என் மலர்tooltip icon

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் புகையிலை-குட்கா பொருட்கள் விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை, குட்கா மற்றும் கஞ்சா விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மனோகரன் உத்தரவின்பேரில் போலீசார் கடும்நடவடிக்கை எடுத்து வருகின்றனர். 

    சிவகாசி, ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூர், விருதுநகர், சாத்தூர் உள்ளிட்ட பகுதி களில் புகையிலை பொருட் கள் பதுக்கிவைத்து விற்பனை செய்யப்படுகிறதா? என கடைகளில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அம்மை யார் பட்டியைச் சேர்ந்த கருணாகரபாண்டியன் (45) என்பவர் சட்டவிரோதமாக புகையிலை பாக்கெட்டுகள் விற்பது தெரியவந்தது. 98புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்த போலீசார் கருணாகர பாண்டியனை கைது செய்தனர்.

    இதேபோல் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள நத்தம் பட்டியை சேர்ந்த ஆல்பர்ட் ஜெயபால்(63) என்பவர் புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக நத்தம்பட்டி போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவரி டமிருந்து மூடை மூடையாக புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    வத்திராயிருப்பு அருகே உள்ள குன்னூர் பகுதியில் புகையிலை பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப் பதாக கிருஷ்ணன்கோவில் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.  அதன் அடிப்படை யில் போலீசார் குறிப்பிட்ட இடத்தில் சோதனை நடத்தினர்  அப்போது 1,280 கிலோ புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து பல்வேறு இடங்களுக்கு விற்பனைக்காக சப்ளை செய்யப்பட்டு இருந்தது தெரிய வந்தது  இதையடுத்து போலீசார் அதனை பறிமுதல் செய்தனர். 

    மேலும் புகையிலைப் பொருட்களை பதுக்கிவைத்த குன்னூரை சேர்ந்த பழனிசெல்வம் (51) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
    சிவகாசியில் வீடு இடிந்து தொழிலாளி பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    விருதுநகர்:

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள கொத்தநேரியைச் சேர்ந்தவர் கருப்பையா. இவருக்கு அங்கு தொகுப்பு வீடுகள் உள்ளன. இதில் ஒரு வீட்டில் தாழி குளத்துப்பட்டியை சேர்ந்த பூபதிராஜன் குடும்பத்தினர் வசித்து வந்தனர்.

    சமீபத்தில் விருதுநகர் மாவட்டம் முழுவதும் பலத்த மழை பெய்தது. இந்த மழையில் கருப்பையாவுக்கு சொந்தமான வீடுகள் சேதமடைந்தன. எனவே அந்த வீடுகளில் மராமத்து பணி மேற்கொள்ள திட்டமிட்டார்.

    இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் எதிர்பாராத விதமாக இன்று காலை தொகுப்பு வீடுகள் இடிந்தது.

    இதில் பூபதிராஜன் மகன் அஜித் குமார் (வயது 23) இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிவகாசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அஜித் குமார் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலியல் புகார் கூறிய இளம்பெண் தொடர்ந்து எங்களை தவறாக வழி நடத்தினார் என்று ஜாமீனில் வந்த சிறுவன் கூறினார்.
    விருதுநகர்:

    விருதுநகரை சேர்ந்த 22 வயது இளம்பெண் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த புகாரின் அடிப்படையில் ஹரிகரன், ஜூனைத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் 4 பள்ளி மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    4 சிறுவர்களும் மதுரை கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டனர். மற்ற 4 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். அவர்களை சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இந்த நிலையில் 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீஸ் சூப்பிரண்டு மனோகர் பரிந்துரையின்பேரில் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி உத்தரவிட்டார்.

    இந்தநிலையில் ஜூனைத் அகமது உள்பட 4 பேருக்கும் காவல் முடிவடைந்ததை தொடர்ந்து ஸ்ரீவில்லிபுத்தூர் வன்கொடுமை தடுப்பு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அவர்களை மே 2-ந்தேதி வரை காவலில் வைக்க நீதிபதி (பொறுப்பு) கோபிநாத் உத்தரவிட்டார்.

