என் மலர்
வேலூர்
- விவசாயிகள் வேதனை
- தென்னை மரங்கள், பயிர்கள் சேதம்
அணைக்கட்டு:
அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று இரவு முதல் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
தற்போது, விவசாயிகள் நிலத்தில் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். நன்கு வளர்ந்துள்ள நிலக்கடலை பயிர்கள் வெயிலின் தாக்கத்தால் கருகிய நிலையில் இருந்தது. இந்நிலையில், நேற்று முதல் அணைக்கட்டு சுற்றுவட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை பெய்ய தொடங்கியது.
சுமார் 5 மணி நேரத்துக்கும் மேலாக பெய்த கனமழையால் விவசாய நிலங்களில் மழைநீர் தேங்கியுள்ளது.
இதனால், தென்னை மரங்கள் மற்றும் பயிர்கள் புத்துயிர் பெற்று செழுமையாக உள்ளது. இருந்தாலும், இந்த கனமழை நீடித்தால் மற்ற பயிர்கள் அழுகும் நிலை ஏற்படும் என்று விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
- பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு
- சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டிருந்தார்
வேலூர்:
தேனி மாவட்டம் கம்பம் பகுதியை சேர்ந்த பேயதேவன் என்பவர் மனைவி நாகரத்தினம் (வயது 30). இவர் கஞ்சா வழக்கில் போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு சேலம் மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டு இருந்தார்.
இந்நிலையில் கடந்த ஜூன் மாதம் நிர்வாக காரணங்களால் வேலூர் ஜெயிலுக்கு மாற்றப்பட்டார். அப்போது அவர் 6 மாத கர்ப்பிணியாக இருந்தார்.
வேலூர் அடுக்கம்பாறையில் உள்ள அரசு மருத்துவமனையில் அவ்வப்போது பரிசோதனை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று முன்தினம் நாகரத்தினத்துக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அவரை ஜெயில் காவலர்கள் உடனடியாக வேலூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு நாகரத்தினத்துக்கு சுகப்பிரசவத்தில் ஆண் குழந்தை பிறந்தது.
தாயும், சேயும் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர். நாகரத்தினம் அனுமதிக்கப்பட்டுள்ள பிரசவ வார்டை சுற்றி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
- தொடர் மழை காரணமாக பரிதாபம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த உப்பரப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயன் (வயது 60), கூலி தொழிலாளி. இவரது மனைவி ஞானம்மாள் (55).
தம்பதியினருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். விஜயன் தனது குடும்பத்தி னருடன் மண்சுவரால் கட்டப்பட்ட குடிசை வீட்டில் வசித்து வருகிறார்.
இந்தநிலையில் குடியாத்தம் மற்றும் அதனை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று பலத்த மழை பெய்தது. இதில் விஜயன் வீட்டின் மண் சுவர் முழுவதும் மழை நீரில் நனைந்து ஈரமானது.
விஜயன் இன்று காலை வழக்கம் போல் வேலைக்கு சென்று விட்டார். ஞானம்மாள் வீட்டில் உள்ள சுவரின் அருகே பாத்திரங்களை எடுத்துக் கொண்டிருந்தார்.
அப்போது மண்சுவர் எதிர்பாராத விதமாக ஞானம்மாள் மீது இடிந்து விழுந்தது.
வலி தாங்க முடியாமல் அவர் கூச்சலிட்டார். அலறல் சத்தத்தை கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது, சுவரின் இடிபாடுகளில் சிக்கி ஞானம்மாள் பரிதாபமாக இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த குடியாத்தம் தாலுகா போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, ஞானம்மாள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து நடந்த இடத்தில் குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், ஒன்றிய குழு தலைவர் சத்யானந்தம், சப்-கலெக்டர் வெங்கட்ராமன் உள்ளிட்ட அதிகாரிகள் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வீட்டின் மண்சுவர் இடிந்து விழுந்து பெண் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
- ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
- 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
ஆரணி:
வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.
ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
இதனை தொடர்ந்து இன்று காலை ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை கைது செய்தனர்.
அவரை சந்தவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
இதனை கண்டித்து வேலூர் மற்றும் ஆரணியில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.
இதனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
- பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
- பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கு நீர்வரத்து தொடங்கியுள்ளது.
வேலூர்:
வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அருகே தமிழக ஆந்திரா எல்லை பகுதிகளில் விடிய விடிய பெய்த கனமழை காரணமாக பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
ஆந்திரா எல்லையில் பாலாற்றின் குறுக்கே ஆந்திரா அரசு கட்டியுள்ள தடுப்பணைகள் முழுவதும் நிரம்பி உபரி நீர் வெளியேறி தமிழக பாலாற்றில் மழைநீர் கரைபுரண்டு ஓடுகிறது.
திம்மம்பேட்டை, ஆவாரமங்குப்பம், ராம்நாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக செல்லும் பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆந்திரா எல்லை பகுதியான மாதகடப்பா, வீரனமலை உள்ளிட்ட மலை பகுதிகளிலும் காட்டாற்று வெள்ளம் உருவாகி திம்மாம்பேட்டை மன்னாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆவரங்குப்பம் வழியாக மழை நீர் பாலாற்றில் கலந்து வழிந்தோடுகிறது.
இதன் காரணமாக பாலாறு கரையோரம் இருக்கக்கூடிய மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என கலெக்டர் பாஸ்கர பாண்டியன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பாலாற்றில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் வேலூர் மாவட்டம் செதுவாலை ஏரிக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.
பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்து இருப்பதால் கரையோர பகுதிகளில் உள்ள கிராமங்களை வருவாய்த்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
அதேபோல் பாலாற்றின் கிளை ஆறுகளான குடியாத்தம் கவுன்டண்யா ஆற்றில் இருந்து மோர்தானா அணைக்கும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேயாற்றில் இருந்து பள்ளிகொண்டா ஏரிக்கும் நீர்வரத்து தொடங்கியுள்ளது.
ஆம்பூர் அருகே வெள்ளக்கல் கானாறு, ஆணைமடுகு கானாறு, கண்டித்தோப்பு கானாறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
ஒடுகத்தூர் அருகே உள்ள உத்தர காவேரி ஆறு, கணியம்பாடி அருகே உள்ள நாகநதி ஆற்றிலும் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் கரையோரம் இருக்கும் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
- காப்பு காட்டில் விடப்பட்டது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் அருகே கெங்கசானிகுப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேந்திரன்.
இவர் தன்னுடைய விவசாய நிலத்தை பார்ப்பதற்காக சென்றார். அப்போது சுமார் 10 அடி நீளம் உடைய சாரைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று பம்பு செட்டிற்குள் சென்றது.
இதனை யடுத்து அலறி அடித்துக் கொண்டு ஓடினார்.இவரது அலறல் சத்தம் கேட்டு ஓடி வந்த அக்கம்பக்க த்தினர் ஒடுகத்தூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனடியாக அங்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் சாரைப்பா ம்பை பிடித்து காப்பு காட்டில் விட்டனர்.
- அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்தனர்z
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் சத்துவாச்சாரி இந்திராந கர் பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் கட்டுமான பணிக் காக அங்கு வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பிகளை 2 பேர் திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர் களை பிடித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வினோத்கு மார் (வயது 28). சைதாப்பேட் டையை சேர்ந்த நீலகண்டன் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் அவதி
- விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. நேற்று பகலில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்தது.
இந்த நிலையில் பிற்பகலில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. மாலை 4 மணி அளவில் வேலூரில் சில இடங்களில் சாரல் மழை பெய்தது. தொடர்ந்து பலத்த மழையாக உருவெடுத்தது. சுமார் ஒரு மணி நேரம் மழை வெளுத்து வாங்கியதால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு சென்றனர்.
