என் மலர்tooltip icon

    விருதுநகர்

    • புதுப்பெண் தற்கொலை செய்து கொண்டார்.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு மேலப்பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிச்சைமணி. இவரது மகள் கலைவாணி(வயது26). இவருக்கும், விருதுநகர் சூலக்கரை மேடு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவருக்கும் 1 ½ மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சம்பவத்தன்று கலைவாணி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக பிச்சைமணிக்கு போனில் கார்த்திக் தகவல் கொடுத்தார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கலைவாணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தனது மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக கூறி கலைவாணியின் தாய் பிச்சைமணி சூலக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • உரிமம் புதுப்பிக்காத கல்குவாரிக்கு கலெக்டர் சீல் வைத்தார்.
    • கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    விருதுநகர்

    விருதுநகர் கலெக்டர் ஜெயசீலன் செங்குன்றாபுரம் பகுதியில் ஆய்வுக்காக சென்றார். அவர் அங்கிருந்த கல்குவாரி ஒன்றில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அந்த குவாரிக்கான உரிமம் 2022-ம் ஆண்டே முடிந்து விட்டதும், உரிமத்தை புதுப்பிக்காமல் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து கல்குவாரிக்கு உடனடியாக சீல் வைக்கவும், அங்கிருந்த எந்திரங்கள் மற்றும் வாகனங்களை பறிமுதல் செய்யவும் கலெக்டர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் தாசில்தார் பாஸ்கரன் மற்றும் அதிகாரிகள் அந்த கல்குவாரிக்கு சீல் வைத்தனர். இதைத்தொடர்ந்து மாவட்டம் முழுவதும் அனுமதியின்றி செயல்படும் கல்குவாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் ஜெயசீலன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • காளீஸ்வரி கல்லூரியில் தேசிய கருத்தரங்கு நடந்தது.
    • தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரி தமிழியல் துறை சங்கப்பலகை இலக்கிய மன்றம் நியூ செஞ்சுரி புத்தக நிறுவனமும் இணைந்து நீதி இலக்கியச் சிந்தனைகள் என்ற தலைப்பில் தேசியக் கருத்தரங்கை நடத்தியது. முதல்வர் பாலமுருகன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் முத்துலட்சுமி வாழ்த்துரை வழங்கினார். கேரளா பல்கலைக்கழகக் கல்லூரி இணைப் பேராசிரியர் சீனிவாசன் "காலம் தோறும் அறமுணர்த்தல் பதினென்கீழ்க்கணக்கு அறநூல்களை முன்வைத்து'' என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

    2-ம் அமர்வில் தேவகோட்டை சேவுகன் அண்ணாமலை கல்லூரி தமிழ் உயராய்வு மையத்தின் உதவிப்பேராசிரியர் கரு.முருகனும், 3-ம் அமர்வில் சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரியின் முதுகலைத் தமிழ் மற்றும் தமிழாய்வு மையத் தலைவர் சிவனேசனும் பேசினர். தமிழியல் துறைத் தலைவர் அமுதா வரவேற்றார். இதில் பிற கல்லூரி மாணவர்கள் 25 பேரும், தமிழியல் துறை மாணவர்கள் 140 பேருமாக மொத்தம் 165 மாணவர்கள் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் முத்துசிதம்பர பாரதி நன்றி கூறினார். இதற்கான ஏற்பாடுகளை முத்துச்சிதம்பர பாரதி மற்றும் சங்கர் உள்பட தமிழியல் துறை பேராசிரியர்கள் ஒருங்கிணைந்து செய்திருந்தனர்.

    • என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்த நாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.
    • ”வாழப் பழகலாம் வாங்க” என்னும் தலைப்பில் சொற்பொழிவாற்றினாா்.

    ராஜபாளையம்

    ராஜபாளையம் ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி, ந.அ.மஞ்சம்மாள் நினைவு தொடக்கப்பள்ளி மற்றும் ந.அ.மஞ்சம்மாள் தொழில் நுட்பக்கல்லூாி ஆகிய கல்வி நிறுவனங்களை நிறுவிய கல்வி வள்ளல், தொழில திபா் அமரா் என்.ஏ.ராமச் சந்திரராஜாவின் 99-ஆவது பிறந்தநாள் விழா 2 நாட்கள் கொண்டாடப்பட்டது.

    முதல்நாள் நிகழ்வாக, என்.ஆா்.கிருஷ்ணம ராஜா மண்டபத்தில் செந்த மிழ்ச்சுடா் சிவக்குமாா் "வாழப் பழகலாம் வாங்க" என்னும் தலைப்பில் சொ ற்பொழிவாற்றினாா்.

