search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    உயர்கல்வி கட்டணக்குழு கண்காணிப்பு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்
    X

    உயர்கல்வி கட்டணக்குழு கண்காணிப்பு ஆணையம் அமைக்க வலியுறுத்தல்

    • பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்பு களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.
    • ரூ.14 லட்சமும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    ஒய்வூபெற்ற ஐகோர்ட்டு நீதிபதி கண்ணம்மாள் தலைமையிலான கட்டண க்குழு தனியார் சுயநிதி கல்லூரியில் உள்ள முதுகலை மருத்துவம், பல் மருத்துவம், எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், பிஎஸ்சி நர்சிங் ஆகிய படிப்பு களுக்கு புதிய கட்டணத்தை நிர்ணயித்துள்ளது.

    பிம்ஸ், மணக்குள விநாயகர், வெங்கடேஸ்வரா ஆகிய 3 தனியார் மருத்துவ கல்லூரிகளிலும் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்புகளில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.59 லட்சத்தில் இருந்து ரூ.7.95 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.22.77 லட்சத்தில் இருந்து ரூ.23.90 லட்சமாகவும், கிளினிக்கல் சாரா முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு தலா ரூ.6.22 லட்சத்தில் இருந்து ரூ.6.55 லட்சமாகவும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.12.44 லட்சத்தில் இருந்து ரூ.13.05 லட்சமாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

    முதுநிலை பல் மருத்துவ படிப்பு (எம்.டி.எஸ்) மாகி பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சம், பாரா கிளினிக்கல் சார்ந்த முதுநிலை பல் மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.5.53 லட்சம், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.7.19 லட்சம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    இதேபோல், வெங்கடேஸ்வரா பல் மருத்துவ கல்லூரியில் கிளினிக்கல் சார்ந்த முதுநிலை மருத்துவ படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.6.22 லட்சமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.14 லட்சமும் கல்வி கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

    பிம்ஸ் மற்றும் மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் உள்ள அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.80 லட்சத்தில் இருந்து ரூ.4 லட்சமாகவும், வெங்கடே ஸ்வரா மருத்துவ கல்லூரியில் எம்பிபிஎஸ் படிப்பில் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.3.29 லட்சத்தில் இருந்து ரூ.3.80 லட்சமாகவும், 3 தனியார் கல்லூரிகளிலும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.16 லட்சத்தில் இருந்து ரூ.16.80 லட்சமாகவும், என்ஆர்ஐ ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.21 லட்சமாகவும் உயர்த்தப்பட்டு ள்ளது. புதுவையில் உள்ள 3 தனியார் நர்சிங் கல்லூரிகளில் பி.எஸ்.சி நர்சிங் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ரூ.42 ஆயிரம் என பழைய கட்டணமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது

    புதிய கல்வி கட்டணமானது, சேர்க்கை கட்டணம், கல்வி கட்டணம், சிறப்பு கட்டணம், ஆய்வகம், கணினி, பராமரிப்பு மற்றும் வசதிகள் கட்டணம் மற்றும் பிற செலவுகள் போன்ற பல்வேறு கட்டணங்களை உள்ளடக்கிய ஆண்டு கட்டணமாகும். கட்டண குழுவால் நிர்ணயிக்கப்பட்ட கட்டணங்களை தவிர, கல்வி நிறுவனங்களுக்கு எந்த விதமான கூடுதல் கட்டண த்தையும் வசூலிக்க உரிமை இல்லை. கூடுதல் கட்டணம் வசூலிக்கும் கல்லூரிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கட்டண குழு எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த தகவலை சுகாதார சார்பு செயலர் கந்தன் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×