என் மலர்
புதுச்சேரி

ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசிய காட்சி.
முதலமைச்சர் உறுதிமொழி - ஒப்பந்த நர்சுகள் போராட்டம் வாபஸ்
- ஒப்பந்த நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் விடிய விடிய பரிசுகள் போராட்டம் நடத்தினர்.
- அதை ஏற்று நர்சுகள் போராட்டத்தை கைவிட்டனர்.
புதுச்சேரி:
கொரோனா காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்ட நர்சுகளின் பணி காலம் கடந்த ஜூலை மாதம் முதல் புதுப்பிக்கப்படவில்லை
அதோடு சமீபத்தில் வெளியான நர்சுகள் பணி நியமன அறிவிப்பிலும் ஒப்பந்த நர்சுகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை. இதையடுத்து ஒப்பந்த நர்சுகள் சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் வளாகத்தில் விடிய விடிய நர்சுகள் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்திற்கு தி.மு.க அ.தி.மு.க உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு தெரிவித்தனர். இந்த நிலையில் ஒப்பந்த நர்சுகள் முதல்-அமைச்சர் ரங்கசாமியை சட்டசபையில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசினார்.
அப்போது முதல்-அமைச்சர் ரங்கசாமி ஒப்பந்த நர்சிகளின் பணிக்காலம் நீடிக்கப்படும் என்றும் உங்களுக்கு வேண்டியதை செய்வேன் அதுவரை பொறுமையாக காத்திருங்கள். என்றும் கூறினார். அதை ஏற்று நர்சுகள் போராட்டத்தை கைவிட்டனர்.






