என் மலர்
புதுச்சேரி
- வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார, வாசவி, விஷ்ணு, பார்ப்புகழ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரமாக பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. மற்றும் புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் கோவிந்தன் வழிகாட்டு தலின்படி புதுச்சேரி நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமையில் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சுத்தம் செய்தனர். சப்தகிரி வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநிலத் துணைத் தலைவர் செல்வம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் இளங்கோவன் , முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருச்சந்திரன், சம்பத், குமார், அங்கு தாஸ், மாரியப்பன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அமல்ராஜ் ,நகர மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த, கண்ணன், செயலாளர்கள் விஜய ராஜேஷ், அற்புத அழகன், தொகுதி தலைவர்கள் சக்திவேல், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி, மற்றும் சமூக வலைதள பிரிவு திரு பிரவீன் குமார், நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார, வாசவி, விஷ்ணு, பார்ப்புகழ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
- மின்துறை அறிவிப்பு
- விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
புதுச்சேரி:
கோவா மற்றும் யூனியன் பிரதேசங்க ளுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் மூலம் புதுவையில் ஆண்டு தோறும் மின் கட்டணம் நிர்ணயிக்கப் படுகிறது
ஆண்டுதோறும் உத்தேச மின் கட்டணம் அறிவிக்கப்படும் தொடர்ந்து ஒழுங்குமுறை ஆணையர் முன்னிலையில் பொது மக்களிடம் கருத்துகள் கேட்கப்படும். தொடர்ந்து மின் கட்டணம் ஏப்ரல் மாதம் முதல் உயர்த்தப்படும்.
இதுபோல் நடப்பு ஆண்டுக்கான மின் கட்டண மும் உயர்த்தப்பட்டது. இந்த நிலையில் கொள்முதல் விலை உயர்வை ஈடு செய்ய புதுவை அரசின் மின்துறை கூடுதல் கட்டணம் வசூலிக்க உள்ளது.
இதன்படி 2023 -24ம் ஆண்டின் முதல் காலாண்டான ஏப்ரல், மே, ஜூன் ஆகிய மாதங்களுக்காக மின் நுகர்வோரிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட உள்ளது. விவசாயம், சிறு குடிசைகள் தவிர்த்து மற்ற அனைத்து மின் நுகர்வோரிடமும் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்.
நுகர்வோர் வாரியாக முதல் காலாண்டுக்கு வசூலிக்கப்பட உள்ள மின் கட்டண விவரம் வருமாறு:
வீடுகளுக்கு 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 25 பைசா, 101 முதல் 200 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 36 பைசா, 201 முதல் 300 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 40 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசாவும்.
வர்த்தக மின் கட்டணம் 100 யூனிட்டு வரை யூனிட்டுக்கு 66 பைசா, 101 முதல் 250 வரை யூனிட்டுக்கு 77 பைசா, 250 யூனிட்டுக்கு மேல் 79 பைசா
இதுபோல் தெருவிளக்கு யூனிட்டுக்கு 78 பைசா, எல்டி தொழிற்சாலை யூனிட்டுக்கு 70 பைசா, எல் டி தண்ணீர் தொட்டி யூனிட்டுக்கு 72 பைசா, குடிசைத் தொழிலுக்கு 100 யூனிட் வரை யூனிட்டுக்கு 25 பைசா, 101 முதல் 200 யூனிட் வரை யூனிட்டுக்கு 36 பைசா, 201 முதல் 300 யூனிட் வரை யூனிட்டுக்கு 40 பைசா, 300 யூனிட்டுக்கு மேல் யூனிட்டுக்கு 40 பைசா எச்டி தொழிற்சாலைக்கு யூனிட்டுக்கு 60 பைசா, எச்டி வர்த்தகம் யூனிட்டுக்கு 62 பைசா, விளம்பர பலகைகளுக்கு யூனிட்டுக்கு 59 பைசா கூடுதல் கட்டணமாக வசூலிக்கப்பட உள்ளது
இந்த கூடுதல் கட்டணம் ஏப்ரல்,மே, ஜூன் மாதங்களுக்கு முறையே அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் வசூலிக்கப்படும். இதற்கான அறிவிப்பை புதுவை அரசின் மின்துறை வெளியிட்டுள்ளது.
- போட்டிக்கான ஏற்பாடுகளை பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் கோபு செய்து வருகின்றார்.
