என் மலர்
புதுச்சேரி
- முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
- 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.
புதுச்சேரி:
காரைக்கால் அடுத்த திருநள்ளாறில் போலீஸ் நிலையம் எதிரில் தனியார் காதி நிறுவனம் இயங்கி வருகிறது.
காந்தி ஜெயந்தியை முன்னிட்டு கதர் ஆடைகளை மக்கள் அதிகம் பயன்படுத்த வேண்டும் என்ற நோக்கில் 1 ரூபாய்க்கு வேட்டி விற்பனை செய்யப்படும் எனவும், முதலில் வரும் 200 நபர்களுக்கு மட்டும் தான் இந்த சலுகை என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.
விற்பனை தொடங்கியதும் திருநள்ளாறு பகுதி மக்களுடன் கோவிலுக்கு வந்த வெளிமாநில பக்தர்கள், சுற்றுலா பயணிகள் என வேட்டி வாங்க கடையில் குவிந்தனர். இதனால் கடையில் கூட்டம் அலைமோதியது. 30 நிமிடத்திலேயே 200 வேட்டிகள் விற்றுத் தீர்ந்தது.
- ரூ.10 லட்சம், சென்டாக் தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் 4 வாரத்தில் இத்தொகையை வழங்க வேண்டும்.
- மனுதாரருக்கு இடம் வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தை கல்வி நிறுவ னம் எதிர்பார்த்துள்ளது.
புதுச்சேரி:
புதுவையை சேர்ந்தவர் சித்தார்த்தன். மருத்துவ முதுநிலை படிப்புக்கு தனியார் மருத்துவ கல்லூரி யில் 2017-ல் அரசு ஒதுக்கீட்டில் இடம் கிடைத்தது.
குறிப்பிட்ட கால அவகா சத்தில் அவர் கட்டணம் செலுத்தவில்லை. பணி உத்திரவாதம் அளிக்க வில்லை என சித்தார்த்தனுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டது.
இதை எதிர்த்து ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்தார். மனுவை நீதிபதிகள் சுப்பிரமணியன், கலைமதி கொண்ட அமர்வு விசாரித்தது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், மனுதாரர் பிரச்சினைக்கு உடனடியாக தீர்வு காணாமல், புதுவை சுகாதாரத்துறையும், சென்டாக் எனப்படும் மத்திய சேர்க்கை குழுவும் பொறுப்பற்ற முறையில் நடந்துள்ளன.
மனுதாரருக்கு இடம் வழங்க மறுக்கும் சந்தர்ப்பத்தை கல்வி நிறுவ னம் எதிர்பார்த்துள்ளது. அப்போதுதான் கூடுதல் கட்டணம் பெற்று அந்த இடத்தை வேறொருவருக்கு வழங்க முடியும்.
மருத்துவ கல்லூரியின் நடவடிக்கை கண்டிக்கத் தக்கது. மருத்துவ படிப்பில் சேர்க்கை மறுத்த தற்கு கல்லூரி நிர்வகமும், சென்டாக் அதிகாரிகளும் தான் காரணம். மனுதாரர் அதிர்ஷ்டவ சமாக மறு ஆண்டில் மற்றொரு கல்லூரியில் படிப்பை முடித்துவிட்டார். இருப்பினும் இழப்பீடு பெற உரிமை உள்ளது. எனவே ரூ.15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.
கல்லூரி தரப்பில் ரூ.10 லட்சம், சென்டாக் தரப்பில் ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் 4 வாரத்தில் இத்தொகையை வழங்க வேண்டும்.
சமூகத்துக்கு சேவை செய்வதாக கூறி மனசாட்சி இன்றி தனி நபர்களும், நிறுவனங்களும் கல்வியை வணிக மயமாக்கி விட்டன. எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறு வதை தடுக்க தேசிய மருத்துவ மையம் உரிய நடவடிக்கை எடுக்க வேண் டும் என உத்தரவிட்டனர்.
- கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார்.
- மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை பதிவாளர் தட்சணாமூர்த்தி பங்கேற்ற–வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார்.
புதுச்சேரி:
மணக்குள விநாயகர் கல்விக்குழுமம் வெங்க டேஷ்வரா கல்வியியல் கல்லுாரியில் 'கற்பித்தலில் புதுமைகள்' தலைப்பில் மாநில அளவிலான கல்வி கருத்தரங்கம் நடந்தது.
கல்விக்குழுமத்தின் தலைவர் மற்றும் மேலாண் இயக்குனர் தனசேகரன் வாழ்த்தி பேசினார். துணைத்தலைவர் எஸ்.வி. சுகுமாறன், செயலாளர் நாராயணசாமி கேசவன் கலந்து கொண்டனர்.
