என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • 2 பேர் கைது- கார் பறிமுதல்
    • காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் புதுச்சேரி மதுபாட்டில் களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    புதுச்சேரி:

    புதுவை அடுத்து தமிழகப் பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்ரோடு-கிளியனூர் தேசிய நெடுஞ்சாலையில் கோட்டகுப்பம் கலால் துறை சோதனை சாவடி உள்ளது. இங்கு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டி ருந்தனர்.

    அப்போது அவ்வழியாக வந்த காரை சோதனை செய்தனர். அந்த காரில் 10-க்கும் மேற்பட்ட அட்டைப் பெட்டிகளில் புதுச்சேரி மதுபாட்டில்களை கடத்தி வந்தது தெரியவந்தது.

    காரில் வந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்கள் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மல்லி (வயது 38), மற்றும் ராம்மோகன் (வயது 45) என்பது தெரிய வந்தது. ஆந்திராவில் கூடுதல் விலைக்கு மதுபானத்தை விற்பனை செய்ய புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் கடத்தி சென்றது தெரிய

    வந்தது. இதனையடுத்து இருவரையும் கலால் துறை போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்து ஆயிரம் மதுபாட்டில் களையும் காரையும் பறிமுதல் செய்தனர். 

    • முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா தொடங்கி வைத்தார்
    • சிக்கன்குனியா தொற்று நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுவை ரெட்டி யார்பாளையம் பிரசிடென்சி பள்ளி மாணவர்கள் டெங்கு, சிக்கன்குனியா தொற்று நோய்களுக்கு எதிராக விழிப்புணர்வு பிரசாரம் செய்து வருகின்றனர். திருவண்டார் கோவில் கிராமத்தில் சிவன் கோவில் அருகே தொடங்கிய விழிப்புணர்வு பேரணியை என்.ஆர்.காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. கோபிகா கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் சிவன் கோயில் அறங்காவல் துறை தலைவர் சரவணன், ராஜா, கிராம பஞ்சாயத்து தலைவர் ராதாகிருஷ்ண, என்ஆர் காங்கிரஸ் பிரமுகர்கள் சக்திவேல், ராஜேந்திரன், ராஜசேகர், பெருமாள், செல்வம், பன்னீர்செல்வம், ராஜேஷ், சிவா, விக்னேஷ், வீரப்பன், இளையராஜா, பாரதிராஜா, வேலாயுதம், அன்புதாசன் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • புதுவை கோர்ட்டு உத்தரவு
    • போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை கண்டாக்டர் தோட்டம் பகுதியை சேர்ந்தவர் முகேஷ் (வயது 32). இவர் அந்த பகுதியில் கடந்த 2021-ம் ஆண்டு கஞ்சா விற்ற போது ஒதியன்சாலை போலீசார் கைது செய்தனர்.

    அவரிடமிருந்து ஆயிரத்து 300 கிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டது. இதனையடுத்து போலீசார் முகேஷ் மீது வழக்கு பதிவு செய்தனர்.

    வழக்கு போதைப்பொருள் தடுப்புச் சட்ட சிறப்பு நீதிமன்றமான புதுவை 3-வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது.

    அரசுத் தரப்பில் அமலாக்கத்துறை வழக்கறிஞர் விநாயகம் ஆஜரானார். விசாரணை முடிந்த நிலையில், குற்றம் சாட்டப்பட்ட முகேஷுக்கு 7ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி இளவரசன் உத்தரவிட்டார்.

    • நடப்பு ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    • மரங்களில் விஷவண்டு கூடுகள் அதிகளவில் இருப்பதையும் அதில் 100-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரியாங்குப்பத்தில் உள்ள பாரதியார் பல்கலைக்கூட த்தில உயர்கல்வி வகுப்பு தொடங்க புதுவை பல்கலைகழகம் அனுமதி அளித்துள்ளது.

