என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் அருகே 14 வயது சிறுமிக்கு நடைபெற இருந்த திருமணத்தை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
    வேலூர்:

    வேலூர் அடுத்த இடையஞ்சாத்து பகுதியில் 18 வயது நிரம்பாத சிறுமிக்கு நேற்று திருமணம் நடைபெற உள்ளதாக வேலூர் மாவட்ட சமூகநலத்துறை அதிகாரிகளுக்கு நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் அப்பகுதி சமூகநல அலுவலர், சைல்டுலைன் களப்பணியாளர் மற்றும் வேலூர் தாலுக்கா போலீசார் ஆகியோர் நேற்று இடையஞ்சாத்து பகுதிக்கு சென்று விசாரித்தனர்.

    அப்போது 9-வது படிக்கும் 14 வயது சிறுமிக்கு அவரது பெற்றோர் கட்டாய திருமண ஏற்பாடு செய்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.

    18 வயது நிரம்பிய பின்னரே பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் இல்லையென்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த சிறுமியின் பெற்றோரிடம், அதிகாரிகள் எழுதி வாங்கி கொண்டனர்.

    தொடர்ந்து அந்த சிறுமியை மீட்டு வேலூர் அல்லாபுரத்தில் உள்ள அரசு பிற்காப்பு இல்லத்தில் தங்க வைத்தனர்.
    வேலூர் அருகே மதுபோதையில் தூங்கிக் கொண்டிருந்த தங்கையை கர்ப்பமாக்கிய அண்ணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    வேலூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுவன் அடிக்கடி மது குடித்து வந்தார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு சென்ற சிறுவன் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அவரது 16 வயது தங்கையை கட்டாயப்படுத்தி கற்பழித்தார். இதுபற்றி வெளியே சொன்னால் தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டினார். இதனால் அவரது தங்கை வெளியே சொல்லாமல் இருந்துள்ளார். தற்போது அந்த சிறுமி 8 மாத கர்ப்பிணியாக உள்ளார். இதுபற்றி அவளது பெற்றோர் கேட்ட போது நடந்த சம்பவத்தை கூறினார்.

    இதனையடுத்து வேலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சிறுமி புகார் அளித்தார்.

    போலீசார் இதுதொடர்பாக போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து 17 வயது சிறுவனை கைது செய்தனர். அவனை செங்கல்பட்டு சிறுவர் ஜெயிலில் அடைத்தனர்.

    ஆம்பூர் அருகே சொத்து தகராறில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மற்றும் அவரது மனைவியை பெண் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்பூர், பிப்.13-

    ஆம்பூர் அருகே சொத்து தகராறில் தூங்கிக்கொண்டிருந்த விவசாயி மற்றும் அவரது மனைவியை பெண் வெட்டி கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ஆம்பூர் அடுத்த கம்ம கிருஷ்ணபள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் (வயது 55) விவசாயி. இவருடைய மனைவி விஜயா (40). முருகேசனின் அண்ணன் வெங்கடேசன். இவரது மனைவி சித்ரா (45). இவர்களுக்கு 3 மகன் ஒரு மகள். இதில் 2 மகன்கள் வெங்கடேசன் ஆகியோர் ஏற்கனவே இறந்து விட்டனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு சித்ராவின் 3 வது மகனும் இறந்துவிட்டார். இதனால் சித்ரா மகளுடன் தனியாக வசித்து வந்தார்.

    இந்த நிலையில் இவருக்கும் முருகேசனுக்கும் நிலத் தகராறு ஏற்பட்டது.இதனால் முருகேசனை வெட்டிக் கொலை செய்ய சித்ரா முடிவு செய்தார். நேற்று இரவு முருகேசனும் அவரது மனைவி விஜயாவும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் சித்ரா நைசாக கதவை திறந்து வீட்டுக்குள் சென்றார்.

      தூங்கிக் கொண்டிருந்த முருகேசனின் கழுத்து தலைப்பகுதியில் அரிவாளால் சரமாரியாக வெட்டினார். வெட்டுப்பட்ட முருகேசன் அலறினார். சத்தம் கேட்டு அவரது மனைவி விஜயா ஓடிவந்து தடுக்க முயன்றார். அவரையும் சித்ரா அரிவாளால் வெட்டிச் சாய்த்தார். பின்னர் அங்கிருந்து தப்பி சென்றுவிட்டார்.

