என் மலர்
புதுச்சேரி
- கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்பு
- கடந்த 8 ஆண்டுகளாக என்னுடன் கட்சிப் பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் பாரதீய ஜனதா கட்சியின் புதிய தலைவர் பொறுப்பு ஏற்கும் விழா கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை நடந்தது.
புதுவை மாநிலம் பாரதீய ஜனதா கட்சிக்கு புதிய தலைவராக செல்வகணபதி எம்.பி. பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவால் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் செல்வ–கணபதி எம்.பி. பா.ஜனதா மாநில தலைவராக பொறுப்பேற்கும் விழா நேற்று கட்சி தலைமை அலுவலகத்தில் நடந்தது.
முன்னதாக லாஸ்பேட்டை ஈ.சி.ஆர். சாலையில் உள்ள எம்.பி. அலுவலகத்தில் இருந்து திறந்த வாகனத்தில் செல்வ கணபதி எம்.பி.யை கட்சி யினர் ஊர்வலமாக அழைத்து சென்றனர்.
இந்த ஊர்வலம் சிவாஜி சிலை சின்னமணி கூண்டு, அஜந்தா சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், அண்ணா சிலை வழியாக இந்திரா காந்தி சதுக்கம் எல்லைப் பிள்ளை சாவடி வழியாகச் சென்று பா.ஜனதா தலைமை அலுவலகம் வந்தடைந்தது.
பா.ஜனதா கட்சியின் மாநில தலைவராக இருந்த சாமிநாதன், பா.ஜனதா மாநில பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா ஆகியோர் புதிய தலைவருக்கு பா.ஜனதா கட்சியின் கொடியை வழங்கி 'பாரத் மாதா கி ஜெய்' என்ற கோஷத்துடன் வாழ்த்துக் களை தெரிவித்தனர்.
பின்னர் செல்வகணபதி எம்.பி.யை தலைமை அலுவலகத்தில் உள்ள தலைவரின் இருக்கையில் அமரவைத்தனர்.
நிகழ்ச்சியில் குடிமை பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய். ஜெ.சரவணன்குமார் எம்.எல்.ஏ.க்கள் கல்யாண சுந்தரம், ஜான்குமார், ராம–லிங்கம், ரிச்சர்ட்ஜான்குமார், வெங்கடேசன், சிவசங்கர், அசோக்பாபு, பா.ஜனதா மாநில பொதுச்செயலாளர் மோகன்குமார் முன்னிலை–யில் பதவியேற்பு விழா நிகழ்ச்சி நடந்தது.
முன்னாள் தலைவர் சுவாமிநாதன் புதிய தலைவர் செல்வகணபதி எம்.பி.யை வாழ்த்தி பேசினார். அதில், கடந்த 8 ஆண்டுகளாக என்னுடன் கட்சிப் பணி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும், புதிதாக தலைவ ராக பொறுப்பேற்றுள்ள செல்வகணபதி எம்.பி.க்கு நிர்வாகிகள் அனைவரும் ஒத்துழைப்பு அளித்து கட்சி பணி செய்ய வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
புதிதாக பொறுப்பேற்றுக் கொண்ட பா.ஜனதா மாநில தலைவர் செல்வகணபதி எம்.பி பேசுகையில், புதிய மாநில தலைவர் பொறுப் பேற்கும் விழாவில் வருகை தந்து வாழ்த்தியமைக்கு அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். கட்சி பணியை அனைவரும் சிறப்பாக தொடர்ந்து செய்திட வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
நிகழ்ச்சியில் புதுவை மாநில, மாவட்ட, தொகுதி பா.ஜனதா நிர்வாகிகள் பல்வேறு அணிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- அ.தி.மு.க. வலியுறுத்தல்
- ஒவ்வொரு வீட்டு மனையையும் பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.
புதுச்சேரி:
புதுவை மாநில அ.தி.மு.க. செயலாளர் அன்பழகன் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகம், புதுவையில் கடந்த 2001-ம் ஆண்டு விவசாய நிலங்களை மனைகளாக்குவதை தடுக்க ஐகோர்ட் தீர்ப்பு வழங்கியது. இதன்படி அரசின் அனுமதி யில்லாமல் விவசாய நிலங்களை மனைகளாக மாற்றி விற்பனை செய்ய முடியாது.
