என் மலர்
புதுச்சேரி

புதுவை மாநில ஒருங்கிணைந்த அ.தி.மு.க. செயலாளராக நியமிக்கப்பட்ட அன்பழகனுக்கு முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், பொருளாளர் ரவி பாண்டுரங்கன் சாக்லேட் மாலை அணிவித்த காட்சி.
புதுைவ எம்.பி. தொகுதியில் தனித்து போட்டியிட தயாராகும் அ.தி.மு.க.
- மாநிலம் முழுவதும் பூத்கமிட்டி அமைப்பு
- அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டது புதுவை அ.தி.மு.க.விலும் விரிசலை ஏற்படுத்தியது.
புதுச்சேரி:
தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து சமீபத்தில் அ.தி.மு.க. விலகியது. தமிழகத்தில் தனிக்கூட்டணி அமைத்து பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க. தயாராகி வருகிறது. புதுவையில் ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து அ.தி.மு.க வெளியேறி உள்ளது.
ஒ.பன்னீர்செல்வம் அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்டது புதுவை அ.தி.மு.க.விலும் விரிசலை ஏற்படுத்தியது. மேற்கு மாநில அ.தி.மு.க செயலாளரான ஒம்சக்தி சேகர் ஒ.பன்னீசெல்வம் அணியில் உள்ளார்.
இதனால் மேற்கு மாநில அ.தி.மு.க.வில் செயலாளர் இல்லாத நிலை இருந்தது. இந்த நிலையில் மாநிலத்தின் கிழக்கையும், மேற்கையும் இணைத்து ஒருங்கிணைந்த மாநில செயலாளராக அன்பழகன் நியமிக்கப்பட்டார். அவருடன் மாநில நிர்வாகிகள் கடந்த வாரம் நியமிக்கப்பட்டனர்.
புதியதாக பொறுப்பேற்ற அ.தி.மு.க நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் மாநில அவைத்தலைவர் அன்பானந்தம் தலைமையில் உப்பளத்தில் நடந்தது.
கூட்டத்தில் பாராளுமன்ற தேர்தலுக்கு தயாராக மாநில செய்லாளர் அன்பழகன் நிர்வாகிகளுக்கு உத்தர விட்டார். கூட்டத்தில் அன்பழகன் பேசியதாவது:-
2024-ல் நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலில் புதுவை உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க வெற்றி பெறும். புதுவை தொகுதியில் வெற்றி பெற நாம் அனைவரும் உறுதியாக பாடுபட வேண்டும்.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு பிறகு இந்திய நாட்டின் பிரதமர் யார் என்பதை நிர்ணயம் செய்யும் விதத்தில் இந்திய அரசியலில் அசைக்க முடியாத சக்தியாக எடப்பாடி பழனிசாமி உயர் வார்.
நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள புதுவை மாநிலம் முழுவதும் பூத் கமிட்டி அமைக்க வேண்டும். அதனை 10 நாட்களுக்குள் அந்தந்த தொகுதி செயலாளர்கள் முடித்து தர வேண்டும். அதே போன்று இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை சார்பில் மாநிலம் முழுவதும் கிளை கழகங்கள் அமைக்க வேண்டும்.
வரும் 8-ந்தேதி முதல் மாநிலத்தில் உள்ள 25 சட்டமன்ற தொகுதிகளிலும் தொடர்ந்து செயல்வீரர்கள் மற்றும் வீராங்கணைகள் கூட்டத்தை நடத்த வேண்டும்.
இவ்வாறு அன்பழகன் கூறினார்.
கூட்டத்தில், மாநில பொருளாளர் ரவி பாண்டு ரங்கன், மாநில ஜெயலலிதா பேரவை செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ பாஸ்கர், மாநில துணை தலைவர் ராஜாராமன், மாநில முன்னாள் இணைச் செயலாளர்கள் வீரம்மாள், முன்னாள் கவுன்சிலர்கள் கணேசன், ஆர்.வி.திருநாவுக்கரசு, மாநில துணைச்செயலாளர் உமா, வழக்கறிஞர் குணசேகரன்,
புதுவை நகர செயலாளர் அன்பழகன் உடையார். முன்னாள் மாநில துணைச் செயலாளர்கள் எம்.ஏ.கே.கருணாநிதி, நாகமணி, காந்தி, மணவாளன், உழவர்கரை நகர செயலாளர் சித்தானந்தம், மாநில எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பாண்டுரங்கன், மன்ற செயலாளர்கள் சிவாலயா இளங்கோ, மாநில எம்.ஜி.ஆர் இளைஞரணி செயலாளர் மருதமலையப்பன்.
மாநில அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் பாப்புசாமி, மாநில மாணவர் அணி செயலாளர் பிரதீப், மாநில இளைஞர் பாசறை மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன். மாநில இலக்கிய அணி செயலாளர் ராமசாமி, மாநில அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலா ளர் செல்வம் உள்பட பலர் பங்கேற்றனர்.
இதன் மூலம் புதுவை எம்.பி. தொகுதியில் மும்முனை போட்டி உறுதி–யாகி உள்ளது.






