீஷை கண்டித்தனர். பின்னர் அங்கிருந்து சதீஷ் சென்று விட்டார். பின்னர் சிறிது நேரம் கழித்து சதீஷ் தனது கூட்டாளிகளுடன் மீண்டும் தியேட்டருக்கு வந்தார்.

    அங்குள்ள பொருட்களை சூறையாடிவிட்டு தியேட்டர் ஊழியர்களை சதீஷ் மிரட்டி விட்டு சென்றார். இது குறித்து புகாரின் பேரில் உருளையபேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து சதீஷ் மற்றும் அவரது கூட்டாளிகளை தேடி வருகின்றனர். தலைமறைவாக இருந்து வரும் சதீஷை பிடிக்க அவரது வீட்டுக்கு போலீசார் சென்று வந்தனர்.

    இந்த நிலையில் போலீசார் அடிக்கடி சதீஷை தேடி அவரது வீட்டுக்கு வந்து தொல்லை கொடுத்ததால் மன உளைச்சல் அடைந்த சதீஷின் மனைவி தீஷ்மா கையை கத்தியால் அறுத்துக்கொண்டு தற்கொலை முயன்றார்.

    அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    போலீசார் தொல்லை கொடுத்ததால் ரவுடியின் மனைவி கையை கத்தியால் அறுத்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • நேரு எம்.எல்.ஏ. தலைமையில் திரண்டனர்
    • கஞ்சா கும்பல் பீகார் தொழிலாளர்களை தாக்கி பணத்தை பறித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

    புதுச்சேரி:

    புதுவை உருளை யன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதி மற்றும் கண்டாக்டர் தோட்டம் அரசு குடியிருப்பு பகுதி உள்ளது.

    இந்த பகுதிகளில் ரவுடிகள் மற்றும் போதை கும்பல அட்டகாசம் அதிகரித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து சட்டசபையிலும் தொகுதி எம்.எல்.ஏ. நேரு பேசியுள்ளார். ஆனாலும் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகிறது.

    இதனிடையே நேற்று மாலை கோவிந்தசாலை அந்தோணியார் கோவில் வீதி அரசு குடியிருப்பு பகுதியில் கஞ்சா போதையில் சில இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டு அப்பகுதியை சேர்ந்த பெண் வக்கீலை தாக்கியுள்ளனர்.

    இந்த நிலையில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத போலீசாரை கண்டித்து உருளையன்பேட்டையில் உள்ள சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகம் முன்பு நேரு எம்.எல்.ஏ. தலைமையில் மற்றும் மனிதநேய மக்கள் சேவை இயக்கம் நிர்வாகிகள் திரண்டு முற்றுகையிட்டனர்.

    முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்ட நேரு எம்.எல்.ஏவிடம் இன்ஸ்பெக்டர்கள் பாபுஜி, நாகராஜன், வெங்கடாசலபதி, ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    போலீசாரிடம் நேரு எம்.எல்.ஏ. போதை கும்பல் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், கஞ்சா கும்பல் பீகார் தொழிலாளர்களை தாக்கி பணத்தை பறித்து வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.

    மேலும், இது தொடர்பாக சீனியர் போலீஸ் சூப்பிரண்டு சந்திக்க வேண்டும் என கூறினார். அவரிடம் போலீசார் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு கூட்டம் ஒன்றில் பங்கேற்க சென்றிருப்பதால் மாலை அவரை சந்தித்து கோரிக்கை மனு அளிக்கும்படி கூறி சமாதானப்படுத்தினர்.

    இதனையடுத்து நேரு எம்.எல்.ஏ. தலைமையிலான அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த போராட்டத்தின் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    • கல்லுாரியில் சிறப்பு அம்சமாக 3 ஆண்டு வணிகவி யல் பட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது.
    • முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அறிவுரைகளை வழங்கி வாழ்த்தி பேசினர்.

