என் மலர்
செய்திகள்

தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை
சிவகாசி அருகே தூக்குப்போட்டு பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி:
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் மணிகண்டன் நகரை சேர்ந்தவர் வீரபெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள ஒரு பட்டாசு கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு பொன்னுத்தாய் (வயது 49) என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்த நிலையில் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் பொன்னுத்தாய் மோட்டார் சைக்கிளில் சென்ற போது விபத்தில் சிக்கி தலையில் காயம் ஏற்பட்டது. இதை தொடர்ந்து வீட்டின் அருகில் நடந்து வந்த போது எதிர்பாராமல் நிலை தடுமாறி விழுந்ததில் முதுகு எலும்பில் காயம் ஏற்பட்டது. தொடர்ந்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் இருந்தவர் நோய் குணமாகவில்லை என மனவேதனையில் இருந்ததாக தெரிகிறது. இந்தநிலையில் இவர் வீட்டில் யாரும் இல்லாத போது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது கணவன் வீரபெருமாள் சிவகாசி கிழக்கு போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story