- மாநில விளையாட்டு சங்க தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை மாநில பாக்ஸிங் சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான பாக்ஸிங் போட்டிகள் ராஜீவ் காந்தி உள்விளையாட்டு அரங்கத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
பாக்ஸிங் சங்கத் தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ. தலைமையில் திரைப்பட நடிகர் தினா துணைத் தலைவர் முத்து கேசவலு ஆகியோர் முன்னிலையில் போட்டிகள் நடந்து வருகிறது. போட்டிக்கான ஏற்பாடுகளை பாக்ஸிங் சங்க பொதுச்செயலாளர் கோபு செய்து வருகின்றார்.
இந்தப் போட்டிகளில் புதுவை மாநிலத்தை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட பாக்ஸிங் வீரர்கள் வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.
போட்டிகளை புதுவை மாநில விளையாட்டு சங்க தலைவர் கராத்தே வளவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்.
- ஐகோர்ட்டு தலைமை நீதிபதியிடம் புதுவை வக்கீல் சங்கத்தினர் மனு
- புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் சமர்ப்பித்தார் .
புதுச்சேரி:
புதுவை வந்த சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதி கங்காப்பூர் வாலாவை பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் சங்க தலைவர் குமரன் சந்தித்து சால்வை அணிவித்தார்.
சந்திப்பின் போது தலைமை நீதிபதியிடம் புதுவையில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள இபைலிங் முறையில் தற்போது வழக்கறிஞர் சங்கத்திற்கு உள்ள பல்வேறு இடர்பாடுகள் பற்றியும், மேலும் இ ஃபைலிங் செக்ஷன் அனைத்து நீதிமன்றங்களிலும் உருவாக்க வேண்டும் என்றும், நீதிமன்ற ஊழியர்கள் மற்றும் அனைத்து வழக்கறிஞர்களுக்கும் முறையான பயிற்சி அளிக்க வேண்டும் என அதுவரை தற்போதைய நிலையே தொடர வேண்டும் என வலியுறுத்தினார்.
மேலும் புதுவையில் காலியாக உள்ள நீதிபதி பணியிடங்கள் மற்றும் வெகு நாட்களாக காலியாக உள்ள நீதிமன்ற ஊழியர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்றும் நடந்து முடிந்த புதுவை மாநிலத்திற்கான நீதிபதி பணிக்கான தேர்வு மூலம் அனைத்து நீதிபதி பணியிடங்களையும் புதுவை மாநிலத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களை கொண்டு நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை அடங்கிய மனுவை அவரிடம் சமர்ப்பித்தார் .
மனுவை பெற்ற தலைமை நீதிபதி கனிவுடன் பரிசினை செய்வதாக உறுதியளித்தார். பாண்டிச்சேரி வழக்கறிஞர் சங்கத்தின் இணைச் செயலாளர் திருமலைவாசன், மற்றும் அரசு வழக்கறிஞர் ராஜி ஆகியோர் உடன் இருந்தனர்.
- கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலத்தில் வறுமைக் கேட்டிற்கு கீழ் உள்ள ஆதி-திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மக்களுக்கு ஒன்று மற்றும் 2 குழந்தை பெற்ற தாய்மார்களுக்கும், உப்பளம் தொகுதியைச் சேர்ந்த 22 பயனாளிகளுக்கும் உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கென்னடி எம்.எல்.ஏ. வழங்கினார்.
அவர்களது வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொண்டார்.
தி.மு.க தொகுதி செயலாளர் சக்திவேல், வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், தி.மு.க நிர்வாகிகள் தங்கவேல், ஹரிகிருஷ்ணன், விநாயகமூர்த்தி, ஜெயசீலன், ராகேஷ், ரகுராமன் ஆகியோர் உடன் இருந்தனர்.
- ஒப்பந்த நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் விடிய விடிய பரிசுகள் போராட்டம் நடத்தினர்.
- அதை ஏற்று நர்சுகள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுச்சேரி:
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகளின் பணி காலம் கடந்த ஜூலை மாதம் முதல் புதுப்பிக்கப்படவில்லை
அதோடு சமீபத்தில் வெளியான நர்சுகள் பணி நியமன அறிவிப்பிலும் ஒப்பந்த நர்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் விடிய விடிய நர்சுகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசினார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்பந்த நர்சிகளின் பணிக்காலம் நீடிக்கப்படும் என்றும் உங்களுக்கு வேண்டியதை செய்வேன் அதுவரை பொறுமையாக காத்திருங்கள். என்றும் கூறினார். அதை ஏற்று நர்சுகள் போராட்டத்தை கைவிட்டனர்.