    புதுச்சேரி:

    புதுவை லாஸ்பேட்டை மகளிர் அரசு பாலிடெக்னிக் கடந்த ஆண்டு அனைத்து இந்திய தொழில்நுட்ப அனுமதியுடன் அரசு மகளிர் பொறியியல் கல்லுாரியாக அரசால் தரம் உயர்த்தப்பட்டது.

    கல்லுாரியில் 4-ம் ஆண்டு பி.டெக்,, பொறியியல் பட்டப்படிப்புகளான கணினி அறிவியல்,மின் னணுவியல் மற்றும் தொடர்பு மின்னியல் மற்றும் மின்னணுவி யல், கட்டடக்கலை உத வியாளர், தகவல் மற் றும் அறிவியல் துறை உள்ளிட்ட படிப்புகள் உள்ளன. மேலும் கல்லுாரியில் சிறப்பு அம்சமாக 3 ஆண்டு வணிகவி யல் பட்டப்படிப்பும் நடத்தப்பட்டு வருகிறது.

    கல்லுாரி சிறந்த உள் கட்டமைப்பு வசதிக ளையும், சிறந்த ஆய் வகம் மற்றும் அனுபவம் வாய்ந்த பேராசிரியர்களையும் கொண்டுள்ளது. .

    கல்லுாரியில் 2023-24 கல்வி ஆண்டிற்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடக்க விழா இன்று காலை கல்லுாரி வளாகத்தில் நடைபெற்றது. கல்லூரி முதல்வர் ராணி தலைமை தாங்கினார். தேசிய தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி நிறுவன முனைவர் உஷா நடே சன்,சென்னை டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் மனிதவள துறை தலை வர் ரஜினி,பெருநிறுவன சமூக பொறுப்பு அதிகாரி மஞ்சுளாதேவி பங்கேற்றனர்.

    முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் அறிவுரைகளை வழங்கி வாழ்த்தி பேசினர். விழாவில் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

    • 1,379 மாணவர்கள் பட்டம் பெற்றனர்
    • ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி கிருமாம்பாக்கம் ராஜீவ்காந்தி பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் 2017,2018,2019 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளில் பட்டப்படிப்பு முடித்த மாணவர்களுக்கான பட்டமளிப்பு விழா நடந்தது. விழாவில் கல்லூரியின் முதல்வர் டாக்டர் விஜயகிருஷ்ணரபாகா கல்லூரி ஆண்டு அறிக்கைசமர்பித்தார். ஸ்ரீ பாலாஜி எஜூகேஷனல் மற்றும் சாரிடபுள் டிரஸ்ட் தலைவர் ராஜகோபாலன் முன்னிலை வகித்தார்.

    விழாவில் சிறப்பு விருந்தினராக பிள்ளையார்குப்பம் ஸ்ரீ பாலாஜி வித்யாபீத் பல்கலைக்கழக துணைவேந்தர் நிஹார் ரஞ்சன் பிஸ்வாஸ் மற்றும் டாடா கன்சல்டன்சி சர்வீசசின் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கல்வி இடைமுக திட்டத்தின் மண்டல தலைவர் கணேஷ் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினர்.

    மேலும் புதுவை பல்கலைக்கழக அளவில் முதல் மற்றும் சிறந்து விளங்கியவர்களுக்கு தங்கம், வெள்ளி பதக்கங்கள் வழங்கப்பட்டன.

    2 அமர்வுகளாக நடந்த இந்த பட்டமளிப்பு விழாவில் மொத்தம் 1,379 பேருக்கு பட்டம் வழங்கப்பட்டது. விழாவில் கல்லூரியின் துணை முதல்வர் அய்யப்பன், தேர்வு கட்டுப்பாட்டாளர் சம்பத்குமார், பேராசிரியர் ரேணுகாதேவி மற்றும் பேராசிரியர்கள், கல்லூரி நிர்வாகத்தினர், மாணவர்கள் அவர்க ளின் பெற்றோர் கலந்துகொண்டனர்.