மணக்குள விநாயகர் இன்ஸ்டியுட் ஆப் டெக்னாலஜி முதல்வர் மலர்க்கண் கருத்தரங்கை தொடங்கி வைத்தார்.
கல்லுாரியின் முதல்வர் டையன் ஜோசப் வரவேற்றார். கருத்தரங்கில் கல்லூரி யின் முதலாம் மற்றும் 2-ம் ஆண்டு மாணவர்கள்
100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், தற்கால சூழல்களில் கற்பித்தல் முறைகளை தகவல் தொடர்பு தொழில்நுட்பம், செயற்கைநுட்பம், செயற்கை நுண்ணறிவு, குறித்து சி.கே கல்வியியல் கல்லூரி முதல்வர் சிங்கரவேலன், சிகா கல்வியியல் கல்லூரி பேராசிரியர் ஜெயக்குமார், வாசவி கல்வியியல் கல்லுாரி உதவி பேராசிரியர் துளசிராஜ் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
மணக்குள விநாயகர் மருத்துவ கல்லுாரி மற்றும் மருத்துவமனை பதிவாளர் தட்சணாமூர்த்தி பங்கேற்ற–வர்களுக்கு சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியை தமிழ்த்துறை தலைவர் சிவசண்முகநாதன் தொகுத்து வழங்கினார்.
ஆங்கிலத்துறை பேராசிரி யர் ஈவா எழில்மலர் நன்றி கூறினார்.
- மாநிலம் முழுவதும் பூத்கமிட்டி அமைப்பு
- அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டது புதுவை அ.தி.மு.க.விலும் விரிசலை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் அ.தி.மு.க. விலகியது. தமிழகத்தில் தனிக்கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தயாராகி வருகிறது. புதுவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறி உள்ளது.
ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டது புதுவை அ.தி.மு.க.விலும் விரிசலை ஏற்படுத்தியது. மேற்கு மாநில அ.தி.மு.க செயலாளரான ஒம்சக்தி சேகர் ஒ.பன்னீசெல்வம் அணியில் உள்ளார்.
இதனால் மேற்கு மாநில அ.தி.மு.க.வில் செயலாளர் இல்லாத நிலை இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தின் கிழக்கையும், மேற்கையும் இணைத்து ஒருங்கிணைந்த மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். அவருடன் மாநில நிர்வாகிகள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர்.
புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் தலைமையில் உப்பளத்தில் நடந்தது.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக மாநில செய்லாளர் அன்பழகன் நிர்வாகிகளுக்கு உத்தர விட்டார். கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:-
2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். புதுவை தொகுதியில் வெற்றி பெற நாம் அனைவரும் உறுதியாக பாடுபட வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் விதத்தில் இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி பழனிசாமி உயர் வார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதுவை மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதனை 10 நாட்களுக்குள் அந்தந்த தொகுதி செயலாளர்கள் முடித்து தர வேண்டும். அதே போன்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மாநிலம் முழுவதும் கிளை கழகங்கள் அமைக்க வேண்டும்.
வரும் 8-ந்தேதி முதல் மாநிலத்தில் உள்ள 25 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து செயல்வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
கூட்டத்தில், மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில முன்னாள் இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில துணைச்செயலாளர் உமா, வழக்கறிஞர் குணசேகரன்,
புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார். முன்னாள் மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, காந்தி, மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மன்ற செயலாளர்கள் சிவாலயா இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன்.
மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன். மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலா ளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதன் மூலம் புதுவை எம்.பி. தொகுதியில் மும்முனை போட்டி உறுதி–யாகி உள்ளது.
- தமிழக டாஸ்மார்க் மதுபான போலி ஸ்டிக்கர், ஹாலோகிராம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
- போலீ சார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி கலால்துறை துணை ஆணையர் மேத்யூ பிரான்சிஸ் உத்தரவின் பேரில் கலால்துறை தாசில்தார் சிலம்பரசன் தலைமையில், போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு புதுவை திருக்காஞ்சி பகுதியில் மினி வேனில் போலி மதுபானம் தயாரித்த 3 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து எரிசாரயம், தமிழக டாஸ்மார்க் மதுபான போலி ஸ்டிக்கர், ஹாலோகிராம் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்.
