என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    செவலியர் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விழிப்புணர்வு பேரணி
    X

    செவலியர் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விழிப்புணர்வு பேரணி நடந்த போது எடுத்த படம்.

    செவலியர் கல்லூரி மாணவர்கள் தற்கொலை விழிப்புணர்வு பேரணி

    • சுகாதார அலுவலகம் வாயிலில் தொடங்கிய பேரணியில் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.
    • முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் சுகாதார துறை அலுவலகத்தை அடைந்தது.

    புதுச்சேரி:

    தேசிய மனநல திட்டத்தின் மற்றும் மனநலத்துறை புதுவை அரசு சார்பில் தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது.

    பேரணியை சுகாதார இணை இயக்குனர் முரளி தொடங்கி வைத்தார். சுகாதார அலுவலகம் வாயிலில் தொடங்கிய பேரணியில் பல்வேறு செவிலியர் கல்லூரி மாணவ- மாணவியர் கலந்து கொண்டனர்.

    எந்த பிரச்னைக்கும் தற்கொலை தீர்வல்ல.மன குழப்பம் ஏற்பட்டால் இலவச ஆலோசனைகளை வழங்க அரசு மருத்துவமனையில் மனநல பிரிவு தயாராக இருக்கிறது என்றும் தன்னம்பிக்கையை வளர்த்து கொள்வோம்.. தற்கொலையை தடுப்போம். தற்கொலை எதற்கும் தீர்வல்..

    சாகும் தைரியம் இருக்கிறது என்றால் வாழ்கிற தைரியம் வேண்டும் என வலியுறுத்தியும் செவிலியர் மாணவ-மாணவியர் பதாகை ஏந்தியும் கோஷமிட்டும் பேரணி சென்றனர்.

    முக்கிய வீதிகள் வழியாக சென்ற பேரணி மீண்டும் சுகாதார துறை அலுவலகத்தை அடைந்தது.

    Next Story
    ×