என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    காட்பாடியில் சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை கைது

    காட்பாடியில் காதலிப்பதாக ஏமாற்றி சிறுமியை கர்ப்பமாக்கிய 2 குழந்தைகளின் தந்தை போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.

    வேலூர்:

    காட்பாடியில் உள்ள ஒரு பகுதியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி, இவர் கடந்தாண்டு பிளஸ்-2 முடித்து விட்டு வீட்டில் பெற்றோருக்கு உதவியாக இருந்துள்ளார். சிறுமிக்கும், காட்பாடி காங்கேயநல்லூரை சேர்ந்த ராமச்சந்திரனுக்கும் (வயது28) கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழக்கம் ஏற்பட்டது.

    அப்போது ராமச்சந்திரன் தனக்கு திருமணமாகி 2 குழந்தைகள் இருப்பதை மறைத்து விட்டு சிறுமியை காதலிப்பதாக கூறி உள்ளார். அதை உண்மை என நம்பிய சிறுமி, காதலுக்கு சம்மதம் தெரிவித்துள்ளார்.

    அதைத் தொடர்ந்து இருவரும் நெருங்கி பழகி உள்ளனர். அதனால் இளம்பெண் கர்ப்பமானார். இது குறித்து சிறுமி, ராமச்சந்திரனிடம் கூறியுள்ளார்.

    அதைத் தொடர்ந்து சிறுமி திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியுள்ளார். அதற்கு அவர் சரியான பதில் தெரிவிக்காமல் காலம் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே சிறுமி 8 மாத கர்ப்பமானார்.

    இதனை அறிந்த பெற்றோர், ராமச்சந்திரன் குறித்து அப்பகுதியில் விசாரித்தனர். அப்போது அவருக்கு திருமணமாகி ஒரு பெண், ஆண் குழந்தைகள் இருப்பது தெரியவந்தது. அதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளனர். இது தொடர்பாக அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ராமச்சந்திரன், சிறுமி மற்றும் அவரது பெற்றோருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் காட்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். சப்-இன்ஸ பெக்டர் காஞ்சனா வழக்குப்பதிவு செய்து போக்சோ சட்டத்தில் ராமச்சந்திரனை கைது செய்தார்.

    Next Story
    ×