என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • சுகாதார அலுவலகம் வாயிலில் தொடங்கிய பேரணியில் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் சுகாதார துறை அலுவலகத்தை அடைந்தது.

    புதுச்சேரி:

    தேசிய மனநல திட்டத்தின் மற்றும் மனநலத்துறை புதுவை அரசு சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி  நடந்தது.

    பேரணியை சுகாதார இணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலகம் வாயிலில் தொடங்கிய பேரணியில் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.

    எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல.மன குழப்பம் ஏற்பட்டால் இலவச ஆலோசனைகளை வழங்க அரசு மருத்துவமனையில் மனநல பிரிவு தயாராக இருக்கிறது என்றும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வோம்.. தற்கொலையை தடுப்போம். தற்கொலை எதற்கும் தீர்வல்..

    சாகும் தைரியம் இருக்கிறது என்றால் வாழ்கிற தைரியம் வேண்டும் என வலியுறுத்தியும் செவிலியர் மாணவ-மாணவியர் பதாகை ஏந்தியும் கோஷமிட்டும் பேரணி சென்றனர்.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் சுகாதார துறை அலுவலகத்தை அடைந்தது.

    • மதுகுடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர்.
    • அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் போலீசார்  கணுவாப்பேட்டைபகுதியில் ரோந்து சென்றனர்.

    அப்போது அங்கு பொது இடத்தில் ஒருவர் மதுகுடித்து விட்டு ரகளை செய்து கொண்டிருந்ததை போலீசார் கண்டனர். உடனே அந்த நபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் கணுவாப்பேட்டை புது நகரை சேர்ந்த மதி என்ற மூர்த்தி (41) என்பது தெரியவந்தது . இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.

    • நேரு வீதியில் போலீசார் குவிப்பு
    • இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

    புதுச்சேரி:

    புதுவை நேரு வீதியில் பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப் பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்படுகிறது.

    இதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனாலும், தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தது. இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில தொடரப்பட்ட வழக்கில், நேரு வீதி யில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை. இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையொட்டி, நேரு வீதியில் மொத்த மீன் வியாபாரம் செய்யும் குருசுக்குப்பம், வைத் திக்குப்பம், வம்பா கீரப்பாளையம் மீனவர்களுடன் சீனீயர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைத்யன்யா பேச்சு வார்த்தை நடத்தினார்.

    அதில், இன்றுமுதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, நேரு வீதியில் மீன்களை ஏலம் விட வருபவர்களை தடுக்க,  2 மணி முதலே நேரு வீதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

    மேலும், எல்லைப்பகுதிகளில் மீன் கொண்டு செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. மீன் கொண்டு செல்பவர்கள் நேரு வீதிக்கு செல்லாமல் நவீன மீன் அங்காடிக்கு திருப்பி விடப்பட்டனர்.

    பெரும்பாலும் அதிகாலையிலேயே நேரு வீதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மீன்கள் ஏலத்திற்கு வரும். ஆனால் நவீன மீன் அங்காடியில் இன்று ஏலத்திற்கு 5 வாகனங்கள் மட்டுமே வந்திருந்தது. அதிலும், 3 வாகனம் வழக்கமாக அங்கு வரும் வாகனங்கள் என கூறப்பட்டது.

    இருப்பினும் நாளை முதல் முழுமையான ஏலம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் நடத்த மீனவர்கள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    • தோட்டத்தில் கஞ்சா செடிகள் வளர்த்ததால் பரபரப்பு
    • சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.

    புதுச்சேரி:

    புதுவையை அடுத்த தமிழக பகுதியான ஆரோ வில் பகுதி பொம்மையா ர்பாளையம் அருகே பிரபல தனியார் ஓட்டல் உள்ளது.

    இந்த ஓட்டலின் குறுகிய பாதை வழியே சுமார் ஒரு கி.மீ. தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் வாடகைக்கு தங்கி இருக்கும் வாலிபர்கள் பகல் மற்றும் இரவு நேரங்களில் பைக்கில் ஹெல்மெட் அணிந்தபடி அடிக்கடி வந்து செல்வதாக ஆரோவில் போலீசுக்கு தகவல் கிடைத்தது.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி தலைமையிலான போலீசார் அப்பகுதியை கண்காணித்தனர்.   சாதாரண உடையில் சென்ற போலீசார் அந்த இளைஞர்கள் தங்கி இருந்த வீட்டை 4 பக்கமும் சுற்றி வளைத்தனர்.

