என் மலர்
செய்திகள்

முருகன்
முருகனுக்கு தினமும் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற முடிவு
வேலூர் ஜெயிலில் 10-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வரும் முருகனின் உடல்நிலை சோர்வடைந்து வருவதால் தினமும் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் உறவினர்களிடம் வாட்ஸ்-அப்பில் வீடியோ காலில் பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது மனைவியிடம் பேசவும் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 10-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக அவர் மிகவும் சோர்வடைந்துள்ளார். சிறைத்துறை டாக்டர்கள் அவரை கண்காணித்து வருகின்றனர். நேற்று முன்தினம் அவருக்கு 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. தொடர்ந்து அவரது உடல்நிலை சோர்வடைந்து வருவதால் தினமும் 2 பாட்டில் குளுக்கோஸ் ஏற்ற அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். உண்ணாவிரதத்தை கைவிடுமாறும் ஜெயில் அதிகாரிகள் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Next Story