என் மலர்
புதுச்சேரி

புதுவையில் பல்வேறு வடிவங்களில் தயாராகி வரும் விநாயகர் சிலைகள்.
புதுவை அருகே பல்வேறு வடிவங்களில் தயாராகும் விநாயகர் சிலைகள்
- நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா. வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
- விநாயாகர் சிலைகள் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.
புதுச்சேரி:
நாடு முழுவதும் விநாயகர் சதூர்த்தி விழா. வருகிற 18-ந் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்பட உள்ளது.
விழாவையொட்டி விநாயகர் சிலை தயாரிக்கும் பணிகள் பல்வேறு இடங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக புதுவையை அடுத்த தமிழக குதியான கூனிமுடக்கு கிராமத்தில் 4 தலைமுறையாக விநாயகர் சிலைகள் உருவாக்கி வருகின்றனர்.
பாரம்பரியமாக விநாயகர் சிலை தயாரிக்கும் பணியில் 50 ஆண்டுகளுக்கு மேலாக இந்த பகுதியில் உள்ள குடும்பங்கள் ஈடுபட்டு வருகிறது.மரவள்ளி கிழங்கு மாவு மற்றும் காகித கூழ் ஆகியவற்றைக் கொண்டு தயாரிக்கப்படும் இந்த விநாயாகர் சிலைகள் அரை அடி முதல் 15 அடி உயரம் வரை தயாரிக்கப்படுகிறது.
ஜனவரி மாதம் முதல் இந்த சிலை தயாரிப்பு பணி நடைபெற்று வருகிறது. இங்கு தயாரிக்கப்படும் சிலைகள் ரூ 2 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆண்டு புதிய வரவாக புல்லட் விநாயகர், பாகுபலி விநாயகர், விவசாய விநாயகர், கருப்பு விநாயகர் ஆகியவை செய்யப்பட்டுள்ளது.
மேலும் பள்ளிகொண்ட விநாயகர் அன்ன விநாயகர், சிவன்பார்வதி விநாயகர், திருமூர்த்தி விநாயாகர், பஞ்ச மூர்த்தி விநாயகர், ஆஞ்சநேய விநாயகர், ராஜ விநாயகர் என 30-க்கும் மேற்பட்ட வகைளில் விநாயகர் சிலைகள் தயாரிக்கப்பட்டு ரசாயன கலப்பு இல்லாத வண்ணங்கள் பூசப்படுகிறது
வழக்கத்தை விட விலைவாசி இந்த ஆண்டு அதிகரித்துள்ளதால் இந்த முறை சிலைகளின் விலை அதிகரித்துள்ளது.சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படாதவாறு தயாரிக்கப்படும் இந்த சிலைகள் ஆந்திரா, கேரளா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் மற்றும் உள்ளூரிலும் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.






