என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    • மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது.
    • யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது

    புதுச்சேரி:

    புதுவை முன்னாள் எம்.பி. பேராசிரியர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    1991, 2011-ம் ஆண்டுகளில் கடலோர ஒழுங்குமுறை மண்ட லங்களை உருவாக்க மத்திய அமைச்சகம் விரிவான வழிகாட்டு தல்களை வெளியிட்டது. இந்த அறிவிப்பி ன்படி, புதுவை அரசு 2011-ல் கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிப்பை அமல்படுத்தவும் கண்காணிக்கவும் யூனியன் பிரதேச கடலோர மேலாண்மை ஆணையத்தை உருவாக்கியது.

    மற்றொரு விதியானது, கலெக்டர் தலைமையில் மாவட்ட அளவிலான ஒழுங்குமுறை மண்டலக் குழுவை அமைக்குமாறு அரசுக்கு அறிவுறுத்தியது. புவியியல் ரீதியாக 4 பகுதிகளாக இருப்பதை கருத்தில்கொண்டு, புதுவை, காரைக்கால், மாகி, ஏனாம் ஆகிய இடங்களில் 4 பிராந்திய குழுக்களை அமைக்க அரசு முடிவு செய்தது. மீனவர்சமூகத்தின் 3 உறுப்பினர்கள் உட்பட 4 பிராந்தியங்களில் குழுக்க ளின் உறுப்பினர்களை நியமனம் செய்யும் அரசாணை 8-12-2014-ல் வெளியிடப்பட்டது. ஆனால் இந்த ஆணையை செயல்படுத்த வில்லை.

    இதன் மூலம் மத்திய சட்டத்தின் நோக்கத்தையே புதுவை அரசு தோற்கடித்துவிட்டது. கடற்கரை மேலாண்மை பாதுகாக்கப்பட வில்லை. உடனடியாக 4 பிராந்தியத்திலும் கடலோர மண்டல மேலாண்மை குழுக்களை செயல்படுத்த கவர்னர், முதல்-அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணைப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    • மாணவர்கள் 30 நிமிடம் முன்பாக உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் வர வேண்டும்.

    புதுச்சேரி:

    புதுவை சென்டாக் கூடுதல் ஒருங்கிணை ப்பாளர் அமன்சர்மா வெளி யிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இளநிலை நீட் அல்லாத தொழில்முறை படிப்பான பி.எஸ்.சி. விவசாய படிப்பில் உள்ள சிறப்பு ஒதுக்கீட்டு இடங்களுக்கான கலந்தாய்வு நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு காமராஜர் மணி மண்டபத்தில் நடக்கிறது.

    இதேபோல காரைக்கால் பொறியியல் கல்லூரி, மாகி, ஏனாம் அரசு கலைக்கல்லூரியிலும் கலந்தாய்வு நடக்கிறது. மாணவர்கள் 30 நிமிடம் முன்பாக உரிய சான்றிதழ்கள், ஆவணங்களுடன் வர வேண்டும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
    • கடந்த 29-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடந்தது.

    புதுச்சேரி*

    புதுவை சிந்தனையாளர் பேரவை தலைவர் கோ.செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    புதுச்சேரி அரசு சார்பில் உலகத்தமிழ் மாநாடு நடத் தப்படும் என கடந்த பட் ஜெட்டில் அறிவிக்கப்பட் டது. 6 மாதம் கழித்து, கலை பண்பாட்டு துறைமூலம், கடந்த 29-ம் தேதி முதல்-அமைச்சர் தலைமையில் மாநாடு சம்பந்தமாக ஆலோசனை நடந்தது.

    புதுச்சேரியின் இலக்கிய ஆளுமை உலகம் அறிந்து கொள்ள செய்யும் இந்த முன்னெடுப்பை வரவேற் கிறோம். புதுச்சேரியில் தலைசிறந்த தமிழ் அறிஞர்கள் மற்றும் தமிழ் வளர்ச்சிக்கு பாடுபடும் இயக்கங்களை கூட்டத்திற்கு அழைக்கா மல் புறக்கணிப்பு செய்தது கண்டனத்திற்கு உரியது.