    அப்போது அந்த இளை ஞர்கள் கஞ்சாவை எடை மெஷினில் வைத்து எடை பிரித்து கொண்டிருந்தனர். வீட்டின் அறையில் இருந்த 4 இளைஞர்களை மடக்கிப் பிடித்த போலீசார் அவர்கள் வைத்திருந்த 3/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    கஞ்சாவை எடை போடும் இயந்திரம், அவர்கள் வைத்திருந்த 6 செல்போன், அவர்களது பைக் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் புதுச்சேரி எல்லைப்பி ள்ளைசாவடி 100 அடி சாலையை சேர்ந்த தீபக் (வயது 29), ரெட்டியார்பா ளையம் தேவா நகர் ஆல்பட்ராஜ் (28), காமராஜர் சாலை நேரு நகர் வெங்க டேசன் வயது (31), புதுவை சக்தி நகர் மணிகண்டன் என்ற ராஜேஸ் (32) ஆகிய 4 பேர் என்பதும் கடந்த பல மாதங்களாக ஆள் நடமாட்டம் இல்லாத இந்த வீட்டை வாடகைக்கு எடுத்து தனியார் கம்பெனியில் வேலை பார்ப்பதாக கூறி அங்கு தங்கியிருந்ததும் தெரியவந்தது.

    அதோடு இவர்கள் வாடகை வீட்டு தோட்டத்தில் கஞ்சா செடிகளையும் வளர்த்து வந்துள்ளனர். மேலும் இவர்கள் சென்னை, ஆந்திரா உள்ளிட்ட இடங்களில் இருந்து மொத்தமாக கஞ்சாவை வாங்கி அதனை தரம் பிரித்து புதுவை, ஆரோவில், காலாப்பட்டு, வில்லியனூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தெரிந்த வாடிக்கையாளர்களுக்கு நேரடியாக விற்பனை செய்து வந்ததும் தெரிய வந்தது.

    அவர்கள் 4 பேரையும் கைது செய்த போலீசார் மேலும் இந்த நெட்வொர்க்கில் உள்ள சென்னை,ஆந்திரா உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த கஞ்சா விற்பனை யாளர்கள் குறித்த விவரங்க ளையும் சேகரித்து வருகின்றனர். மேலும் தோட்டத்தின் பின்பக்கம் இருந்த கஞ்சா செடிகளையும் அதை எப்படி விளைவித்தார்கள் என்பது குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    புதுச்சேரி:

    வில்லியனூர் சுந்தர மூர்த்தி விநாயக புரம் மேற்கு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் புதுவை பல்கலைக்கழகத்தில் உள்ள விநாயகர் கோவிலில் அர்ச்சகராக பணிபுரிந்து வருகிறார்.

    இவரது தந்தை சங்கர் வயது 48 இவர் அங்குள்ள பூக்கடையில் பூக்கட்டும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். மது குடிக்கும் பழக்கம் உள்ள சங்கர் அடிக்கடி மது குடித்து விட்டு குடிபோதையில் தற்கொலை செய்து கொள்ளப்போவதாக குடும்பத்தினரை மிரட்டி வந்தார்.

    இந்த நிலையில் நேற்று மாலை அசோக்கும் அவரது மனைவியும் கோவிலுக்கு சென்றனர். பின்னர் வீடு திரும்பிய போது படுக்கை அறையில் மின் விசிறியில் சங்கர் சேலையால் தூக்கு போட்டு தொங்குவதை கண்டு அசோக் அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தூக்கிலிருந்து சங்கரை மீட்டு வில்லியனூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சங்கர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

    • விளையாட்டு வீரர்கள் நலச்சங்கம் முடிவு
    • விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று தனி விளையாட்டுத் துறையை புதுவை அரசு அவசர கதியில் அறிவித்துள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை மாநில விளையாட்டு வீரர் நல சங்கத்தின் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் கராத்தே வளவன் தலைமையில் நடைபெற்றது.