ஆனால் புதுவையில் கடந்த 10 ஆண்டுக்கும் மேலாக விவசாய நிலங்கள் தொடர்ந்து வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. இதற்கு அரசின் நகரமைப்பு குழுமம், பெரா ஆகியவற்றின் அனுமதியும் பெறப்படுவதில்லை. ஒவ்வொரு வீட்டு மனையையும் பதிவு செய்ய பத்திரப்பதிவுத்துறையில் பெருமளவு லஞ்சம் பெறப்படுகிறது.
ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை லஞ்சம் பெற்றுக்கொண்டு, நடைமுறையில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி பதிவு செய்கின்றனர். இந்த லஞ்சம் அதிகாரிகள் முதல் கீழ்நிலை ஊழியர்கள் வரை பிரித்து கொடுக்கப்படுகிறது. இதுதொடர்பாக அரசின் கவனத்துக்கு பல முறை எடுத்துச்சென்றுள்ளோம்.
நேற்றைய தினம் பாகூரை சேர்ந்த சார்பதிவாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். அவர் ஓய்வுபெறுவதற்கு ஒரு நாளைக்கு முன்பு சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார். கடந்த 5 ஆண்டாக பல ஆயிரம் ஏக்கர் நிலங்களை வீட்டுமனைகளாக மாற்றியுள்ளனர்.
வில்லியனூரில் 2 ஆயிரம் ஏக்கருக்கு மேற்பட்ட நிலங்கள் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டுள்ளது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு கவர்னர் உத்தரவிட வேண்டும். சி.பி.ஐ. விசாரணை கோரி அ.தி.மு.க. சார்பில் கடிதம் எழுத உள்ளோம்.
வில்லியனூரில் சதுர அடி நிலம் மார்க்கெட்டில் ரூ.2 ஆயிரம் வரை விலை போகிறது. ஆனால் அரசு மதிப்பீடு ரூ.150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆண்டுதோறும் அரசு மதிப்பை மார்க்கெட் விலைக்கு நிகராக உயர்த்துகின்றனர். புதுவையில் பல ஆண்டாக அரசு மதிப்பை உயர்த்தவில்லை. நிலத்தின் மதிப்பையும் அரசு உயர்த்த வேண்டும். அனுமதியின்றி விவசாய நிலங்களை பத்திரப்பதிவு செய்த அனைத்து அதிகாரிகள் மீதும், உடந்தையாக இருந்தவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணியில் அ.தி.மு.க. இடம் பெற்றுள்ளதா? என கேட்ட போது,
அ.தி.மு.க.பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின், முடிவும், அறிவிப்புமே எங்கள் வேதவாக்கு என்று கூறினார்.
- 4 கிராம மக்கள் மகிழ்ச்சி
- புதுச்சேரி – தமிழக கிராமத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.
புதுச்சேரி:
பாகூர் தொகுதிக் குட்பட்ட கொரவள்ளி மேடு, பள்ளக் கொரவள்ளிமேடு, சுள்ளியாங் குப்பம், மதிகிருஷ்ணாபுரம் கிராமங்களில் சுமார் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமங்களுக்கு மயான வசதி இல்லாததால், அங்கு இறப்பவர்களின் உடல்களை சுமார் 5 கி.மீ தூரம் உள்ள தென்பெண்ணையாற்று கரையில் அடக்கம் செய்து வருகின்றனர்.
தூரம் ஒரு பக்கம் இருந்தாலும், பல நேரங்களில் இறுதி ஊர்வலத்தின் போது, புதுச்சேரி – தமிழக கிராமத்தினர் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இது குறித்து பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது. இதனால், கொரவள்ளிமேடு, பள்ளக்கொரவள்ளிமேடு, சுள்ளியாங்குப்பம், மதிக்கிருஷ்ணாபுரம் கிராம மக்கள் மயான வசதி வேண்டி பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து போராடி வந்தனர். கடந்த காங்., ஆட்சிகளில், பாகூர் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் இதற்காக பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தனர்.
ஆனாலும், மயான வசதி தொடர்பான பணிகள் இடியாப்ப சிக்கலில் இருந்து வந்தது. இந்நிலையில், தற்போது செந்தில்குமார் எம்.எல்.ஏ. முயற்சியால், முள்ளோடை துணை மின் நிலையம் அருகே உள்ள இடத்தில் மேற்கண்ட கிராமங்க ளுக்கு மயானம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.
