என் மலர்
வேலூர்
காட்டன் சூதாட்டத்தில் கைதாகி குடியாத்தம் கிளை சிறையில் அடைக்கப்பட்ட கைதி திடீரென இறந்தார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
குடியாத்தம்:
வேலூர் ஆர்.என்.பாளையம் புதுஜண்டா தெருவைச் சேர்ந்தவர் அப்துல் ரகுமான். இவரின் மகன் இஸ்மாயில் பாஷா (வயது 42). இவர், நேற்று முன்தினம் காட்டன் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக வேலூர் தெற்குப் போலீசார் கைது செய்து, குடியாத்தம் கிளை சிறையில் இரவு அடைத்தனர்.
இந்த நிலையில் நேற்று காலை 10 மணியளவில் குடியாத்தம் கிளை சிறையில் இருந்த இஸ்மாயில்பாஷாவுக்கு திடீரென உடல் நலப் பாதிப்பு ஏற்பட்டது. அவரை, கிளை சிறை அதிகாரிகள் குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள், இஸ்மாயில்பாஷா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். அவரின் உடலை பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனை பிணவறையில் வைத்தனர்.
இதுகுறித்து குடியாத்தம் டவுன் போலீசில் குடியாத்தம் கிளை சிறை கண்காணிப்பாளர் பூவேந்திரன் புகார் அளித்தார். அதன்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், சப்-இன்ஸ்பெக்டர்கள் மணிகண்டன், ரவி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இஸ்மாயில்பாஷா இறந்த தகவல் அறிந்ததும், அவரின் உறவினர்கள் வேலூரில் இருந்து குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு வந்து அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். அவரின் உடலை குடியாத்தத்தில் இருந்து வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இறந்த இஸ்மாயில் பாஷாவுக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.
கிளை சிறையில் அடைக்கப்பட்டவர் இறந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மத்திய ஜெயிலில் முருகன் 16-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். உண்ணாவிரதம் காரணமாக சுமார் 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். முருகனின் உடல்நிலை சோர்வடைந்தால் குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது. நேற்று 16-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். உண்ணாவிரதம் காரணமாக சுமார் 3 கிலோ எடை குறைந்துள்ள முருகனின் உடல்நிலையை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள்.
மேலும் அவரிடம் உண்ணாவிரத்தை கைவிடும்படி ஜெயில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். முருகனின் உடல்நிலை குறித்து தினமும் சென்னை ஜெயில் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

வேலூர் பாகாயம் அருகே குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதால் தீக்குளித்த மாணவி சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
வேலூர்:
வேலூர் பாகாயம் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி, இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து முடித்திருந்தார். மாணவி வீட்டில் மேற்கூரை இல்லாத கழிப்பறையில் குளிக்கும் வீடியோவை அதே பகுதியை சேர்ந்த கணபதி என்கிற தாமஸ் (வயது 19), 17 வயது சிறுவன் ஆகியோர் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் 2 பேர் மற்றும் பென்னாத்தூரை சேர்ந்த பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (22) ஆகியோர் அந்த வீடியோவை வைத்து மிரட்டி உள்ளனர். அதனால் மனவேதனை அடைந்த மாணவி கடந்த 14-ந் தேதி உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதைக்கண்ட உறவினர்கள் அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். 90 சதவீத தீக்காயம் அடைந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதுகுறித்து பாகாயம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபா, போக்சோ உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிந்து 3 பேரையும் கைது செய்தார். 17 வயது சிறுவன் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். மற்ற 2 பேரும் குடியாத்தம் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று இரவு 11 மணியளவில் மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக போலீசார் மாற்றி உள்ளனர்.

நெமிலியை அடுத்த சம்பத்ராயன்பேட்டையில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
பனப்பாக்கம்:
நெமிலியை அடுத்த சம்பத்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த துணி வியாபாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று வியாபாரம் செய்து விட்டு கிராமம் திரும்பினார். இதையடுத்து சளிமாதிரி பரிசோதனை செய்தபோது துணி வியாபாரி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் 6 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
அதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் சளி, இருமல் காணப்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் 9 பெண்கள், 14 ஆண்கள் என்று மொத்தம் 23 பேருக்கு கொரோனா உறுதியானது. அதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த கிராமம் முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டது. தெருக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதேபோன்று பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருபெண், 2 ஆண்கள் ஆகிய 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

