என் மலர்
விருதுநகர்
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் மத்திய பழங்குடியினர் நல அமைச் சகத்தின் கூடுதல் செயலா ளர்-மத்திய பொறுப்பு அலுவலர் ஜெயா களஆய்வு செய்தார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் நாட்டின் பல்வேறு மாநிலங் களிலுள்ள மாவட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட் டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக பிரதமர் மோடியால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்ட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 112 மாவட்டங்களில் தமிழ கத்தில் விருதுநகர் மாவட்ட மும் ஒன்றாக தேர்வு செய்யப் பட்டது.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் சத்திர புளியங் குளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.14.30 லட்சம் மதிப்பில் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வழங்கும் பணியினை ஆய்வு செய்து, குடிநீர் முறையாக வருகிறதா?, எவ்வளவு நேரம் வருகிறது, பயானாளியின் குடும்பத்தில் எவ்வளவு நபர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறித் தும், பொதுமக்களிடம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை உள்ளதா? என் பது குறித்தும் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் தரப்பரிசோதனை செய்வதை ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரப்பரிசோதனை செய்து அதற்குரிய அறிக்கையினை பதிவேட்டிலும், கணினியிலும் பதிவேற்றும் செய்யும்படி மத்திய பொறுப்பு அலுவலர் ஜெயா அறிவுறுத்தினார்.
அல்லாளப்பேரி ஊராட்சியில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும், செட்டிக்குளம் ஊராட்சி யில் பசுமை விடியல் திட்டத் தின் கீழ் 20 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மேம் படுத்தும் விதமாக மரக்கன்று கள் வளர்க்கும் பணிகள் உள்ளிட்ட நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை யும் பார்வையிட்டார்.
சித்துமூன்றடைப்பு ஊராட்சியில் பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மூலம் அரசு துணை சுகாதார நிலையத்தில் முன்னேற விழையும் மாவட்டத்தின் சுகாதார குறியீட்டின் கீழ் நடந்த தேசிய குடும்ப நல கணக் கெடுப்பு 2019 குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், மல்லாங்கிணறு பேரூராட்சியில் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் அங் கன்வாடியில் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து கண்மணி திட்டத்தின் கீழ் -5 வயதுடைய ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த உணவு தொகுப்பினை வழங்கினார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லி பத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மூல மாக ஸ்மார்ட் வகுப்பறையில் ஸ்மார்ட் திரையின் மூலம் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் முன்னேற விழையும் மாவட்டம் தொடர் பாக அரசு துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னேற விளையும் மாவட்டத்தின் குறியீடு வாரியாக நடை பெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் முன் னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உத்தண்டராமன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நந்த கோபால், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவ லிங்கம், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மனோ கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், செயற் பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர் (அருப்புக்கோட்டை உப கோட்டம்) கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விருதுநகர் அருகே கல்லூரி மாணவி மாயமானர்.
விருதுநகர்
விருதுநகர் அருகே உள்ள சின்னபேராளி பகுதியை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகள் விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் 3-ம் ஆண்டு படித்து வந்தார். தினமும் கல்லூரி சென்று விட்டு வரும் மாணவி, தோட்டத்தில் தனது பெற் றோருக்கு உதவியாக வேலை செய்வார்.
சம்பவத்தன்று கல்லூ ரிக்கு சென்று விட்டு தோட்ட வேலைக்கு தாமதமாக வந்ததால் தாய் திட்டி உள்ளார். இந்த நிலையில் வீட்டுக்கு சென்ற மாணவி வீட்டில் இருந்து வெளியேறி மாயமாகி விட்டார். அவரை கருப்பையா மற்றும் குடும்பத்தினர் பல இடங்களில் தேடினர்.
இந்நிலையில் மாயமான மாணவி தனது பெற்றோரி டம் தொலைபேசி உள்ளார். அப்போது அவர் தான் மதுரையில் இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்று கூறி விட்டு போன் இணைப்பை துண்டித்து விட் டார். இதனால் மாணவி மாயமானது குறித்து பாண்டியன் நகர் போலீஸ் நிலையத்தில் கருப்பையா புகார் செய்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து மாணவியை தேடி வருகின்றனர்.
குழந்தை இல்லாத ஏக்கத்தில் நெசவு தொழிலாளி மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சுந்தரபாண்டியம், நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மனைவி சாந்தி (வயது 39).
பாலமுருகன் தறி சம்பந்த மான பிட்டர் வேலை செய்து வருகிறார். இருவருக்கும் திருமணமாகி 14 வருடங்கள் ஆகிறது. குழந்தை இல்லை.