    உலகத் தமிழ் மாநாடு கலை பண்பாட்டு துறை சார்பில் அல்லாமல் புதி தாக தமிழ் வளர்ச்சி துறையை உருவாக்கி அதன் மூலம் நடத்தினால் உலகம் முழுதும் பாராட் டும். தமிழ் வளர்ச்சித் துறையை தொடங்கும் ஆணையை உடனடியாக வெளியிட வேண்டும்.

    இதனை மறுக்கும் பட்சத்தில் சிந்தனை யாளர்கள்பேரவை போராட்டங்களை நடத்தும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

    • புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.
    • நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே நடந்தது.

    புதுச்சேரி:

    புதுச்சேரி வாசகர் வட்டம் சார்பில் காந்தி பிறந்த நாள் விழா நடந்தது.

    அதையொட்டி, காந்தியடிகளின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் சத்திய சோதனை புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி கடற்கரை சாலை காந்தி சிலை எதிரே நடந்தது. வக்கீல் பரிமளம் தலைமை தாங்கினார்.

    வாசகர் வட்ட செயலாளர் பேராசிரியர் சம்பத்குமார், மாணவர் மற்றும் பொதுமக்களுக்கு சத்திய சோதனை புத்தகத்தை இலவசமாக வழங்கினார்.

    • கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.
    • நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடி பிறந்தநாள் மற்றும் காந்தி ஜெயந்தியையொட்டி லாஸ்பேட்டை தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் 50-க்கும் மேற்பட்டவர்களுக்கு கதர் ஆடைகளை பா.ஜனதா கட்சியின் முன்னாள் மாநில தலைவர் சாமிநாதன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா நிர்வாகிகள் சோமசுந்தரம், ஆறுமுகம், விஜயபூபதி, லட்சுமணன், பரசு, வெங்கடேசன், நமச்சிவாயம், திருமால், நடராஜ், கார்த்தி, முருகன், வேலு, கனகவள்ளி, வள்ளி, ஜெயா, கல்விக்கரசி, செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.
    • மேலும் இதனால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.

    புதுச்சேரி:

    உப்பளம் தொகுதிக்குட்பட்ட வாணரப்பேட்டை முருகசாமி தோப்பிற்கு செல்லும் பாதையில் ரயில்வே கேட் அருகாமையில் உள்ள சாலையில் கனமழையால் மரம் சாய்ந்து போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டது.மேலும் இதனால் அப்பகுதி மக்களும் பாதிப்புக்குள்ளாகினர்.

    இதை அறிந்த உப்பளம் தொகுதி எம்.எல்.ஏ. அனிபால் கென்னடி தீயணைப்பு வீரர்களுக்கு தெரியபடுத்தி வரவழைத்தார்.

    தீயணைப்பு வீரர்கள் சாய்ந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்தினார். இதையடுத்து அப்பகுதி மக்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்த கென்னடி எம்.எல்.ஏ.வுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

    நிகழ்ச்சியின் போது வட்டார காங்கிரஸ் தலைவர் லட்சுமணன், தி.மு.க. கிளை செயலாளர் செந்தில் மற்றும் ராகேஷ் உடன் இருந்தனர்.

    • பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரி ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.
    • இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

    புதுச்சேரி:

    பொம்மையார் பாளையம் ராஜேஸ்வரி மகளிர் கல்லுரியும், வானூர் வட்டம் குழந்தை வளர்ச்சி திட்ட துறையும் இணைந்து கல்லூரி வளாகத்தில் ஊட்டச்சத்து விழிப்புணர்வு விழாவை நடத்தியது.

    கல்லூரி செயலர் சிவகுமார் வாழ்த்துடன் நடைபெற்ற இவ்விழாவில் குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ஜெகதீஸ்வரி வரவேற்புரையாற்றினார்.