பிடிபட்டவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப் பட்டது. அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் கலால்துறை அதிகாரிகள் சேதராப்பட்டு தொழிற் பேட்டை தீயணைப்பு நிலையம் எதிரே இயங்கி வந்த போலி மதுபான தொழிற்சாலையை கண்டு பிடித்தனர்.
அங்கிருந்த குடோனில் எரிசாராயம், போலி டாஸ்மாக் ஸ்டிக்கர், ஹாலோ கிராம், பாட்டில், சீலிங் எந்திரம் உள்ளிட்ட பொருட் களை பறிமுதல் செய்த அதிகாரிகள், ஆலைக்கு சீல் வைத்தனர்.
முதற்கட்ட விசாரணை யில், இந்த தொழிற்சாலையை தமிழக பகுதியான அனுமந்தையை சேர்ந்த முக்கிய பிரமுகரான ராஜசேகர் நடத்தி வந்தது தெரியவந்தது. இவர் அரியாங்குப்பம் விஜி என்ற விஜயகுமார், மரக்காணம் செவிடன்குப்பத்தை சேர்ந்த சரவணன் ஆகியோர் உதவியுடன் இந்த தொழிற் சாலையை நடத்தி வந்துள்ளார்.
தலைமறைவாக உள்ள 3 பேரையும் கலால்துறை போலீசார் பிடிக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.
- நெட்டப்பாக்கம் கருணாலயம் கிராம நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
- அனைவரையும் கருணால–யம் கிராம நலச்சங்க அலு–வலர் சவிதா வரவேற்று பேசினார்.
புதுச்சேரி:
கருணாலயம் கிராம நலச்சங்கம் புதுச்சேரி கணினி பயிற்சி முடித்த–வர்களுக்கு சான்றிதழ் வழங்கும் விழா நெட்டப் பாக்கம் கருணாலயம் கிராம நல சங்க அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்த விழாவிற்கு கருணா–லயம் கிராம நலச்சங்க இயக்குனர் அங்காளன் தலைமை தாங்கி நோக்கஉரை ஆற்றினார். இந்நிகழ்ச்சிக்கு புதுச்சேரி மாநில செஞ்சிலுவை சங்கத்தின் தலைவர் டாக்டர் லட்சுமிபதி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பயிற்சி முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி னார்.
நிகழ்ச்சியில் 40-க்கும் மேற்பட்ட பயிற்சி முடித்த–வர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. முன்னதாக அனைவரையும் கருணால–யம் கிராம நலச்சங்க அலு–வலர் சவிதா வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சி முடிவில் கருணாலயம் கணினி பயிற்சி மைய ஆசிரியை வனராஜா நன்றி கூறினார்.
- கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார்.
- ராஜலட்சுமி கொடுத்த புகாரின் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
புதுவை அரியாங்குப்பம் ஆர்.கே.நகரை சேர்ந்தவர் ராஜலட்சுமி (வயது38). இவர் கணவரை விட்டு பிரிந்து தற்போது புதுவை முருங்கப்பாக்கம் அரவிந்தர் நகரில் வசித்து வருகிறார்.
இதற்கிடையே ராஜலட்சுமி கடந்த ஆண்டு நார்வே நாட்டு தபால் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சந்திரகுமார்(56) என்பவரை பதிவு திருமணம் செய்து கொண்டார். சந்திர குமார் 3 மாதத்துக்கு ஒரு புதுவைக்கு வந்து செல்வார்.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜலட்சுமியின் மகள் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து கொண்டார். இதுகுறித்து ராஜலட்சுமி நார்வே நாட்டில் வேலை பார்த்து வரும் சந்திரகுமாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதையடுத்து சந்திரகுமார் கடந்த 26-ந் தேதி புதுவை வந்தார். சம்பவத்தன்று சந்திரகுமாருக்கும் ராஜலட்சுமிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது சந்திரகுமார் படுக்கை அறைக்கு சென்று உள்பக்கமாக பூட்டிக் கொண்டார்.
வெகு நேரமாக கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த ராஜலட்சுமி ஜன்னல் வழியாக பார்த்தார். அப்போது சந்திரகுமார் மின் விசிறியில் தூக்கு போட்டு தொங்கி கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
உடனே அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கதவை உடைத்து சந்திரகுமாரை தூக்கில் இருந்து மீட்டு கதிர்காமம் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் ஏற்கனவே சந்திரகுமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து ராஜலட்சுமி கொடுத்த புகாரின் முதலியார் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.
- விழாவில் கவிஞர்கள் சரஸ்வதி வைத்தியநாதன், விசாலாட்சி, மதன், ராஜேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
புதுச்சேரி:
பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாதந்தோறும் பாவேந்தர் கலை இலக்கியத் திங்கள் விழா பாவேந்தர் பாரதிதாசன் அரசு அருங்காட்சியகத்தில் நடைபெற்று வருகிறது.
