என் மலர்
உள்ளூர் செய்திகள்

கைது
சப்இன்ஸ்பெக்டர் மீது தாக்குதல்
திருச்சுழி அருகே சப்இன்ஸ்பெக்டர் மீது தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
விருதுநகர்
திருச்சுழி அருகே உள்ள செல்லையா புரத்தை சேர்ந்தவர் நல்லையா (வயது39). சம்பவத்தன்று இவர் அதே பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு போதையில் அந்த வழியாக சென்ற பொது மக்களிடம் தகராறு செய்தார்.
தகவலறிந்த திருச்சுழி போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் முருககணேசன், போலீஸ்காரர் பால்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு போதையில் பிரச்சினை செய்து கொண்டிருந்த நல்லையாவை சப்&-இன்ஸ் பெக்டர் கண்டித்தார். இதில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது அப்போது நல்லையா சப் இன்ஸ்பெக்டர் முருக கணேசனை தாக்கினாராம்.
அவர் குடிபோதையில் இருந்ததால் போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. நேற்று திருச்சுழி போலீசார் அந்த பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டபோது அங்குவந்த நல்லையா மீண்டும் போலீசாரிடம் பிரச்சினை செய்ததாராம். இதையடுத்து திருச்சுழி போலீசார் வழக்குப்பதிவு செய்து நல்லையாவை கைதுசெய்தனர்.
Next Story