தென்காசி அருகே உள்ள திருமலை கோவிலுக்கு செல்வதற்காக பாலமுருகன் வீட்டில் இருந்து புறப்பட்டு சென்றபோது மனைவிக்கு போன் செய்தார். போனை மனைவி எடுக்காததால் அக்கம் பக்கத்தில் உள்ளவர் களிடம் மனைவியை வீட் டில் பார்த்துவர கூறினார்.
அக்கம் பக்கத்தினர் அங்கு சென்று பார்த்தபோது சாந்தி தூக்கில் தொங்கியபடி இருந்ததை பாலமுருகனுக்கு தெரிவித்தனர்.
உடனடியாக பாலமுருகன் வீட்டிற்கு வந்து மனைவி சாந்தியை தூக்கிக்கொண்டு வத்திராயிருப்பு அரசு மருத்துவமனைக்கு வந்தார். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சாந்தி இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
திருமணமாகி 14 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லையே என்ற ஏக்கத்தில் சாந்தி தற்கொலை செய்து இருக்கலாம் என்று கருதப்படு கிறது.
இதுகுறித்து கிருஷ்ணன் கோவில் போலீசில் பால முருகன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
வாலிபரை சிறை வைத்து தாக்கிய 2 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை மணி நகரத்தை சேர்ந்தவர் பாஸ்கர். இவர் அதே பகுதி யில் ரூ.4 லட்சத்துக்கு வாங் கிய காலிமனையில் ரூ.40 லட்சத்துக்கு வீடு கட்டி உள் ளார்.
பாஸ்கர் வசிக்கும் அதே தெருவை சேர்ந்தவர்கள் கார்த்திகைசெல்வன் (வயது45), தனசேகரன் என்ற ஞானசேகரன் (47). கார்த்திகை செல்வன் சென்னையிலும், தனசேகரன் மணிநகரத்திலும் வசித்து வருகின்றனர்.
அவர்கள் இருவரும் பாஸ்கரின் மகன் கதிரேசனை கடத்தி லாட்ஜில் சிறை வைத்து அடித்து சித்ரவதை செய்து மிரட்டி அவர்களது புதிய வீட்டை ரூ.14 லட்சத்து 40 ஆயிரத்துக்கு கிரையம் செய்துவிட்டதாக மதுரை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
அதன்பேரில் விசாரணை நடத்த போலீசாருக்கு ஐகோர்ட்டு உத்தரவிட்டது. கோர்ட்டு உத்தரவை தொடர்ந்து பாஸ்கரின் புகார் தொடர்பாக அருப்புக் கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தினர். கார்த்திகை செல்வன், தனசேகரன் ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே போலீஸ்காரரை தாக்கிய வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு,
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவிழா பாதுகாப்பு பணிக்காக வத்திராயிருப்பு முதல்நிலை போலீஸ்காரர் கண்ணன் (வயது 35) அங்கு சென்றிருந்தார்.
நேற்று இரவு அவர் பாதுகாப்பு பணியில் இருந்தபோது அதேபகுதியை சேர்ந்த திருப்பதிராஜா (26), அருண்குமார் (26) ஆகியோர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தனர்.
இதைபார்த்த போலீஸ்காரர் கண்ணன், அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் போதையில் இருந்த 2பேரும் அதனை கண்டுகொள்ளாமல் தகாத வார்த்தைகளால் பேசி போலீஸ்காரர் கண்ணனை தாக்கி உள்ளனர். மேலும் கொலைமிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பதிராஜா, அருண்குமாரை கைது செய்தனர்.
இந்தசம்பவம் அந்தபகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சாத்தூர் அருகே விஷம் குடித்து தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
விருதுநகர்
சாத்தூர் அருகே கீழஒட்டம்பட்டியை சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (45), ஆடு&மாடுகளை மேய்த்து வந்த இவர் அடிக்கடி மதுகுடித்து வந்ததால் குடும்பத்தில் தகராறு ஏற்பட்டது.
இதில் மனவேதனை அடைத்த பன்னீர்செல்வம் விஷம் குடித்து தற்கொலை செய்தார். அவரது மகன் சந்திரன் புகாரின்பேரில் சாத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி அருகே பட்டாசு ஆலை தொழிலாளிக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.
சிவகாசி
சிவகாசி அருகே உள்ள அனுப்பன்குளம் சத்யா நகரை சேர்ந்தவர் சிவக்குமார் (44), பட்டாசு ஆலை தொழிலாளி.
இவரது உறவுமுறை சகோதரரான செல்வகுமார் (39) மனைவியிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்ந்து வந்தார். அவரை சந்தித்த சிவக்குமார் அறிவுரைகள் கூறினார்.
