என் மலர்tooltip icon

    செய்திகள்

    வேலூர் மாவட்டம்
    X
    வேலூர் மாவட்டம்

    வேலூரில் புதிதாக 8 பேருக்கு கொரோனா

    வேலூர் மாவட்டத்தில் இன்று 8 பேருக்கு கொரோனா உறுதியானதை அடுத்து பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.
    வேலூர்:

    தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 33,229 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 17,527 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். கொரோனாவுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 286-ஆக அதிகரித்துள்ளது.
     
    அதிகபட்சமாக சென்னையில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 23,298 ஆக அதிகரித்து முதலிடத்தில் உள்ளது. சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. செங்கல்பட்டில் 1,988 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. மூன்றாவது இடத்தில் திருவள்ளூர் மாவட்டம் உள்ளது. அங்கு 1,386 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

    இந்நிலையில் வேலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 95 பேருக்கு தொற்று கண்டறியப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 8 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 103 ஆக உயர்ந்துள்ளது.

    வேலூர் மாவட்டத்தில் தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் 4 பேர் உட்பட மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இவர்களுள் மருத்துவர்கள் தவிர மற்ற நான்கு பேர் சென்னையில் இருந்து வந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.  

    இதுவரை 38 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 3 பேர் உயிரிழந்துள்ளனர். 
    Next Story
    ×