என் மலர்
உள்ளூர் செய்திகள்

விருதுநகர் மாவட்டம் மல்லாங்கிணறு பேரூராட்சியில் ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு நுண்ணூட்ட சத்துகள் நி
மத்திய அரசு அதிகாரி ஆய்வு
வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மத்திய அரசு அதிகாரி ஆய்வு செய்தார்.
விருதுநகர்
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி மற்றும் அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பல் வேறு பகுதிகளில் முன்னேற விழையும் மாவட்டம் தொடர்பாக நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி பணிகள் குறித்து மாவட்ட கலெக்டர் மேகநாத ரெட்டி முன்னிலையில் மத்திய பழங்குடியினர் நல அமைச் சகத்தின் கூடுதல் செயலா ளர்-மத்திய பொறுப்பு அலுவலர் ஜெயா களஆய்வு செய்தார்.
மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பினால் நாட்டின் பல்வேறு மாநிலங் களிலுள்ள மாவட்டங்கள் ஆய்வு செய்யப்பட்டு, அதிலிருந்து 112 பின்தங்கிய பகுதிகள் கொண்ட மாவட் டங்கள் தேர்வு செய்யப்பட்டு, இந்த மாவட்டங்களை முன்னேற்றும் விதமாக பிரதமர் மோடியால் ஜனவரி-2018-ம் ஆண்டு முன்னேற விழையும் மாவட்ட திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது. 112 மாவட்டங்களில் தமிழ கத்தில் விருதுநகர் மாவட்ட மும் ஒன்றாக தேர்வு செய்யப் பட்டது.
காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம் சத்திர புளியங் குளம் ஊராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் ரூ.14.30 லட்சம் மதிப்பில் குடியிருப்புகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டு, குடிநீர் வழங்கும் பணியினை ஆய்வு செய்து, குடிநீர் முறையாக வருகிறதா?, எவ்வளவு நேரம் வருகிறது, பயானாளியின் குடும்பத்தில் எவ்வளவு நபர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறித் தும், பொதுமக்களிடம் ஊராட்சியில் குடிநீர் பிரச்சினை உள்ளதா? என் பது குறித்தும் கேட்டறிந்தார்.
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் குடிநீர் தரப்பரிசோதனை செய்வதை ஆய்வு செய்து 15 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் தரப்பரிசோதனை செய்து அதற்குரிய அறிக்கையினை பதிவேட்டிலும், கணினியிலும் பதிவேற்றும் செய்யும்படி மத்திய பொறுப்பு அலுவலர் ஜெயா அறிவுறுத்தினார்.
அல்லாளப்பேரி ஊராட்சியில் பிரதமரின் குடியிருப்பு திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்ட வீட்டையும், செட்டிக்குளம் ஊராட்சி யில் பசுமை விடியல் திட்டத் தின் கீழ் 20 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை மேம் படுத்தும் விதமாக மரக்கன்று கள் வளர்க்கும் பணிகள் உள்ளிட்ட நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை யும் பார்வையிட்டார்.
சித்துமூன்றடைப்பு ஊராட்சியில் பொது சுகா தாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை மூலம் அரசு துணை சுகாதார நிலையத்தில் முன்னேற விழையும் மாவட்டத்தின் சுகாதார குறியீட்டின் கீழ் நடந்த தேசிய குடும்ப நல கணக் கெடுப்பு 2019 குறித்தும் ஆய்வு செய்தார்.
பின்னர், மல்லாங்கிணறு பேரூராட்சியில் ஒருங் கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் மூலம் அங் கன்வாடியில் குழந்தை களுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து கண்மணி திட்டத்தின் கீழ் -5 வயதுடைய ஊட்டசத்து குறைபாடுடைய குழந்தைகளுக்கு நுண்ணூட்ட சத்துகள் நிறைந்த உணவு தொகுப்பினை வழங்கினார்.
அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், வில்லி பத்திரி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை மூல மாக ஸ்மார்ட் வகுப்பறையில் ஸ்மார்ட் திரையின் மூலம் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு அறிவியல் ஆசிரியர்கள் மூலம் பாடம் நடத்தப்பட்டதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதனை தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவ லகத்தில் முன்னேற விழையும் மாவட்டம் தொடர் பாக அரசு துறை அலுவலர் களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில் முன்னேற விளையும் மாவட்டத்தின் குறியீடு வாரியாக நடை பெற்ற பணிகள், நடைபெற்று வரும் பணிகளின் முன் னேற்றம் குறித்தும் ஆய்வு செய்தார்.
இதில் திட்ட இயக்குநர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) திலகவதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் உத்தண்டராமன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் நந்த கோபால், துணை இயக்குநர் (சுகாதார பணிகள்) கலுசிவ லிங்கம், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) மனோ கரன், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கவுரி, ஒருங்கிணைந்த குழந் தைகள் வளர்ச்சி பணிகள் திட்ட அலுவலர் ராஜம், முன்னோடி வங்கி மேலாளர் பாண்டிசெல்வன், செயற் பொறியாளர் சக்திமுருகன், உதவி செயற்பொறியாளர் (அருப்புக்கோட்டை உப கோட்டம்) கருப்பையா மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
Next Story