வேலூர் ஜெயிலில் முருகன் 15-வது நாளாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். அவர் யாருடனும் பேசாமல் தியான நிலையில் இருப்பதாகவும், அவரது உடல் எடை 3 கிலோ குறைந்து உள்ளதாகவும் ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்
வேலூர் :
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும், அவருடைய மனைவி நளினி பெண்கள் ஜெயிலில் தனி அறையிலும் அடைக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையாக வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் தங்களின் குடும்பத்தினர், உறவினர்களிடம் வீடியோ கால் மூலம் பேசி வருகிறார்கள். முருகன் தனது மனைவி மற்றும் உறவினர்களிடம் வாட்ஸ்-அப் வீடியோ கால் மூலம் பேச அனுமதிக்க சிறைத்துறை நிர்வாகத்துக்கு கோரிக்கை வைத்தார். ஆனால் அதற்கு சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
அதனால் மனவேதனை அடைந்த முருகன் ஜீவசமாதி அடைய வேண்டி கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். ஜெயில் அதிகாரிகள் உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் அவர் அதனை ஏற்காமல் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
கடந்த சில நாட்களுக்கு முன்பு முருகனின் உடல்நிலை சோர்வடைந்தது. அதைத்தொடர்ந்து அவருக்கு குளுக்கோஸ் ஏற்றப்பட்டது. ஜெயில் டாக்டர்கள் தினமும் முருகனின் உடல்நிலையை கண்காணித்து வருகிறார்கள். நேற்று 15-வது நாளாக முருகன் உண்ணாவிரதத்தை தொடர்ந்தார்.
இதுகுறித்து ஜெயில் அதிகாரிகள் கூறுகையில், முருகன் கடந்த 1-ந் தேதி முதல் ஜெயிலில் வழங்கப்படும் உணவை ஏற்க மறுத்து வருகிறார். அவர் உண்ணாவிரதம் இருப்பது தொடர்பாக சிறைத்துறை நிர்வாகத்துக்கு எவ்வித மனுவும் அளிக்கவில்லை. உண்ணாவிரதத்தை கைவிடும்படி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அவர் எதுவும் பேசவில்லை. முருகனின் உடல்நிலை சோர்வடையும்போது குளுக்கோஸ் ஏற்றப்பட்டு வருகிறது.
நேற்று முன்தினம் குளுக்கோஸ் ஏற்ற முயன்றபோது அதனை அவர் ஏற்க மறுத்துவிட்டார். முருகன் தனக்கு தேவையானவற்றை பேப்பரில் எழுதி காண்பிக்கிறார். பிறருடன் பேசுவதை தவிர்த்து விடுகிறார். ஜீவசமாதி அடைவதற்காக அவர் யாருடனும் பேசாமல் தியான நிலையில் உள்ளாரா? என்பது குறித்து தெரியவில்லை. தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகனின் உடல் எடை சுமார் 3 கிலோ குறைந்துள்ளது என்று தெரிவித்தனர்.

வாலாஜா அருகே வீட்டிற்கு தீ வைத்த வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாலாஜா:
வாலாஜாவை அடுத்த அனந்தலை கிராமம் பெரிய தெருவை சேர்ந்தவர் பிரபு (வயது 22). இவர், நேற்று முன்தினம் அருகில் உள்ள தகரகுப்பம் கிராமத்திற்கு செல்லும் வழியில் கந்தன் என்பவருக்கு சொந்தமான குடிசை வீட்டிற்கு தீ வைத்ததாக தெரிகிறது.
இதுகுறித்து கந்தன் வாலாஜா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பிரபுவை கைது செய்தனர்.

வடசென்னை மின்வாரியத்தில் பணியாற்றிய வேலூரை சேர்ந்த பொறியாளர் உள்பட 16 பேர் ஒரே நாளில் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அதன்மூலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்துள்ளது.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை 181 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று ஒரே நாளில் மின்வாரிய பொறியாளர், ஒருவயது பெண் குழந்தை, எல்லை பாதுகாப்புப்படை வீரர் உள்பட 16 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
வேலூரை அடுத்த சித்தேரியைச் சேர்ந்தவர் 55 வயது ஆண். இவர் வடசென்னை மின்வாரிய அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவர் கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு திரும்பினார். அப்போது அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் எவ்வித அறிகுறியும் காணப்படவில்லை.
பின்னர் சளி, இருமல் காரணமாக வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் சளிமாதிரி சோதனை செய்தார். அதில், நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதையடுத்து அவர் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மேலும் அவரின் குடும்பத்தினர் 3 பேரும் அதே மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
வேலூர் மண்டித்தெருவில் அரிசி கடை நடத்தி வந்த வேலப்பாடியை சேர்ந்த வியாபாரிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று உறுதியானது. நேற்று அந்த கடையில் பணிபுரிந்த வேலப்பாடியை சேர்ந்த 64 வயது முதியவர், சேண்பாக்கத்தை சேர்ந்த 29 வயது வாலிபர் ஆகியோரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் நிறுவனத்தில் பணிபுரிந்த மேல்பாடி மின்சார வாரிய காலனியை சேர்ந்த 3 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்தனர். 3 பேருக்கும் சளிமாதிரி பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்றால் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதேபோன்று அசாம் மாநிலத்தில் எல்லை பாதுகாப்புப்படை வீரராக பணியாற்றி விட்டு சொந்த ஊருக்கு திரும்பிய 35 வயது வாலிபர், சைதாப்பேட்டையை சேர்ந்த 35 வயது வாலிபர், மேட்டுபாளையம் 70 வயது முதியவர், காட்பாடி பாரதிநகரை சேர்ந்த இளம்பெண், காட்பாடி அருகே உள்ள நாராயணபுரத்தை சேர்ந்த 26 வயது வாலிபர், வள்ளலாரை சேர்ந்த 39 வயது ஆண், சேண்பாக்கத்தை சேர்ந்த 64 வயது முதியவர், சத்துவாச்சாரியை சேர்ந்த 27 வயது வாலிபர், காட்பாடி செங்குட்டையை சேர்ந்த ஒருவயது பெண்குழந்தை, வடுகந்தாங்கலை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய 16 பேருக்கும் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 16 பேருடன் பழகிய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் 40 பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 197 ஆக உயர்ந்ததாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