அதுபோல் இந்த மாத விழா புரட்சிக்கவிஞரும் காந்தியடிகளும் என்ற தலைப்பில் நடந்தது.
விழாவிற்கு அறக்கட்டளைத் தலைவர் கோ.பாரதி தலைமை தாங்கினார்.
விழாவில் கலை பண்பாட்டுத் துறை இயக்குநர் கலியபெருமாள் கலந்து கொண்டு வாழ்த்துரை ஆற்றினார்.
மேலும் கோ.கலியபெருமாள் வாழ்த்துப்பா வாசித்தார்.செயலர் வள்ளி, இசைச்சுடர் கிருஷ்ணகுமார், தொழிலதிபர் அருள்செல்வம், மீனாட்சிதேவிகணேஷ், இராஜி, சுதா, இலட்சுமிதேவி, தமிழரசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாணவர் திருக்குறள் அரங்கத்தில் பங்கேற்றுப் பத்து திருக்குறள் ஒப்பித்த 24 மாணவர்களுக்குப் பாராட்டிதழ் வழங்கப்பட்டது.
முன்னதாகக் கவிஞர் ராஜஸ்ரீமகேஷ் வரவேற்றார்.முடிவில் பிரமீளாமேரி நன்றி கூறினார்.விழாவில் கவிஞர்கள் சரஸ்வதி வைத்தியநாதன், விசாலாட்சி, மதன், ராஜேஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது.
- கூனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரை காலாப்பட்டு போலீசாரும் கைது செய்தனர்.
புதுச்சேரி:
புதுவை ராஜீவ்காந்தி குழந்தைகள் மகப்பேறு மருத்துவ மனை அருகே ஒரு வாலிபர் மது குடித்து விட்டு போதையில் அவ்வழியே சென்ற பொதுமக்களை தகாத வார்த்தைகளால் திட்டி ரகளை செய்வதாக ரெட்டியார்பாளையம் போலீசாருக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பூமியான்பேட்டை ஜவகர் நகரை சேர்ந்த டேனியல் ஜாய்(26) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.
இதுபோல் புதுவை பஸ் நிலையம் அருகில் குடித்து விட்டு ரகளை செய்த பெரியார் நகரை சேர்ந்த பார்த்தீபன் (29), பண்ருட்டியை சேர்ந்த அஜய்(28), முருகன் கோவில் தெருவை சேர்ந்த மற்றொரு அஜய்(22) ஆகிய 3 பேரை உருளையன்பேட்டை போலீசாரும், கனகசெட்டிகுளம் பகுதியில் குடித்து விட்டு ரகளை செய்த மரக்காணம், கூனிமேடு குப்பம் பகுதியை சேர்ந்த சுபாஷ் என்பவரை காலாப்பட்டு போலீசாரும் கைது செய்தனர்.
- தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
புதுச்சேரி:
வில்லியனூர் அருகே பிள்ளையார் குப்பம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குசேலன்(வயது67). இவருக்கு உதயசுந்தரி என்ற மனைவியும், ஒரு மகன் மற்றும் 2 மகள்கள் உள்ளனர். 3 பேருக்கும் திருமணமாகி விட்டது.
கடந்த 3 நாட்களாக குலேசன் உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை குலேசன் வீட்டில் கழிவறைக்கு சென்றார். அப்போது எதிர்பாராத விதமாக தவறி விழுந்தார். இதில் தலையில் பலத்த காயமடைந்த அவரை குடும்பத்தினர் மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை குசேலன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து அவரது மனைவி உதயசுந்தரி கொடுத்த புகாரின் பேரில் வில்லியனூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
லாஸ்பேட்டை சங்கரதாஸ் சுவாமிகள் நகரை சேர்ந்தவர் பாஸ்கரன்(60). இவர் புதுவை நேரு வீதியில் உள்ள பிரபல ஜவுளிக் கடையில் கேஷியராக வேலை பார்த்து ஓய்வு பெற்று வீட்டில் இருந்து வந்தார்.
இதற்கிடையே பாஸ்கரனுக்கு நீரழிவு மற்றும் ரத்த அழுத்த நோய் இருந்து வந்தது. இதற்காக வீட்டிலேயே மருந்து மாத்திரை சாப்பிட்டு வந்தார்.