அவர்கள் சாலையோரம் இருந்த கடைகள் மற்றும் தேசிய நெடுஞ்சாலை மேம்பாலத்தின் கீழ் ஒதுங்கி நின்றனர். தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. தொடர்ந்து இரவு முதல் விடியும் வரை சாரல் மழையாகவும், பலத்த மழையாகவும் இடி, மின்னலுடன் மாறி மாறி பெய்தது.
சத்துவாச்சாரி வசந்தம் நகர் பகுதியில் உள்ள முதல் தெருவில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால் அவர்கள் மிகவும் பாதிக்க ப்பட்டனர். பாத்திரங்களை வைத்து தண்ணீரை வெளியேற்றினர்.
அந்த தெருவில் போதிய கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்று அவர்கள் குற்றம் சாட்டினர். வேலூர் கிரீன் சர்க்கிள் உள்ளிட்ட இடங்களிலும் மழை நீர் சாலைகளை குளம் போல் தேங்கியது. இதேபோல் திருப்பத்தூர், ராணிப்பே ட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்தது.
இதனைத் தொடர்ந்து இன்று காலை சத்துவாச்சாரி வசந்தம் நகரில் தெருக்களில் தேங்கிய மழை நீரை, மோட்டார் மூலம் அகற்றும் இறைக்கும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டனர். வீடுகளில் மழைநீர் தேங்கியதால் அந்த பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்ததோடு, இரவு முழுவதும் தூக்கமின்றி தவித்தனர்.
வேலூரில் அதிகபட்சமாக சத்துவாச்சாரியில் 52.7 மில்லி மீட்டர் மழை பதிவானது.
திருவண்ணாமலை மாவட்டத்தில் போளூர், கண்ணமங்கலம், செங்கம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளில் நேற்று இரவு கனமழை பெய்தது. செங்கம் மற்றும் அதன் அருகே உள்ள ஜமுனாமரத்தூர் மலை மற்றும் அடிவாரப் பகுதிகள் உள்பட செங்கம் சுற்று வட்ட பகுதிகளில் உள்ள கிராம பகுதிகளிலும் நேற்று இரவு கன மழை பெய்தது.
இரவு முழுவதும் பெய்த கன மழையின் காரணமாக செங்கம் - ஜவ்வாதுமலை தொடரில் உருவாகி செங்கத்தை ஒட்டி செல்லும் செய்யாற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து செல்கிறது.
இதில் திருவண்ணாமலையில் 56 மில்லி மீட்டர் மழை பதிவானது. அதேபோல் செங்கத்தில் 42.60, போரூரில் 62.80, ஜமுனாமரத்தூரில் 26, கலசபாக்கத்தில் 89, தண்டராம்பட்டில் 30.40, ஆரணியில் 47.40, செய்யாறில் 78, வந்தவாசியில் 26, கீழ்பெண்ணாத்தூரில் 84, வெம்பாக்கத்தில் 53, சேத்துப்பட்டு 37.60 மில்லி மீட்டர் மழை பதிவாகி உள்ளது.
ராணிப்பேட்டையில் நேற்று பகல் நேரத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்த நிலையில் மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து திடீரென மழை பெய்தது. பின்னர் நள்ளிரவு வரை மழை தூரல் போட்ட வண்ணம் இருந்தது.
திருப்பத்தூரில் நேற்று மாலை முதல் விடியும் வரை பலத்த கன மழை பெய்தது. இடியுடன் கூடிய பலத்த மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
- கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு நடந்தது
- வினோத்காந்தி தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த அடுக்கம்பாறை ஊராட்சியில் கருணாநிதி நூற்றாண்டு விழா முன்னிட்டு மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. ஊராட்சி மன்ற தலைவர் திருநாவுக்கரசு தலைமை தாங்கினார்.
கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாகமல்பிரசாத், மாவட்ட சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் வேதாசீனிவாசன், மாவட்ட கவுன்சிலர் தேவிசிவா, ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், ஒன்றிய கவுன்சிலர் சீனிவாசன், வல்லம் ஊராட்சி மன்ற தலைவர் சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் தென்போ ஸ்கோ வரவேற்றார்.
இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாநில சுற்றுச்சூழல் அணி துணை தலைவர் வினோத்காந்தி, ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு மரக்கன்றுகளை நட்டனர்.
- 780 லிட்டர் தரையில் கொட்டி அழித்தனர்
- போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்
அணைக்கட்டு:
வேலூர் மதுவிலக்கு. அமலாக்கப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் அல்லேரி மற்றும் அதனையொட்டிய மலைப்பகுதியில் திடீரென சோதனை மேற்கொண்டனர்.
அப்போது கூனம்பட்டி மலைப்பகுதியில் ஓடையோரம் 26 லாரி டியூப்பில் தலா 30 லிட்டர் வீதம் 780 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடி க்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து தரையில் கொட்டி அழித்தனர்.
போலீசார் விசாரணையில் கூனம்பட்டி மலைப்பகுதியை சேர்ந்தவர்கள் சாராயத்தை லாரி டியூப்பில் பதுக்கி வைத்தது தெரிய வந்தது. அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் தேடி வருகிறார்கள்.
- பஸ்சில் இருந்து கீழே இறங்கிய போது பரிதாபம்
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் ஜமுனாமரத்தூரை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (வயது 48) தொழிலாளி. இவர் நேற்று இரவு சோளிங்கரிலிருந்து வேலூர் புதிய பஸ் நிலையத்திற்கு தனியார் பஸ்சில் வந்தார்.
பஸ் புதிய பஸ் நிலையத்தில் நின்ற போது கீழே இறங்கினார். அப்போது குடியாத்தத்தில் இருந்து வந்த தனியார் பஸ் அங்கு நின்று கொண்டு இருந்த பஸ்சை ஒட்டியபடி வந்தது.
இதனால் பஸ்சில் இருந்து இறங்கிய கிருஷ்ணமூர்த்தி 2 பஸ்களுக்கு இடையில் சிக்கி படுகாயம் அடைந்தார். அங்கிருந்தவர்கள் இது குறித்து வேலூர் வடக்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கிருஷ்ணமூர்த்தியை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலனின்றி கிருஷ்ணமூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்து வேலூர் வடக்கு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- வேலூரில் பக்தர்கள் பூஜை செய்து வழிபாடு
- ஏராளமானோர் கண்டு ரசித்தனர்
வேலூர்:
வேலூர் முத்து மண்டபம் பகுதியை சேர்ந்தவர் ரங்கநாதன். பழ வியாபாரி.
இவர் தினமும் வேலூர் அடுத்த அப்புக்கல்லில் உள்ள விவசாய நிலங்களுக்கு சென்று பப்பாளி பழங்களை வாங்கி வந்து வியாபாரம் செய்து வருகிறார்.
நேற்று மாலை ரங்கநாதன் விற்பனைக்காக ஏராளமான பப்பாளி பழங்களை கொண்டு வந்தார்.
இன்று காலை பப்பாளி பழங்களை தரம் பிரித்த போது அதில் இருந்த ஒரு பப்பாளி பழம் பெருமாள் உருவத்தில் இருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் பப்பாளி பழத்துக்கு நாமம் இட்டு பூக்களை வைத்து பூஜைகளை செய்தனர்.
பின்னர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள லட்சுமி நரசிம்மர் கோவிலில் பெருமாள் வடிவில் இருந்த பப்பாளி பழத்தை சாமி அருகே வைத்தனர்.
இந்த அதிசய பப்பாளி பழத்தை ஏராளமான பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையான இன்று பெருமாள் வடிவில் பப்பாளி பழம் இருந்தது அப்பகுதி மக்களிடையே பரவசத்தை ஏற்பத்தியது.