    2-ம் நாள் விழா மதுரை ரோட்டில் ந.அ.அன்னப்ப ராஜா நினைவு மேல்நிலைப் பள்ளிக்கு வடபுறம் அமைந்துள்ள "சாந்தி ஸ்தல்" நினைவுப் பூங்காவில் நடை பெற்றன. காலை நிகழ்ச்சி யில், மானேஜிங் டிரஸ்ட்டி என்.ஆா்.கிருஷ்ணமூா்த்தி ராஜா நிறுவனரது நினை வாலயத்தில் மாலைகள் அணிவித்து மலா்களால் வழிபாடு செய்தாா். மேலும், நினைவுப்பூங்காவைப் பராமரித்துவரும் ஊழியா்களுக்கு வேட்டி சேலைகள் மற்றும் ஊக்கத் தொகை வழங்கினாா். தொடா்ந்து ஸ்ரீவில்லி புத்தூா் ஸ்திரிரத்னா கலைவளர்மணி உமா சந்திரசேகா் மற்றும் குழுவினரின் கீா்த்தனாஞ்ஜலி நடைபெற்றது. மாலையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, என்.ஏ.ராமச்சந்திரராஜா குருகுலத் தாளாளா் மஞ்சுளா கிருஷ்ணமூா்த்தி ராஜா முன்னிலை வகித்தாா்.

    விழாவில், கடையநல்லூா் முனைவா் சங்கர நாரா யணன் வீணை இசையால் நிறுவனருக்கு வீணாஞ்ஜலி செலுத்தினாா். ந.அ.அன்னப்பராஜா நினைவு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிாியா் நல்லா சிாியர் ரமேஷ் வரவேற்றுப் பேசினாா். முடிவில் பட்டதாாி உதவித் தலைமை ஆசிாியா் இளையபெருமாள் நன்றி கூறினாா். தமிழாசி ரியர் பிரான்சிஸ் அருள்ராஜ் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார்.

    • அருப்புக்கோட்டை முத்துமாரி அம்மன் கோவில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    • கடந்த 26-ந் தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    அருப்புக்கோட்டை

    விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நாடார்கள் உறவின்முறை பொது அபிவிருத்தி டிரஸ்ட்க்கு பாத்தியப்பட்ட முத்துமாரியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது

    விழாவை முன்னிட்டு ஒவ்வொரு நாளும் கட்டளை தாரர்களால் அம்மன் அலங்கரிக்கப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இந்த திருவிழாவானது 15 நாட்கள் நடைபெறும். வருகிற 4-ந்தேதி அம்ம னுக்கு பொங்கல் வைத்து வழிபடும் நிகழ்ச்சியும், 5-ந் தேதி அக்கினி சட்டி பூக்குழி இறங்கும் நிகழ்ச்சியும் வெகு விமர்சையாக நடைபெறும்

    7-ந்தேதி தேரோட்டம் நடைபெறும் நிகழ்ச்சியில் புரவலர் ராமர் உற்சவ கமிட்டி தலைவர் மனோக ரன், உற்சவ கமிட்டி கன்வீனர் ராஜரத்தினம், உறவின் முறை காரியதரிசி முத்துசாமி, உறவின்முறை தலைவர் காமராஜன், பொருட்காட்சி கமிட்டி தலைவர் ஆலோசகரமான ரவீந்திரன் பொருட்காட்சி கமிட்டி செயலாளர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி செயலாளர் கவுன்சிலர் மணி முருகன் எஸ்.பி.கே கல்வி குழுமம் தலைவர் ஜெயக்குமார், உறவின்முறை உபதலைவர் முத்துக்குமார், பொருளாளர் செந்தூரன், உதவிச் செயலாளர் சிவக் குமார் எஸ்.பி.கே. பெண்கள் மேல்நிலைப் பள்ளி செயலாளர் சார்லஸ் தியாகராஜன், மெட்ரிக் பள்ளி செயலாளர் சவுந்தர பாண்டியன், எஸ்.பி.கே. ஜூனியர் நர்சரி பிரைமரி பள்ளி செயலாளர் ராஜ செல்வம், எஸ்.பி.கே. கல்லூரி செயலாளர் குணசேகரன், எஸ்.பி.கே. இன்டர்நேஷனல் பள்ளி செயலாளர் கனகவேல் ராஜன் தியாகராஜன், பவுர்ண டைப்ரைட்டிங் பள்ளிச் செயலாளர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    மேலும் 40-வது பொருட்காட்சி கடந்த 26-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் 16-ந் தேதி வரை நடைபெறுகிறது.