    • விழாவிற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.
    • பயிற்சி மையத்தில் படித்த மாணவர்கள் 50 சதவீதம் இடங்களை பிடித்துள்ளனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எல்.டி.சி. மற்றும் யூ.டி.சி. தேர்வுகள் நடத்தப்பட்டது.

    இதில் புதுச்சேரி பிர்லியண்ட் இன்ஸ்டிடியூட் ஆப் மேத்தமெட்டிக்ஸ் (பி.ஐ.எம்.) பயிற்சி மையத்தில் படித்த 95 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். தேர்ச்சி பெற்றமாணவர்களுக்கு பாராட்டு விழா நேற்று மதியம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள சபரி வித்யாஷ்ரம் பள்ளியில் நடந்தது. விழாவிற்கு சபாநாயகர் செல்வம் தலைமை தாங்கி தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்து தெரிவித்து நினைவு பரிசுகள் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சபரி வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் அமுதவாணன், பிர்லியண்ட் இன்ஸ்டிடியூட் ஆப்மேத்தமெட்டிக்ஸ் பயிற்சி மைய இயக்குனர்கள் நெடுஞ்செழியன், ஸ்ரீதரன், குமார், ஆசிரியர்கள் மற்றும் பலர் கலந்துகொண்டர்.

    இந்த பயிற்சி மையத்தில் படித்த மாணவர் அசோக்குமார் எல்.டி.சி. தேர்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்தது குறிப்பிடத்தக்கது. இதே போல் இந்த பயிற்சி மையத்தில்

    படித்த மாணவர்கள் 50 சதவீதம் இடங்களை பிடித்துள்ளனர்.

    • ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார் ஆகியோர் பணி ஆணை கடிதத்தினை வழங்கினர்.
    • எஸ்பிஐ. ஸ்டார் ஹெல்த், எல்ஐசி, எச்டிஎஃப்சி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் கண்ணகி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா திட்டத்தின் கீழ் புதுச்சேரி மாவட்ட அளவில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமை குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார் துவக்கி வைத்தார். நவயுகா கன்சல்டன்சி சர்வீஸ் உடன் இணைந்து தீன் தயாள் உபாத்யாய கிராமீன் கௌசல்யா யோஜனா (டிடியு-ஜிகேஒய்) திட்டத்தின் கீழ் நடந்த வேலை வாய்ப்பு முகாமில்

    சுமார் 1800-க்கும் மேற்பட்ட இளங்கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றவர்கள் கலந்து கொண்டனர். இந்த நேர்காணல் மூலம் முதல் சுட்டமாக 600-க்கும் மேற்பட்ட நபர்கள் தேர்வுசெய்யப்பட்டனர்.

    இதில் தேர்வு செய்யப்பட்ட அனைவருக்கும் சபாநாயகர் ஏம்பலம் செல்வம், குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் ஊரக வளர்ச்சி துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன் குமார் ஆகியோர் பணி ஆணை கடிதத்தினை வழங்கினர்.

    இந்த வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்ற புதுச்சேரி மற்றும் சென்னையை சேர்ந்த வேல்பூல், ராணி மெட்ராஸ், தி சுப்ரீம் இண்டஸ்ரீஸ், போசிக்கோ இந்தியா, சதர்லேண்டு குளோபல், பிஎஸ்ஏ கார்ப்பரேஷன், ஃபவுண்டேவர், இண்டகரா சாப்ஸ்ட்வேர் சர்வீசஸ் பிரைவேட் லிமிடெட், ஸ்டிரைவ் குளோபல், எஸ்பிஐ. ஸ்டார் ஹெல்த், எல்ஐசி, எச்டிஎஃப்சி மற்றும் பல்வேறு முன்னணி நிறுவனங்கள் பங்குபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • மாணவர்கள் வகுப்பு புறக்கணிப்பு
    • பெற்றோர்கள் தங்கள் பிள்ளை களை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர்.