    இந்நிகழ்ச்சியில் மாவட்ட திட்ட அலுவலர் அன்பழகி, கல்லுரி முதல்வர் கண்ணன், மாவட்ட சமூக நல அலுவலர் ராஜம்மாள், மாவட்ட விரிவாக்க அலுவலர் புவனேஸ்வரி, சித்தா ஆராய்ச்சி மையத்தின் துணை இயக்குநர் டாக்டர்.சண்முகம், வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர்.ஜெயபிரகாஷ், தோட்டக்கலை துணை இயக்குநர் வித்யா, வானூர் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் உஷாமுரளி, ஊராட்சி ஒன்றிய துணைபெருந்தலைவர் பருவகீர்த்தனா, மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

    இந்நிகழ்ச்சியில் ஊட்டச்சத்து மிகுந்த உணவு பொருட்கள் கண்காட்சி வைக்கப்பட்டது. ஊட்டச்சத்து குறித்த செய்திகள் அடங்கிய பதாகைகளும் வைக்கப்பட்டன. கல்லூரி மாணவிகள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

    • தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது.
    • விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    புதுச்சேரி:

    புதுவை தாகூர் அரசு கலை கல்லூரியில் மறைந்த ஐ.என்.டி.யூ.சி. தலைவர் ரவிச்சந்திரன் நினைவு கோப்பை கிரிக்கெட் போட்டி நடந்தது. கிரிக்கெட் போட்டியில் 70 அணிகள் பங்கேற்றன. போட்டியில் முதல் 5 இடங்களை பிடித்த அணிகளுக்கு பரிசு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஐ.என்.டி.யூ.சி. மாநில தலைவர் பாலாஜி தலைமை தாங்கினார்.

    புதுவை பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவர் வைத்திலிங்கம் எம்.பி. காஞ்சிபுரம் ரோஸ் பிரதர்ஸ் அணிக்கு முதல் பரிசும், முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி புதுவை ரேசிங் காய்ஸ் அணிக்கு 2-ம் பரிசும், காங்கிரஸ் சட்டமன்ற கட்சி தலைவர் வைத்தியநாதன் வேலூர் ஆற்காடு யங்ஸ்டர்ஸ் அணிக்கு 3-ம் பரிசும், கோப்பையும் வழங்கினர்.

    புதுவை மாநில ஐ.என்.டி.யூ.சி. துணைத் தலைவர் மலர்மன்னன் புதுவை 11 பிளாஸ்டர் அணிக்கு 4-ம் பரிசும், தொழிலதிபர் ஜெயக்குமார் புதுவை பாசிட்டிவ் எனர்ஜி அணிக்கு 5-ம் பரிசும் வழங்கினர்.

    விழாவில் புதுவை பல்கலைக்கழகம் கம்யூனிட்டி கல்லூரி உடற்கல்வி ஆசிரியர் ஜெகதீஸ்வரி, புதுச்சேரி பல்கலைக்கழக விளையாட்டுத்துறை இயக்குனர் இளையராஜா, ஐ.என்.டி.யூ.சி. நிர்வாகிகள் சொக்கலிங்கம், ஞான சேகரன், தமிழ்ச்செல்வன், ஜான்சன் மற்றும் விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.

    • காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணி வித்து மரியாதை செலுத்தி னார்.
    • புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    புதுச்சேரி:

    புதுவை அரசின் செய்தி மற்றும் விளம்பரத்துறை சார்பில் காந்தி பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது.

    பிறந்தநாளையொட்டி புதுவை கடற்கரை சாலை யில் உள்ள காந்தி சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.

    சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், நேரு, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    சர்வமத பிரார்த்தனை நடந்தது. தேச பக்தி பாடல்கள் இசைக்கப்பட்டது.

    இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் காந்தி சிலைக்கு தேசிய செயலாளர் ராஜா, மாநில செயலாளர் சலீம், முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்.எல்.ஏ. நாராகலைநாதன் ஆகியோர் மாலை அணி வித்து மரியாதை செலுத்தினர்.

    புதுவை அரசு சார்பில் மறைந்த தமிழக முதல்-அமைச்சர் காமராஜர் நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி காமராஜர் சதுக்கத்தில் உள்ள அவரின் சிலைக்கு முதல்-அமைச்சர் ரங்கசாமி மாலை அணி வித்து மரியாதை செலுத்தினார். அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், தேனீ.ஜெயக்குமார், சாய்.ஜெ.சரவணன்குமார், எம்.எல்.ஏ.க்கள் ஏ.கே.டி.ஆறுமுகம், கே.எஸ்.பி.ரமேஷ், லட்சுமிகாந்தன், நேரு, தலைமை செயலாளர் ராஜீவ்வர்மா, கலெக்டர் வல்லவன், அரசு அதிகாரி கள், போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், திராவிடர் கழகம் சிவவீரமணி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர்.

