search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அகிலேஷ் யாதவ்
    X
    அகிலேஷ் யாதவ்

    முகமது அலி ஜின்னா பெயரை குறிப்பிட்டு, சர்ச்சையில் சிக்கிக்கொண்ட அகிலேஷ் யாதவ்

    இந்தியாவின் முக்கிய தலைவர்களுடன் முகமது அலி ஜின்னாவை இணைத்து பேசியதால், சர்ச்சையில் சிக்கியுள்ளார் அகிலேஷ் யாதவ்.
    இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்படும் சர்தார் வல்லபாய் பட்டேல் பிறந்த தினம் நேற்று கொண்டாடப்பட்டது. தலைவர்கள் அவரது புகைப்படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது சர்தார் வல்லபாய் பட்டேல் குறித்து புகழ்ந்து உரையாற்றினர்.

    அதனடிப்படையில் உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், சமாஜ்வாடி கட்சி தலைவருமான அகிலேஷ் யாதவ் நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது ‘‘சர்தார் பட்டேல், மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, (முகமது அலி) ஜின்னா ஆகியோர் ஒரே கல்வி நிறுவனத்தில் படித்தார்கள். அவர்கள் பாரிஸ்டர்களாகி இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடினார்கள். இரும்பு மனிதர் வல்லபாய் பட்டேல் ஆர்.எஸ்.எஸ். சித்தாத்தங்களுக்கு தடைவிதித்தார்’’ என்றார்.

    இந்தியாவின் சுதந்திரத்திற்காக போராடிய தலைவர்களுடன் முகமது அலி ஜின்னாவை இணைத்து அகிலேஷ் யாதவ் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    உத்தர பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத், ‘‘பாகிஸ்தான் நிறுவனர் முகமது அலி ஜின்னாவை பெருமைப்படுத்தும் அகிலேஷ் யாதவின் செயல் வெட்கக்கேடானது, சமாஜ்வாதி கட்சித் தலைவரின் கருத்து, தலிபான்களின் மனநிலையை சித்தரிக்கிறது. மன்னிப்பு கேட்க வேண்டும்’’ எனத் தெரிவித்துள்ளார்.

    ஓவைசி

    மேலும், பல பா.ஜனதா தலைவர்கள் அகிலேஷ் யாதவ் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஓவைசி ‘‘முகமது அலி ஜின்னாவோடு இந்திய முஸ்லிம்களுக்கு எந்த சம்பந்தவும்  இல்லை என்பதை அகிலேஷ் யாதவ் புரிந்து கொள்ள வேண்டும். எங்களுடைய மூத்தவர்கள் இரண்டு நாடு என்ற கோட்பாடை நிராகரித்தனர். இந்தியா தங்களுடைய நாடு என முடிவு செய்தனர்.

    அகிலேஷ் யாதவ் ஒரு குறிப்பிட்ட பிரிவு மக்களை சந்தோசப்படுத்த இவ்வாறு கூறியிருக்கலாம். அகிலேஷ் யாதவ், அவரது ஆலோசகரை மாற்ற வேண்டும். அவராகவே படித்துக் கொள்ள வேண்டும். சில வரலாறுகளை படிக்க வேண்டும்’’ என்றார்.
    Next Story
    ×