என் மலர்
விருதுநகர்
லாலாபேட்டை அருகே லாட்டரி சீட்டுகளை விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாலாபேட்டை:
லாலாபேட்டையில் போலீசார் ரோந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது லாலாபேட்டையை சேர்ந்த ரங்கசாமி (வயது 75), மேட்டு மகாதானபுரத்தை சேர்ந்த சத்யநாராயணன் (44) ஆகியோர் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும், இவர்களிடம் இருந்து 10 லாட்டரி சீட்டுகள் மற்றும் ரூ.850 பறிமுதல் செய்யப்பட்டது.
குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும்.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகையன்று காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையிலும் மட்டுமே பொது மக்கள் பட்டாசுகளை வெடிப்பதற்கு நேரம் நிர்ணயம் செய்து உத்தரவிட்டுள்ளது.
வரும் இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகை தினத்தன்று கடந்த ஆண்டை போலவே காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் இரவு 7 முதல் 8 மணி வரை மட்டுமே பொதுமக்கள் பசுமை பட்டாசு வெடிக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. எனவே சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாமல் பேணி காப்பது நமது கடமையும் பொறுப்புமாகும். அதை கருத்தில் கொண்டு பொதுமக்கள் கீழ்கண்ட வழிமுறைகளை கடைபிடிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
பொதுமக்கள் குறைந்த ஒலியுடனும், குறைந்த அளவில் காற்று மாசுபடுதல் தன்மையும் கொண்ட பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். அதிக ஒலி எழுப்பும் தொடர்ச்சியாக வெடிக்க கூடிய சரவெடிகளை தவிர்க்க வேண்டும். ஆஸ்பத்திரிகள், வழிபாட்டுத்தலங்கள் போன்ற இடங்களின்அருகில் பட்டாசுகள் வெடிப்பதை தவிர்க்க வேண்டும். குடிசைப்பகுதிகள் மற்றும் எளிதில் தீப்பற்றக்கூடிய இடங்களுக்கு அருகே பட்டாசு வெடிப்பதை தவிர்க்க வேண்டும். எனவே சுற்றுச் சூழலுக்கு ஏற்ப அதிக மாசு ஏற்படுத்தாத பட்டாசுகளை வெடித்து மாசற்ற தீபாவளியை கொண்டாடுவோம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும்.
குழந்தையின் வளர்ச்சி பற்றி தெரிந்துகொள்ள எடுக்கப்படும் முதல் பரிசோதனை, ஸ்கேன். அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் மூலம், குழந்தையின் வளர்ச்சி, ஆரோக்கியம் ஆகியவை குறித்து துல்லியமாகத் தெரிந்து கொள்ளலாம். ஆனால், ஸ்கேன் செய்வதில் பல கருத்துக்கள் சொல்லப்படுகின்றன. ஸ்கேன் செய்வது நல்லதா? அந்தக் கதிர்களால் குழந்தைக்குப் பாதிப்பு வருமா? ஏன் ஸ்கேன் நல்லது என்பதை என்பது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
ஆரோக்கியமான கர்ப்பிணிகள் என்றால், 10-14 வாரங்களுக்குள் ஸ்கேன் செய்யப்படும். அதற்கு முன்பாக வலி அல்லது உதிரப்போக்கு இருந்தால், மருத்துவரால் ஆறு அல்லது ஏழு வாரங்களிலேயே ஸ்கேன் செய்ய பரிந்துரைக்கப்படும்.
கர்ப்பிணிக்கு வயிறு வலி வந்தாலோ, ரத்த கசிவு ஏற்பட்டாலோ உடனடியாக மருத்துவரிடம் காண்பித்து ஸ்கேன் செய்யலாம். ஏற்கெனவே கருசிதைவு ஏற்பட்ட கர்ப்பிணிகள், மருத்துவர் அனுமதியோடு அல்ட்ராசவுண்ட் ஸ்கேன் செய்து கொள்ளுங்கள். சீரற்ற மாதவிலக்கு சுழற்சி இருந்து கர்ப்பமான பெண்களும், அவசியம் ஸ்கேன் செய்து கொள்வது நல்லது.
முதல் ஸ்கேனிலேயே இரட்டைக் குழந்தைகளா, குழந்தை பிறக்கும் தினம் ஆகியவற்றைக் கண்டுபிடித்துவிடலாம். அதற்கு அடுத்து, 18-21 வாரங்களில், குழந்தையின் வளர்ச்சி சரியாக இருக்கிறதா என்று பார்க்க இரண்டாவது ஸ்கேன் செய்யப்படும். 20-22 வாரங்களில் எடுக்கும் ஸ்கேனை TARGETTED SCAN, அதாவது குறைபாடுகள் இருக்கிறதா என்பதைக் குறிப்பாக கவனிப்பார்கள்.
