search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பூலாங்கிணறு அரசு பள்ளியில் நெற்றியில் திலகமிட்டு மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.
    X
    பூலாங்கிணறு அரசு பள்ளியில் நெற்றியில் திலகமிட்டு மாணவர்களை வரவேற்ற ஆசிரியர்கள்.

    ஆன்லைன் கல்வியை விட வகுப்பறை கல்வியே சிறந்தது - மாணவர்கள் பேட்டி

    கொரோனா காரணமாக 19 மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாததால் தோழிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாக மாணவர்கள் தெரிவித்தனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் மாவட்டத்தில் இன்று 1 முதல் 8-ம்வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் மாணவ-மாணவிகள் தங்களது நண்பர்கள், தோழிகளை பார்த்து மிக்க மகிழ்ச்சியடைந்தனர்.  

    6-ம்வகுப்பு மாணவி தர்ஷனா கூறுகையில்:

    கொரோனா காரணமாக 19 மாதங்களாக பள்ளிக்கு செல்ல முடியாததால் எனது தோழிகளை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. இன்று தோழிகள் மற்றும் ஆசிரியர்களை பார்த்து மகிழ்ச்சியடைந்தேன். ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்தாலும் வகுப்புகளுக்கு சென்று படிப்பதுதான் நன்றாக உள்ளது. ஆசிரியர்களிடம் சந்தேங்களை கேட்க முடியும் என்றார்.

    2ம் வகுப்பு மாணவி திவ்யா கூறுகையில், பள்ளி திறக்கப்பட்டுள்ளதால் மிகவும் உற்சாகத்தில் உள்ளேன். வீட்டிலேயே இருந்ததால் மிகவும் சோர்வாக இருந்தது. இப்போது பள்ளிக்கு வந்துள்ளது புத்துணர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்றார். 

    அவிநாசியை சேர்ந்த 7-ம்வகுப்பு மாணவி ஜெயஸ்ரீ கூறுகையில், ஆன்லைன் மூலம் சரியாக பாடங்களை படிக்க முடியவில்லை. இணையதளத்திற்கு அதிக செலவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளதால் பெற்றோருக்கு சுமை குறைந்துள்ளது என்றார்.  

    திருப்பூர் மாணவன் ஹரிஹரன் கூறுகையில், இன்று பள்ளிக்கு சென்றுள்ளது மகிழ்ச்சியாக உள்ளது. காலையில் மழை பெய்தது. இதனால் பள்ளிக்கு விடுமுறை விட்டு விடுவார்களோ என்று கவலையில் இருந்தேன். ஆனால் மழை லேசாக பெய்து நின்றுவிட்டது. இதனால் பள்ளிக்கு செல்ல முடிந்தது என்றார். 
    Next Story
    ×