என் மலர்
வேலூர்
வேலூர் சேண்பாக்கத்தைச் சேர்ந்த கர்ப்பிணிக்கு 3-ந்தேதி அவரின் வீட்டில் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், அந்தக் கர்ப்பிணியின் வீட்டார், கணவரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட 40 பேர் பங்கேற்றதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் கர்ப்பிணிக்கு கொரோனா தொற்று அறிகுறி தென்பட்டது.
அதைத்தொடர்ந்து அவரின் சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர், சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வளைகாப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றவர்களின் விவரங்களை சுகாதாரத்துறையினர் சேகரித்து வருகின்றனர்.
முதல் கட்டமாக காட்பாடி வசந்தபுரத்தைச் சேர்ந்த கர்ப்பிணியின் தாய் உள்பட 6 பேரும், கர்ப்பிணியின் கணவர் உள்பட 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர். தாய் உள்பட 6 பேரின் சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கர்ப்பிணியின் தாயாருக்கு (வயது 52) கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதியானது.
அதைத்தொடர்ந்து வேலூர் மாநகராட்சி 1-வது மண்டல சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் சுகாதாரத்துறையினர் வசந்தபுரத்துக்கு சென்றனர். அங்கு, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணியின் தாயாரை மீட்டு சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் அவரின் வீடு மற்றும் அதைச் சுற்றி உள்ள பகுதிகள், வீடுகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. வசந்தபுரம் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுகாதாரப்பணியை வேலூர் மாநகராட்சி நகர்நல அலுவலர் சித்ரசேனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இதேபோல் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த 38 வயது ஆண், சதுப்பேரி ஸ்ரீஆண்டாள்நகரைச் சேர்ந்த சென்னையில் பணிபுரிந்த 42 வயது ஆண், சத்துவாச்சாரி 1-ம் பகுதியைச் சேர்ந்த 64 வயது மூதாட்டி ஆகியோருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதியானது. 3 பேரும் அரசு, தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட மேற்கண்ட 4 பேரின் குடும்பத்தினர், உறவினர்கள் உள்பட மொத்தம் 25 பேர் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சளி மாதிரியைச் சேகரித்து பரிசோதனைக்காக அனுப்பி உள்ளனர். அவர்கள் வசித்த பகுதிகளில் வேறு யாருக்கேனும் கொரோனா அறிகுறி காணப்படுகிறதா? என ஆய்வு செய்யப்பட உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
கர்ப்பிணியின் தாயார் உள்பட 4 பேரை சேர்த்து வேலூர் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 148 ஆக உயர்ந்தது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் உறவினர்களிடம் வாட்ஸ்-அப்பில் வீடியோ காலில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது மனைவியிடம் பேசவும் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 10-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார். சிறைத்துறை டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை சோர்வடைந்து வருவதால் தினமும் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் ஜெயில் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் பரதராமி அருகே உள்ள தலைவர் பட்டி கிராமத்தை சேர்ந்தவர் மாணிக்கம். இவருடைய மனைவி இந்திராணி (வயது 70), மகன் முனிராஜ் (45), சின்னம்மா (35), சூரியகலா என்ற 2 மகள்கள் உள்ளனர்.
முனிராஜ், சூரியகலா ஆகியோருக்கு திருமணம் முடிந்து தனியாக அதே பகுதியில் வசித்து வருகின்றனர். சின்னம்மாவுக்கு திருமணமாகவில்லை. அவர் தாய் இந்திராணியுடன் வசித்து வந்தார்.
இவர்களுக்கு சொந்தமான நிலம் தொடர்பாக முனிராஜ் அவரது தாயாரிடம் தகராறு செய்து வந்துள்ளார். இன்று காலையில் இது தொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.
அப்போது ஆத்திரம் அடைந்த முனிராஜ் தென்னை மட்டை, கம்பு, கற்களால் இந்திராணி, சின்னம்மாவை சரமாரியாக தாக்கினார்.
இதில் ரத்த வெள்ளத்தில் இருவரும் சரிந்து விழுந்தனர். அவர்கள் சுயநினைவை இழந்ததும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டார். இதனைக் கண்டு திடுக்கிட்ட அப்பகுதி பொதுமக்கள் 108 ஆம்புலன்சு மற்றும் பரதராமி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆம்புலன்ஸ் வருவதற்குள் சின்னம்மா பரிதாபமாக இறந்தார். இந்திராணி ஆம்புலன்சு மூலம் குடியாத்தம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியில் அவரும் இறந்துவிட்டார்.
