என் மலர்

  செய்திகள்

  மரணம்
  X
  மரணம்

  சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சிவகாசி அருகே கண்மாயில் மூழ்கி முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  சிவகாசி:

  சிவகாசி ரிசர்வ்லைன் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன் (வயது 65). இவர் மாடுகள் வளர்த்து பால் விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் சிவகாசி மற்றும் அதன் சுற்றுப்பகுதியில் கடந்த வாரம் கனமழை பெய்த நிலையில் கண்மாய்களில் அதிக அளவில் தண்ணீர் தேங்கி இருந்தது. இங்கு முதியவர் சங்கரபாண்டியன் தனது மாடுகளை மேய்க்க அய்யம்பட்டி கண்மாய்க்கு சென்றார். அப்போது ஒரு இடத்தில் தண்ணீர் அதிகஅளவில் தேங்கி இருந்துள்ளது. இதை சரியாக கவனிக்காத முதியவர் சங்கரபாண்டியன், தேங்கி இருந்த நீரில் மூழ்கினார். உடனே அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து மாரனேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
  Next Story
  ×