search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வீடு இடிந்தது"

    • கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.
    • தாமிரபரணி ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது.

    நெல்லை:

    கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது.

    நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதனால் ரெயில் நிலையத்தில் தண்ணீர் தேங்கியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. நெல்லை டவுன், பாளையங்கோட்டை, நகர்ப்பகுதிகளிலும் மழை நீர் தேங்கி உள்ளது.

    இந்நிலையில் நெல்லையில் கனமழை காரணமாக வீடு இடிந்து விழுந்ததில் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

    பாளையங்கோட்டையில் கனமழையால் சிவகுமார் என்பவரின் வீடு இடிந்து விழுந்தது. கட்டிட இடிபாடுகளில் இருந்து சிவகுமார் உடல் மீட்கப்பட்டுள்ளது.

    இதுபோல் மேலப்பாளையம் நடராஜபுரம் பகுதியில் பட்டத்தி என்ற 75 வயது மூதாட்டி வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.

    • இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர்.
    • ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலம் கிஷ்ஸ்வார் மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் கடந்த 3 நாட்களாக இடைவிடாமல் மழை கொட்டியது. இந்த மழைக்கு அஜனாபுத்தூர் என்ற கிராமத்தில் வீடு ஒன்று இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளில் சிக்கி வீட்டில் இருந்த பப்பு குமார், சாஜன்குமார், ராஜேஸ்குமார் ஆகிய 3 மாற்றுத்திறனாளி சகோதரர்கள் பரிதாபமாக இறந்தனர். இவர்கள் 3 பேருக்கும் பிறவியிலேயே கண் பார்வை தெரியாது.

    இது பற்றி அறிந்ததும் போலீசார் மற்றும் மீட்பு படையினர் விரைந்து சென்று இடிபாடுகளை அகற்றி 3 சகோதரர்களின் உடல்களை மீட்டனர். அவர்களது குடும்பத்தை சேர்ந்த மற்றவர்கள் பாதுகாப்பாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 14 பேர் வரை பலியாகி விட்டனர்.

    • வாடிப்பட்டியில் விடிய, விடிய பெய்த மழையால் தி.மு.க. கவுன்சிலரின் வீடு இடிந்து விழுந்தது.
    • எதிர்பாராத விதமாக மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி

    மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பகுதியில் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு தொடங்கி இன்று அதிகாலை 5.30 மணி வரை விடிய விடிய பலத்த மழை பெய்தது. இதில் பேரூராட்சி கவுன் சிலர் வீடு இடிந்து விழுந்தது.

    வாடிப்பட்டி பேரூராட்சி குலசேகரன் கோட்டை 2-வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் நல்லம்மாள் (வயது 62). இவர் நேற்று இரவு வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தார். அதிகாலை 5 மணிக்கு பக்கத்து வீட்டில் உள்ள மகனை பார்ப்பதற்காக எழுந்து சென்றார்.

    அப்போது எதிர்பாராத விதமாக விடிய, விடிய பெய்த மழையால் மேற்கூரை மற்றும் முன்புற சுவர் இடிந்து விழுந்தது. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. மேலும் வீட்டுக்குள் நிறுத்தி வைக்கப் பட்டிருந்த 2 மோட்டார் சைக்கிள்கள், வீட்டு உபயோக பொருட்கள் இடுபாடுகளுக்குள் சிக்கின.

    அதேபோல் நீரேத்தான் நவநீத பெருமாள் கோவில் கருவறை வரை 3 அடி உயரத்திற்கு மழைநீர் சூழ்ந்து தெப்பக்குளமாக காட்சியளித்தது. வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முழுவதும் தண்ணீரால் சூழ்ந்து பின்னர் வடிந்தது.

    வாடிப்பட்டி பகுதியில் வயல்வெளிகள், தென்னந் தோப்புகளில் மழைநீர் தேங்கி வடிந்து செல்ல முடியாத அளவிற்கு குளம் போல் தேங்கி நிற்கிறது.

    ×