என் மலர்
புதுச்சேரி

ஊசுடு தொகுதி ராமநாதபுரத்தில் அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தலைமையில் பொதுமக்கள் தூய்மை பணியை மேற்கொண்ட காட்சி.
ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரத்தில் அமைச்சர் சாய்.ஜெ. சரவணன்குமார் தூய்மைப்பணி
- ஊசுடு தொகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர்.
- பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
புதுச்சேரி:
ஊசுடு தொகுதிக்குட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் தூய்மை பணியை அமைச்சர் சாய்.ஜெ.சரவணன்குமார் தொடங்கி வைத்தார்.
பிரதமர் மோடியின் அழைப்பை ஏற்று நாடு முழுவதும் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. இதன் ஒரு பகுதியாக ஊசுடு சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ராமநாதபுரம் பகுதியில் அமைச்சர் சாய். ஜெ. சரவணன்குமார் தலைமையில், வில்லியனூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் எழில்ராஜன் முன்னிலையில் தூய்மை பணி மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் ஊசுடு தொகுதி பா.ஜனதா தலைவர் தியாகராஜன், இளநிலை பொறியாளர் கருத்தயன், பா.ம.க. ரமேஷ், ராமநாதபுரம் கருணாகரன் உட்பட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
மேலும் ஊசுடு தொகுதி முழுவதும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு தூய்மை பணியை மேற்கொண்டனர். அப்போது பேசிய அமைச்சர் சாய்.ஜெ.சரவணன் குமார், தூய்மைப் பிரச்சாரத்தில் ஈடுபடுமாறு நாடு முழுவதும் உள்ள மக்களை பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.
இந்த பிரச்சாரத்தை முன்னெடுத்துச் செல்வது மகாத்மா காந்தியின் தூய்மையான இந்தியா என்ற கனவை நிறைவேற்றுவதற்கான மாபெரும் நடவடிக்கையாக இருக்கும் என்று பேசினார்.