இந்த நிலையில் நேற்றுஅதிகாலை பாஸ்கரன் வீட்டின் படுக்கையில் மயங்கி கிடந்தார். உடனே குடும்பத்தினர் அவரை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே பாஸ்கரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து அவரது மகன் அருண் கொடுத்த புகாரின் பேரில் லாஸ்பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- பல மாதங்களாக தனது மோட்டார் சைக்கிளை பாபு கேட்டும் முரளிதாஸ் வாங்கி தரவில்லை.
- கொலை சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேதராப்பட்டு:
புதுவை அருகே தமிழக பகுதியான ஆரோவில் அடுத்த அச்சரம்பட்டு மாரியம்மன் கோவில் வீதியைச் சேர்ந்தவர் சாமிக்கண்ணு இவரது மகன் முரளிதாஸ் (வயது 38).
இவர் மோட்டார் சைக்கிள் அடகு வைத்து பணம் பெற்று தரும் தரகர் வேலை பார்த்து வந்தார்.
முரளிதாஸ் அவரது நண்பரான திண்டிவனம் அடுத்த பழமுக்கல் பகுதியை சேர்ந்த பாபு என்பவரின் மோட்டார் சைக்கிளை புதுச்சேரியில் அடமானம் வைத்து ரூ.6 ஆயிரம் கொடுத்துள்ளார்.
ஆனால் பாபுவின் மோட்டார் சைக்கிளை ரூ.11 ஆயிரத்திற்கு முரளிதாஸ் அடமானம் வைத்து மீதியுள்ள ரூ.5 ஆயிரத்தை அவரே வைத்துக் கொண்டதாக கூறப்படுகிறது. பல மாதங்கள் கழித்து இது பாபுவுக்கு தெரிய வரவே அடமானத் தொகையை திருப்பி கொடுத்துவிடுவதாகவும் தனது மோட்டார் சைக்கிளை திரும்பி வாங்கித் தரும்படி கேட்டுள்ளார்.
பல மாதங்களாக தனது மோட்டார் சைக்கிளை பாபு கேட்டும் முரளிதாஸ் வாங்கி தரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பாபு அவர் நண்பர் இருவரும் நேற்று அச்சரம்பட்டில் உள்ள முரளிதாஸ் வீட்டுக்கு வந்தனர். வீட்டில் அவர் இல்லை.
வீட்டிலிருந்து சிறிது தூரம் சென்ற பாபுவின் எதிரே திடீரென வந்த முரளிதாசை அழைத்து அங்குள்ள ஏரிக்கரையில் வைத்து மோட்டார் சைக்கிளை திரும்பி வாங்கித் தரும்படி கேட்டு பாபு தகராறு செய்துள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.
இதில் ஆத்திரமடைந்த பாபு பைக்கில் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முரளிதாஸ் காலில் சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த முரளிதாசை மீட்டு அங்கிருந்தவர்கள் ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி முரளிதாஸ் பரிதாபமாக இறந்தார்.
இந்த சம்பவம் குறித்து முரளிதாஸ் மைத்துனர் வெங்கடேசன் கொடுத்த புகாரின் பேரில் ஆரோவில் இன்ஸ்பெக்டர் கிருஷ்ண மூர்த்தி வழக்கு பதிவு செய்து பாபு மற்றும் அவரது நண்பரை தேடி வருகின்றனர்.
- முதல் -அமைச்சர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்
- திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
புதுச்சேரி:
புதுவை அரசு சார்பில் "தூய்மையே சேவை இருவார நலப்பணியை" முன்னிட்டு பல்வேறு நிகழ்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக புதுவை அரசு உள்ளாட்சித் துறை சார்பில் தூய்மை மராத்தான் போட்டி கடற்கரை சாலையில் இன்று நடந்தது.
இதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி ரொக்க பரிசினை வழங்கினார்.
ஆண்கள், பெண்கள் மற்றும் திருநங்கையர் ஆகிய 3 பிரிவுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு ரொக்க பரிசினை முதல்- அமைச்சர் ரங்கசாமி வழங்கினார்.
தொடர்ந்து தூய்மையே சேவை இருவார நலப்பணியை முன்னிட்டு நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
பின்னர் நாடு தழுவிய ஒரு மணி நேர தூய்மை பணிக்கு உபகரணங்களை வழங்கி தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் சபாநாயகர் செல்வம், அமைச்சர் லட்சுமி நாராயணன், நகராட்சி ஆணையர்கள் சிவக்குமார், சுரேஷ்ராஜ் உள்ளாட்சித் துறை துணை இயக்குநர் சவுந்தரராஜன் ஆகியோர் கலந்து கொண்டனர்.






