என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    ரெயில் நிலையத்தில் பா.ஜனதாவினர் தூய்மை பணி
    X

    புதுவை ரெயில் நிலையத்தில் தூய்மை பணியை வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்த காட்சி.

    ரெயில் நிலையத்தில் பா.ஜனதாவினர் தூய்மை பணி

    • வி.பி. ராமலிங்கம் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார, வாசவி, விஷ்ணு, பார்ப்புகழ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு சேவை வாரமாக பாரதிய ஜனதா கட்சியினர் நாடு முழுவதும் கொண்டாடி வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக புதுச்சேரி மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி. மற்றும் புதுச்சேரி மாநில இளைஞரணி தலைவர் கோவிந்தன் வழிகாட்டு தலின்படி புதுச்சேரி நகர மாவட்ட இளைஞரணி தலைவர் பாலகுரு தலைமையில் புதுச்சேரி ரெயில் நிலையத்தில் தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.

    ரெயில் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் பா.ஜனதா கட்சியின் நிர்வாகிகள் சுத்தம் செய்தனர். சப்தகிரி வி.பி.ராமலிங்கம் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் பா.ஜனதா மாநிலத் துணைத் தலைவர் செல்வம், ஒழுங்கு நடவடிக்கை குழு உறுப்பினர் இளங்கோவன் , முன்னாள் எம்.எல்.ஏ. இளங்கோவன், மாநில செயற்குழு உறுப்பினர்கள் திருச்சந்திரன், சம்பத், குமார், அங்கு தாஸ், மாரியப்பன், இளைஞர் அணி மாநில பொதுச் செயலாளர் அமல்ராஜ் ,நகர மாவட்ட பொதுச் செயலாளர் ஆனந்த, கண்ணன், செயலாளர்கள் விஜய ராஜேஷ், அற்புத அழகன், தொகுதி தலைவர்கள் சக்திவேல், நாகராஜ், முன்னாள் கவுன்சிலர் பத்மாவதி, மற்றும் சமூக வலைதள பிரிவு திரு பிரவீன் குமார், நகர மாவட்ட பட்டியல் அணி தலைவர் வெற்றிவேல், நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை இளைஞரணி நிர்வாகிகள் மாவட்ட பொதுச் செயலாளர் ராஜ்குமார, வாசவி, விஷ்ணு, பார்ப்புகழ், அருண்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×