    நடப்பு ஆண்டிலேயே மாணவர்கள் சேர்க்கை நடத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அதற்கான பூர்வாங்க பணிகளை பாரதியார் பல்கலை கூட முதல்வர் உள்ளிட்ட அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, உயர்கல்விக்கான புதிய வகுப்புகளுக்கு கூடுதல் இடம் தேவைப்படுவதால் பல்கலை கூட வளாகத்தில் மிகவும் அடர்த்தியாக, காடு போல் வளர்ந்திருந்த மரம், செடி, புதர்களை அப்புறப்ப டுத்தும் பணி நடந்தது.

    அப்போது அங்கு இருந்த மரங்களில் விஷவண்டு கூடுகள் அதிகளவில் இருப்பதையும் அதில் 100-க்கும் மேற்பட்ட விஷ வண்டுகள் இருப்பதையும் கண்டறிந்தனர். இந்த வண்டுகள் கடித்தால் உயிரிழப்பும் ஏற்படும் அபாயம் உள்ளது.

    இது குறித்து தீயணைப்பு துறை மற்றும் வனத்துறை யினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் உதவியோடு, தீயணைப்பு வீரர்கள் விஷ வண்டு கூண்டினை தீவைத்து அழித்தனர்.

    • மக்கள் பாதுகாப்பு பேரியக்கம் கோரிக்கை
    • முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி மக்கள் பாதுகாப்பு பேரியக்க தலைவர் கராத்தே வளவன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    கொரோனா காலத்தில் தங்களது இன்னுயிரையும் பொருட்படுத்தாமல் டாக்டர்கள்,நர்சுகள்,மற்றும் சுகாதார பணியாளர்கள் பணியாற்றினர்.

     அவர்களது சேவையை உலகமே பாராட்டுகின்ற நிலையில், நமது புதுவை மாநில அரசு 2020-ம் ஆண்டு தகுதியான சுகாதார பணியாளர்களை சான்றிதழ்கள் சரி பார்த்து நேர்முகத் தேர்வு நடத்தி தேர்ந்தெடுத்தனர்.

    ஆஷா பணியாளர்களுக்கு ரூ.3,000மும் செவிலியர்க ளுக்கு ரூ.15,000 மற்றும் மருத்துவர்களுக்கு ரூ.40 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் வரை வழங்கி வந்துள்ளனர். அவர்களை தொடர்ச்சியாக பணி நிரந்தரம் செய்யாமல், புதிதாக அவர்கள் செய்த அதே வேலைக்கு ஆட்கள் தேர்வு செய்வதாக விளம்பரப்ப டுத்தி உள்ளது வன்மையாக கண்டிக்க த்தக்கது. கொரோனா காலத்தில் அவர்கள் ஆற்றிய சேவை மிகவும் பாராட்ட த்தக்கது என்று பலமுறை கூறிய கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன், முதல்-அமைச்சர் ரங்கசாமி ஆகியோர் உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு அவர்களை பணி நிரந்தரம் செய்ய உரிய முயற்சி களை மேற்கொள்ள வேண்டும்.

    அவர்கள் நியா யமான அறவழிப் போராட்டங்களை உரிமை யை பெற நடத்தி வருகின்றனர். அவர்களது போராட்டங்களை திசை திருப்பும் விதமாக புதுவை அரசு காவலர்களைக் கொண்டு சுகாதாரப் பணியாளர்களை அப்புறப்படுத்தியது மிகவும் கண்டனத்துக்குரியது.

    காலாப்பட்டு போலீஸ் நிலையம் அருகில் ஒரு அப்பாவிபெண் நீதி கேட்டு தீயிட்டு தற்கொலை செய்தது மிகவும் வருந்தத்தக்கது. அவரது குடும்பத்திற்கு அரசு உரிய இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், ஓய்வு பெற்ற நீதிபதியை கொண்டு முழுமையான விசாரணை நடத்த புதுவை அரசு உத்தரவிட வேண்டும்.