    • வெவ்ேறு சம்பவங்களில் விவசாயி, வாலிபர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • சிவகாசி டவுன் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள மேலப்பாளையத்தை சேர்ந்தவர் வடக்கத்தியான் (வயது 60). இவரது மனைவி சரஸ்வதி. குடும்பப் பிரச்சினை காரணமாக கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் சம்பவத்தன்று ஒரு தோப்பில் பூச்சி மருந்தை குடித்து வடக்கத்தியான் மயங்கி கிடந்தார். உறவினர்கள் அவரை மீட்டு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்த போது அவர் ஏற்கனவே இறந்தது தெரிய வந்தது.

    இது குறித்து சரஸ்வதி கொடுத்த புகாரின் பேரில் வத்திராயிருப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தி வருகின்றனர்.

    சிவகாசி முருகன் காலனியை சேர்ந்தவர் தங்கப்பாண்டி (32). இவரது மனைவி குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து சென்று விட்டார். இதனால் விரக்தி அடைந்த தங்கப்பாண்டி வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதுகுறித்து தங்கப்பாண்டியன் தந்தை பால்பாண்டி சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விருதுநகர் மாவட்ட ஆவின் தனி அதிகாரியாக கலெக்டர் பொறுப்பேற்றார்.
    • கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார்.

    விருதுநகர்

    விருதுநகர் மாவட்ட ஆவின் தலைமை அலுவலகம் ஸ்ரீவில்லி புத்தூரில் செயல்பட்டு வருகிறது. கடந்த 2018-ம் ஆண்டில் ஆவின் தலைவர், துணைத்தலைவர் மற்றும் 17 உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர் 2021-22-ல் 2 மேலாளர்கள், 5 துணை மேலாளர்கள், 8 டிரைவர்கள் உள்பட 25 பணியிடங்கள் நிரப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த பணியிடங்கள் முறைகேடாக நிரப்பப்பட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இதுகுறித்து விசாரணை நடத்த பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன்பேரில் மாவட்ட பால்வளத்துறை சார்பு ஆய்வாளர் விசாரணை மேற்கொண்டு 2022ம் ஆண்டு டிசம்பரில் அறிக்கை தாக்கல் செய்தார்.

    அதன் அடிப்படையில் கடந்த ஜனவரி 4-ந்தேதி சம்பந்தப்பட்ட பணி நியமனங்களை ரத்து செய்து பால்வளத்துறை ஆணையர் உத்தரவிட்டார். அதன் பின்னர் மார்ச் 16-ந்தேதி ஆவின் நிர்வாக குழு கலைக்கப்படுவதாக பால்வளத்துறை ஆணையர் அறிவித்தார். இந்த நிலையில் ஆவின் தனி அதிகாரியாக மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் பொறுப்பேற்றுக்கொண்டார்.

    • விருதுநகரில் 750 கிலோ ரேசன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது.
    • இது சம்பந்தமாக டிரைவர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    விருதுநகர்

    சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் பகுதியில் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இன்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த வாகனத்தை மறித்து சோதனையிட்டபோது, 750 கிலோ ரேசன் அரிசி கடத்துவது தெரியவந்தது. அதனை பறிமுதல் செய்த போலீசார் ரேசன் அரிசியை கடத்திய கோவில்பட்டியை சேர்ந்த கொம்பையா, மந்திரமூர்த்தி, டிரைவர் செல்லத்துரை ஆகிய 3 பேரை கைது செய்தனர்.

    • சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு முகாம் நடந்தது.
    • இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.

    சிவகாசி

    சிவகாசி காளீஸ்வரி கல்லூரியின் வளாக குறைதீர் அமைப்பு மாணவர் ஆலோசனை அமைப்பு பெண்கள் முன்னேற்ற அமைப்பு சார்பில் பாலியல் வன்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சியில் தமிழியல்துறை உதவிப்பேராசிரியர் அருபாதேவி அனைவரையும் வரவேற்றார். கல்லூரி முதல்வர் பாலமுருகன் தலைமை வகித்தார். விருதுநகர் மாவட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசுகையில், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை எதிர்கொள்வதற்கான ஆலோசனைகளை வழங்கினார். விருதுநகர் குற்றப்பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் பேசுகையில், போதைப்பொருள் பயன்பாட்டை தவிர்ப்பது மற்றும் நேர் வழியில் செயல்படுவது குறித்தும் எடுத்துக்கூறினார்.

