search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    கொரானாவில் பணியாற்றிய நர்சுகள் போராட்டம்
    X

    நர்சுகள் போராட்டத்தில் ஈடுபட்ட காட்சி.

    கொரானாவில் பணியாற்றிய நர்சுகள் போராட்டம்

    • போலீசாருடன் வாக்குவாதம்-தள்ளுமுள்ளு
    • நாம் தமிழர் கட்சியினர் திடீரென இயக்குனர் அலுவலகத்திற்கு கொடிகளுடன் வந்தனர். செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    புதுச்சேரி:

    கொரோனா கால கட்டத்தில் அரசு மருத்துவ மனைகளில் பணிபுரிய ஒப்பந்த அடிப்படையில் 165 செவிலியர்கள் பணி அமர்த்தப்பட்டனர்.

    கொரோனா பரவல் கட்டுப்படுத்தப்பட்ட பிறகு 2020-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர்கள் பணியிலிருந்து விடுவிக்கப் பட்டனர்.

    இக்கட்டான காலத்தில் பணியாற்றிய தங்களுக்கு தொடர்ந்து பணி வழங்க வேண்டும். பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என அவர்கள் கோரிக்கை வைத்தனர்.

    இதனால் அவ்வப்போது 3 மாதத்திற்கு ஒருமுறை பணிநீட்டிப்பு செய்யப்பட்டு வந்தனர். இந்நிலையில் கடந்த ஜூலை மாதம் 4-ந்தேதிக்கு பிறகு அவர்கள் பணி நீட்டிப்பு செய்யப்பட வில்லை. அதேநேரத்தில் சட்டசபையில், கொரோனா காலத்தில் பணியாற்றிய வர்களுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என அறிவித்திருந்தார்.

    இதனிடையே புதுவை அரசின் சுகாதாரத் துறைக்கு 105 நர்சுகளை நியமிக்க அறிவிப்பு வெளியிடப் பட்டது. இந்த பணி யிடங்களில் தங்களுக்கு முன்னுரிமை வழங்கி நிரப்ப வேண்டும் என நர்சுகள் வலியுறுத்தினர்.

    இன்று பாரதி பூங்கா வில் காலை 9 மணிக்கு அவர்கள் திரண்டனர். காலை 11 மணியளவில் அவர்கள் திடீரென சட்டசபையை அடுத்துள்ள சுகாதாரத்துறை இயக்குனர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். போலீசார் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் வரும் நேரம் என்பதால், அவர்களை இயக்குனர் அலுவலகத்துக்குள் செல்லும்படி கூறினர்.

    ஆனால் அவர்கள் மறியலை கைவிடவில்லை. இதையடுத்து அவர்களை வலுக்கட்டாயமாக, குண்டுக்கட்டாக தூக்கி அப்புறப்படுத்த போலீசார் முயன்றனர்.

    இதனால் செவிலியர் களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு, முள்ளு ஏற்பட்டது. இதனால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதன்பின் நர்சுகள் சுகா தாரத்துறை இயக்குனர் அலுவலகத்தில் நுழைந்து தரையில் அமர்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    கொரோனா காலத்தில் யாரும் வீட்டை விட்டு வெளியேவர அச்சப்பட்ட காலத்தில் பணி செய்தோம். எங்கள் உயிரையும் பொருட் படுத்தாமல், கொரோனா காலத்தில் பணியாற்றிய எங்களுக்கு பணியில் முன்னுரிமை அளிக்க வேண்டும் எனக்கோரி கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பதட்டம், பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில் நாம் தமிழர் கட்சியினர் திடீரென இயக்குனர் அலுவலகத்திற்கு கொடிகளுடன் வந்தனர். செவிலியர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து கோஷம் எழுப்பினர்.

    இதையடுத்து இயக்கு னர் அலுவலகத்தில் நுழைவு வாயிலை போலீசார் மூடினர். அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தும் வகையில் நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது.

    Next Story
    ×