- நாம் தமிழர் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் காமராஜ், நிர்மல்சிங், ப்ரியன்குமரன்,ராஜ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
- தமிழகம், புதுவை மாநிலத்திற்கும் காவிரி பங்கீட்டு தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசு.
புதுச்சேரி:
புதுவை நாம் தமிழர் கட்சியின் சார்பாக இந்திராகாந்தி சதுக்கம் நூறடி சாலையில்ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்திற்கு புதுவை நாம் தமிழர் கட்சியின் மாநில செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் இளங்கோவன் மகளிர் பாசறை ஒருங்கிணைப்பாளர் கவுரி நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்கத்தின் மாநில செயலாளர் ரமேசு முன்னிலை வகித்தனர்.
நாம் தமிழர் கட்சியின் வழக்கறிஞர் பாசறை தலைவர் சேவியர் பெலிக்ஸ்,விழுப்புரம் மாவட்டம் கிழக்கு செயலாளர் தமிழ் இளைஞர் பாசறை தலைவர் செ.மணிபாரதி, குருதிகொடை பாசறை நிர்வாகிகள் அமுதன்பாலன் வேலவன், நாம் தமிழர் கட்சியின் தொகுதி நிர்வாகிகள் காமராஜ், நிர்மல்சிங், ப்ரியன்குமரன்,ராஜ்குமார், முத்துக்குமார் உள்பட பலர் பங்கேற்றனர்.
தமிழகம், புதுவை மாநிலத்திற்கும் காவிரி பங்கீட்டு தண்ணீரை திறந்து விட மறுக்கும் கர்நாடக காங்கிரஸ் அரசினை கண்டித்தும் காவிரி நதி நீர் உரிமையை நிலைநாட்ட திறனற்ற தமிழக திமுக அரசினை கண்டித்தும் புதுவை என்ஆர்.காங்கிரஸ் - பா.ஜனதா கூட்டணி அரசினை கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
- அங்காளன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
- ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
புதுச்சேரி:
திருபுவனை தொகுதிக்குட்பட்ட செல்லிப்பட்டு கிராமத்தில். உள்ள பூந்தோட்ட வீதியில் சாலை வசதி இன்றி அப்பகுதி பொதுமக்கள் மழைக் காலங்களில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகி வந்தனர் தங்கள் பகுதிக்கு சாலை வசதி செய்வதற்கு கூறி தொகுதி எம்.எல்.ஏ அங்காளனிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் கருங்கல் சாலை அமைப்பதற்காக மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து மேம்பாட்டு நிதியில் ரூ. 3 லட்சத்து 50 ஆயிரம் நிதி ஒதுக்கப்பட்டு அதற்கான பூமி பூஜை நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தொகுதியின் அங்காளன் எம்.எல்.எ பங்கேற்று பூமி பூஜை செய்து துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில் ராஜன், உதவி பொறியாளர் மல்லிகார்ஜுனன், இளநிலை பொறியாளர் மனோகரன் மற்றும் மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினரின் ஆதரவாளர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து 2யும் சிறையில் அடைத்தனர்.
புதுச்சேரி:
உருளையன்பேட்டை சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அந்தோணியார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா விற்றுக் கொண்டிருந்த முத்தியால் பேட்டை அங்காளம்மன் நகரை சேர்ந்த கிரிகேஷ், (வயது 22) சாரம் சக்தி நகரை சேர்ந்த ஹரிஹரசுதன் (வயது 21) ஆகியோரை கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 200 கிராம் கஞ்சா மற்றும் ரூ.11,500-ஐ பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து 2யும் சிறையில் அடைத்தனர்.
- கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
- 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
புதுச்சேரி:
கொரோனா கால கட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய ஒப்பந்த நர்சுகள் பணி அமர்த்தப்பட்டனர்.
கொரோனா பரவல் குறைந்தவுடன் இந்த நர்சுகள் நீக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். இதன்படி 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வில்லை.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை சார்பில் புதிதாக 105 ந ர்சுகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஒப்பந்த நர்சுகள் கோரிக்கை வைத்தனர். கவர்னர்,முதல் -அமைச்சர், தலைமை செயலரை சந்தித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் விடிய, விடிய அங்கேயே முகா மிட்டு தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
எதிர்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத் ஆகியோர் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கர்ப்பிணி நர்சு ஒருவர் மயங்கி விழுந்தார். மற்றும் 2 பெண் மயங்கி விழுந்த தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அருகாமையில் இருந்த வர்கள் அந்த பெண்ணை தண்ணீர் தெளித்து எழுப்பி னர். அவரை நிழலில் அமர வைத்தனர்.