    இதற்கிடையில் இந்த வழக்கில் தொடர்புடைய சிறுவர்கள் 4 பேருக்கும் விருதுநகரில் உள்ள சிறுவர்களுக்கான கோர்ட்டு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. ஜாமீனில் வெளிவந்த 15 வயது சிறுவன் ஒருவன், முதல்-அமைச்சர், உள்துறை செயலாளர், விருதுநகர் மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு, மதுரை சரக டி.ஐ.ஜி., தென்மண்டல ஐ.ஜி., ஸ்ரீவில்லிபுத்தூர் போக்சோ நீதிமன்ற நீதிபதி, தலைவர் குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலர், ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட சட்ட உதவி மையம் ஆகியோருக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அந்த கடிதத்தில் சிறுவன் கூறியிருப்பதாவது:-

    எங்கள் தெருவில் குடியிருக்கும் ஹரிகரன் மூலம் இளம்பெண் பழக்கம் ஆனார். எங்கள் 4 பேரையும் அந்த பெண் வெவ்வேறு நாட்களில் வீடு மற்றும் மருந்து கிடங்கிக்கு வர சொன்னார். அப்போது அவரது கைபேசியில் இருந்த ஆபாச படங்களை காட்டினார்.

    கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் 5 மாதங்கள் தொடர்ந்து அவர் எங்களை தவறாக வழி நடத்தினார். இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் தெரிவித்தும், இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக எங்கள் மீது வழக்குப்பதிவு செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.

    போலீசாரின் நடவடிக்கையில் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளோம். எனவே தவறாக வழிநடத்திய பெண் மீது வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த பெண் கடந்த ஒரு ஆண்டுக்கும் மேலாக யாரிடம் எல்லாம் பேசி உள்ளார்? என்பதை அறிய அவரது செல்போனை ஆய்வு செய்தால் உண்மை தெரியவரும்.

    இவ்வாறு தனது கடிதத்தில் அந்த சிறுவன் கூறியிருக்கிறார்.
    அருப்புக்கோட்டை அருகே விபத்தில் 2 பேர் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    பாலையம்பட்டி:

    தூத்துக்குடியில் இருந்து உப்பு லோடு ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்னையை நோக்கி சென்று கொண்டிருந்தது. லாரியை சேலம் ஓமலூரை சேர்ந்த சித்தையன் (வயது 64) ஓட்டி வந்தார்.

    அந்த லாரி விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே பாலையம் பட்டியில் உள்ள மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச் சாலையில் நள்ளிரவில் சென்று கொண்டிருந்தது. அப்போது திடீரென லாரியின் டயர் பஞ்சர் ஆனது. இதையடுத்து லாரியை ரோட்டின் ஓரமாக டிரைவர் நிறுத்தி பஞ்சரான டயரை மாற்றிக் கொண்டிருந்தார்.

    அப்போது அதே சாலையில் நெல்லை மாவட்டம் திசையன்விளையில் இருந்து 36 பயணிகளை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கி ஒரு ஆம்னி பஸ் சென்று கொண்டிருந்து. அந்த பஸ் எதிர்பாராதவிதமாக பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறத்தில் பயங்கரமாக மோதியது. அப்போது ஆம்னி பஸ்சுக்கு பின்னால் வந்துகொண்டிருந்த கார், ஆம்னி பஸ்சின் பின்னால் மோதியது.

    இதில் பஞ்சரான பயரை கழற்றி வேறு டயரை மாட்டிக்கொண்டிருந்த லாரியின் டிரைவர் சித்தையன் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் ஆம்னி பஸ் மற்றும் காரின் முன்பகுதி நொறுங்கியது. ஆம்னி பஸ் மற்றும் காரில் பயணம் செய்துவந்த பெண்கள் உட்பட 14 பேர் படுகாயம் அடைந்தனர்.

    இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு சகாயஜோஸ், இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும் போலீசார், தீயணைப்பு துறையினர் சம்பவஇடத்திற்கு வரைந்துவந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் உதவியுடன் சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஆம்னி பஸ்சில் பயணம் செய்த தூத்துக்குடியை சேர்ந்த ரவிதாகூர் 40) என்பவர் இறந்தார். இதனால் பலியானவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது.

    உயிருக்கு ஆபத்தான நிலையில் அருப்புக்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த ஆம்னி பஸ் டிரைவரான தூத்துக்குடியை சேர்ந்த உதயகனி, பஸ் பயணி தங்கமாரியப்பன் ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துவரப்பட்டனர்.

    ஆம்னி பஸ் மற்றும் காரில் வந்த முத்துக்குமார், பத்மாவதி, ராஜா, சுயம்பு லிங்கம் உள்ளிட்ட 12 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தால் மதுரை- தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஸ்ரீவில்லிபுத்தூரில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.
    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் ஜே.சி.ஐ. ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜகோபுரம் இணைந்து கலை இலக்கிய‌ மூத்தவர்களின் படத்திறப்பு விழா மற்றும் எளியோர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. நகர்மன்றதலைவர் தங்கம் ரவிக்கண்ணன் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 

     இந்தநிகழ்வில்  நகர்மன்ற துணைத்தலைவர் செல்வமணி, 32வது வார்டு நகர்மன்ற உறுப்பினர் சுரேஷ், பட்டய தலைவர் ராஜசேகர், தலைவர் ஆனந்தகுமார், செயலாளர் செல்வராஜ், பொருளாளர் சிவகுமார்  உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
    விருதுநகர் அருகே வத்திராயிருப்பு கோவிலில் பூக்குழி திருவிழா நடந்தது.
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் உள்ள பழமை வாய்ந்த மந்தைமாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா 2ஆண்டுகளுக்கு பிறகு நடந்தது.

