என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு
    X

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு வழங்கப்பட்ட காட்சி.

    வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க காசு

    • 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க காசினை குழந்தைகளுடன் வந்த தாய்மார்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.
    • ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்று.

    புதுச்சேரி:

    அரியூர் வெங்கடேஸ்வரா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு தங்கக்காசு வழங்கப்பட்டு வருகிறது.

    அதன்படி கடந்த 3 மாதம் இந்த மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்கக்காசு வழங்கும் நிகழ்ச்சி குழந்தைகள் வார்ட்டில் நடைபெற்றது. ராமச்சந்திரா கல்வி குழுமத்தின் தலைவர் ராமச்சந்திரன் வழிகாட்டு தலின்படி நடைபெற்று.

    இந்த நிகழ்ச்சியில் கல்வி குழுமத்தின் மேலாண் இயக்குனர் ராஜுவ்கிருஷ்ணா, துணை மேலாண் இயக்குனர் மௌஷ்மி ராஜுவ்கிருஷ்ணா ஆகியோர் தலைமை தாங்கி மருத்துவமனையில் பிறந்த 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு 1 கிராம் தங்க காசினை குழந்தைகளுடன் வந்த தாய்மார்களுக்கு வழங்கி வாழ்த்தி பேசினார்கள்.

    இந்த நிகழ்ச்சியில் ராமச்சந்திர கல்விக் குழுமத்தின் முதன்மை இயக்க அதிகாரி டாக்டர். வித்யா, கல்லூரி இயக்குனர் ரத்தினசாமி, மருத் துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் லோகநாதன், கல்விக் குழுமத்தின் பொது மேலாளர் சவுந்தர்ராஜன், மகளிர் மற்றும் மகப்பேறு துறை தலைவர் ஹெர்மத் மற்றும் மருத்துவர்கள், செவிலியர்கள், தாய்மார்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.

    நிகழ்ச்சியின் முடிவில் டாக்டர் மானஸ் நன்றி கூறினார்.

    Next Story
    ×