    • ஊசுடு தொகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.
    • பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    புதுச்சேரி:

    ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் தூய்மை பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.

    பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் தலைமையில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் தியாகராஜன், இளநிலை பொறியாளர் கருத்தயன், பா.ம.க. ரமேஷ், ராமநாதபுரம் கருணாகரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    மேலும் ஊசுடு தொகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், தூய்மைப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

    இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக இருக்கும் என்று பேசினார்.

    • மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.
    • கேசவன், அன்பு, பழனிவேல், மணி கண்டன், வினோத்குமார், சரளா, அமலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    புதுவை மாநில அ.ம.மு.க. வடக்கு மற்றும் தெற்கு சார்பில் காந்தி பிறந்தநாள் மற்றும் காமராஜர் நினைவு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனையொட்டி காந்தி மற்றும் காமராஜர் சிலைக்கு மாநில செயலாளர்கள் யூ.சி.ஆறுமுகம் எஸ்.டி.சேகர் ஆகியோர் தலைமையில் அ.ம.மு.க.வினர் மாலை அணிவித்தனர்.

    நிகழ்ச்சியில் அவைத்தலை வர் அரி கிருஷ்ணன், இணை செயலாளர் லாவண்யா, மூத்த நிர்வாகி ரகுபதி, அணி செயலாளர்கள் தொழிற்சங்கம் சுரேஷ், நந்தகோபால், கலைவாணி, இளம்வழுதி, புஷ்பா, தொகுதி செயலாளர்கள் செந்தில் என்ற குமரவேல். தனவேலு, செல்ல என்ற தமிழ்செல்வன், ராமச்சந்திரன், முருகன், பரிதிமாற்கலைஞன், கலிய மூர்த்தி மற்றும் உழவர்கரை தொகுதி நிர்வாகி கள் லூர்து சாமி, சக்திவேல், சண்முகம், முத்துபாண்டி, கேசவன், அன்பு, பழனிவேல், மணி கண்டன், வினோத்குமார், சரளா, அமலா, சந்திரா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • மாணவர்கள், பெற்றோர் வலியுறுத்தல்
    • மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்டாக் கலந்தாய்வு தள்ளிப்போனது.

    புதுச்சேரி:

    இந்திய மருத்துவ ஆணை யத்தின் உத்தரவின்படி

    எம்.பி.பி.எஸ். உட்பட மருத்துவ படிப்புகளுக்கு முதல்கட்ட கலந்தாய்வு ஆகஸ்டு 6, 2-ம் கட்டம் ஆகஸ்ட் 30, 3-ம் கட்டம் செப்டம்பர் 20, இறுதி கலந்தாய்வு செப்டம்பர் 30-ந் தேதிக்குள் முடிக்க வேண்டும்.

    ஆனால் புதுவையில் முதல்கட்ட கலந்தாய்வுதான் முடிந்துள்ளது. இந்திய மருத்துவ மையத்தின் உத்தரவுப்படி புதுவையில் கவுன்சிலிங்கை முடிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. 2016-ல் அக்டோபர் 7-ந் தேதி வரை மாணவர் சேர்க்கை நடந்தது.

    அப்போது செப்டம்பர் 30-ந் தேதிக்கு பிறகு மருத்துவம் சேர்ந்த மாணவர்களை தகுதிநீக்கம் செய்ய உத்தரவிட்டது. இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி யானது. மாணவர்கள் நீதிமன்ற போராட்டத்துக்கு பின் மருத்துவம் படித்து முடித்தனர்.

    இந்த ஆண்டு அரசு பள்ளி மாணவர்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசு அனுமதி கிடைப்பதில் காலதாமதம் ஏற்பட்டதால் சென்டாக் கலந்தாய்வு தள்ளிப்போனது.

    எனவே கடந்த காலம் போல மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையா டாமல், இந்திய மருத்துவ மையத்தின் சிறப்பு அனுமதியை பெற்று மருத்துவ கலந்தாய்வுகளை நடத்த வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    ×