என் மலர்
புதுச்சேரி

அரசு பள்ளி மாணவர்களுக்கு எழுது பொருட்களை வழங்கிய காட்சி
அரசு தொடக்க பள்ளியில் மாணவர்களுக்கு நோட்டு புத்தகம் எழுதுபொருட்கள்
- நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார்.
- பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, முக்கிய பிரமுகர்களும் மாணவ- மாணவிகளும் பாராட்டினார்கள்.
புதுச்சேரி:
புதுச்சேரி மாநிலம் அரியாங்குப்பம் தொகுதியில் அருந்ததிபுரத்தில் அரசு தொடக்க பள்ளி இயங்கி வருகிறது. அந்தப் பள்ளியில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு எழுது பொருட்கள் மற்றும் உபகரணங்கள் வழங்குதல், பொறுப்பாசிரியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்கு அரசு தொடக்கப்பள்ளி பொறுப்பாசிரியை கோமதி தலைமை தாங்கினார். இதில் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாநில அமைப்பாளர் சங்கர் (எ) சிவசங்கர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ- மாணவிகளுக்கு நோட்டுப் புத்தகங்கள், எழுது பொருள்கள் மற்றும் காலணிகள் ஆகியவற்றை தனது சொந்த செலவில் வழங்கி வாழ்த்தினார்.
அதனைத் தொடர்ந்து இந்தப் பள்ளியில் பணியாற்றி பணியிட மாற்றம் செய்யப்பட்ட பொறுப்பாசிரியை கோமதிக்கு பாராட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி, முக்கிய பிரமுகர்களும் மாணவ மாணவிகளும் பாராட்டினார்கள். தந்தை பெரியார் திராவிட கழக தலைவர் வீரமோகன், திமுக மாநில நிர்வாகிகள் மதிவாணன், ஜவஹருல்லா, மீரன் வெங்கடேசன், ஜோதி, பாஸ்கர், குட்டி, குமார், சேகர், ஆறுமுகம், முருகன் மற்றும் பெற்றோர்களும் அப்பகுதி முக்கிய பிரமுகர்களும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.