    நிர்வாகிகள் கோவிந்தராஜ், சதீஷ், சந்தோஷ், ஆறுமுகம், செல்வம் , கதிர்காமம் அசோக், பாலச்சந்தர், செந்தில் கோடீஸ்வரன், சந்துரு, அருள் குமரன், பிரகதீஷ் உள்ளிட்ட நிர்வாகி கள் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் விளையாட்டு வீரர்களின் கண்டன பேரணி வெற்றிகரமாக நடத்திட உதவி புரிந்த அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    மேலும் விளையாட்டு வீரர்களின் கோரிக்கையை ஏற்று தனி விளையாட்டுத் துறையை புதுவை அரசு அவசர கதியில் அறிவித்துள்ளது.

    எனவே அரசு விளையாட்டுத்துறையில் இணைத்துள்ள என்.சி.சி., என்.எஸ்.எஸ்., யூத் ஹாஸ்டல், நேரு யோகே ந்திரா, சமூக சேவை அமைப்புகள் ஆகியவற்றை நீக்கி விளையாட்டை மட்டும் முன்னிலைப்படுத்தி தனி விளையாட்டு துறை ஏற்படுத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    அதேபோல் விளையாட்டு வீரர்களுக்கு சேர வேண்டிய பணத்தை நேரடியாக அரசாங்கம் அவர்களுக்கு காசோலை மூலம் வழங்க வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்வது மேலும், உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கம், ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கம் ஆகியவற்றில் நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி மேற்கொள்பவர்களுக்கு உடனடியாக குடிநீர் வசதி, கழிப்பிட வசதி மற்றும் மின்சார விளக்குகள் ஏற்படுத்தி தர வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

    உடனடியாக ராஜீவ்காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் மின்சார வசதியை ஏற்படுத்தி ஏ.சி. பயன்பாட்டிற்கு பெற்றுத் தர வேண்டும் என்ற தீர்மானமும் நிறைவேற்ற ப்பட்டது.

    மேலும் விளையாட்டு வீரர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்காமல் மீண்டும் புறக்கணித்தால் வருகிற 18-ந் தேதி  இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தை பூட்டி மலர் வளையம் வைத்து நுழைவாயிலில் கண்டன ஆர்ப்பாட்ட கூட்டம் நடத்துவது என்று கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

    • சிதறி கிடந்த பேப்பர், கண்ணாடி துண்டுகள், ஆணிகள் மற்றும் சிறு சிறு கற்களை சேகரித்தனர்.
    • தண்டவாளத்தில் வெடிகுண்டு வீச காரணம் என்ன? ரெயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி ரெயில் நிலையத்தில் 4-வது பிளாட்பாரத்தில் உள்ள தண்டவாளத்தில் நேற்று நள்ளிரவு 'டமார்' என்ற சத்தத்துடன் பயங்கரமாக குண்டு வெடிக்கும் சத்தம் கேட்டது.

    இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் வீட்டைவிட்டு வெளியே ஓடிவந்து பார்த்தனர்.

    அப்போது அந்த பகுதியில் வெடிகுண்டு வெடித்ததற்கான புகை மண்டலமாக இருந்தது. இது குறித்து ஒதியஞ்சாலைபோலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

    கிழக்கு பகுதி போலீஸ் சூப்பிரண்டு சுவாதிசிங் உத்தரவின் பேரில் ஒதியஞ்சாலைபோலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடாஜலபதி, சப்-இன்ஸ்பெக்டர் ஜாகீர் உசேன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

    இதனை தொடர்ந்து வெடிகுண்டு நிபுணர்கள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு சிதறி கிடந்த பேப்பர், கண்ணாடி துண்டுகள், ஆணிகள் மற்றும் சிறு சிறு கற்களை சேகரித்தனர்.

    விசாரணையில், அரியாங்குப்பம் மணவெளி பெரியார் நகரை சேர்ந்த ரவுடி பரத் (வயது 19) என்பவர் ரெயில் நிலையத்தில் நாட்டு வெடிகுண்டு வீசியது தெரியவந்தது.

    தற்போது பரத் கவிக்குயில் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருப்பதும் தெரியவந்தது. உடனே போலீசார் அங்கு விரைந்து சென்று அவரை கைது செய்தனர்.

    அவரது வீட்டில் சோதனை நடத்திய போது அங்கு நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்திய வெடி மருந்து மற்றும் மூலபொருட்கள் வைத்திருந்தது தெரியவந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பின்னர் பரத்தை ஒதியஞ்சாலை போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து தண்டவாளத்தில் வெடிகுண்டு வீச காரணம் என்ன? ரெயிலை கவிழ்க்க சதியா? என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டனர்.