    புதுவை காவல்துறை உயர் அதிகாரி வாகனம் ஓட்டுவோரின் உரிமங்களை சிறு சிறு குற்றங்களுக்காக ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது மிகவும் கண்ட னத்துக்கு ரியது. ஒருவர் ஓட்டுநர் உரிமம் பெற எவ்வ ளவு கடினமானது என்பது அவருக்குத் தெரியாதா?

    இது தொடர்பாக இதுவரை 25 ஆயிரத்துக்கு மேற்பட்ட வாகன ஓட்டு நர்களின் ஓட்டுனர் உரிம ங்களை ரத்து செய்வதனால் அவர்களது குடும்ப வருமானம் முழுவது மாக பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. என இது தொடர்பாக கவர்னரும், முதல்- அமைச்சரும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • குடிமைப்பொருள் வழங்கல் துறை அறிவிப்பு
    • மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை குடிமைப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை இயக்குநர் சத்திய மூர்த்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதல்-அமைச்சரின் சமையல் எரிவாயு மானியத்திட்டத்தை செயல்படுத்த, சமையல் எரிவாயு பெறும் நுகர்வோர்கள் விவரத்தை எல்.பி.ஜி எரிவாயு முகவ ர்களிடம் (ஏஜென்ஸிகள்) பகிர்வதற்கு மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்திடம் ஒப்புதல் கோரப்பட்டுள்ளது.

    ஆனாலும், காலதாம தத்தைத் தவிர்க்கவும், உடனடியாக திட்டத்தை செயல்படுத்தவும் நுகர்வோர்கள் குறிப்பிட்ட இணையதளம் மற்றும் கைபேசி செயலியில் பிராந்தியம், எரிவாயு முகவர் பெயர், நுகர்வோர் எண், கைபேசி எண், குடும்ப அட்டை எண், ஆதார் எண் விவரங்களைப் பதிவிடவேண்டும்.

    குடிமைப் பொருள் வழங்கல்துறை அறிவித்த இணையதளம், செயலி குறித்த விவரங்களுக்கு உதவி மையத்தைத் தொடர்பு கொள்ளளாம். அதற்காக, 9944052612, 9944052718 ஆகிய கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

    • நகராட்சி ஆணையர் எச்சரிக்கை
    • சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

    புதுச்சேரி:

    புதுவை நகராட்சியில் நாள்தோறும் 100 கிலோவுக்கு மேல் குப்பைகள், கழிவுகள் உருவாக்கும் திருமண மண்டபம், உணவகம், வணிக வளாகம், சிறுதொழிற்சாலை உரிமையாளர்கள் ஆலோசனைக்கூட்டம் நகராட்சி ஆணையர் அலுவலகத்தில் நடந்தது.

    புதுவை நகராட்சி ஆணையர் சிவக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில், குப்பைகள், கழிவுகள் உண்டாக்கும் நிறுவனங்கள் அனைத்தும் நகராட்சியிடம் பதிவு செய்ய வேண்டும். குப்பை களை மக்கும், மக்காத குப்பைகள் என தரம்பிரித்து வழங்க வேண்டும். தரம் பிரிக்காதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    • காங்கிரஸ் தேசிய செயலர் வலியுறுத்தல்
    • பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களு க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கெண்டு வந்தார்.

    புதுச்சேரி:

    புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சரிதா நிருபர்களிடம் கூறியதாவது:-

    ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களு க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கெண்டு வந்தார்.

    தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.

    மேலவையில் பா.ஜனதா வினர் எதிர்ப்பு தெரிவி த்ததால் தடைபட்டது. அதையே தற்போது பா.ஜனதா கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்த வேண்டும். புதுவை சட்ட சபையிலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு சரிதா கூறினார்.

    பேட்டியின்போது கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்திய நாதன் எம்.எல்.ஏ, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
    • நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மத்திய சாலை பாதுகாப்பு குழு பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டது.