    நிகழ்ச்சியில் விருதுநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா, சப்-இன்ஸ்பெக்டர்கள் நவமணி, ராஜேஸ்வரி, குடும்ப ஆலோசர் ஜோஸ்மின், குழந்தைகள் நல ஆர்வலர் முனியம்மாள், சமூக ஆர்வலர் ஜானகி, மருத்துவ ஆலோசகர் திருசங்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழியல் துறை உதவிப்பேராசிரியர் மாரி மகேஸ்வரி நன்றி கூறினார். இதில் முதலாமாண்டு பயிலும் மாணவர்கள் 673 பேர் கலந்து கொண்டனர்.

    • சர்வதேச யோகா போட்டிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் மாணவி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
    • கம்போடியா, தாய்லாந்து நாடுகளில் இந்த போட்டி நடைபெறும்.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் கம்மாபட்டி பகுதியை சேர்ந்த குடியரசு-கீதா தம்பதியின் மகள் ஜெயவர்தினி (வயது12). 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

    குடியரசு கடந்த 10 ஆண்டுகளாக தினசரி யோகா பயிற்சிக்கு சென்று வருகிறார். இவர் கொரோனா ஊரடங்கு காலத்தில் மனைவி மற்றும் மகளையும் தன்னுடன் யோகா பயிற்சிக்கு அழைத்து சென்றார்.

    இவரது மகள் ஜெயவர்தனி கடந்த 8 மாதங்களில் பள்ளி, மாவட்ட, மாநில அளவிலான சுமார் 30-க்கும் மேற்பட்ட போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். இதில் மாவட்ட அளவில் 3 போட்டிகள், மாநில அளவில் 3 போட்டிகள், தென் இந்திய அளவில் 3 போட்டிகளில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.

    தென்காசி மாவட்டம் சிவசைலம் பகுதியில் குட்லைப் ஆசிரமம் மற்றும் யோகா கலாசார மையம் சார்பில் ஜனவரி மாதம் நடைபெற்ற தேசிய யோகா சாம்பியன்ஷிப்-2023 போட்டியில் மாணவி ஜெயவர்தனி 12-13 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் முதலிடம் பெற்று சாம்பியன் பட்டம் வென்றார். இதன்மூலம் தாய்லாந்து நாட்டில் வருகிற டிசம்பர் மாதம் நடைபெறும் சர்வதேச யோகா போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

    பழனியில் கடந்த 11-ந் தேதி நடந்த தேசிய யோகா போட்டியில் ஜெயவர்தனி கலந்து கொண்டு 12 வயது மற்றும் ஒட்டுமொத்த பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றார்.

    இதையடுத்து கம்போடியா நாட்டில் மே 27-ந்தேதி நடைபெறும் சர்வதேச அளவிலான யோகா போட்டியில் இந்திய அணி சார்பில் பங்கேற்க ஜெயவர்தனி தேர்வாகி உள்ளார். 

    • எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார்.
    • முத்தமிழ்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார்.

    மனிதனாக பிறந்த ஒவ்வொருவரும் ஒரு இலக்கை நிர்ணயித்து அதனை அடைய தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இதில் இலக்கை அடைபவர்கள் வெற்றியாளர்களாகவும், தவறவிட்டவர்கள் அனுபவ சாலியாகவும் மாறுகின்றனர்.

    ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு துறையிலும் சாதனை படைக்க ஆர்வம் ஏற்படும். அதன்படி விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் எவரெஸ்ட் சிகரத்தை ஏறி சாதனை படைக்க சிறுவயதில் இருந்து பல்வேறு பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அவரின் கனவு விரைவில் நனவாக உள்ளது.

    விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி அருகே உள்ள ஜோகில்பட்டியைச் சேர்ந்தவர் தவசியம்மாள். இவரது மகள் முத்தமிழ் செல்வி. சிறுவயது முதலே மலை ஏறுவதில் ஆர்வம் கொண்ட இவர் அதற்கான முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தார். உலகிலேயே மிக உயரமான சிகரமான எவரெஸ்ட் உச்சியை அடைய வேண்டும் என்பதே இவரது கனவாக இருந்து வருகிறது. இதற்காக அதிக உயரம் கொண்ட மலைகளில் ஏறி முத்தமிழ்செல்வி பயிற்சி மேற்கொண்டார்.