    விசாரணையில் பரத்துக்கும், வாணரப்பேட்டை பகுதியை சேர்ந்த தனுஷ் என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது. அப்போது தனுஷ் அவரிடம் இனிமேல் வாணரப்பேட்டைபகுதிக்கு வரக்கூடாது என்று கூறியுள்ளார்.

    எனவே தனுசை மிரட்டும் நோக்கில், தானாகவே வெடிகுண்டு தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கி வீட்டில் வைத்தே வெடி குண்டு தயாரித்ததும், மேலும் தான் தயாரித்த வெடிகுண்டு சரியாக வெடிக்கிறதா? என்பதை அறியும் வகையில் தண்டவாளத்தில் வீசி சோதித்ததாகவும் அவர் தெரிவித்தார்.

    இதை தொடர்ந்து பரத்தை கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். பரத் மீது ஏற்கனவே ஒதியஞ்சாலை, உருளையன்பேட்டை போலீஸ் நிலையங்களில் 2 அடிதடி வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

    • முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
    • ரூ. 3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்- அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    புதுச்சேரி:

    அரியாங்குப்பம் தொகுதிக்குட்பட்ட முருங்கப்பாக்கம் விடுபட்ட பகுதியான வில்லியனூர் ரோட்டின் தெற்கு பகுதி, கணபதி நகர், சேத்திலால் நகர், குபேரன் நகர், கோவிந்தராஜன் நகர், வரதராசு நகர், மகாலட்சுமி நகர், முத்துலட்சுமி நகரின் அனைத்து உள் வீதிகளுக்கும் துருப்பிடிக்காத குடிநீர் குழாய் புதைத்து சாலைகளை மறு சீரமைப்பு , அம்ரூத் திட்டத்தில் ரூ.5 கோடியே 98 லட்சம் மதிப்பீட்டில் செய்வததற்கான பூமி பூஜை  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் ரங்கசாமி, அமைச்சர் லட்சுமிநாராயணன் ஆகியோர் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தனர். அரியாங்குப்பம் தொகுதி பாஸ்கர் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார்.

    நிகழ்ச்சியில் பொதுப்ப ணித்துறை அரசு செயலர் டாக்டர் மணிகண்டன், தலைமை பொறியாளர் பழனியப்பன், கண்காணிப்பு பொறியாளர் பாஸ்கரன், உதவி பொறியாளர் வாசு, இளநிலை பொறியாளர் தணிகைவேல், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    அதனைத் தொடர்ந்து முதலியார் பேட்டை தொகுதி சம்பத் எம்.எல்.ஏ. தலைமையில் சுதானா நகர் ஆர்ச்சில் இருந்து அரவிந்த் நகர், அங்காளம்மன் நகர் வழியாக முருங்கப்பாக்கம் -நாட்டார் தெரு, பள்ளத்தெரு ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து வீதிகளுக்கும் தார்சாலை அமைக்க சிட்பி வங்கி நிதி உதவியுடன் ரூ. 3 கோடியே 36 லட்சம் செலவில் குடிநீர் குழாய் அமைத்தல் மற்றும் தார் சாலை அமைக்கும் பணிகளையும் முதல்- அமைச்சர் ரங்கசாமி கலந்து கொண்டு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

    • 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க காசினை குழந்தைகளுடன் வந்த தாய்மார்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
    • ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்று.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 3 மாதம் இந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கக்காசு வழங்கும் நிகழ்ச்சி குழந்தைகள் வார்ட்டில் நடைபெற்றது. ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்று.

    இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜுவ்கிருஷ்ணா, துணை மேலாண் இயக்குனர் மௌஷ்மி ராஜுவ்கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கி மருத்துவமனையில் பிறந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க காசினை குழந்தைகளுடன் வந்த தாய்மார்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திர கல்விக் குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர். வித்யா, கல்லூரி இயக்குனர் ரத்தினசாமி, மருத் துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் லோகநாதன், கல்விக் குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தர்ராஜன், மகளிர் மற்றும் மகப்பேறு துறை தலைவர் ஹெர்மத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் மானஸ் நன்றி கூறினார்.

    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தகவல்
    • சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை.