    அப்போது விபத்தில் உயிரிழப்பை தடுப்பது, சாலை மேம்படுத்துதல், சிக்னல்களை சீரமைத்தல் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை அதிகாரிகளுக்கு வழங்கியது.

    அதன் அடிப்படையில் முதல் கட்டமாக புதுவையில் ஹெல்மெட் அணிதல் உள்ளிட்ட சாலை விதிகளை மீறிய 26 ஆயிரம் பேரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்ய போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    இந்நிலையில் சாலைகளில் செல்ல வேண்டிய வேககட்டுப்பாடு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதன்படி முக்கிய சாலைகளில் அனுமதிக்கப்பட்ட வேகத்தை விட (45கி.மீ.) அதிவேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதற்காக கிழக்கு கடற்கரை சாலையில் சிவாஜி சிலையில் இருந்து இந்திராகாந்தி சிலை சதுக்கம் வரை, திண்டிவனம் சாலையில் ஜிப்மர் முதல் இந்திராகாந்தி சிலைவரை, கடலூர் சாலையில் முருங்கப்பாக்கம் முதல் தவளக்குப்பம் வரை நவீன கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்பட உள்ளது.

    முதல் கட்ட பரிசோதனைகள் முடிவடைந்த நிலையில் நவீன கேமராக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பகுதியில் போக்குவரத்து போலீசாரும், போக்குவரத்து துறையும் இணைந்து அதிவேகமாக செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்க உள்ளனர்.

    எனவே இந்த சாலைகளில் செல்லும் வாகன ஓட்டிகள் விழிப்புணர்வுடன் செல்லுமாறு சமூக வலைதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அடுத்த கட்டமாக மேலும் பல முக்கிய சாலைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த போக்குவரத்து காவல்துறை திட்டமிட்டுள்ளது.

    • இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.
    • கைதிகளுக்கு இடையேயான மோதலுக்கு என்னகாரணம் என விசாரித்து வருகின்றனர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி காலாப்பட்டில் மத்திய சிறை உள்ளது. இங்கு 300-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகள், விசாரணை கைதிகள் உள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு 8 மணிக்கு கைதிகள் 2 பேருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது.

    அப்போது இருவரும் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர். அவர்களை அங்கிருந்த சக கைதிகள் மற்றும் வார்டன்கள் விலக்கிவிட்டனர்.

    இந்த மோதலில் 2 பேருக்கு படுகாயம் ஏற்பட்டது. அவர்களை சிறை வார்டன்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர்.

    இதில் ஒருவர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மற்றொருவர் சிகிச்சை அளிக்கப்பட்டு சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார்.

    விசாரணையில் மோதி கொண்ட கைதிகள் முத்தியால்பேட்டையை சேர்ந்த உசேன் மற்றும் பிரதீஷ் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதிகளுக்கு இடையேயான மோதலுக்கு என்னகாரணம் என விசாரித்து வருகின்றனர்.

    • தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம்.
    • கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் உலகத்தமிழ் மாநாடு நடத்தப்படும் என்று கடந்த பட்ஜெ ட் கூட்டத் தொடரின்போது முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்தார்.

    இதைத்தொடர்ந்து உலகத்தமிழ் மாநாட்டை நடத்துவது தொடர்பாக கலை பண்பாட்டுத்துறை ஆயத்த ஏற்பாடுகளை செய்துள்ளது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் காமராஜர் மணிமண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில் முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    புதுச்சேரி தமிழ் வளர்ச்சியில் அக்கறை கொண்ட மாநிலம். கம்பன் விழா, இலக்கிய விழா என பல்வேறு தமிழ் விழாக்கள் கொண்டாடப்படுகின்றன. புதுவை தமிழ் அறிஞர்களும் வெளிநாடுகளில் நடக்கும் பல்வேறு விழாக்களுக்கு சென்று வருகின்றனர்.