    கடந்த 4-ந்தேதி பூக்குழி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.  

    முக்கிய நிகழ்வான பூக்குழி திருவிழா நடைபெற்றது. இதில் வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர். பாதுகாப்பு பணியில் இன்ஸ்பெக்டர் பாலாஜி தலைமையிலான போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர்.
    சிவகாசி அருகே வீடு புகுந்து இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 2 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.
    விருதுநகர்

    அசாம் மாநிலத்தை சேர்ந்த வாலிபர் மனைவியுடன் விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை அருகே ஆலங்குளம் எட்டக்காபட்டியில் தங்கியிருந்து பட்டாசு ஆலையில் வேலைபார்த்து வருகிறார்.

    தமிழகத்துக்கு வந்து சிலமாதங்களே ஆவதால் அவருக்கு தமிழ் சரளமாக பேசதெரியாது. அந்த வாலிபர் தனது மனைவியுடன் சம்பவத்தன்று வீட்டின் வாசற்படியில் அமர்ந்து இருந்தார்.

    அப்போது அங்கு எதிர் கோட்டையைச் சேர்ந்த பூவரசன், காசி ஆகிய 2பேர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளில் வந்தனர்.
    அசாம் வாலிபரின் வீட்டு முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்திய அவர்கள் சிகரெட் பற்றவைக்க தீப்பெட்டி தருமாறு கேட்டு பிரச்சினை செய்துள்ளனர். மேலும் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளனர்.

    இதையடுத்து அசாம் வாலிபர் தனது மனைவியை அழைத்துக்கொண்டு வீட்டுக்குள் சென்றுவிட்டார். இதில் ஆத்திரமடைந்த பூவரசன், காசி ஆகியோர் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து அசாம் வாலிபர் மனைவியின் கையை பிடித்து மானபங்கம் செய்ய முயன்றனர். இதனால் அந்தப்பெண் கூக்குரலிட்டார்.
    திருச்சுழி அருகே சப்இன்ஸ்பெக்டர் மீது தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
    விருதுநகர்

    திருச்சுழி அருகே உள்ள செல்லையா புரத்தை சேர்ந்தவர் நல்லையா (வயது39). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தார்.

    தகவலறிந்த திருச்சுழி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருககணேசன், போலீஸ்காரர் பால்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போதையில் பிரச்சினை செய்து கொண்டிருந்த நல்லையாவை சப்&-இன்ஸ் பெக்டர் கண்டித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது அப்போது நல்லையா சப் இன்ஸ்பெக்டர் முருக கணேசனை தாக்கினாராம். 

    அவர் குடிபோதையில் இருந்ததால் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நேற்று திருச்சுழி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்குவந்த நல்லையா மீண்டும்  போலீசாரிடம் பிரச்சினை செய்ததாராம். இதையடுத்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லையாவை கைதுசெய்தனர்.
    சாத்தூர் அருகே சாலையை கடக்க முயன்ற 38 ஆடுகள் அடையாளம் தெரியாத வாகனம் மோதி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் பகுதியை சேர்ந்த வெள்ளை சாமி என்பவரிடம் 500-க்கும் மேற்பட்ட ஆடுகள் உள்ளன. இவரிடம் ராமநாதபுரம் மாவட்டம் கருமல் கிராமத்தை சேர்ந்த கணேசன் (28), விக்னேஷ் (25) என்ற இரு சகோதரர்கள் ஆடு மேய்க்கும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

    சாத்தூர் அருகில் உள்ள உப்பத்தூர் பகுதியில் சுமார் 350-க்கும் மேற்பட்ட ஆடுகளை சகோதரர்கள் இருவரும் கிடைபோட்டு மேய்ச்சல் செய்து வந்தனர். அங்கிருந்து ஏழாயிரம் பண்ணை செல்வதற்காக நேற்று நள்ளிரவில் ஆடுகளை ஓட்டிச்சென்றனர்.

    உப்பத்தூர் விலக்கில் தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றபோது எதிர்பாராதவிதமாக மதுரையில் இருந்து கோவில்பட்டி நோக்கி சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஆடுகள் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே 38 ஆடுகள் பலியானது. 12 ஆடுகள் படுகாயம் அடைந்தன.