28-40 வாரங்களில் சிலருக்கு ஸ்கேன் செய்யச் சொல்வார்கள். சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகள் இருந்தாலோ, குழந்தை சராசரி அளவைவிட பெரிதாகவோ சிறிதாகவோ இருந்தாலோ இதைச் செய்ய வேண்டும்.
சிலருக்கு வயிறு வழியாக இல்லாமல், பிறப்புறுப்பு வழியாகவும் (Vaginal Scan) எடுக்க வேண்டியதாக இருக்கும். இதனால் கருவுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. பயம் வேண்டாம்.
சில பெண்களுக்கு, தொடர்ந்து சிறிய அளவிலான ரத்தப்போக்கு இருந்தால் குழந்தையின் ஆரோக்கியத்தைக் கண்காணிக்க அடிக்கடி ஸ்கேன் எடுக்க வேண்டியது இருக்கும். இதனால் எந்தப் பாதிப்பும் ஏற்படாது.
32 வாரங்கள் கழித்து இன்னொரு அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் பரிசோதனை தேவைப்படலாம். இதில் குழந்தை நன்கு வளர்ச்சி அடைந்துள்ளதா, போதுமான எடை கூடியிருக்கிறதா என அறியலாம். ரத்தக்கொதிப்பு, நீரிழிவு போன்ற பிரச்னைகள் இல்லாதவர்களுக்கு இந்த ஸ்கேன்வரை எடுத்தாலே போதும். ஒருவேளை ரத்தக்கொதிப்பு, நீரிழிவு இருந்தால் அவரவரின் உடல்நிலையைப் பொறுத்து மருத்துவர் பரிந்துரைப்பர்.

சிவகாசி அருகே கஞ்சா கடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேஷ்குமார் மற்றும் போலீசார் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் உள்ள தொழிற்பேட்டை பகுதியில் வாகன சோதனை நடத்தினர். அப்போது நம்பர் பிளேட் இல்லாமல் அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை சந்தேகத்தின் பேரில் தடுத்து நிறுத்தி சோதனை செய்தபோது மதுரை திருநகர் சாந்தி நகரை சேர்ந்த முகமதுசல்மான்கான் (வயது 24) என்பவர் 2 கிலோ கஞ்சாவை விற்பனைக்காக கடத்தி வந்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் 2 கிலோ கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
சிவகாசி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் வீரபெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பொன்னுத்தாய் (வயது 49) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னுத்தாய் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வீட்டின் அருகில் நடந்து வந்த போது எதிர்பாராமல் நிலை தடுமாறி விழுந்ததில் முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் நோய் குணமாகவில்லை என மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவன் வீரபெருமாள் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
செங்கல்பட்டு:
செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் முன்னிலையில், வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. வாக்காளர் பட்டியலை மாவட்ட வருவாய் அலுவலர் மேனுவல்ராஜ் வெளியிட மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) செல்வம் பெற்றுக்கொண்டார். இதில் அரசு அலுவலர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
பைசாபாத் நகரின் பெயர் ஏற்கனவே அயோத்தி என மாற்றப்பட்ட நிலையில், தற்போது ரெயில் நிலையத்தின் பெயரும் மாற்றப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநில அரசு கடந்த மாதம், பைசாபாத் சந்திப்பு ரெயில் நிலையத்தின் பெயரை ‘அயோத்தி கன்ட்’ என மாற்ற முடிவு செய்தது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் பெயர் மாற்றப்படும் எனத் தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் பைசாபாத் ரெயில் நிலையம் ‘அயோத்தி கன்ட்’ என அழைக்கப்படும் என்று வடக்கு ரெயில்வே தெரிவித்துள்ளது. மேலும், இந்த பெயர் மாற்றம் உடனடியாக நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு ஏற்கனவே, அலகாபாத் பெயரை பிரயக்ராஜ் எனவும், முகல்சாராய் ரெயில்வே சந்திப்பை பண்டிட் தீன் தயாள் உபத்யாய் சந்திப்பு எனவும் மாற்றியது குறிப்பிடத்தக்கது.
பைசாபாத் ரெயில் நிலையம் 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.