    தமிழகத்தின் ஒரு அங்கம் போன்று புதுவை இருந்தாலும் இங்கும் உலகத்தமிழ் மாநாடு நடத்த வேண்டும் என்பது அரசின் எண்ணம். தமிழகத்தில் ஏற்கனவே உலகத்தமிழ் மாநாடு நடத்தி உள்ளனர்.

    புதுவை மாநாட்டிற்கு வெளிநாடுகளில் இருந்தும் தமிழ்அறிஞர்கள் வருவார்கள். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வந்து செல்வார்கள்.

    இந்த மாநாட்டிற்கு தேவையான நிதியை புதுவை அரசு ஒதுக்கித்தரும். எனவே அது தொடர்பான கவலை வேண்டாம். இந்த மாநாடு சிறப்பாக நடைபெற வேண்டும்.

    மாநாட்டிற்கு எத்தனை பேர் வருவார்கள் என்பதை முதலில் தெரிவிக்கவேண்டும். அவர்களுக்கு தேவையான வசதிகளை நாம் செய்து தரலாம்.

    2 அல்லது 3 நாட்கள் இந்த மாநாடு நடத்தப்பட வேண்டும். அதற்கு தேவையான குழுக்கள் போட்டு வருபவர் களை கவனித்துக்கொள்ளலாம். மாநாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகள் இருக்கும்.

    அவற்றை எங்கெங்கு நடத்தலாம் என்று திட்டமிட வேண்டும். குறிப்பாக கம்பன் கலையரங்கம், காமராஜர் மணி மண்டபம், பழைய துறைமுக வளாகம் உள்ளிட்ட இடங்களில் நடத்தலாம்.

    இன்னும் இடங்கள் தேவையென்றால் திருமண மண்டபங்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ளலாம்.

    மாநாட்டின்போது சிலம்பம், புலியாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகளையும் நடத்தலாம். மாநாட்டை வருகிற தை, மாசி மாதங்களில் நடத்தினால் நன்றாக இருக்கும்.

    அதற்கு பின் பாராளுமன்ற தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கிவிடும். இல்லாவிட்டால் தேர்தல் முடிந்த பின்னர்தான் நடத்த முடியும். எனவே வெளிநாட்டில் உள்ள தமிழ் அறிஞர்களை தொடர்புகொண்டு பேசி அவர்கள் வர வாய்ப்பு உள்ளதா? எப்போது வருவார்கள் என்பதை கேட்டு தெரிவியுங்கள்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    • போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
    • நாம் தமிழர் கட்சியினர் திடீரென இயக்குனர் அலுவலகத்திற்கு கொடிகளுடன் வந்தனர். செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    கொரோனா கால கட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் 165 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

    கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

    இக்கட்டான காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனால் அவ்வப்போது 3 மாதத்திற்கு ஒருமுறை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதிக்கு பிறகு அவர்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட வில்லை. அதேநேரத்தில் சட்டசபையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய வர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதனிடையே புதுவை அரசின் சுகாதாரத் துறைக்கு 105 நர்சுகளை நியமிக்க அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்த பணி யிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கி நிரப்ப வேண்டும் என நர்சுகள் வலியுறுத்தினர்.

    இன்று பாரதி பூங்கா வில் காலை 9 மணிக்கு அவர்கள் திரண்டனர். காலை 11 மணியளவில் அவர்கள் திடீரென சட்டசபையை அடுத்துள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வரும் நேரம் என்பதால், அவர்களை இயக்குனர் அலுவலகத்துக்குள் செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக, குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர்.

    இதனால் செவிலியர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் நர்சுகள் சுகா தாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நுழைந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொரோனா காலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியேவர அச்சப்பட்ட காலத்தில் பணி செய்தோம். எங்கள் உயிரையும் பொருட் படுத்தாமல், கொரோனா காலத்தில் பணியாற்றிய எங்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் திடீரென இயக்குனர் அலுவலகத்திற்கு கொடிகளுடன் வந்தனர். செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து இயக்கு னர் அலுவலகத்தில் நுழைவு வாயிலை போலீசார் மூடினர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    ×