    சம்பவ இடத்திற்கு வந்த சாத்தூர் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ் மற்றும் போலீசார் இறந்த ஆடுகளை அப்புறப்படுத்தி வாகன போக்குவரத்தை சரி செய்தனர். இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து அடையாளம் தெரியாத வாகனத்தை போலீசார் தேடி வருகின்றனர்.
    சாத்தூர் வைப்பாற்றில் கள்ளழகர் இறங்கினார். திறளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
    சாத்தூர்

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் சித்ரா பவுர்ணமி நாளன்று கள்ளழகர் வைப்பாற்றில் இறங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. வெங்கடாஜலபதி குதிரை வாகனத்தில் எழுந்தருளி னார். அதிகாலை முதல் சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனை, சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் சாத்தூர் மற்றும் அதன் சுற்றியுள்ள கிராமங் களில் இருந்து ஏராளமான பக்தர்கள்  பங்கேற்று தரிசனம் செய்தனர்.

    பின்னர் வெங்கடாஜலபதி சாத்தூரில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.  பின்னர் சாத்தூர் வைப்பாற்றில் பச்சைப்பட்டு உடுத்தி கோவிந்தா கோபாலா என பக்தர்களின் கோஷம் களுக்கிடையே அழகர் ஆற்றில் இறங்கினார். அங்கு மருத்துவ குல சங்கத்தின் சார்பில் அமைக்கப்பட்ட மண்டகப்படியில் பக்தர் களுக்கு அருள்பாலித்தார். 

    பின்னர் பெரியகொல்லப் பட்டி மற்றும் அய்யம்பட்டி கிராமத்தின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த மண்டகப்படியில் அழகர் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
    ராஜபாளையத்தில் மாரியம்மன் கோவில் பூக்குழி திருவிழா நடந்தது.
    ராஜபாளையம்

    ராஜபாளையம் தென்காசி ரோட்டில்  புதுப்பாளையத்தில் உள்ள மாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று பூக்குழி திருவிழா நடைபெறும். 

    2 ஆண்டுகளாக கொரோனா பாதிப்பு காரணமாக பூக்குழி மற்றும் திருவிழா நிறுத்தப்பட்டிருந்தது. 10 தினங்களுக்கு முன்பு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. 10வது நாளான நேற்று காலை முதல் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டினர். மாலை 4- மணி அளவில் சுவாமி சப்பரத்தில் எழுந்தருளி வீதி உலா கொண்டுவரப்பட்டது. 

    தென்காசி சாலை, அம்பலபுளி பஜார்,  ஜவகர் மைதானம், மாதா கோவில் தெரு வழியாக மாரியம்மன் கோவில் பூக்குழி திடலை வந்தடைந்தது. அங்கு ஒருவர் பின் ஒருவராக தீமிதித்து வேண்டுதலை நிறைவேற்றினர்.  கரகம், தீச்சட்டி மற்றும் பல்வேறு வேடமணிந்து பக்தர்கள் தீ மிதித்து நேர்த்திகடன் நிறைவேற்றினர். 

    பாதுகாப்பு ஏற்பாடுகளை டி.எஸ்.பி. ராமகிருஷ்ணன் தலைமையில் போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் செய்திருந்தனர்.  இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் ரவிராஜா தலைமையில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
    சேதுநாராயணபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்கினார்
    வத்திராயிருப்பு

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சேதுநாராயண பெருமாள் சுவாமிக்கு 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெற்றது.

    பின்னர் சேது நாராயண பெருமாள் உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெற்று சிறப்பு பூஜைகளும் நடந்தன. அதன் பின்னர் உற்சவர் சொத்து நாராயண பெருமாள் சுவாமி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலம் வந்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

    அதன் பின்னர் சேதுநாராயண பெருமாள் சுவாமி கள்ளழகர் வேடமணிந்து ஆற்றில் இறங்கும் வைபவம் ஒவ்வொரு வருடமும் சித்ரா பவுர்ணமி தினத்தன்று  நடைபெறுவது வழக்கம். அதன் அடிப்படையில் நேற்று சேதுநாராயண பெருமாள் கள்ளழகர் வேடமணிந்து குதிரை வாகனத்தில் எழுந்தருளி வத்திராயிருப்பில் உள்ள அர்ச்சுனா நதி ஆற்றில் இறங்கினார். அதனைத் தொடர்ந்து சுவாமிக்கு சிறப்பு பூஜைகள்  நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் கலாராணி மற்றும் கோவில் நிர்வாகிகள், பக்தர்கள் கலந்துகொண்டனர்.
    ×