என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கோவில் கும்பாபிஷேக விழாவில்  பெண்ணிடம் செயின் பறிப்பு
    X
    கோப்பு படம்.

    கோவில் கும்பாபிஷேக விழாவில் பெண்ணிடம் செயின் பறிப்பு

    • புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜா நகரில் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் உள்ளது.
    • இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    புதுச்சேரி:

    புதுவை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள ராஜா நகரில் ஸ்ரீ ராஜகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் கும்பாபிஷேக விழா இன்று காலை நடைபெற்றது.

    இதில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் மட்டும் அல்லாமல், புதுவையின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் வந்திருந்தனர். இதில் அருந்ததிபுரம் முதல் தெருவை சேர்ந்த நாகம்மாள் என்பவரும் கலந்துகொண்டார்.

    கோவிலில் புனித நீர் ஊற்றப்பட்டதும், பக்தர்கள் சிலர் கோவிலுக்குள் சென்று சாமி தரிசனம் செய்தனர். நாகம்மாளும் அவர்களுடன் சென்று கோவில் தரிசனம் செய்துள்ளார். வெளியில் வந்தபோது அவர் கழுத்தில்் அணிந்திருந்த 3 பவுன் செயினை காணாவில்லை. இதனால் அவர் அதிர்ச்சிய டைந்தார். இதுகுறித்து அவர் கோவில்விழா குழு வினரிடம் தெரிவித்தார். அவர்கள் அங்கிருந்த போலீசாரிடம் கூறினர்.

    போலீசார் கோவிலில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகள், மற்றம் டிரோன் காட்சிகளை வைத்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    இதுகுறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து நகையை திருடி சென்றவரை தேடி வருகின்றனர்.

    Next Story
    ×