    புதுச்சேரி:

    புதுவை சபாநாயகர் ஏம்பலம் செல்வம் நிருபர்களிடம் கூறியதாவது:-

    புதுவை சட்டமன்றத்தை கையகப்படுத்திய நிலத்தை திரும்ப வழங்கியதில் கையூட்டு பெறப்பட்டதாக நான் கூறியதற்கு வைத்திலிங்கம் எம்.பி. மன்னிப்பு கேட்க வேண்டும் என கூறியுள்ளார். நான் ஆதாரத்தை காட்டுகிறேன்.

    சட்டப்பேரவை வளாகம் கட்ட கையகப்படுத்தப்பட்ட நிலம், அப்போதைய கவர்னரால் திரும்ப பெறப்பட்டு சென்னை ஐகோர்ட்டு அதனை தள்ளுபடி செய்து, உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என 2008-ம் ஆண்டு உத்தரவு பிறப்பித்திருந்தது.

    2009-ம் ஆண்டு சட்டப்பேரவை தலைவராக இருந்த ராதாகிருஷ்ணன் அதற்கான உத்தரவை பிறப்பித்தபோது, முதல்- அமைச்சராக இருந்த வைத்திலிங்கம் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அந்த நிலத்தை உரியவர்க ளிடம் ஒப்படைக்காமல், 2018-ம் ஆண்டு ஒப்படைத்ததன் காரணம் என்ன?

    இதுசம்மந்தமாக அவர் விருப்பப்பட்டால், சி.பி.ஐ. விசாரணைக்கும் தயாராக உள்ளேன். இதற்கு அவர் பதில் கூறட்டும். 10 ஆண்டுகள் இழுத்தடித்த மர்மம் என்ன? அதில் தரப்பட்ட கையூட்டு என்ன? வைத்திலிங்கம் இதற்கு விளக்கம் அளிக்க வேண்டும். 2014- ம் ஆண்டு எனது தொகுதியில் பூரணாங்குப்பம் முதல் புதுகுப்பம் வரை கேபிள் வயர் புதைப்பதற்காக டெண்டர் ரூ.11 கோடிக்கு விடப்பட்டது. ஆனால் ரூ. 2 கோடி கூட பணி நடைபெறவில்லை. 1 வருடம் கூட கேபிள் வேலை செய்யவில்லை.

    இதேபோல் காலாப்பட்டு தொகுதியில் கடலோர கிராமங்களில் புதைவட கேபிள் போட ரூ.23 கோடியில் ரூ.2 கோடி கூட செலவு செய்யவில்லை. இதற்கும் சி.பி.ஐ. விசாரணை வைக்க வேண்டும். சி.பி.ஐ.க்கு பரிந்துரை செய்ய நான் தயாராக உள்ளேன். 2 முறை இதுகுறித்து சட்டசபையில் கேள்வி எழுப்பியும், எந்த அதிகாரியும் விளக்கம் அளிக்கவில்லை.

    அரசு விழாக்களிலும் எதிர்கட்சி எம்.எல்.ஏ.க்களை மதித்து அழைக்கிறோம். ஒரு சில இடங்களில் தவறு நடந்திருந்தது. ஆனால் அது தற்போது சரி செய்யப்பட்டு விட்டது. அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவிகித இடஒதுக்கீடு கொடுக்க முடியாது என முன்னாள் முதல்- அமைச்சர் நாராயண சாமியும், எதிர்கட்சி தலைவரும் கூறியிருந்தார்.

    ஆனால் தற்போது அதனை நாங்கள் பெற்றுத் தந்திருக்கிறோம். இதற்கு மத்திய அரசுக்கும், கவர்னருக்கும் முதல்- அமைச்ருக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறோம்.

    இந்த ஆட்சி இருக்கும் போதே மாநில அந்தஸ்து பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. நாராயணசாமி வீண் விளம்பரம் தேடுகிறார். மோடி தேர்தல் பிரச்சாரத்தின் போது காங்கிரசின் கடைசி முதல்- அமைச்சராக நாராயணசாமி இருப்பார் என கூறியிருந்தார். அதுதான் நடந்தது.

    ராகுல்காந்தி புதுவைக்கு வந்து மீனவ கிராமத்தில் பேசியபோது, அரசை பெண்மணி ஒருவர் குற்றம் சாட்டினார். அதை கூட நாராயணசாமி, ராகுலிடம் மாற்றி கூறினார். அப்படிப்பட்ட நபர் நாராயணசாமி.