இதனால் ஆத்திரம் அடைந்த செல்வகுமார் அரிவாளால் வெட்டியதில் சிவக்குமார் காயம் அடைந்தார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி செல்வகுமாரை கைது செய்தனர்.
வத்திராயிருப்பு அருகே கோவில் திருவிழாவில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்து தாக்கிய 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
வத்திராயிருப்பு:
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மகாராஜபுரம் எரக்கம்மாள் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. இதையொட்டி திருவிழா பாதுகாப்பு பணிக்காக வத்திராயிருப்பு முதல்நிலை போலீஸ்காரர் கண்ணன் (வயது 35) அங்கு சென்றிருந்தார்.
நேற்று இரவு அவர் பாதுகாப்பு பணியில் இருந்த போது அதே பகுதியை சேர்ந்த திருப்பதிராஜா (26), அருண்குமார் (26) ஆகியோர் குடிபோதையில் மோட்டார் சைக்கிளை தாறுமாறாக ஓட்டி வந்தனர்.
இதை பார்த்த போலீஸ்காரர் கண்ணன், அவர்களை தடுத்து நிறுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்யாமல் செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார்.
ஆனால் போதையில் இருந்த 2 பேரும் அதனை கண்டுகொள்ளாமல் தகாத வார்த்தைகளால் பேசி போலீஸ்காரர் கண்ணனை தாக்கி உள்ளனர். மேலும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.
இதுகுறித்து கண்ணன் வத்திராயிருப்பு போலீசில் புகார் செய்தார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் திருப்பதிராஜா, அருண் குமாரை கைது செய்தனர்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது.
விருதுநகர்:
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி நல்லதம்பி. இவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் ஆகியோர் மீது ரூ.3 கோடி மோசடி புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எனது சகோதரருமான ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வள்ளி செயல்பட்டு வந்தார். அப்போது கொடைக்கானலில் கடை நடத்தி வந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஜய், அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், எழுத்தர் வேலை வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்தார்.
இதனை நம்பி ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளியிடம், கார் டிரைவர் கணேசன் மற்றும் எனது (நல்லதம்பி) முன்னிலையில் மதுரை, ராமுதேவன்பட்டி வீடுகளில் வைத்து ரூ.40 லட்சத்தை விஜய் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
தற்போது விஜய் என்னிடம் பணத்தை கேட்டு வருகிறார். எனவே பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி நல்லதம்பியை போலீசார் அழைத்தனர். அதன்படி அவர் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் துணை சூப்பிரண்டு நாகராஜன் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, எங்களுக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார்.
விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க. முன்னாள் நிர்வாகி நல்லதம்பி. இவர் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் ஆகியோர் மீது ரூ.3 கோடி மோசடி புகார் கொடுத்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் நல்லதம்பி விருதுநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மேலும் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், எனது சகோதரருமான ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளி ஆகியோர் வேலை வாங்கி தருவதாக ரூ.40 லட்சம் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் கொடைக்கானல் அன்னை தெரசா பல்கலைக்கழக துணைவேந்தராக கடந்த 2014-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை வள்ளி செயல்பட்டு வந்தார். அப்போது கொடைக்கானலில் கடை நடத்தி வந்த ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த விஜய், அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு பல்கலைக்கழகத்தில் பேராசிரியர், எழுத்தர் வேலை வாங்கி தருவதாக அவர் உறுதி அளித்தார்.
இதனை நம்பி ரவிச்சந்திரன், அவரது மனைவி வள்ளியிடம், கார் டிரைவர் கணேசன் மற்றும் எனது (நல்லதம்பி) முன்னிலையில் மதுரை, ராமுதேவன்பட்டி வீடுகளில் வைத்து ரூ.40 லட்சத்தை விஜய் கொடுத்தார். பணத்தை பெற்றுக்கொண்ட அவர்கள் வேலை வாங்கி தரவில்லை. பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை.
தற்போது விஜய் என்னிடம் பணத்தை கேட்டு வருகிறார். எனவே பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த ரவிச்சந்திரன் மற்றும் அவரது மனைவி வள்ளி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகாரில் குறிப்பிட்டு இருந்தார்.
இதுகுறித்து விசாரணைக்கு ஆஜராகும்படி நல்லதம்பியை போலீசார் அழைத்தனர். அதன்படி அவர் போலீஸ் நிலையம் வந்தார். அவரிடம் துணை சூப்பிரண்டு நாகராஜன் முன்னிலையில் போலீசார் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக விருதுநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் ரவிச்சந்திரனிடம் கேட்ட போது, எங்களுக்கு சம்மன் எதுவும் வரவில்லை என்றார்.