இதற்காக மகத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலை உறுதி திட்டம் மூலம் ரூ.34.95 லட்சத்திற்கு அதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப் பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இதில், பாகூர் தொகுதி எம்.எல்.ஏ., செந்தில்குமார் கலந்து கொண்டு, மயானம் அமைக்கும் பணியினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில்,
புதுச்சேரி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் பாலசுப்ரமணியன், பாகூர் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் கார்த்திகேயன், அரியாங்குப்பம் வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன், உதவிப் பொறியாளர் ராமன், இளநிலை பொறியாளர் சிவப்பிரகாசம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இதில் 100 ஆண்டுகால பிரச்சனைக்கு தீர்வு கிடைத்த மகிழ்ச்சியில் 4 கிராமங்களை சேர்ந்தபொது மக்கள் திரளாக கலந்து கொண்டு எம்.எல்.ஏவிற்கு நன்றி தெரிவித்தனர்.
- லட்சுமிகாந்தன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ 4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
புதுச்சேரி:
ஏம்பலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில புதுச்சேரி அரசு, ஆதிதிராவிடர் முற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலம் பாலுட்டும் தாய்மார்களுக்க நிதியுதவி 80 பயனாலிகளுக்கு மொத்த ரூ.11.20 லட்சம் மற்றும் தொடர்நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 20 பயனாளிகளுக்கு மொத்த ரூ.4 லட்சம் வழங்கும் நிகழ்ச்சி இன்று நடந்தது.
இதில் லட்சுமிகாந்தன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பொது மக்கள் பயனாளிகள் என திரளானோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியினை சிறப்பித்தனர்.
- சி.ஐ.டி.யூ. தீர்மானம்
- உடனடியாக அமைப்பு சாரா தொழிலளார் நல வாரியத்தை அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு) புதுவை மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலி யார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் நடைபெற்ற வேலைகள் குறித்தும், எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மதிவாணன், தினேஷ் குமார், மணிபாலன், வடிவேல், பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலா ளர்கள் ஆம் ஆத்மி பீம யோஜனா திட்டத்தின் கீழ் எல்.ஐ.சி மூலம் பலன் பெற்று வந்தனர். ஆனால் 7 ஆண்டாக இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் இயற்கை, விபத்து மரணம், கல்வி உதவி திட்டங்கள் வழங்கவில்லை.
தொழிலாளர்களிடம் பெறப்படும் தொகையை காப்பீடு திட்டங்களுக்கு செலுத்தாமல், பழைய கடன்களை அடைக்க பயன்படுத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. உடனடியாக அமைப்பு சாரா தொழிலளார் நல வாரியத்தை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவி திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.
- வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நடந்தது
- நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
புதுச்சேரி:
புதுச்சேரி ஒருங்கிணைந்த நீதிமன்றத்திற்கு புதிதாக தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் தலைமை நீதிபதி சந்திரசேகர் மற்றும் நீதிபதியாக பொறுப்பேற்கும் அம்பிகா, ராஜசேகர், சுகந்தி. ஆகியோருக்கு நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியக்கு சங்கத் தலைவர் எம். குமரன். தலைமை தாங்கினார். அனைத்து மாவட்ட நீதிபதிகள், உரிமையியல் நீதிபதிகள், குற்றவியல் நீதிபதிகள், மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் ரங்கநாதன், கோவிந்தசாமி, சுப்பிர மணியன், திருக்கண்ண செல்வன், அமாவாசை, ராமன், தாமோதரன், அரசு வழக்கறிஞர்கள் ஸ்ரீதர், ராஜு, தனசேகரன் கார்த்திக் சுந்தர்ராஜன் தனசேகரன், கார்த்திக், சுந்தர், ரீனா ஐஸ்வர்யா, திலகவதி முத்துக்குமரன், பொதுச் செயலாளர் கதிர்வேலு, பொருளாளர் லட்சுமி நாராயணன் இணை செயலாளர்கள் சம்பத், பாலசுந்தரம் செயற்குழு உறுப்பினர் சதீஷ், மற்றும் நூற்றுக்கணக்கான வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.
- நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார்.
- பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, முக்கிய பிரமுகர்களும் மாணவ- மாணவிகளும் பாராட்டினார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் அருந்ததிபுரத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், பொறுப்பாசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியை கோமதி தலைமை தாங்கினார். இதில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்தப் பள்ளியில் பணியாற்றி பணியிட மாற்றம் செய்யப்பட்ட பொறுப்பாசிரியை கோமதிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, முக்கிய பிரமுகர்களும் மாணவ மாணவிகளும் பாராட்டினார்கள். தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் வீரமோகன், திமுக மாநில நிர்வாகிகள் மதிவாணன், ஜவஹருல்லா, மீரன் வெங்கடேசன், ஜோதி, பாஸ்கர், குட்டி, குமார், சேகர், ஆறுமுகம், முருகன் மற்றும் பெற்றோர்களும் அப்பகுதி முக்கிய பிரமுகர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
- வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
- போலீஸ் நிலையத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், கட்சி நிர்வாகிகள் காலாப்பட்டில் தீக்குளித்த இறந்த பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:
காவல்துறையினரின் அலட்சிய போக்கால் கலைச்செல்வி இறந்துள்ளார். காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
ஆனால் பொறுப்பை தட்டிகழித்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காவல்துறை சரியாக செயல்படாததே காரணம்.
புதுவை அரசு கலைச்செல்வியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- விடுதலை சிறுத்தைகள் வலியுறுத்தல்
- 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.
புதுச்சேரி:
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் புதுவை மாநில முதன்மை செயலாளர் தேவ பொழிலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
ஆதிதிராவிடர், பழங்குடி யினர் மேம்பாட்டுக்கு மத்திய அரசு நிதி அமைச்சகம், தேசிய அட்டவணை வகுப்பினர் மேம்பாட்டுக்கழகம், தேசிய துப்புரவு தொழிலாளர் மேம்பாட்டுக்கழகம் மூலம் குறுகிய கால தொழில்கட ன்கள் வழங்கி வருகிறது. புதுவை ஆதி திராவிடர், பழங்குடியினர் மேம்பாட்டு கழகம் மூலம் 15 ஆண்டுக்கு முன் கடன் பெற்றவர்கள் முன் அனுபவம் இல்லாத தால் தொழில்களை நடத்த முடியாமல் நலிவடைந்தனர்.
அவர்களால் தொழில் கடனை திருப்பித்தர முடியாமல் மன உளைச்ச லோடு வாழ்கின்றனர். இந்த நிலையில் தமிழ்நாட்டில் 3 நிறுவனங்களின் மூலம் கடன் பெற்ற பயனாகளிகள், அசல் தொகையை செலுத்தினால் வட்டி, அபராத வட்டி தள்ளுபடி செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதை பின்பற்றி புதுவை முதல் அமைச்சரும் வட்டி, அபராத வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மார்க்சிஸ்டு கம்யூ. கண்டனம்
- இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை வெளிப்பட்டபோதும் சில காவல்துறையினர் திருந்துவதாக இல்லை.
புதுச்சேரி:
புதுவை மாநில மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் ராஜாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-
காலாப்பட்டு போலீஸ் நிலையத்தில் கலைச்செல்வி என்ற பெண் தற்கொலை செய்ததற்கு காலாப்பட்டு காவல் துறையினர்தான் முழுப் பொறுப்பு ஏற்க வேண்டும் எனவே இந்த தற்கொலைக்கு காரணமான காவல் துறையினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுபோன்ற சம்பவங்கள் பலமுறை வெளிப்பட்டபோதும் சில காவல்துறையினர் திருந்துவதாக இல்லை. இதனால் போலீஸ் நிலையம் செல்லவே மக்கள் அஞ்சுகின்றனர்.
கவால்துறையில் நடைபெற்றுவரும் தொடர் கட்டபஞ்சாயத்துகளால் புதுவை மக்கள் தொடர் துன்பங்களையும் பொருள், உயிர் இழப்புகளை அனுபவித்து வருகின்றனர்.
இதுகுறித்து பலமுறை பல்வேறு வழிகாட்டுதல்கள் நீதிமன்ற உத்தரவுகள் வந்தபோதும் புதுவை காவல்துறையில் உள்ள சிலர் மாறுவதாக இல்லை. எனவே புதுவை அரசு இப்பிரச்சனைகளுக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- கென்னடி எம்.எல்.ஏ.நடவடிக்கை
- விரைவில் பட்டா வழங்குவதற்கான ஆவணத்தை 2 வாரத்துக்குள் தயார் செய்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார்.