    வெட்டுப்பட்ட கணவன் மனைவி இருவரும் ரத்த வெள்ளத்தில் சரிந்து துடி துடித்தனர். இதில் முருகேசன் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

    அவர்களது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். இது தொடர்பாக உமராபாத் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

    ஆம்பூர் டி.எஸ்.பி சச்சிதானந்தம் இன்ஸ்பெக்டர் சரவணன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து காயமடைந்த விஜயாவை மீட்டு ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கிருந்து அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. முருகேசன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

    இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து சித்ராவை கைது செய்தனர். அவரிடம் கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. * * * கொலையுண்ட முருகேசன். காயமடைந்த விஜயா, கைது செய்யப்பட்ட சித்ரா.

    வேலூரில் போலீஸ் பணிக்கு தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ்கள் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மேற்பார்வையில் சரிபார்க்கப்பட்டன. மேலும் அவர்களது கைரேகைகள் ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டது.
    வேலூர்:

    வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டத்தில் போலீஸ் பணிக்கு நடந்த உடற்தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த மாவட்டம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர்களுக்கும் போலீஸ் பணிக்கான உடற்தகுதி தேர்வு வேலூர் நேதாஜி மைதானத்தில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு நடந்தது.

    இதில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கு தனித்தனியாக 400 மீட்டர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் போன்றவை அளவீடு செய்யப்பட்டது.

    இதில் வேலூர் ஒருங்கிணைந்த மாவட்டங்களை சேர்ந்த ஆண்கள் 577 பேரும், பெண்கள் 190 பேரும் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்புக்கான கடிதம் அனுப்பப்பட்டது.

    சான்றிதழ் சரிபார்ப்பு வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் மண்டபத்தில் இன்று சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடந்தது.

    வேலூர் போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் மேற்பார்வையில் சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டன. மேலும் அவர்களது கைரேகைகள் ஆய்வு செய்து பதிவு செய்யப்பட்டது.

    இன்று ஒரே நாளில் சான்றிதழ் சரிபார்க்கும் பணி முடிவடையாவிட்டால் நாளையும் தொடரும் என போலீசார் தெரிவித்தனர்.
    வேலூரில் யோகா ஆசிரியை மர்மமான முறையில் இறந்த சம்பவம் குறித்து அவரது கணவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    தேனி மாவட்டம் ஓரகுண்டா பகுதியை சேர்ந்தவர் கருப்பசாமி, இவருக்கும் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வேதசாலை பகுதியை சேர்ந்த வாசுகி (வயது54) என்பவரின் மகளான ஜீவிதாவுக்கும் (27) கடந்த 2½ ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது.

    இருவருக்கும் வேலூரில் உள்ள ஒரு யோகா மையத்தில் யோகா ஆசிரியர் வேலை கிடைத்தது. இதையடுத்து இருவரும் சாய்நாதபுரத்தில் உள்ள நடேசன் முதலியார் தெருவில் தங்கி வேலை பார்த்து வந்தனர்.

    கணவன்-மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி தகராறு இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில் ஜீவிதா மர்மமான முறையில் வீட்டில் இறந்து கிடந்தார். தகவல் அறிந்த பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, உடலை கைப்பற்றி வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்.

    ஜீவிதா இறந்த உடன், அவது கணவர் கருப்பசாமியின் நண்பர் ஒருவர் ஜீவிதாவின் தாயர் வாசுகியை செல்போனில் தொடர்பு கொண்டு உங்கள் மகள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் என தெரிவித்துள்ளார். இதையடுத்து வாசுகி மருத்துவமனைக்கு வந்து மகளின் உடலை பார்த்து கதறி அழுதார்.

