என் மலர்tooltip icon

    உண்மை எது

    கொரோனாவைரஸ் தொற்றின் அறிகுறிகள் இவைதான் என எய்ம்ஸ் வெளியிட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    நம் உடலில் ஏற்படும் பலவித சுவாச கோளாறு மற்றும் கொரோனாவைரஸ் தொற்று உள்ளிட்டவை ஏற்படுத்தும் அறிகுறிகள் இவை தான் என கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி இவற்றை டெல்லியில் உள்ள எய்ம்ஸ் வெளியிட்டதாகவும் வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    இதுகுறித்த இணைய தேடல்களில் வைரல் தகவல்களில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் வைரல் தகவல்களில் உள்ள அறிகுறிகள் எதுவும் கொரோனாவைரஸ் தொற்று ஏற்படுவதை குறிக்காது. வைரல் தகவலில் உள்ள அறிகுறிகள் ஏதும் அதிகாரப்பூர்வ கொரோனா வலைதளத்தில் இடம்பெற்றுள்ளதா என தேடியதில், இவ்வாறு எந்த தகவலும் இடம்பெறவில்லை என்றும் தெரியவந்துள்ளது.

     கோப்புப்படம்

    உண்மையில் தற்போது வைரலாகும் தகவல் 2020 முதல் சமூக வலைதளங்களில் வலம்வந்து கொண்டு இருக்கிறது. அந்த வகையில் வைரல் தகவலில் உள்ள அறிகுறிகள் எதையும் எய்ம்ஸ் வெளியிடவில்லை என்றும் இதற்கும் கொரோனா தொற்றுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும் உறுதியாகிவிட்டது.
    பிரதமர் நரேந்திர மோடியின் வாகனம் 2017 ஆண்டு இரண்டு மணி நேரம் நிறுத்தப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    பிரதமர் நரேந்திர மோடி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க ஜனவரி 5 ஆம் தேதி பஞ்சாப் சென்றார். அப்போது வழியில் போராட்டக்காரர்கள் சாலை மறியலில் ஈடுபட்டிருந்ததால் பிரதமரின் வாகனம் அப்பகுதியில் உள்ள மேம்பாலத்தில் 15 நிமிடத்துக்கு மேல் நிறுத்தப்பட்டது.

    இதனால் பாதுகாப்பு ஏற்பாடுகளில் குளறுபடி ஏற்பட்டதாக நிகழ்ச்சி ரத்து செய்யப்பட்டு, பிரதமர் மோடி டெல்லி திரும்பினார். இந்த சம்பவத்திற்கு காரணம் என பஞ்சாப் அரசையும், காங்கிரஸையும் பா.ஜ.க. தலைவர்கள் கடுமையாக விமர்சித்தனர்.

     பிரதமர் மோடி கான்வாய்

    இந்த சம்பவத்திற்கு நாடு முழுக்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியின் வாகனம் உத்திர பிரதேச மாநிலத்தின் நொய்டா பகுதியில் சுமார் இரண்டு மணி நேரத்திற்கும் அதிகமாக காத்திருந்தது என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.

    இதுகுறித்த இணைய தேடல்களில் 2017 ஆண்டு பிரதமரின் வாகனம் நொய்டாவில் இரண்டு நிமிடங்கள் நிறுத்தப்பட்டது என தெரியவந்துள்ளது. இதற்கு காரணமாக இருந்த இரு காவலர்கள் இடை நீக்கம் செய்யப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

    அந்த வகையில் பிரதமர் மோடியின் வாகனம் இரண்டு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    அரவிந்த் கெஜ்ரிவால் சிறுவனக்கு முகக்கவசம் அணிவிக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதன் விவரங்களை பார்ப்போம்.


    இந்தியாவில் ஒமைக்ரான் தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒமைக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாநில அரசாங்கங்கள் மீண்டும் ஊரடங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன. 

    இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அவரது உதவியாளர் மனிஷ் சிசோதியா ஆகியோர் முகக்கவசம் அணியாமல் நிற்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புகைப்படத்தில் அரவிந்த் கெஜ்ரிவால் சிறுவனுக்கு முகக்கவசம் அணிவிக்கிறார். முன்னதாக இதே புகைப்படம் கடந்த ஆண்டும் இணையத்தில் வைரலானது. தற்போது அரவிந்த் கெஜ்ரிவால் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில், மீண்டும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

    வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    `அவரே முகக்கவசம் அணியவில்லை, ஆனால் மற்றவர்களை முகக்கவசம் அணிய வைக்கிறார்,' எனும் தலைப்பில் வைரல் புகைப்படம் பகிரப்பட்டு வருகிறது. உண்மையில் இந்த புகைப்படம் நவம்பர் 2019 வாக்கில் எடுக்கப்பட்டது ஆகும். வைரல் புகைப்படம் டெல்லி பள்ளியில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் சிசோதியா இணைந்து மாணவர்களுக்கு முகக்கவசம் வழங்கிய போது எடுக்கப்பட்டது ஆகும்.

    மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாக கூறும் அறிக்கை வைரலாகி வருகிறது.


    ஒமைக்ரான் பாதிப்பு காரணமாக கொரோனா தொற்றின் மூன்றாம் அலை உருவாகும் அபாயம் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஒமைக்ரான் பற்றிய போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

    அந்த வரிசையில், மத்திய நிதியமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டதாக கூறும் அறிக்கை ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் அறிக்கையில், ஒமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குவோருக்கான அகவிலைப்படியை மத்திய அரசு தற்காலிகமாக நிறுத்தி வைத்து இருப்பதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    இதுகுறித்த இணைய தேடல்களில் மத்திய அரசின் நிதியமைச்சகம் சார்பில் இதுபோன்று எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ (பி.ஐ.பி.) சார்பிலும் இந்த தகவல் உண்மையில்லை என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இதுபற்றிய தகவல் பி.ஐ.பி. அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் இடம்பெற்று இருக்கிறது.

    அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் பென்சன் வாங்குவோருக்கு அகவிலைப்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படவில்லை என உறுதியாகிவிட்டது.

    கேவேக்சின், கோவிஷீல்டு இரு தடுப்பூசிகளின் சேமிப்பு ஆயுட்காலத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.
    புதுடெல்லி:

    இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளது. இதையடுத்து தடுப்பூசி செலுத்தும் பணிகளை மத்திய அரசு விரைவுப்படுத்தியுள்ளது.

    இந்நிலையில் காலாவதியான தடுப்பூசிகளை மத்திய அரசு பொதுமக்களுக்கு செலுத்துவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இந்த செய்திகள் உண்மை இல்லை என மத்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. 

    கோப்பு புகைப்படம்

    இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-

    மத்திய அரசு காலாவதியான தடுப்பூசிகளை பயன்படுத்துவதாக வெளியாகும் செய்திகள் மக்களை தவறாக வழிநடத்துகின்றன. மத்திய மருந்துகள் கட்டுப்பாட்டு நிறுவனம், கோவேக்சின் தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட் காலத்தை 9 முதல் 12 மாதங்கள் வரை நீட்டித்துள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசியின் சேமிப்பு ஆயுட் காலம் 6 முதல் 9 மாதமாக கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் உயர்த்தப்பட்டது.

    இதனால் காலாவதியான தடுப்பூசிகள் பயன்பாட்டில் இருப்பதாக வெளியாகும் செய்திகள் உண்மையில்லை 

    இவ்வாறு மத்திய அரசு அறிக்கையில் தெரிவித்துள்ளது.
    டெல்லி பல்கலைக்கழகம் கல்லூரிகளை திறக்க உத்தரவிட்டுள்ளதாக கூறி அறிக்கை ஒன்று வைரலாகி வருகிறது.


    ஜனவரி 10 ஆம் தேதி முதல் கல்லூரிகளை திறந்து, ஆன்லைன் வகுப்புகளை நடத்த டெல்லி பல்கலைக்கழகம் உத்தரவிட்டுள்ளதாக கூறும் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

    டிசம்பர் 28 ஆம் தேதி அடங்கிய அறிக்கையில், டெல்லி பல்கலைக்கழகம் ஜனவரி 10 முதல் இளநிலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பு கல்லூரிகளை திறந்து, ஆன்லைன் வகுப்புகளை நடத்த உத்தரவிடுகிறது என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    இதுகுறித்த இணைய தேடல்களில் டெல்லி பல்கலைக்கழகம் இதுபோன்று எந்த அறிக்கையையும் வெளியிடவில்லை என தெரியவந்துள்ளது. மேலும் இதே தகவலை மத்திய அரசின் பிரஸ் இன்பர்மேஷன் பியூரோ அமைப்பும் பொய் என தெரிவித்துள்ளது. இதுபற்றிய தகவல் பி.ஐ.பி. டுவிட்டர் பக்கத்திலும் இடம்பெற்று இருக்கிறது.

