என் மலர்
புதுச்சேரி

போராட்டத்தில் மயங்கி விழுந்த நர்சை படத்தில் காணலாம்.
சுகாதார அலுவலகத்தை முற்றுகையிட்டு நர்சுகள் விடிய விடிய போராட்டம்
- கர்ப்பிணி உள்பட 3 பெண்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு
- 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது.
புதுச்சேரி:
கொரோனா கால கட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய ஒப்பந்த நர்சுகள் பணி அமர்த்தப்பட்டனர்.
கொரோனா பரவல் குறைந்தவுடன் இந்த நர்சுகள் நீக்கப்பட்டனர். அவர்கள் தங்களுக்கு தொடர்ந்து வேலை வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். இதன்படி 3 மாதத்திற்கு ஒரு முறை அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டு வந்தது. கடந்த ஜூன் மாதம் முதல் அவர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட வில்லை.
இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு சுகாதாரத்துறை சார்பில் புதிதாக 105 ந ர்சுகள் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப் பட்டது. இதில் தங்களுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் என ஒப்பந்த நர்சுகள் கோரிக்கை வைத்தனர். கவர்னர்,முதல் -அமைச்சர், தலைமை செயலரை சந்தித்தும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து நேற்று சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகத்தை முற்றுகை யிட்டு போராட்டம் நடத்தி னர். போராட்டத்தில் ஈடுபட்ட நர்சுகள் விடிய, விடிய அங்கேயே முகா மிட்டு தொடர் தர்ணாவில் ஈடுபட்டனர். அவர்களின் போராட்டம் தொடர்ந்தது.
எதிர்கட்சித்தலைவர் சிவா, தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கென்னடி, சம்பத் ஆகியோர் அவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.
இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கர்ப்பிணி நர்சு ஒருவர் மயங்கி விழுந்தார். மற்றும் 2 பெண் மயங்கி விழுந்த தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து அருகாமையில் இருந்த வர்கள் அந்த பெண்ணை தண்ணீர் தெளித்து எழுப்பி னர். அவரை நிழலில் அமர வைத்தனர்.