    புதுச்சேரி:

    புதுவை வில்லியனூரை அடுத்த அகரம் கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி இயங்கி வருகிறது.

    இந்த பள்ளியில் அகரம், உளவாய்க்கால், கூடப்பாக்கம், கோனேரிக்குப்பம் உள்ளிட்ட கிராமப்பகுதியில் இருந்து 60-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அனிதா என்ற ஆசிரியை பணியிடை மாற்றம் பெற்று அகரம் பள்ளிக்கு வந்தார். அவர் சுற்றுவட்டார கிராம மக்களிடம் துண்டு பிரசுரங்களை வழங்கி பள்ளி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

    மேலும் ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கையின் போது வீடு வீடாக சென்று மாணவர் சேர்க்கையை அதிகரித்தார்.

     இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் கல்வித்துறை ஒரு பள்ளியில் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஆசிரியர்களை பணியிடை மாற்றம் செய்தனர்.

    இதில் அகரம் பள்ளி ஆசிரியை அனிதா முத்தியால்பேட்டை அரசு பள்ளிக்கு பணியிடை மாற்றம் செய்யப்பட்டார்.

    இதற்கு அப்பள்ளியில் பயிலும் மாணவர்கள், பெற்றோர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆசிரியை அனிதாவை பணியிடை மாற்றம் செய்ய கூடாது என கூறி பெற்றோர் கடந்த வெள்ளிக்கிழமை வில்லியனூரில் உள்ள கல்வித்துறையின் வட்டம் 5 அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பாமல் பள்ளி வாயிலில் நின்று போராட்டம் நடத்தினர்.

    தகவலறிந்த கல்வித்துறை அதிகாரிகள் பள்ளிக்கு வந்து பெற்றோர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது இந்த ஆசிரியையை பணியிடை மாற்றம் செய்தால் தங்கள் பிள்ளைகளுக்கு மாற்று சான்றிதழ் கொடுங்கள். நாங்கள் வேறு பள்ளியில் தங்கள் பிள்ளைகளை சேர்த்துக் கொள்கிறோம். மேலும் நன்றாக சொல்லிக்கொடுக்கும் ஆசிரி யர்களை என் பணி யிடை மாற்றம்செய்கி றீர்கள்..? என கேள்வி எழுப்பினர்.

    அதற்கு அதிகாரிகள் உயரதிகாரிகளிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர் இதையடுத்து பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை அதுவரை பள்ளிக்கு அனுப்பமாட்டோம் என்று கூறி அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    • போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.
    • நேற்று மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர்.

    புதுச்சேரி:

    காரைக்கால் கீழ காசாக் குடி பகுதியில், புதுச்சேரி அரசு இந்து சமய அற நிலையத் துறைக்குட்பட்ட நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த ஆதிபுரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவி லுக்கு சொந்தமான பல கோடி ரூபாய் மதிப்புள்ள நிலத்தை பல்வேறு தரப்பி னர் போலி ஆவணம் தயா ரித்து, தொடர்ந்து ஆக்கிர மித்து வருவதாக கூறப்படு கிறது.

    கோவிலுக்கு சொந்த மான நிலத்தை மீட்க பல்வேறு தரப்பினர் முயற்சித்து வந்தாலும், புதுச்சேரி அரசு இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் இதனை கண்டு கொள்ளாமல் இருப்பதாக கூறப்படுகிறது. புதுச்சேரி அரசின் இந்து அறநிலைத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்து, காரைக்கால் மாவட்ட இந்து முன்னணி யினர் மற்றும் ஆதிபுரீஸ்வரர் தேவஸ்தான சொத்து மீட்புக் குழு, காரைக்கால் பஸ் நிலையம் அருகே நேற்று முன்தினம் மாலை கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். மாவட்ட இந்து முன்னணி தலைவர் கணேஷ் தலைமை தாங்கினார். நகர தலைவர் இன்ஜினியர் ராஜ்குமார் முன்னிலை வகித்தார்.

    ×