    வைரல் அறிக்கையை டெல்லி பல்கலைக்கழகம் வெளியிடவில்லை என அதன் அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்திலும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அந்த வகையில் டெல்லி பல்கலைக்கழகம் கல்லூரிகளை திறப்பது பற்றி இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை என உறுதியாகிவிட்டது.
    அன்னை தெரசா உருவாக்கிய மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பு வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதாக கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    அன்னை தெரசா உருவாக்கிய 'மிஷனரீஸ் ஆப் சாரிட்டி' அமைப்பின் சேவை மையங்கள் நாடு முழுக்க செயல்பட்டு வருகின்றன. மிஷனரீஸ் ஆப் சாரிட்டி அமைப்பின் வங்கி கணக்குகள் அனைத்தும் சமீபத்தில் முடக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. 

    இதற்கு எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. மேலும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சமூக வலைதளத்தில் கண்டனம் தெரிவித்தார். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், மத்திய அரசு மீது கடும் கண்டனங்கள் எழுந்தன.

    இதுபற்றிய இணைய தேடல்களில், மம்தா பானர்ஜி டுவிட்டர் பதிவு வெளியான சில மணி நேரங்களில் மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் அறிக்கை வெளியிடப்பட்டது. இதைத் தொடர்ந்து மிஷனரீஸ் ஆப் சாரிட்டி சார்பிலும் அறிக்கை வெளியிடப்பட்டது. 

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    அதன்படி, 'மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், வெளிநாட்டு நிதி பங்களிப்பு ஒழுங்குமுறை விதிகளை மிஷனரீஸ் ஆப் சாரிட்டி பின்பற்றவில்லை. இதற்கான பதிவை புதுப்பிக்கும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மறுபரிசீலனை செய்ய மிஷனரீஸ் ஆப் சாரிட்டி சார்பில் இதுவரை கோரிக்கை விடுக்கப்படவில்லை.' 

    'எனினும், மிஷனரீஸ் ஆப் சாரிட்டியின் வங்கி கணக்குகள் எதுவும் முடக்கப்படவில்லை. தங்களின் வங்கி கணக்குகளை முடக்க மிஷனரீஸ் ஆப் சாரிட்டி பாரத ஸ்டேட் வங்கியிடம் கோரிக்கை விடுத்துள்ளது,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் மத்திய அரசு மிஷனரீஸ் ஆப் சாரிட்டி வங்கி கணக்குகளை முடக்கவில்லை என உறுதியாகிவிட்டது.
    பைபிள் காலாவதியாகிவிட்டது என போப் பிரான்சிஸ் கூறியதாக பகீர் தகவல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


    உலகம் முழுக்க கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், செய்தி குறிப்பு போன்று காட்சியளிக்கும் ஸ்கிரீன்ஷாட் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வைரல் ஸ்கிரீன்ஷாட்டில், 'போப் பிரான்சிஸ் பைபிள் காலாவதியாகிவிட்டது. இதனால் பைபிளுக்கு மாற்றாக பிப்ளியா 2000 எனும் புதிய புத்தகத்தை அறிமுகம் செய்ய முடிவு செய்துள்ளதாக,' குறிப்பிடப்பட்டு இருக்கிறது. 

    'பைபிள் முழுமையாக காலாவதியாகிவிட்டது. இதனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது. பைபிள் அதிகாரப்பூர்வமாக ரத்து செய்யப்படுகிறது. பைபிளுக்கு மாற்றாக அறிமுகம் செய்யப்பட இருக்கும் புத்தகம், அதன் பெயர் மற்றும் அதில் இருக்கும் தரவுகள் பற்றிய இறுதி முடிவு தேவாலயத்தின் உயர் அதிகாரிகளுடன் நடைபெற இருக்கும் கூட்டத்தில் வெளியாகிறது. ஏற்கனவே புதிய புத்தகத்திற்கான பெயர்கள் பரிசீலனை செய்யப்படுகிறது. இவற்றில் பிப்லியா 2000 அதிக சக்திவாய்ந்ததாக உள்ளது,' என வைரல் பதிவுகளில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     வைரல் ஸ்கிரீன்ஷாட்

    வைரல் தகவல் பற்றிய இணைய தேடல்களில் பைபிள் மாற்றப்பட இருப்பதாக கூறும் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. உண்மையில் வைரல் பதிவுகளில் உள்ள ஸ்கிரீன்ஷாட் 2018 ஆம் ஆண்டு கேலி வலைதளம் ஒன்றில் பதிவிடப்பட்ட செய்தி தொகுப்பு ஆகும். இந்த வலைதளங்களில் உண்மையற்ற செய்திகள் கேலி செய்யும் நோக்கில் பதிவிடப்படுகின்றன. 

