என் மலர்
நீங்கள் தேடியது "Theft of wires"
- அக்கம்பக்கத்தினர் மடக்கி பிடித்தனர்z
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவர் சத்துவாச்சாரி இந்திராந கர் பகுதியில் வீடு கட்டி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று வீட்டின் கட்டுமான பணிக் காக அங்கு வைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பிகளை 2 பேர் திருட முயற்சி செய்ததாக கூறப்படுகிறது. இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் அவர் களை பிடித்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்தில் ஒப்ப டைத்தனர்.
போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த வினோத்கு மார் (வயது 28). சைதாப்பேட் டையை சேர்ந்த நீலகண்டன் (26) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.
- இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது.
பெரியகுளம்:
பெரியகுளம் தென்கரையைச் சேர்ந்தவர் நவநீதகிருஷ்ணன். இவர் சோத்துப்பாறை சாலை, மஞ்சோடை வராக நதி கரையோரம் அமைந்துள்ள லட்சுமிபுரம் கூட்டுக்குடிநீர் திட்ட அரசு மோட்டார் ரூமில் பராமரிப்பு உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். சம்பவத்தன்று 2 வாலிபர்கள் மோட்டார் ரூமில் இருந்து ரூ.10200 மதிப்புள்ள வயர்களை திருடி சென்றனர்.
இது குறித்து தென்கரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய போது கெங்குவார்பட்டியைச் சேர்ந்த பால்பாண்டி, ஜெேகந்திரன் ஆகியோர் மோட்டார் ரூமில் மின் வயர் திருடியது தெரிய வந்தது. ஜெகேந்திரனை கைது செய்த நிலையில் தப்பி ஓடிய பால்பாண்டியைத் தேடி வருகின்றனர்.