    இந்த சம்பவம் குறித்து பாகாயம் போலீசில் தனது மகள் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் அளித்தார். இதில் எனது மருமகனுக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது. இதனால் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

    வேறு பெண்ணுடனான தொடர்பை மறைக்க எனது மகளிடம் வீட்டில் இருந்து பணம் வாங்கி வர வேண்டும் என தொந்தரவு செய்துள்ளார். எனவே எனது மகள் சாவில் சந்தேகம் உள்ளது. விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார்.

    பாகாயம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பசலைராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினார். ஜீவிதாவின் கணவர் கருப்பசாமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    ஜீவிதாவுக்கு திருமணமாகி 2½ ஆண்டுகளே ஆவதால் இந்த சம்பவம் குறித்து வேலூர் உதவி கலெக்டர் கணேஷ் மேல்விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் மாவட்டம் ஆற்காடு அருகே திருமணமான 3 நாளில் தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்த சென்னை போலீஸ்காரர் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    ஆற்காடு:

    ஆற்காடு அருகே உள்ள சக்கரமல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகள் திவ்யா (வயது 21). ஆற்காட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

    இவருக்கும் சென்னை திருநின்றவூரை சேர்ந்த போலீஸ்காரர் ராகவேந்திரன் (25) என்பவருக்கும் கடந்த 7-ந்தேதி திருமணம் நடந்தது.

    நேற்று திவ்யா கணவர் ராகவேந்திரனுடன் சக்கரமல்லூர் கிராமத்தில் உள்ள தாய் வீட்டுக்கு விருந்துக்கு வந்தார். வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பேசினார்.

    சிறிது நேரம் கழித்து வீட்டில் உள்ள அறையில் ஓய்வு எடுப்பதாக கூறி சென்ற திவ்யா நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை தட்டி அழைத்தனர். கதவு திறக்கப்படவில்லை. அதனால் அவர்கள் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அங்கு திவ்யா தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனை கண்ட அவரது பெற்றோர் கதறி அழுதனர். இதுபற்றி தகவல் அறிந்த ஆற்காடு தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று திவ்யாவின் உடலை மீட்டு அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    திவ்யா தூக்கிட்டு தற்கொலை செய்ததற்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணமான 3 நாட்களில் புதுப்பெண் தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக ராணிப்பேட்டை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
    வேலூர் சிறையில் பெண் கைதியிடம் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    சேலத்தை சேர்ந்தவர் மைதிலி (வயது42). இவரை திருட்டு வழக்கு ஒன்றில் போலீசார் கைது செய்து வேலூர் பெண்கள் சிறையில் அடைத்தனர்.

    மைதிலி ஜெயிலில் செல்போன் பயன்படுத்துவதாக சிறை காவலர்களுக்கு புகார் வந்தது. இதையடுத்து சிறை காவலர்கள் மைதிலி அறையில் சோதனை செய்தனர்.

    அப்போது அவரது அறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த செல்போனை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    இதுகுறித்து பாகாயம் போலீசில் சிறைத்துறை சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக பாகாயம் இன்ஸ்பெக்டர் நந்தகுமார் பெண்கள் ஜெயிலுக்கு இன்று சென்று பெண் கைதி மைதிலியிடம் விசாரணை நடத்தினார்.

    அவருக்கு செல்போன் எப்படி வந்தது. சிறை வளாகத்திற்குள் செல்போன் கொண்டு வந்தது யார்? என்பது குறித்து விசாரணை நடத்தினார்.

    காட்பாடியில் காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் கடந்தாண்டு பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளார். சிறுமிக்கும், காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் (வயது28) கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது ராமச்சந்திரன் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து விட்டு சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். அதை உண்மை என நம்பிய சிறுமி, காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். அதனால் இளம்பெண் கர்ப்பமானார். இது குறித்து சிறுமி, ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து சிறுமி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி 8 மாத கர்ப்பமானார்.

    இதனை அறிந்த பெற்றோர், ராமச்சந்திரன் குறித்து அப்பகுதியில் விசாரித்தனர். அப்போது அவருக்கு திருமணமாகி ஒரு பெண், ஆண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமச்சந்திரன், சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தார்.