சொத்து தகராறில் தாய், தங்கையை விவசாயி அடித்து கொலை செய்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
குடியாத்தத்தில் சுண்ணாம்புப்பேட்டை, வைதீஸ்வரன்நகர், பெரியார்நகர், காமாட்சியம்மன் பேட்டை, புவனேஸ்வரிபேட்டை மற்றும் ஒன்றியத்தில் உள்ள வீ.டி.பாளையம், வி.எஸ்.புரம், செருவங்கி, கார்த்திகேயபுரம் ஆகிய பகுதிகளில் டாக்டர், மருந்தாளுனர், நர்சு, கர்ப்பிணி, சிறுவர்கள், பெண்கள் உள்பட 17 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டு வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
அதைத்தொடர்ந்து குடியாத்தம் அம்பாபுரம் ஜி.பி.எம். தெரு கொசஅண்ணாமலை தெரு இடையே ஒரு சந்தில் வசிக்கும் 70 வயது முதியவருக்கும், அவரின் 29 வயது மகளுக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
வட்டார மருத்துவ அலுவலர் விமல், மருத்துவர் பிரவீன், சுகாதார ஆய்வாளர் பிரேம்குமார் ஆகியோர் ஆம்புலன்சை வரவழைத்து, அதில் முதியவர், மகளை ஏற்றி வேலூர் அடுக்கம்பாறை மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அப்பகுதியில் குடியாத்தம் நகராட்சி ஆணையர் ரமேஷ் மேற்பார்வையில் நகராட்சி சுகாதாரப் பணியாளர்கள், தூய்மைப் பணியை செய்தனர். கிருமி நாசினி தெளித்தனர். அப்பகுதியில் தடுப்புகள் அமைத்து தடை செய்துள்ளனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அவருடைய மனைவி நளினி ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இருவரும் சந்திக்க முடியவில்லை. நளினி, முருகன் இருவரும் காணொளி மூலம் பேச அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு முருகன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று 9-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலை சோர்வடைந்துள்ளது. நேற்று இரவு முருகனுக்கு ஓ.ஆர்.எஸ். கரைசல் குளுக்கோஸ் ஏற்ற நடவடிக்கை எடுத்துள்ளனர்.
குடியாத்தம்:
குடியாத்தம் டவுன் போலீஸ் நிலைய எல்லைக்குள் குடியாத்தம் பழைய பஸ் நிலையம், சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம், மேல் ஆலத்தூர் ரோடு, பொன்னம்பட்டி, கொண்டசமுத்திரம் ஊராட்சி சாமியார் மலை அருகே என 5 இடங்களில் டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ளது.
தற்போது குடியாத்தத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் டாக்டர், மருந்தாளுனர், நர்ஸ் என 17 பேர் பாதிக்கப்பட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக சுண்ணாம்பு பேட்டை, வைதீஸ்வரன் நகர் பகுதியில் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதால் இப்பகுதியில் அருகே உள்ள பழைய பஸ் நிலையம், சுண்ணாம்புபேட்டை ஆற்றோரம், பொன்னம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் கடைகளை மூடுமாறு மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது.
இதனையடுத்து வேலூர் டாஸ்மாக் மேலாளர் சத்யன் மேற்பார்வையில் பொன்னம்பட்டி, குடியாத்தம் பழைய பஸ் நிலையம் அருகே, சுண்ணாம்பு பேட்டை ஆற்றோரம் ஆகிய பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளை சீல் வைத்தனர்.
மேலும் வெல்டிங் எந்திரம் மூலம் கடைகள் திறக்காமல் இருக்க வெல்டிங் செய்யப்பட்டது. இந்த கடைகள் சீல் வைக்கப்பட்டதால் மது வாங்க வந்த மது பிரியர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். மற்ற டாஸ்மாக் கடைகளுக்கு சென்று மதுபாட்டில்களை வாங்கி சென்றனர்.
வாலாஜா:
வாலாஜா அடுத்த அனந்தலையை சேர்ந்தவர் குமார் கட்டிட மேஸ்திரி. இவருக்கு 2 மகன்கள், 2 மகள்கள் இருந்தனர். இவரது இளைய மகன் கார்த்திகேயன் (வயது8).கார்த்திகேயன் அதே ஊரில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று மாலை கார்த்திகேயன் தனது அண்ணன் சந்தோஷ் உடன் அனந்தலை ஏரியில் குளித்து கொண்டிருந்தனர்.
