என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
நவீன அங்காடியில் மீன்கள் ஏலம்
- நேரு வீதியில் போலீசார் குவிப்பு
- இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.
புதுச்சேரி:
புதுவை நேரு வீதியில் பெரிய மார்க்கெட் உள்ளே மீன் மார்க்கெட் இயங்கி வருகிறது. அதன் வெளிப்பகுதியான நேரு வீதி - காந்தி வீதி சந்திப் பில் வெளியூர்களில் இருந்து லாரிகளில் வரும் மீன்கள் காலை நேரத்தில் ஏலம் விடப்படுகிறது.
இதற்கு தடை விதித்து மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். ஆனாலும், தொடர்ந்து ஏலம் விடப்பட்டு வந்தது. இந்தநிலையில், இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில தொடரப்பட்ட வழக்கில், நேரு வீதி யில் நடைபெறும் மீன்கள் ஏலத்தை. இ.சி.ஆரில் உள்ள நவீன மீன் அங்காடிக்கு மாற்ற போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது. இதனையொட்டி, நேரு வீதியில் மொத்த மீன் வியாபாரம் செய்யும் குருசுக்குப்பம், வைத் திக்குப்பம், வம்பா கீரப்பாளையம் மீனவர்களுடன் சீனீயர் போலீஸ் சூப்பிரண்டு நாரா சைத்யன்யா பேச்சு வார்த்தை நடத்தினார்.
அதில், இன்றுமுதல் நவீன மீன் அங்காடியில் மொத்த மீன்களை ஏலம் விட மீனவர்கள் ஒப்புக் கொண்டனர். இதனையடுத்து, நேரு வீதியில் மீன்களை ஏலம் விட வருபவர்களை தடுக்க, 2 மணி முதலே நேரு வீதியில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.
மேலும், எல்லைப்பகுதிகளில் மீன் கொண்டு செல்லும் வாகனங்கள் சோதனை செய்யப்பட்டன. மீன் கொண்டு செல்பவர்கள் நேரு வீதிக்கு செல்லாமல் நவீன மீன் அங்காடிக்கு திருப்பி விடப்பட்டனர்.
பெரும்பாலும் அதிகாலையிலேயே நேரு வீதியில் சுமார் 35-க்கும் மேற்பட்ட வாகனங்களில் மீன்கள் ஏலத்திற்கு வரும். ஆனால் நவீன மீன் அங்காடியில் இன்று ஏலத்திற்கு 5 வாகனங்கள் மட்டுமே வந்திருந்தது. அதிலும், 3 வாகனம் வழக்கமாக அங்கு வரும் வாகனங்கள் என கூறப்பட்டது.
இருப்பினும் நாளை முதல் முழுமையான ஏலம் நவீன மீன் அங்காடி வளாகத்தில் நடத்த மீனவர்கள் உறுதி அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.