    ஒடுகத்தூர் அருகே திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி பிளஸ்-2 மாணவியிடம் உல்லாசம் அனுபவித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    ஒடுகத்தூர் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் தனது பாட்டி வீட்டில் தங்கி கடந்த ஆண்டு பிளஸ்-2 படித்து வந்தார்.

    சேர்பாடியை சேர்ந்த குறளரசன் என்பவரும் மாணவியும் காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மாணவியை குறளரசன் விவசாய நிலத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

    திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி அவருடன் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த வாரம் மாணவியின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டது.

    இதனால் சந்தேகம் அடைந்த அவரது பாட்டி அவரை ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அப்போது மாணவி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

    இதுகுறித்து மாணவியின் பாட்டி வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். போலீசார் குறளரசன் மீது போக்சோ சட்டம் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். 

    காட்பாடியில் 2 ஷோரூம்கள் உடைத்து பணம் செல்போன் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    காட்பாடி:

    காட்பாடி சித்தூர் சாலையில் சத்யா வீட்டு உபயோக பொருட்கள் ஷோரூம் உள்ளது. நேற்று இரவு அதன் 3-வது மாடிக்கு சென்ற கொள்ளையர்கள் அங்கிருந்த கதவின் தகட்டை நீக்கி உள்ளே நுழைந்து பின்னர் ‌ஷட்டர் லாக்கை கடப்பாரையால் நீக்கியுள்ளனர்.

    ஷோரூமுக்குள் இறங்கி ஷோரூம் கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.2 லட்சம், விலை உயர்ந்த 6 செல்போன்கள் மற்றும் ஊழியர் ஒருவர் வைத்திருந்த  7½ பவுன் நகை ஆகியவற்றை திருடிக்கொண்டு தப்பி சென்றனர்.

    இதேபோல் அருகில் உள்ள குழந்தைகள் விளையாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் ஷோரூமுக்குள் நுழைந்துள்ளனர்.

    அங்கு கல்லாவில் வைக்கப்பட்டிருந்த ரூ.3500 எடுத்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து ஷோரூம் நிர்வாகி விருதம்பட்டு போலீசில் புகார் அளித்தார். சம்பவ இடத்திற்கு காட்பாடி டி.எஸ்.பி. துரைப்பாண்டி மற்றும் போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.

    ஷோரூமில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.டி.வி. கேமராக்களை ஆய்வு செய்து வருகின்றனர்.

    இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    வேலூர் சலவன்பேட்டையில் கட்டிட ஒப்பந்ததாரர் கத்தியால் சரமாரி குத்திக்கொலை செய்யப்பட்டார். அவரை கொலை செய்த மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை திருப்பூர்குமரன் 2-வது தெருவை சேர்ந்தவர் குட்டி என்ற முருகவேல் (வயது45). கட்டிட ஒப்பந்ததாரர். தன்னுடைய கட்டிட ஒப்பந்த பணியில் மேஸ்திரியாகவும் பணியாற்றி வந்தார். இவர் தினமும் மாலை நரசிங்கசாமி மடம் தெருவில் உள்ள ஆணைகுளத்தம்மன் கோவிலுக்கு சாமி கும்பிட செல்வார். நேற்று மாலையும் வழக்கம்போல் அவர் கோவிலுக்கு சென்றார். அங்கு சாமி கும்பிட்டு விட்டு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கினார். இந்த நிலையில் அவர் கோவில் அருகில் உள்ள ஒத்தவாடை தெருவுக்கு சென்றார். இரவு 7.30 மணி அளவில் அவரை சரமாரியாக கத்தியால் குத்தினர். அதில் நிலைதடுமாறி அங்கிருந்து தப்பியோடினார். எனினும் அவரை மர்மநபர்கள் தாக்கினர். காயத்துடன் ஓடிய அவர் நரசிங்கசாமி மடம் தெருவுக்கு வந்து, கோவில் சுற்றுச்சுவர் அருகே விழுந்து இறந்தார். இதையடுத்து மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றனர்.

    ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்த முருகவேலை பார்த்த அப்பகுதி மக்கள் அலறியடித்து ஓடினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. கோவிலுக்கு வந்த பக்தர்களும் பயந்து திரும்பிச் சென்றுவிட்டனர்.