    அதன்படி கடந்த 8-ந்தேதி மகளிர் தினத்தன்று திருப்பெரும்புதூர் அருகே உள்ள 155 அடி உயர மலை உச்சியில் இருந்து கண்களை கட்டிக்கொண்டு 58 வினாடியில் இறங்கி முத்தமிழ் செல்வி சாதனை படைத்தார்.

    இதேபோல் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கு முன்னோட்டமாக கருதப்படும் காஷ்மீரில் லடாக் பகுதியில் உள்ள சுமார் 5500 அடி உயரம் கொண்ட பனிமலை உச்சியையும் தனி பெண்ணாக சென்று முத்தமிழ்செல்வி ஏறி சாதனை படைத்தார். இதையடுத்து அவர் எவரெஸ்ட் சிகரம் ஏறுவதற்கான தகுதியை பெற்றார்.

    எவரெஸ்ட் சிகரத்தை முதல் தமிழ் பெண்ணாக அடைவதற்காக தமிழக அரசு தனக்கு உதவ வேண்டுமென முத்தமிழ் செல்வி கோரிக்கை விடுத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருதுநகர் மாவட்ட கலெக்டராக பணிபுரிந்தவரும், தற்போது விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினராகவும் உள்ள மேகநாத ரெட்டி அரசு சார்பில் உதவுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.

    அதன்படி தற்போது முத்தமிழ் செல்வி உலகில் மிக உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைக்க நிதி உதவியாக தமிழக அரசு சார்பில் ரூ. 10 லட்சத்தை இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி உள்ளார்.

    இது குறித்து முத்தமிழ் செல்வி நிருபர்களிடம் கூறியதாவது:-

    இமயமலையில் ஏறுவதற்கான பயிற்சியை முடித்துள்ளேன். அடுத்த கட்ட இலக்கு எவரெஸ்ட் சிகரத்தை அடைவது தான். அதன் உச்சியை அடையும் முதல் தமிழ் பெண்ணாக இருந்து சாதனை படைப்பேன். இந்த சாதனையை செய்வதற்கு நிதி உதவி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    எவரெஸ்ட் சிகர பயணத்தை 5-ந் தேதி மேற்கொள்ள உள்ளேன். இதற்காக 2-ந் தேதி சென்னையில் இருந்து டெல்லிக்கு புறப்படுகிறேன். எனக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

    இவர் அவர் கூறினார்.

    எவரெஸ்ட் சிகரம் அடைவதற்கான பயணத்தை மேற்கொள்ள இருக்கும் முத்தமிழ்செல்வி சென்னையில் ஜப்பானிய மொழி பயிற்றுனராக பணியாற்றி வருகிறார். இவரது கணவர் குணசேகரன் சாப்ட்வேர் என்ஜினீயராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ராஜபாளையம் அருகே போலி டாக்டருக்கு வலைவீசி தேடி வருகின்றனர்.
    • சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந்தன.

    ராஜபாளையம்

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முறம்பு மவுண்ட் சியோன் பகுதியில் அமலன் சேவுக ராஜ் (வயது 60) என்பவர் டாக்டர் என்று தெரிவித்து ஆங்கில மருத்துவம் பார்த்து வந்தார். அவரிடம் அந்த பகுதியை சேர்ந்த மக்கள் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களுக்கு அமலன் சேவுகராஜ் ஊசி போட்டு மருந்து, மாத்திரைகள் வழங்கி வந்தார். இவர் 5-ம் வகுப்பு வரை படித்து விட்டு மருத்துவம் பார்ப்ப தாக புகார் எழுந்தது. இதைத்தொடர்ந்து விருதுநகர் மாவட்ட மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் தலைமையிலான குழுவினர் மவுண்ட் சியோன் பகுதிக்கு சென்று அமலன் சேவுகராஜ் நடத்தி வந்த மருத்துவமனை யில் சோதனை நடத்தினர். அப்போது அமலன் சேவுகராஜ் அங்கில்லை. அங்கு அவர் சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்து, மாத்திரைகள் மற்றும் ஊசி போன்றவை இருந் தன. அதனை பறிமுதல் செய்தனர். போலி டாக்டர் தலைமறைவாகி விட்ட தால் இது குறித்து தளவாய் புரம் போலீஸ் நிலையத்தில் மருத்துவ துறை இணை இயக்குநர் டாக்டர் முருக வேல் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அமலன் சேவுகராஜை தேடி வருகின்றனர்.

    ×