search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Minister Udayanidhi"

    • ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.
    • 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    ஆரணி:

    வேலூர் இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ். இவர் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் கலந்து கொண்டார்.

    ஆரணி அண்ணா சிலை அருகே அப்போது அவர் சிறப்புரையாற்றினார். அதில் அமைச்சர் உதயநிதி குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது.

    இதுகுறித்து ஆரணி தி.மு.க. நகர செயலாளர் ஏ.சி.மணி ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    இதனை தொடர்ந்து இன்று காலை ஆரணி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணி தலைமையிலான போலீசார் வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள வீட்டில் இந்து முன்னணி கோட்ட தலைவர் மகேஷை கைது செய்தனர்.

    அவரை சந்தவாசல் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்து முன்னணி கோட்டத் தலைவர் மகேஷ் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

    இதனை கண்டித்து வேலூர் மற்றும் ஆரணியில் இந்து முன்னணியினர் போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

    இதனால் வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை, திருப்பத்தூர் மாவட்டங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கோவை வருவது குறித்தும், தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.
    • கோவை மாவட்டத்தில் 10 லட்சம் தி.மு.க உறுப்பினர்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    கோவை,

    கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட தி.மு.க நகர, பகுதி, ஒன்றிய, பேரூராட்சி செயலாளர்கள் கூட்டம் நடந்தது.

    கூட்டத்துக்கு தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் வி.செந்தில் பாலாஜி தலைமை தாங்கினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    இளைரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் அமைச்சராக பொறுப்பேற்ற பின்னர் கோவை வருவது குறித்தும், தேர்தல்கள் குறித்தும் ஆலோசிக்க இந்த கூட்டம் நடைபெறுகிறது.

    நாளை இரவு உதயநிதி ஸ்டாலின் கோவை வருகிறார். அப்போது அவருக்கு அனைவரும் திரண்டு வந்து உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும்.

    ஞாயிற்றுக்கிழமை நேரு விளையாட்டு அரங்கில் ஆய்வு, கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு பணி, கொடிசியா மைதானம் செல்லும் இடத்தில் அரசின் திட்டங்களை தொடங்கி வைத்தும், புதிய நிகழ்வுகளுக்கு அடிக்கல் நாட்டவும் உள்ளார்.

    கோவை மாவட்டத்தில் 10 லட்சம் தி.மு.க உறுப்பினர்கள் என்ற நிலையை ஏற்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கார்த்திக், தொண்டாமுத்தூர் ரவி, தளபதி முருகேசன், முன்னாள் எம்.பி., நாகராஜன் மற்றும் ஒருங்கிணைந்த கோவை மாவட்ட நகர, பகுதி ஒன்றிய பேரூராட்சி செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×