    இன்னும் 2 நாட்களில் கியாஸ் மானியம் வழங்கப்படும். அதிகாரிகள் செய்த சிறு பிழை காரணமாக மானியம் தடைப்பட்டுள்ளது. 2 நாளில் சரி செய்து வழங்கப்படும்.

    இன்னும் 1 மாதத்தில் புதிய சட்டப்பேரவை கட்ட டெண்டர் வைக்கப்படும். டிசம்பர் மாதம் பிரதமர் மோடி பூமிபூஜை செய்து பணியை தொடங்கி வைப்பார்.2 ஆண்டுகளில் புதிய சட்டபேரவை கட்டி முடிக்கப்பட்டு, முதல்- அமைச்சர் ரங்கசாமியால் திறந்து வைக்கப்படும்.

    இவ்வாறு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் கூறினார்.

    • மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது.
    • முனுசாமிப்பிள்ளை நகர், ஸ்ரீநிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது.

    புதுச்சேரி:

    மரப்பாலம் துணை மின் நிலையத்திலிருந்து வரும் உயர் மின்னழுத்த பாதையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணி முதல் மதியம் 12.30 வரை முதலியார்பேட்டை நேத்தா நகர், எம்.ஜி.ஆர் நகர், ரமணா நகர், சிவா விஷ்ணு நகர்,

    ஜெயமூர்த்தி ராஜா நகர், இன்ஜினியர்ஸ் காலனி, அன்சாரி துரைசாமி நகர், ஜெயம் நகர், பி.எஸ்.சி வங்கி காலனி, ஜோதி நகர், வாரியார் நகர், காயத்திரி நகர், ஜய்யப்பசாமி நகர், ஜான்பால் நகர், ஜான்சி நகர் பகுதி, ஓம் சக்தி நகர், மிதுன் நகர்,

    முனுசாமிப்பிள்ளை நகர், ஸ்ரீநிவாசன் நகர் மற்றும் சுற்றியுள்ள அதனை சார்ந்துள்ள பகுதிகளில் மின்நிறுத்தம் செய்யப்படுகிறது. 

    • கென்னடி எம்.எல்.ஏ. அறிக்கை
    • அ.தி.மு.க.மாநில செயலாளர் உண்மைக்கு புறம்பாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    புதுச்சேரி:

    புதுவை தி.மு.க. மாநில துணை அமைப்பாளரும் உப்பளம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிபால் கென்னடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது:-

    சனாதனம் என்பது ஒரு மதத்திற்கு சொந்தமானது அல்ல. அது, எந்த மதத்தில் இருந்தாலும் ஏற்கக் கூடியதும் அல்ல. இது தொடர்பாக கவர்னருக்கு நான் தெரிவித்ததில், எந்த இடத்திலும் எந்த ஒரு மதமோ மற்றும் சாதியை குறித்து சொல்லவில்லை.

    அ.தி.மு.க.மாநில செயலாளர் உண்மைக்கு புறம்பாக பேசுவது கண்டிக்கத்தக்கது.

    கடந்த காலங்களில் வன் முறையை தூண்டிவிட்டு அரசியல் பிழைப்பு நடத்தியது யார் என்பது மக்களுக்கு தெரியும்.

    சனாதனம் என்பது குறித்து அண்ணா கற்றுக் கொடுத்ததை அறியாமல் அண்ணா பெயரால் இயக்கம் நடத்துபவர்களும் அந்த இயக்கத்தின் பொறுப்புகளில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்து விட்டு பின்னர் தி.மு.க.விற்கு பதில் அளிக்கலாம்.

    அண்ணாவின் கடமை, கண்ணியம் கட்டுப்பாடு என்ற தாரக நெறிகளை நெஞ்சில் ஏற்றி, இயக்கம் நடத்துவதால் அரசு விழாவில் சபை நாகரீகம் பதில் அளிக்கும் வகையில் அறிக்கையாக வெளியிட்டேன்.

    அரசு விழாவில் முறையற்ற வகையில் நடப்பது போன்று நாகரிகம் அற்ற வகையில் நடக்க எங்களுக்கு எங்கள் இயக்கம் கற்றுக் கொடுக்கவில்லை.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×