- மாணவர்கள் குறுநாடகம், நடனம்,உயிர்காக்கும் அவசர சிகிச்சை முறையான சிபிஆர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
- பலூன்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 8 நிமிடம் 3 விநாடிகளில்விரை வாக கடத்தி சாதனை புரிந்தனர்.
புதுச்சேரி:
புதுச்சேரி, கிருமாம்பாக்கம் விநாயகா மிஷன் ஆராய்ச்சி நிறுவ னத்தின் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரியில் உலக இதய தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி விநாயகா மிஷன் பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர். கணேசன் வழிகாட்டுதலின்படி நடைபெற்றது.
புதுச்சேரி ராக் பீச்சில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் டீன் பேராசிரியர் டாக்டர் பி. செந்தில்குமார் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தி னராக போலீஸ் சூப்பிரண்டு மாறன் கலந்து கொண்டார். டீன் பேராசிரியர் செந்தில்கு மார் சிறப்பு விருந்தினருக்கு நினைவுப் பரிசு வழங்கினார்.
நிகழ்ச்சியில் இதயத்தை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து மாணவர்கள் குறுநாடகம், நடனம்,உயிர்காக்கும் அவசர சிகிச்சை முறையான சிபிஆர் ஆகியவற்றை பொதுமக்களுக்கு செய்து காட்டினர்.
மாணவர்கள் இதய வடிவ சின்னம் அமைத்து இதய வடிவிலான பலூன்களை பறக்க விட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். இதனைத் தொடர்ந்து கல்லூரி வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. இக்கருத்தரங்கிற்கு டாக்டர் வி பிரேம்நாத் உதவி பேராசிரியர், இதயவியல் துறை, மகாத்மா காந்தி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் டாக்டர் வி பிரேம்நாத், ஏ .ஜி பத்மாவதி மருத்துவமனை தலைமை கேத் ஆய்வக தொழில்நுட்பவியலாளர் அப்துல் ஹாரிஃப் கலந்து கொண்டனர். அலைடு ஹெல்த் சயின்ஸ் துறையின் இயக்குனர் ஆன்ட்ரூ ஜான் வரவேற்று பேசினார்.
பின்னர் உலக சாதனைக்கான முயற்சி செய்யும் விதமாக 750 மாணவர்கள் வரிசையாக நின்று இதய வடிவிலான பலூன்களை ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு 8 நிமிடம் 3 விநாடிகளில்விரை வாக கடத்தி சாதனை புரிந்தனர். இச்சாதனை யானது நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்ததை அதன் இயக்குநர் ஹேமலதா, தீர்ப்பாளர் ஞானசேகரன் அறிவித்தனர்.
பின்னர் நிகழ்ச்சியின் நிறைவாக அனைத்து இதயவியல் துறை மாணவர்களும் இணைந்து இதய வடிவ சின்னம் உருவாக்கி இதயத்தை பாதுகாப்பதின் நோக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ஏற்பாடு களை நிர்வாக அதிகாரி சந்துரு, இதயவியல் துறை உதவி பேராசிரியர்கள் குளோரி மெர்லின், மிராக்ளின் ஷேரன் விஜய், சிவசங்கரி, அனிதா, சந்தோஷ் ஜெயசூர்யா, கோவர்த்தன விஷ்ணு மற்றும் மாணவர்கள் செய்திருந்தனர்.
- சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தொடங்கி வைத்தார்
- மாணவ- மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
புதுச்சேரி:
அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து சார்பில் இரு வார தூய்மை திருவிழா சபாநாயகர் ஏம்பலம் செல்வம் தலைமையில் நடைபெற்றது.
ஆணையர் ரமேஷ் முன்னிலை வகித்தார். உதவி பொறியாளர் நாகராஜன், இளநிலை பொறியாளர் அகிலன், வருவாய் ஆய்வாளர் பாலமுருகன் வாழ்த்துரை வழங்கினர்.
நேஷனல் ஆங்கில மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகள் டெங்கு விழிப்புணர்வு மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி விழிப்புணர்வு பேரணி சென்றனர்.
இந்த பேரணி தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் அருகில் இருந்து அபிஷேகப்பாக்கம் சாலை வரை நடந்தது.
இதில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அனைத்து பிரிவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இதனை டெங்கு நோடல் அதிகாரி செழியன் ஒருங்கிணைத்தார்.