    போப் பிரான்சிஸ் இதுபோன்ற அறிவிப்பை வெளியிட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. அந்த வகையில் பைபிளுக்கு மாற்றாக பிப்லியா 2000 எனும் புத்தகம் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறும் தகவல்களில் துளியும் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
    இந்திய ரூபாய் நோட்டுக்கள் பற்றி சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல் பற்றி தொடர்ந்து பார்ப்போம்.


    போலி ரூபாய் நோட்டுக்கள் பற்றிய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களால் சமூக வலைதளங்கள் நிறைந்துள்ளன. போலி ரூபாய் நோட்டுக்கள் மற்றும் நாணயங்கள் பற்றிய விவரங்கள் பல்வேறு வலைதளங்கள் மற்றும் டுவிட்டர் பக்கங்களில் வெளியாகி வருகின்றன. அந்த வகையில், சில நாட்களாக ரூபாய் நோட்டுக்கள் பற்றிய புது தகவல் வைரலாகி வருகிறது.

    அதில் 'ரூ. 500 நோட்டில் மகாத்மா காந்தியின் புகைப்படம் அருகில் உள்ள பச்சை நிற ஸ்ட்ரிப் இருந்தால், அது போலி ரூபாய் நோட்டு.  வழக்கமாக பச்சை நிற ஸ்ட்ரிப் ஆர்.பி.ஐ. கவர்னர் கையெழுத்தின் அருகில் தான் இருக்கும்,' என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

     டுவிட்டர் ஸ்கிரீன்ஷாட்

    இதுகுறித்த இணைய தேடல்களில் வைரலாகும் தகவலில் துளியும் உண்மையில்லை என தெரியவந்துள்ளது. மேலும் மத்திய அரசின் பி.ஐ.பி. நிறுவனம் வைரல் பதிவுகளில் உள்ள தகவல்களின்படி இருவித ரூபாய் நோட்டுக்களும் சட்டப்பூர்வமாக செல்லுபடியாகும் என தெரிவித்துள்ளது. மேலும் இந்த வீடியோ போலியான ஒன்று என்றும் தெரிவித்தது.
    தாஜ் மகால் கட்டுமான பணிகளில் ஈடுபட்டவர்களின் கைகளை ஷாஜகான் துண்டித்தார் என கூறும் தகவல் வைரலாகி வருகிறது.


    பிரதமர் நரேந்திர மோடி டிசம்பர் 13 ஆம் தேதி காசி விஸ்வநாதர் கோயில் வளாகத்தில் கட்டப்பட்ட புதிய கட்டிடங்களை திறந்து வைத்தார். இந்த நிகழ்வின் போது, கோயிலை தூய்மையாக வைத்துக் கொள்ளும் தூய்மை பணியாளர்கள் மீது மலர்களை வீசி பிரதமர் மோடி நன்றி தெரிவித்தார். 

    இந்த சம்பவத்தை தனியார் நிறுவன செய்தியாளர் ஷாஜகானுடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு டுவிட்டரில் செய்தி ஒன்றை பதிவிட்டார். அதில், 'பிரதமர் மோடி தூய்மை பணியாளர்களுக்கு மரியாதை செலுத்தும் நிலையில், ஷாஜகான் தாஜ் மகால் கட்டுமான பணியில் ஈடுபட்டவர்களின் கைகளை துண்டித்தார்,' என அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

     வைரல் பதிவு ஸ்கிரீன்ஷாட்

    இதே தகவலை மத்திய மந்திரி நரேந்திர சிங் தோமர் மற்றும் பலர் தங்களின் டுவிட்டரில் பதிவிட்டனர். இதுகுறித்த இணைய தேடல்களில், 'ஷாஜகான் பணியாளர்களின் கைகளை துண்டித்ததை கூறும் வரலாற்று ஆதாரம் எதுவும் இல்லை. இந்த தகவல் வாய் வார்த்தையாக பலர் கூறி கேட்டிருக்கிறேன்.' என வரலாற்று ஆய்வாளர் இர்பான் ஹபிப் தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார். 

    அந்த வகையில் ஷாஜகான் பணியாளர்களின் கைகளை துண்டித்ததாக கூறும் தகவல் ஆதாரமற்றது என உறுதியாகிவிட்டது.

    மகாராஷ்டிரா மாநிலத்தில் 250 நாய் குட்டிகளை கொன்றதாக கைது செய்யப்பட்ட குரங்குகள் பற்றி புது தகவல் வெளியாகி உள்ளது.