சாத்தூர் அருகே விபத்தில் முதியவர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தூர்:
சாத்தூர் அருகே உள்ள மேட்டமலையை சேர்ந்தவர் தங்ககோபால் (வயது 47). இவர் தனக்கு சொந்தமான இருசக்கர வாகனத்தில் தனது நண்பர்களான ஆலமரத்துபட்டியை சேர்ந்த போத்திராஜ் (48), மேட்டமலையை சேர்ந்த காசி (65) ஆகியோருடன் எட்டூர் வட்டத்தில் இருந்து மேட்டமலைக்கு செல்லும் சாலையில் சென்றார். இந்த நிலையில் சாலையை கடப்பதற்காக சிவகாசி செல்லும் சாலையில் நின்று கொண்டு இருந்த போது, சிவகாசியில் இருந்து சாத்தூர் நோக்கி வந்த அடையாளம் தெரியாத வாகனம் இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் காசி உள்பட 3 பேரும் படுகாயம் அடைந்தனர். இவர்கள் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். பின்னர் அவர்கள் மேல் சிகிச்சைக்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த காசி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்டத்தில் மேலும் 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் பாதிப்பு எண்ணிக்கை 46,294ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 45,687 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். நேற்று மட்டும் 8 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். 59 பேர் அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சிகிச்சை பெற்று வருவதோடு வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். நேற்று நோய் பாதிப்புக்கு யாரும் பலியாகவில்லை.
பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்றவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள மாரனேரி சப்-இன்ஸ்பெக்டர் சுந்தர்ராஜ் நதிக்குடி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு பெட்டிக்கடையில் பெட்ரோல் விற்பனை செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அந்த கடையின் உரிமையாளர் மகேஷ்குமார் (வயது 44) என்பவரை கைது செய்து 3 லிட்டர் பெட்ரோலை பறிமுதல் செய்தார்.
இந்தியாவின் முக்கிய தலைவர்களுடன் முகமது அலி ஜின்னாவை இணைத்து பேசியதால், சர்ச்சையில் சிக்கியுள்ளார் அகிலேஷ் யாதவ்.
இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர்கள் அவரது புகைப்படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து புகழ்ந்து உரையாற்றினர்.
அதனடிப்படையில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, (முகமது அலி) ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களாகி இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். சித்தாத்தங்களுக்கு தடைவிதித்தார்’’ என்றார்.
இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களுடன் முகமது அலி ஜின்னாவை இணைத்து அகிலேஷ் யாதவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை பெருமைப்படுத்தும் அகிலேஷ் யாதவின் செயல் வெட்கக்கேடானது, சமாஜ்வாதி கட்சித் தலைவரின் கருத்து, தலிபான்களின் மனநிலையை சித்தரிக்கிறது. மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், பல பா.ஜனதா தலைவர்கள் அகிலேஷ் யாதவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி ‘‘முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தவும் இல்லை என்பதை அகிலேஷ் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய மூத்தவர்கள் இரண்டு நாடு என்ற கோட்பாடை நிராகரித்தனர். இந்தியா தங்களுடைய நாடு என முடிவு செய்தனர்.
அகிலேஷ் யாதவ் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை சந்தோசப்படுத்த இவ்வாறு கூறியிருக்கலாம். அகிலேஷ் யாதவ், அவரது ஆலோசகரை மாற்ற வேண்டும். அவராகவே படித்துக் கொள்ள வேண்டும். சில வரலாறுகளை படிக்க வேண்டும்’’ என்றார்.
கொரோனா காரணமாக 19 மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாததால் தோழிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்கள், தோழிகளை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.
6-ம்வகுப்பு மாணவி தர்ஷனா கூறுகையில்:
கொரோனா காரணமாக 19 மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாததால் எனது தோழிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று தோழிகள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தாலும் வகுப்புகளுக்கு சென்று படிப்பதுதான் நன்றாக உள்ளது. ஆசிரியர்களிடம் சந்தேங்களை கேட்க முடியும் என்றார்.
2ம் வகுப்பு மாணவி திவ்யா கூறுகையில், பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளேன். வீட்டிலேயே இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தது. இப்போது பள்ளிக்கு வந்துள்ளது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார்.
அவிநாசியை சேர்ந்த 7-ம்வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில், ஆன்லைன் மூலம் சரியாக பாடங்களை படிக்க முடியவில்லை. இணையதளத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோருக்கு சுமை குறைந்துள்ளது என்றார்.
திருப்பூர் மாணவன் ஹரிஹரன் கூறுகையில், இன்று பள்ளிக்கு சென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விட்டு விடுவார்களோ என்று கவலையில் இருந்தேன். ஆனால் மழை லேசாக பெய்து நின்றுவிட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல முடிந்தது என்றார்.