என் மலர்
விருதுநகர்
ஸ்ரீவில்லிபுத்தூர் பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்த நபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் சிவகாசி சாலையில் உள்ள பருத்தி ஆராய்ச்சி நிலையத்தில் பூச்சியியல் துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றி வந்தவர் அறிவுடைநம்பி (வயது 46). இவர் ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் குடியிருந்து வந்தார்.
இந்நிலையில் நேற்று அலுவலகத்தில் வைத்து திடீரென அவர் விஷம் குடித்து மயங்கிய நிலையில் கிடந்தார். உடனே அவரை சிகிச்சைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார், அறிவுடை நம்பியின் உடலை பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
இவர் எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தை உள்ளது. இவர் பழனியில் மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தில் உதவி பேராசிரியராக பணிபுரிந்து கடந்த 25 தினங்களுக்கு முன்பு தான் இங்கு மாறுதலாகி வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வரும் நிலையில் நோய் தடுப்பு விதிமுறைகளை மக்கள் பின்பற்ற வேண்டும் என கலெக்டர் கண்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
விருதுநகர்:
தமிழக அரசு அறிவுறுத்தியுள்ள நோய் தடுப்பு விதிமுறைகளின்படி பொது இடங்களில் முக கவசம் அணிந்து வருவதையும், சமூக இடைவெளி கடைபிடிப்பதையும் மாவட்ட நிர்வாகம் முறையாக கண்காணிக்க வேண்டும் என்று அறிவுறுத்தி உள்ளது.
இதன்மூலம் நோய் பரவல் முற்றிலுமாக தவிர்க்கப்பட வாய்ப்பு ஏற்படும் என்றும் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் தற்போதைய நிலையில் நோய் பாதிப்பு வெகுவாக குறைந்து வரும் நிலையில் பொது மக்கள் பொது இடங்களுக்கு வரும் போது முக கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைபிடிப்பதையும் முற்றிலுமாக தவிர்க்கும் நிலை இருந்து வருகிறது.
இதுகுறித்து பலமுறை மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்தும் பொதுமக்கள் அதனை பொருட்படுத்தாமல் நடந்து கொள்வது நோய் பாதிப்பு அதிகரிக்க வாய்ப்பை ஏற்படுத்தும். இதனால் பாதிப்பு ஏற்படுவது நமக்குத்தான் என்ற எண்ணத்தில் பொதுமக்கள், அரசு விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டியது அவசியமாகும்.
இம்மாவட்டத்தில் நோய் பாதிப்பு குறைந்து உள்ளதால் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளும் குறைக்கப்பட்டுள்ளது. எனினும் அனைத்து பகுதிகளிலும் விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்பட வேண்டியது பொது மக்களின் கடமையாகும். தொடர்ந்து பொது இடங்களில் அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் இருப்போர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
அரசு அறிவித்துள்ள விதிமுறைகளின்படி அபராதம் விதிக்கவும், தேவைப்பட்டால் மேல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டியது வரும். மாவட்டத்திலிருந்து நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க வேண்டிய கடமை மாவட்ட மக்களுக்கு உண்டு. வணிக வளாகங்கள், வணிக நிறுவனங்கள் ஆகியவற்றிலும் அரசு அறிவித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுவதை வணிக நிறுவனத்தினர் உறுதி செய்ய வேண்டும்.
இல்லையேல் விதிமுறைகளின்படி அவர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் நிலை ஏற்படும். தனியார் மற்றும் போக்குவரத்து கழக பஸ் நிர்வாகத்தினரும் நோய் தடுப்பு நடவடிக்கைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதனை பின்பற்றி பஸ்களை இயக்க வேண்டும். இல்லையேல் விதிமுறைகளின்படி நடவடிக்கை எடுக்க நேரிடும்.
