என் மலர்
புதுச்சேரி

கோப்பு படம்.
பெண்களுக்கு 33 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும்
- காங்கிரஸ் தேசிய செயலர் வலியுறுத்தல்
- பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களு க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கெண்டு வந்தார்.
புதுச்சேரி:
புதுவை காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகத்தில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் செயலாளர் சரிதா நிருபர்களிடம் கூறியதாவது:-
ராஜீவ்காந்தி பிரதமராக இருந்தபோது பஞ்சாயத்து அமைப்புகளில் பெண்களு க்கு 33 சதவீத இடஒதுக்கீடு சட்டம் கெண்டு வந்தார்.
தொடர்ந்து மத்தியில் காங்கிரஸ் ஆட்சியில் இந்த மசோதா கொண்டு வரப்பட்டது.
மேலவையில் பா.ஜனதா வினர் எதிர்ப்பு தெரிவி த்ததால் தடைபட்டது. அதையே தற்போது பா.ஜனதா கொண்டு வந்துள்ளது. இந்த சட்டத்தை வரும் பாராளுமன்ற தேர்தலில் அமல்படுத்த வேண்டும். புதுவை சட்ட சபையிலும் பெண்களுக்கு 33 சதவீத ஒதுக்கீடு வழங்க வேண்டும். இவ்வாறு சரிதா கூறினார்.
பேட்டியின்போது கட்சியின் மாநில தலைவர் வைத்திலிங்கம் எம்.பி, முன்னாள் முதல்-அமைச்சர் நாராயணசாமி, சட்டமன்ற கட்சித்தலைவர் வைத்திய நாதன் எம்.எல்.ஏ, மகளிர் காங்கிரஸ் நிர்வாகிகள் உடனிருந்தனர்.