    250 நாய் குட்டிகளை கொன்றதாக குற்றம்சாட்டப்பட்டு இரண்டு குரங்குகள் கடந்த வாரம் கைது செய்யப்பட்டன. மகாராஷ்டிரா மாநிலத்தில் அரங்கேறிய இந்த சம்பவம் சர்வதேச அளவில் செய்தியானது. இந்த சம்பவம் பற்றி பல செய்தி நிறுவனங்கள் விரிவான தகவல்களை பதிவு செய்தன. 

    இந்த நிலையில், குரங்குகள் பழிக்குப்பழியாக 250 நாய் குட்டிகளை கொன்றதா என்ற ஆய்வில் திருப்பங்கள் ஏற்பட்டுள்ளன. அதன்படி மகாராஷ்டிரா மாநிலத்தில் 50 நாய் குட்டிகள் பட்டினியால் உயிரிழந்தன என்று தெரியவந்துள்ளது. சம்பவம் நடைபெற்ற பகுதியில் வசிப்பவர்கள் பழிக்குப்பழியாக குரங்குகள் கொலை செய்ததாக தெரிவிக்கின்றனர்.

    எனினும், விலங்குகளுக்கு பழிவாங்கும் எண்ணம் கிடையாது. விலங்குகள் ஒன்றுக்கு ஒன்று சண்டையிடுவது அவற்றின் வழக்கம் தான் என வனத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். சில வாரங்களுக்கு முன் இரண்டு பெரிய குரங்குகள் மற்றும் ஒரு குட்டி குரங்கு பிரிந்துவிட்டன. பிரிந்து சென்ற குட்டி குரங்கு, சில தெரு நாய்கள் கடித்ததால் உயிரிழந்துவிட்டது.

     குரங்கு

    குட்டி குரங்கு உயிரிழந்தது தெரியாமல்- தாய் குரங்கு நாய் குட்டியை, தனது குட்டி என நினைத்து எடுத்து சென்றது. இவ்வாறு சென்ற போது, உணவின்றி பட்டினியால் நாய் குட்டி உயிரிழந்தது என வனத்துறை அதிகாரி தெரிவித்தார். 

    250 நாய் குட்டிகள் உயிரிழந்ததாக செய்தி நிறுவனங்கள் வெளியிட்ட எண்ணிக்கையை யார் தெரிவித்தது என்ற விவரம் மர்மமாகவே இருக்கிறது. இதுபற்றி வனத்துறை சார்பில் எந்த தகவலும் வழங்கப்படவிலலை. தனது குட்டி என நினைத்து குரங்குகள் சுமார் 50 நாய் குட்டிகளை தூக்கி சென்றுள்ளன. 

    இதுபற்றி எந்த தகவலும் அறியாத அப்பகுதி மக்கள் வனத்துறையில் புகார் தெரிவித்தனர். புகாரை அடுத்து இரண்டு குரங்குகளை வனத்துறை அதிகாரிகள் பிடித்து சென்றனர். அந்த வகையில் குரங்குகள் நாய்குட்டிகளை பழிவாங்கும் நோக்கில் கொலை செய்யவில்லை என தெரியவந்துள்ளது.
    போர்த்துகீசு கோவாவை கைப்பற்றிய போது முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்ததாக பிரதமர் மோடி தெரிவித்தார்.


    கோவாவில் ஆண்டுதோறும் டிசம்பர் 19-ம் தேதி விடுதலை தினம் கொண்டாடப்படுகிறது. விடுதலை தினத்திற்கு அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கோவா விடுதலை தின கொண்டாட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி சிறப்பு உரையாற்றினார்.

    இந்த நிகழ்வில் பேசும் போது, 'போர்த்துகீசு கோவாவை கைப்பற்றிய போது இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளை முகலாயர்கள் ஆட்சி செய்து வந்தனர்,' என தெரிவித்தார். பிரதமர் மோடி உரையை பல்வேறு செய்தி நிறுவனங்கள் அப்படியே செய்தியாக வெளியிட்டன. 

     பிரதமர் மோடி

    இதுகுறித்த இணைய தேடல்களில், பிரதமர் மோடி கூறிய கருத்தில் பிழை இருப்பது கண்டறியப்பட்டது. பிரதமர் மோடி கூறிய தகவலை ஆய்வு செய்த போது, ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர் நஜப் ஹைதர், 'முகலாயர்கள் 1526 ஆம் ஆண்டு இந்தியாவை கைப்பற்றினர். போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றிய போது முகலாயர்கள் அதிகாரத்தில் இல்லை,' என தனியார் நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

    அந்த வகையில் போர்த்துகீசியர்கள் கோவாவை கைப்பற்றும் போது முகலாயர்கள் இந்தியாவை ஆட்சி செய்யவில்லை என உறுதியாகிவிட்டது. 
    ×