எனவே மாவட்ட மக்கள் மற்றும் வணிக நிறுவனத்தினர் மாவட்டத்தில் நோய் பாதிப்பை முற்றிலும் தவிர்க்க அரசு அறிவித்துள்ள நோய்தடுப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றி மாவட்ட நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டுகிறேன். விதிமுறைகளை முறையாக பொது இடங்களில் கடைபிடிக்கப்படுவதை கண்காணிப்பு அதிகாரிகள் உறுதி செய்யும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விருதுநகர் அருகே பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் அருகே உள்ள சின்ன பேராலியை சேர்ந்தவர் முரளிகுமார். இவரது மனைவி முனீஸ்வரி (வயது 26). கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக மன அழுத்த நோயால் பாதிக்கப்பட்டிருந்த முனீஸ்வரி நேற்று வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி முனீஸ்வரியின் தந்தை சிவகாசி பள்ளப்பட்டியை சேர்ந்த பன்னீர்செல்வம் (57) பாண்டியன் நகர் போலீசில் தனது மகள் இறப்பு குறித்து விசாரணை நடத்த கோரி புகார் செய்ததன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வெம்பக்கோட்டை அருகே மது விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தாயில்பட்டி:
வெம்பக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார், மீனாட்சிபுரம் பகுதியில் ரோந்து பணிக்காக சென்றார். அப்போது அங்கு மீனாட்சி புரத்தை சேர்ந்த ரவிச்சந்திர ராஜா (வயது 46) என்பவர் அனுமதியின்றி மதுவிற்று கொண்டு இருந்தார். இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 15 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி கீழத்திருத்தங்கல் அருகே உள்ள செங்கமலப்பட்டி முருகன் காலனியை சேர்ந்தவர் கருப்பையா மனைவி கருப்பாயி (வயது 46). 3 குழந்தைகளின் தாயான கருப்பாயிக்கு கடந்த 20 வருடங்களாக எலும்பு உருக்கி நோய் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் இவர் அடிக்கடி மூச்சுதிணறலால் பாதிக்கப்பட்டு அதற்காக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இந்த நிலையில் நோய் கொடுமையால் கடுமையாக பாதிக்கப்பட்ட கருப்பாயி நேற்று முன்தினம் அதிகாலை வீட்டின் வெளியே தீக்குளித்துள்ளார். பலத்த தீக்காயம் அடைந்த அவரை உறவினர்கள் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், கருப்பாயி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சாத்தூர் அருகே விபத்தில் வாலிபர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் சேவுகபெருமாள் (வயது 34). இவரும், உறவினர் சோமு என்பவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று முன்தினம் இரவு சிவகாசி-சாத்தூர் ரோட்டில் வந்து கொண்டிருந்தனர். வாகனத்தை சோமு ஓட்டி வந்தார். அப்போது மயிலாடுதுறையில் உள்ள ஒரு பட்டாசு கடையின் முன்பு சென்று கொண்டிருந்த போது அங்கு கனரக வாகனத்தில் அடிப்பட்டு இறந்து கிடந்த பசு மாட்டின் மீது சோமு மோதியுள்ளார். இதில் வாகனத்தின் பின்னால் அமர்ந்து வந்த சேவுகபெருமாள் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்ததார். பலத்த காயம் அடைந்த சோமுவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விருதுநகர் அருகே மனைவியை மிரட்டிய போலீஸ் ஏட்டு மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்:
விருதுநகர் பர்மா காலனியை சேர்ந்தவர் சுகன்யா (வயது 33). இவருக்கும் சென்னை ஆவடி பட்டாலியன் போலீஸ் பிரிவில் பணியாற்றும் போலீஸ் ஏட்டு சரவணகுமாருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. தற்போது இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
இந்தநிலையில் ஏட்டு சரவணகுமார் அதே போலீசில் பணியாற்றும் வேறொரு பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்ததாக சுகன்யாவுக்கு தெரியவந்தது. கடந்த 3 மாதங்களுக்கு முன்பு சுகன்யா இதனை கண்டித்து உள்ளார். இதையடுத்து போலீஸ் ஏட்டு சரவணகுமார் அந்தப் பெண்ணுடன் உள்ள தொடர்பைவிட மறுத்து சுகன்யாவை விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து இடுமாறு கட்டாயப்படுத்தி வந்தாராம்.
சுகன்யா இதற்கு மறுத்ததால் அவரை சித்ரவதை செய்ததுடன் விருதுநகரில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு அனுப்பி உள்ளார். இதனைத்தொடர்ந்து சரவணகுமார் விருதுநகரில் உள்ள சுகன்யாவின் வீட்டிற்கு வந்து விவாகரத்து பத்திரத்தில் கையெழுத்து போடுமாறு வற்புறுத்தியதுடன் தகராறு செய்து அவதூறாக பேசி மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து சுகன்யா அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போலீஸ் ஏட்டு சரவணகுமார் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 65). இவர் மாடுகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில் கண்மாய்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. இங்கு முதியவர் சங்கரபாண்டியன் தனது மாடுகளை மேய்க்க அய்யம்பட்டி கண்மாய்க்கு சென்றார். அப்போது ஒரு இடத்தில் தண்ணீர் அதிகஅளவில் தேங்கி இருந்துள்ளது. இதை சரியாக கவனிக்காத முதியவர் சங்கரபாண்டியன், தேங்கி இருந்த நீரில் மூழ்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சிவகாசி அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள ராஜதுரைநகரில் வசித்து வந்தவர் விஜயகுமார் (வயது 36). இவருக்கு ராஜேஸ்வரி என்ற மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர். இவர் தொழில் தொடங்க தனது மாமனாரிடம் கடன் வாங்கி இருந்ததாக கூறப்படுகிறது. வாங்கிய கடனை திருப்பி கொடுக்கவில்லையாம். இதனால் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவிக்கு இடையே குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து ராஜேஸ்வரி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த விஜயகுமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த மாரனேரி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மழையால் சேதமடைந்த நெல்பயிர்களை எம்.எல்.ஏ. பார்வையிட்டார். அப்போது உரிய நிவாரணம் வழங்க அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.