புதுச்சேரி:
புதுச்சேரி உப்பளம் தொகுதிக்குட்பட்ட ராசு உடையார் தோட்டம் பொதுமக்கள் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ, அலுவலகம் சென்று அவரை சந்தித்து பட்டா வழங்க வேண்டி 3 மாதத்திற்கு முன்பு கோரிக்கை வைத்தனர்,
ராசு உடையார் தோட்டத்தில் சுமார் 150 க்கு மேற்பட்ட வீடுகள் பட்டா இல்லாமல் இருக்கிறது, இது குறித்து சட்டசபையில் முதல்- அமைச்சரிடம் அனிபால் கென்னடி எம்.எல்.ஏ பலமுறை பேசியுள்ளார். அதை தொடர்ந்து சர்வே டிபார்மெண்ட் நில அளவைத் துறை இயக்குனர் செந்தில்குமாரை நேரில் சந்தித்து 150-க்கு மேற்பட்ட வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
விரைவில் பட்டா வழங்குவதற்கான ஆவணத்தை 2 வாரத்துக்குள் தயார் செய்கிறோம் என்று அவர் உறுதியளித்துள்ளார். தொகுதி செயலாளர் சக்திவேல், கிளை செயலாளர்கள் காலபான், ராகேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.
- வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார்.
- விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார்.
புதுச்சேரி:
புதுவை நேரு நகரை சேர்ந்தவர் சோபித் குமார்( 62). இவர் அரும்பார்த்தபுரத்தில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ஊழியராக வேலை செய்து பணி ஓய்வு பெற்றவர். இவர் பணியாற்றிய காலத்தில் வரவு செலவில் சில முரண்பாடுகள் இருந்ததால் ஆடிட் செய்வதற்காக இவரது சம்பளம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் நிறுத்தி வைக்கப்பட்டது.
இதனால் விவசாய தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் மேலாண் இயக்குனர் அய்யப்பனை அடிக்கடி சந்தித்து ஓய்வூதிய பலன்கள் வழங்குமாறு கேட்டு வந்தார். வழக்கம் போல் தட்டாஞ்சாவடி தொழிற்பேட்டையில் உள்ள கான்பெட் அலுவலகத்தில் இயக்குனர் அய்யப்பனை சந்தித்து முறையிட்டார்.
அப்போது அவர் வரவு செலவு கணக்கில் பல குறைபாடுகள் இருப்பதால் தணிக்கை முடிந்த பிறகு நிலுவை ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்கள் வழங்குவதாக கூறினார். தற்காலிகமாக ரூ.10 ஆயிரம் வழங்கிவிட்டு புறப்பட்டு சென்றார்.
இதனால் விரத்தியடைந்த சோபித்குமார் அலுவலகம் முன்பு தான் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றி தீ வைத்தார். உடலில் பற்றிய தீயுடன் அங்குமிங்கும் ஓடி கார் பார்க்கிங் அருகே மயங்கி விந்தார். இதனை பார்த்த அங்கிருந்த ஊழியர்கள் அதிர்ச்சியடைந்தனர். தண்ணீர் ஊற்றி தீயை அணைத்தனர்.
உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைத்து ஜிப்மரில் அனுமதித்தனர். சோபித் குமாருக்கு 90 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதால் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தற்கொலைக்கு முயன்ற சோபித்குமாருக்கு மாலதி (59) என்ற மனைவியும், மகன் குழல்மாலன், ப்ரித்தி என்ற மகளும் உள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக கோரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தீக்குளிக்கும் முன்பு மனைவியிடம் செல்போனில் பேசி தன்னை மன்னிக்குமாறு கூறியுள்ளார்.
நேற்று முன்தினம் புதுவை காலாப்பட்டு போலீஸ்நிலையத்தில் கலைச் செல்வி என்ற பெண் தீக்குளித்து இறந்தார். அந்த சம்பவம் அடங்குவதற்குள் அரசு அலுவலக வளாகத்தில் ஓய்வு பெற்ற ஊழியர் தீக்குளித்த சம்பவம் புதுவை மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.