விருதுநகரில் காலி மனையின் ஒரு பகுதியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
விருதுநகர்:
விருதுநகர் புல்லலக்கோட்டையை சேர்ந்தவர் வைரவன். இவருக்கு சொந்தமான காலி இடத்தின் அருகே வீடு கட்டப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன. இந்த நிலையில் காலி மனையின் ஒரு பகுதியில் திடீரென 10 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை கேள்விப்பட்ட பலரும் அங்கு வந்து பள்ளத்தை பார்த்து வியந்தனர். 1½ அடி அகலத்தில் 10 அடி ஆழத்தில் ஏற்பட்ட பள்ளம் எப்படி நடந்தது? என்பது மர்மமாக உள்ளது.
இதுகுறித்து புல்லலக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ரத்தினகுமார் வருவாய்த்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அதன் பேரில் தாசில்தார் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடம் விரைந்து வந்து பார்வையிட்டனர்.
இந்த பள்ளம் எப்படி ஏற்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கிணற்றில் தவறி விழுந்து மாணவன் பரிதாபமாக இறந்தான்.
ஸ்ரீவில்லிபுத்தூர்
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள மம்சாபுரம் வேல்முருகன் தெருவை சேர்ந்தவர் சங்கர். இவரது மகன் சுகுமார் (10). இவர் அங்குள்ள பள்ளியில் 4ம் வகுப்பு படித்தார்.
நேற்று காலை இவர் இயற்கை உபாதையை கழிக்க வாலாங்குளம் கண்மாய் பகுதிக்கு சென்றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்தநிலையில் இந்த சிறுவன் வாலாங்குளம் கண்மாய் அருகே உள்ள கிணற்று அருகே சென்றதாக கூறியதையடுத்து சந்தேகத்தின் பேரில் ஸ்ரீவில்லிப்புத்தூர் தீயணைப்புத்துறை அலுவலர்களான சுந்தர குருசாமி, அந்தோணி ஆகியோருக்கு தகவல் கொடுத்தனர்.
இந்த தகவலின் பேரில் உடனடியாக அந்தப்பகுதிக்கு சென்று தீயணைப்பு துறையி னர் இரவில் தேடினர். கண்மாய் அருகில் உள்ள கிணற்றில் பிணமாக கிடந்த மாணவன் சுகுமாரின் உடலை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இதுகுறித்து மம்சாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் மாவட்டத்தில் 4 இளம்பெண்கள் மாயமானார்கள்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டத்தில் நாள்தோறும் பள்ளி, கல்லூரி மாணவிகள் தொடர்ந்து மாயமாகி வருகின்றனர். இது தொடர்பாக போலீஸ் நிலையங்களில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
மாணவிகள் மாயம் தொடர்பாக போலீசாரும் பெற்றோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட 4 இளம் பெண்கள் மாயமாகியுள்ளனர். அதன்விபரம் வருமாறு:
அருப்புக்கோட்டை ஜோதிபுரம் குறுக்கு தெருவை சேர்ந்தவர் குமார் (50). இவரது வீட்டில் 17 வயதுடைய உறவுக்கார சிறுமி தங்கி பள்ளிக்கு சென்று வந்தார். இந்நிலையில் சம்பவத்தன்று அந்தசிறுமி வெளியூரில் உள்ள தனது தந்தையை பார்க்கச் செல்வதாக கூறி விட்டு சென்றார். ஆனால் அவர் அங்கு செல்லாமல் மாயமானார். இதுகுறித்த புகாரின்பேரில் அருப்புக்கோட்டை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர் அருகே உள்ள சொக்கம்பட்டி யைச் சேர்ந்தவர் முனியசாமி. இவரது 17வயது மகள் அதே பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வருகிறார். சம்பவத் தன்று பள்ளிக்குச சென்ற அவர் பின்னர் வீடு திரும்ப வில்லை. பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் ஆமத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வத்திராயிருப்பு அருகே உள்ள சேசுபுரம் ஆர்சி தெருவை சேர்ந்தவர் குருவம்மாள். இவரது 20வயதுடைய மகள் ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். சம்பவத்தன்று வீட்டில் இருந்த இவர் திடீரென மாயமானார். பல இடங்களில் தேடியும் பலனில்லை இதுகுறித்த புகாரின்பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிவகாசி தெருவை சேர்ந்தவர் ஹக்கீம் சாகிப் (33). இவரது 19 வயது மகள் திடீரென மாயமானார். பின்னர் அவர் தனது தந்தையிடம் செல்போனில் பேசி யுள்ளார். அப்போது பேஸ்புக் மூலம் பழக்கமான நாகர் கோவிலைச் சேர்ந்த சஜின் என்பவருடன் செல்வ தாக கூறியுள்ளார். இதுகுறித்த புகாரின்பேரில் சிவகாசி டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்






