என் மலர்
புதுச்சேரி

பிம்ஸ் மருத்துவமனை சார்பில் துப்புரவு பணியாளர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நடந்த போது எடுத்த படம்.
துப்புரவு பணியாளருக்கு இலவச மருத்துவ முகாம்
- 200-க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர் சிகிச்சை பெற்றனர்.
- பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் சிறப்பு இயன் சிகிச்சை அளித்தனர்.
புதுச்சேரி:
பிம்ஸ் மருத்துவ கல்லூரி மற்றும் கோட்டக்குப்பம் நகராட்சி இணைந்து துப்புரவு பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கு இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது.
முகாமை, பிம்ஸ் மருத்துவக் கல்லூரி முதன்மை நிர்வாக ஆலோசகர் பாபு டேனியல் தலைமை தாங்கி துவக்கி வைத்தார்.
நகராட்சி சேர்மன் ஜெய மூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் ராபின்சன் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் பொது மருத்துவம், காது, மூக்கு, தொண்டை, கண் மற்றும் எலும்பியல் மருத்துவ நிபுணர்கள் சிகிச்சை அளித்தனர்.
உலக பிசியோதெரபி தினத்தை முன்னிட்டு பிசியோதெரபி மருத்துவ நிபுணர்கள் அல்ட்ரா சவுண்ட் மற்றும் சிறப்பு இயன் சிகிச்சை அளித்தனர்.
முகாமில் பிம்ஸ் மருத்துவ கண்காணிப்பாளர் பீட்டர் மனோகரன், பிம்ஸ் வளாக பாதுகாப்பு வளர்ச்சி நிர்வாகி பிரசன்னா, நகராட்சி ஊழியர்கள் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.
முகாமில்