காரியாபட்டி:
காரியாபட்டி தாலுகா அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் சுமார் 450 ஏக்கர் பரப்பளவில் நெல் விவசாயம் செய்துள்ளனர். இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு சூறாவளி காற்றுடன் பெய்த பலத்த மழைக்கு 100 ஏக்கர் நெல் பயிர் முழுவதும் வயல்வெளியில் சாய்ந்து தண்ணீரில் மூழ்கி சேதமாகின. விளைந்த நெல் பயிர்கள் மழைக்கு வயல்களில் சாய்ந்து முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் விவசாயிகள் பெரிதும் கவலை அடைந்துள்ளனர். நெல் பயிர் சேதமடைந்த தகவல் அறிந்தவுடன் திருச்சுழி தொகுதி எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு அல்லாளப்பேரி, வல்லப்பன்பட்டி ஆகிய கிராமங்களில் உள்ள வயல்களுக்கு சென்று சேதமடைந்த நெல் பயிர்களை பார்வையிட்டார். பின்னர் பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்து ஆறுதல் கூறினார்.நிவாரணம் கிடைக்க மாவட்ட கலெக்டரிடம் கூறி நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்தார்.
விவசாய பயிர்கள் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட வந்த மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) , காரியாபட்டி தாசில்தார் தனகுமார் மற்றும் காரியாபட்டி வேளாண்மை அதிகாரிகளிடம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் கிடைக்க நடவடிக்கை எடுக்குமாறு தங்கம் தென்னரசு எம்.எல்.ஏ. கேட்டுக்கொண்டார்.
அப்போது காரியாபட்டி ஒன்றிய செயலாளர்கள் செல்லம், கண்ணன், மாவட்ட கவுன்சிலர் தங்க தமிழ்வாணன், நகர் செயலாளர் செந்தில், அல்லாளப்பேரி ஊராட்சி தலைவர் பிரபாசிவகுமார் உள்பட பலர் உடன் இருந்தனர்.
கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் கற்பித்தலால் பாதிக்கப்படும் நிலை உள்ளதால் பாதிப்பை தவிர்க்க பள்ளிக்கல்வித்துறை உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
விருதுநகர்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படாத நிலையில் பள்ளி கல்வித்துறை மற்றும் உயர்கல்வித் துறை கல்வி நிறுவனங்களை ஆன்லைன் மூலம் பாடங்களை நடத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை இதற்காக கல்வி டி.வி. என்ற தொலைக்காட்சியை ஏற்பாடு செய்துள்ளது. பெரும்பாலான மாணவர்கள் கிராமங்களிலேயே வசித்து வருகின்றனர். இவர்களால் பல்வேறு காரணங்களால் ஆன்லைன் கற்பித்தல் முறையை பின்பற்ற முடியாத நிலையில் உள்ளனர்.
அதிலும் குறிப்பாக கிராமப்புறங்களில் இணையதள வசதிகள் சரிவர கிடைக்காத நிலையில் ஆன்லைன் மூலம் பாடங்கள் நடத்தும் போது முழுமையாக அதனை பார்க்கவோ, கேட்கவோ முடியாத நிலையில் கிராமப்புற மாணவர்கள் உள்ளனர்,
இதனால் அவர்களது கற்றல் பாதிக்கப்படுகிறது. மேலும் ஏழை, எளிய பெற்றோரால் கிராமங்களில் உள்ள அவர்களது குழந்தைகளுக்கு தேவையான நவீன வசதிகளை செய்து தர முடிவதில்லை. இதனாலும் ஆன்லைனில் கிராமப்புற மாணவர்கள் பாடங்களை கற்பதற்கு முடியாத நிலை தொடர்கிறது. இதில் பாதிக்கப்படுவது பெரும்பாலும் அரசு பள்ளி மாணவர்கள் தான்.
எனவே பள்ளிக்கல்வித்துறையும், உயர்கல்வித்துறையும் கிராமப்புற மாணவர்கள் ஆன்லைன் முறையில் பாடங்களை கற்பதற்கு முறையான வழிகாட்டல்களை மாவட்ட கல்வித்துறை, பள்ளி கல்வித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் உரிய ஏற்பாடுகள் செய்வதற்கு தமிழக அரசு உரிய வழிகாட்டல்களை வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது. இல்லையேல் கிராமப்புற மாணவர்களின் கற்றல் திறனில் பாதிப்பு ஏற்படும்.

சிவகாசி அருகே பாம்பு கடித்து முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி மேற்கு ரிசர்வ்லைன் இந்திராநகரை சேர்ந்தவர் பாலு (வயது 60). இவர் கங்காகுளம் ரோட்டில் உள்ள ஒரு தோட்டத்தில் வேலை செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாலுவை பாம்பு கடித்ததாக கூறப்படுகிறது. உடனே அவர் வீட்டில் உள்ளவர்களிடம் கூறி கைவைத்தியம் செய்துள்ளார். இதில் முழு பலன் அளிக்காத நிலையில் சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திருத்தங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.