கார்த்திகேயன் திடீரென ஆழமான பகுதிக்குச் சென்றார். அவருக்கு நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கினார்.
இதனைக்கண்ட சந்தோஷ் அலறியடித்துக் கொண்டு வீட்டிற்கு வந்து தகவல் தெரிவித்தார்.
குமார் மற்றும் அவரது உறவினர்கள் ஏரியில் மூழ்கிய கார்த்திகேயனை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் கார்த்திகேயன் பிணமாக மீட்கப்பட்டார் .
இதுகுறித்து கார்த்திகேயன் தாயார் மோகனா வாலாஜா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வாலாஜாவில் அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக கொரோனா நிலவரம் குறித்து முன்னாள் செய்தி வாசிப்பாளர் வரதராஜன் கூறியது அவருடைய சொந்த கருத்து. இதற்காக அவர் மீது வழக்கு பதிவு செய்தது சரியானதல்ல.
கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய மாநில அரசுகள் முழுமையான தோல்வியடைந்துள்ளது.
கேரளாவில் முதன் முதலில் கண்டுபிடிக்கப்பட்ட போது வெளிநாட்டு விமான போக்குவரத்து ரத்து செய்து முழு ஊரடங்கை கடைபிடித்து இருந்தால் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருக்க முடியும்.
அதைவிடுத்து மார்ச் மாதத்தில் ஊரடங்கு செய்தது பலனளிக்கவில்லை.
கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் மற்றும் பல்வேறு தொழில் நுட்பங்களில் முன்னேறியுள்ள நிலையில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்க முடியவில்லை.
சீனாவில் பி.சி.ஆர் சோதனை கருவிகள் வாங்கியதில் ஊழல் நடந்துள்ளது.
10-ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய கோரி போராட்டம் அறிவித்து இருந்தோம். இந்த நிலையில் இன்று தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
நிகழ்ச்சியில் வசந்தகுமார் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ. அசேன், காங்கிரஸ் மாவட்ட தலைவர் பஞ்சாட்சரம், ஒன்றிய தலைவர் ஜானகிராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது.
அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டில் 1,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. அங்கு 1,386 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுள் மருத்துவர்கள் தவிர மற்ற நான்கு பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
பொதுமக்களிடம் கொரோனா தொற்று வேகமாக பரவுகிறது. பொதுமக்கள் வெளியில் செல்லும்போது முகக் கவசம் அணிந்து செல்லவேண்டும், கடைகளில் பொருட்களை வாங்கும்போது சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும், அடிக்கடி கைகளை சோப்புப்போட்டு கழுவ வேண்டும் என அரசு அறிவுறுத்தி வருகிறது. 5-வது கட்ட ஊரடங்கில் சில தளர்வு செய்யப்பட்டுள்ளதால் பஸ்கள், ரெயில்கள் இயக்கப்படுகின்றன. பொதுமக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி உள்ளனர். எனினும், வெளியில் இரு சக்கர வாகனங்களில் செல்லும் பலர் முகக் கவசம் அணியவில்லை.
வேலூர் மாநகராட்சி 1-வது மண்டலம் காட்பாடி பகுதியில் முகக் கவசம் அணியாத பொதுமக்களிடம் இருந்து தலா ரூ.100 அபராதம் வசூலிக்கப்பட்டு வருகிறது. சுகாதார அலுவலர் பாலமுருகன் தலைமையில் சுகாதாரத்துறையினர் முகக் கவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதித்தனர். இதுவரை மொத்தம் ரூ.16 ஆயிரம் அபராத தொகை வசூலிக்கப்பட்டு உள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்து வரும் முருகன் அவருடைய மனைவி நளினி ஆகியோர் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.
15 நாட்களுக்கு ஒருமுறை இருவரும் சந்திக்க கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ஊரடங்கு காரணமாக இருவரும் சந்திக்க முடியவில்லை. நளினி, முருகன் இருவரும் காணொளி மூலம் பேச அனுமதிக்குமாறு சிறை நிர்வாகத்துக்கு முருகன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால் சிறை நிர்வாகம் அனுமதி மறுத்துவிட்டது. இதனால் மனவேதனையில் இருந்த முருகன் கடந்த 1-ந்தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இன்று 8-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் இருந்தார். அவரது உடல் நிலையை டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர்.