    முருகவேல் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக தகவல் அப்பகுதி முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. மக்கள் அங்கு கூடினர்.

    இந்த சம்பவம் குறித்து வேலூர் தெற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் இன்ஸ்பெக்டர் நாகராஜன் (பொறுப்பு) மற்றும் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதனிடையே தகவல் அறிந்ததும் வேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணனும் அங்குவந்து விசாரணை மேற்கொண்டார். அதைத் தொடர்ந்து முருகவேலின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அந்த பகுதியில் பரபரப்பு நிலவியதால் போலீசார் குவிக்கப்பட்டனர்.

    முருகவேல் இறந்த இடத்தில் தரையில் உறைந்திருந்த அவரது ரத்த மாதிரிகளை போலீசார் எடுத்தனர்.

    இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறுகையில், முருகவேல் கோவிலில் இருந்துள்ளார். அவர் திடீரென ஒத்தவாடை தெருவுக்கு சென்றார். அப்போது தான் அவர் மர்மநபர்களால் கொலை செய்திருக்கலாம் என்று கருதுகிறோம். கொலை நடந்த இடத்தில் கைப்பற்றப்பட்ட முருகவேலின் செல்போன் லாக் செய்யப்பட்டிருந்தது. எங்களால் அந்த லாக்கை எடுக்க முடியவில்லை.

    கொலை நடந்தது குறித்து தகவல் அறிந்ததும் முருகவேலின் மகள் ஜனனி (10) அங்கு வந்தார். அவரிடம் அந்த செல்போனை கொடுத்துள்ளோம். அதில் ஏற்பட்டுள்ள லாக் எடுக்கப்பட்டால் அதன் மூலம் விசாரணை மேற்கொள்ளப்படும்.

    முதல்கட்ட விசாரணையில் முருகவேல் 2 பேரால் கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. பெண் விவகாரத்தில் கொலை செய்யப்பட்டாரா? தொழில் போட்டி காரணமாக கொலை செய்யப்பட்டாரா? அல்லது முன் விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறோம் என்றார்.

    முருகவேலுக்கு சரளாதேவி என்ற மனைவி உள்ளார். கோவில் வளாகத்தில் உள்ள சமுதாய கூடத்தில் அமைக்கப்பட்டிருந்த கண்காகணிப்பு கேமரா காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    ஆம்பூரில் போலி நகை அடகு வைக்க முயற்சியில் ஈடுபட்ட பெண் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆம்பூர்:

    ஆம்பூர் அடுத்த பனங்காட்டூரை சேர்ந்தவர் கிரண் (வயது 25). இவர் ஆம்பூர் பஸ் நிலையம் அருகே நகை அடகு கடை நடத்தி வருகிறார்.

    நேற்று ஒரு பெண் 2 ஆண் ஆகியோர் நகைக்கடைக்கு வந்தனர் அப்போது அவர்கள் தங்கள் கையில் வைத்திருந்த வளையல்களை அடகு வைக்க வேண்டும் எனக் கூறினர்.

    அவர்களிடமிருந்து வளையலை வாங்கிய கிரண் உரசிப் பார்த்த போது அது பித்தளை வளையல் என தெரியவந்தது.

    இதுகுறித்து ஆம்பூர் டவுன் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அப்போது அங்கிருந்த பெண் திடீரென மாயமானார்.

    சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கிருந்த 2 ஆண்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்று விசாரணை நடத்தினர் .

    விசாரணையில் அவர்கள் இருவரும் ஊத்தங்கரையை சேர்ந்த மாரியப்பன் (35), ஹரிஅரசன் (23) எனவும், மாயமான பெண் அதே பகுதியை சேர்ந்த இந்திரா (48) என தெரியவந்தது .

    இதையடுத்து போலீசார் திருப்பத்தூர் பஸ் நிலையத்தில் இருந்த இந்திராவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த கும்பல் இதேபோல் வேறு எங்கெல்லாம் பித்தளை நகைகளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளனரா? என விசாரணை நடத்தி வருகின்றனர்,

    ×