என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
அமைப்புசாரா தொழிலாளர் நல வாரியம் அமைக்க வேண்டும்
- சி.ஐ.டி.யூ. தீர்மானம்
- உடனடியாக அமைப்பு சாரா தொழிலளார் நல வாரியத்தை அமைக்க வேண்டும்.
புதுச்சேரி:
இந்திய தொழிற்சங்க மையத்தின் (சி.ஐ.டி.யு) புதுவை மாநில நிர்வாகிகள் கூட்டம் முதலி யார்பேட்டையில் உள்ள அலுவலகத்தில் நடந்தது.
கூட்டத்திற்கு சி.ஐ.டி.யு தலைவர் பிரபுராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சீனுவாசன் நடைபெற்ற வேலைகள் குறித்தும், எதிர்கால செயல்பாடுகள் குறித்தும் பேசினார். நிர்வாகிகள் ரவிச்சந்திரன், கொளஞ்சியப்பன், ராமசாமி, மதிவாணன், தினேஷ் குமார், மணிபாலன், வடிவேல், பச்சமுத்து ஆகியோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் அமைப்புசாரா தொழிலா ளர்கள் ஆம் ஆத்மி பீம யோஜனா திட்டத்தின் கீழ் எல்.ஐ.சி மூலம் பலன் பெற்று வந்தனர். ஆனால் 7 ஆண்டாக இத்திட்டம் நிறுத்தப்பட்டதால் இயற்கை, விபத்து மரணம், கல்வி உதவி திட்டங்கள் வழங்கவில்லை.
தொழிலாளர்களிடம் பெறப்படும் தொகையை காப்பீடு திட்டங்களுக்கு செலுத்தாமல், பழைய கடன்களை அடைக்க பயன்படுத்தியுள்ளனர். இது வன்மையாக கண்டிக்கத் தக்கது. உடனடியாக அமைப்பு சாரா தொழிலளார் நல வாரியத்தை அமைக்க வேண்டும். பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய உதவி திட்டங்களை அளிக்க வேண்டும் என வலியுறுத்தி தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.






