என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
போலீஸ் அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்
- வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
- போலீஸ் நிலையத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது
புதுச்சேரி:
புதுவை மாநில காங்கிரஸ் தலைவர் வைத்திலிங்கம் எம்பி, முன்னாள் அமைச்சர் ஷாஜகான், கட்சி நிர்வாகிகள் காலாப்பட்டில் தீக்குளித்த இறந்த பெண்ணின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
பின்னர் வைத்திலிங்கம் எம்.பி. நிருபர்களிடம் கூறியதாவது:
காவல்துறையினரின் அலட்சிய போக்கால் கலைச்செல்வி இறந்துள்ளார். காவல்துறை மக்களுக்கு பாதுகாப்பு தர வேண்டும்.
ஆனால் பொறுப்பை தட்டிகழித்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் தீக்குளிப்பு சம்பவம் நடந்துள்ளது. இதற்கு காவல்துறை சரியாக செயல்படாததே காரணம்.
புதுவை அரசு கலைச்செல்வியின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்கி உதவி செய்ய வேண்டும். இந்த சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறை அதிகாரிகள் மீது வழக்குப் பதிந்து நட வடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Next Story






