என் மலர்
நீங்கள் தேடியது "drowning student death"
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே உள்ள சடச்சிபட்டியைச் சேர்ந்தவர் உதயகுமார். இவரது தோட்டத்து கிணற்றில் அதே பகுதியைச் சேர்ந்த 10-ம் வகுப்பு மாணவர் விஷால் (வயது15). அவரது நண்பன் ஜெயக்கொடி (13) ஆகியோர் குளித்து கொண்டிருந்தனர்.
அப்போது விஷால் எதிர்பாராதவிதமாக தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக இறந்தார். கிணற்றுக்குள் குதித்ததில் ஜெயக்கொடி காயம் அடைந்தார். உடனடியாக அவரை ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.
சம்பவம் குறித்து உத்தப்பநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மாடசாமி வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.
மேட்டுப்பாளையம்:
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கிருஷ்ணாபுதூர் பகுதியை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ஹரிதாஸ் (வயது17). 10-ம் வகுப்பு முடித்து உயர் படிப்புக்காக காத்திருந்தார்.
இந்நிலையில் ராஜேந்திரனின் உறவினரின் திருமணம் மேட்டுப்பாளையத்தில் நடை பெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக ராஜேந்திரன் தனது குடும்பத்துடன் மேட்டுப்பாளையம் வந்திருந்தார்.
ஹரிதாஸ் மற்றும் அவரது நண்பர்கள் முரளி, ரஞ்சித் ஆகியோர் சந்தைப்பேட்டை அருகே உள்ள பவானி ஆற்றுக்கு குளிக்கச்சென்றனர். அப்போது திடீரென ஹரிதாஸ் ஆழமான பகுதிக்கு சென்று விட்டார். அப்போது ஆற்று வெள்ளம் அவரை அடித்துச்சென்றது.
அதிர்ச்சியடைந்த நண்பர்கள் இது குறித்து மேட்டுப்பாளையம் போலீசார் மற்றும் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் விரைந்து வந்து ஹரிதாசை தேடும்பணியில் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரமானதால் தேடும்பணி கைவிடப்பட்டது.
இதனையடுத்து நேற்று காலையும் பரிசல்காரர்கள் உதவியுடன் தேடும்பணி மீண்டும் தொடங்கியது. நீண்ட நேர தேடுதலுக்கு பின்னர் ஹரிதாசின் உடல் மீட்கப்பட்டது. உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்கு மேட்டுப்பாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.