குளிக்கும் போது திருட்டுத்தனமாக வீடியோ எடுத்து சமூகவலைதளத்தில் பதிவிடுவதாக மிரட்டியதால் 10-ம் வகுப்பு மாணவி மண்எண்ணெய் ஊற்றி தீக்குளித்தார். இதுதொடர்பாக கட்டிட தொழிலாளி உள்பட 3 பேரை பிடித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
வேலூர்:
வேலூர் பாகாயம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 15 வயது மாணவி. இவர் பென்னாத்தூர் அரசு பள்ளியில் இந்த ஆண்டு 10-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். மாணவி கடந்த சில நாட்களுக்கு முன்பு அவருடைய வீட்டில் மேற்கூரை இல்லாத கழிப்பறையில் குளித்துள்ளார். இதனை அதே பகுதியை சேர்ந்த கட்டிட தொழிலாளி பூனை கண்ணன் என்கிற ஆகாஷ் (வயது 22) மற்றும் பிளஸ்-2 முடித்துள்ள 17 வயது சிறுவர்கள் 2 பேர் செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். பின்னர் 3 பேரும் இதுகுறித்து மாணவியிடம் தெரிவித்து தனியாக வரும்படி தொல்லை கொடுத்துள்ளனர். அவர்களின் செல்போனில், குளிக்கும் வீடியோ இருப்பதை மாணவி நம்ப மறுத்துள்ளார். இதையடுத்து 3 பேரும் மாணவியின் உறவினரின் செல்போன் வாட்ஸ்-அப்பிற்கு அந்த வீடியோவை அனுப்பி, அதை உடனடியாக பார்க்கும்படி தெரிவித்து உள்ளனர். அதனை கண்டு திடுக்கிட்ட மாணவி உடனடியாக அந்த வீடியோவை அழித்து உள்ளார். மேலும் அவர், செல்போனில் வைத்துள்ள வீடியோவை அழித்து விடும்படி 3 பேரிடமும் கெஞ்சி உள்ளார்.
அப்போது அவர்கள், மாணவியை தாங்கள் கூறும் இடத்துக்கு தனியாக வரும்படியும், வீடியோ குறித்து யாரிடம் தெரிவிக்க கூடாது என்றும் கூறிஉள்ளனர். மேலும் தனியாக வராவிட்டாலோ, இதுகுறித்து பிறரிடம் தெரிவித்தாலோ குளிக்கும் வீடியோவை வாட்ஸ்-அப், யு-டியூப், முகநூல் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிடுவோம் என்று மிரட்டி உள்ளனர்.
அதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி நேற்று முன்தினம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் உடலில் மண்எண்ணெயை ஊற்றி தீ வைத்து கொண்டார். உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்து வலியால் மாணவி அலறி துடித்தார். அவரது அலறலை கேட்ட உறவினர்கள் அங்கு வந்து அவரை மீட்டு அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து பாகாயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் இன்ஸ்பெக்டர் சுபா வழக்குப்பதிவு செய்தார். மேலும் இதுதொடர்பாக சிகிச்சை பெற்று வரும் மாணவியிடம் விசாரணை நடத்தினார். அப்போது அவர், குளிக்கும் வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிடுவதாக 3 பேர் மிரட்டியதால் தீக்குளித்தாக வாக்குமூலம் அளித்து உள்ளார்.
அதைத்தொடர்ந்து போலீசார் ஆகாஷ் உள்பட 3 பேரையும் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் வேலூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வேலூர் மாவட்டத்தில் பெண் போலீஸ் உள்பட 10 பேர் ஒரே நாளில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. நேற்று ஒரே நாளில் பெண் போலீஸ் உள்பட 10 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
அவர்களின் விவரம் வருமாறு:-
வேலூர் நாகநதி கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் 32 வயது பெண். இவர் வேலூர் வடக்குப் போலீஸ் குற்றப்பிரிவில் போலீசாகப் பணியாற்றி வருகிறார். கடந்த ஒரு மாதமாக அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு வார்டு கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டார். கணியம்பாடியில் உள்ள பாட்டி வீட்டில் தங்கியிருந்து பணிக்கு வந்து சென்றுள்ளார்.
இந்த நிலையில் அவருக்கு கொரோனா அறிகுறி காணப்பட்டது. அதையடுத்து அவரின் சளி மாதிரியை சேகரித்து பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இதற்கிடையே நேற்று முன்தினம் அவர் வேலூர் வடக்குப் போலீஸ் நிலையத்துக்கு வந்து முகக் கவசம் வாங்கி சென்றுள்ளார். இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீஸ் நிலையம் மற்றும் வளாகம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வேலூர் வேலப்பாடி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வந்த அரிசி வியாபாரியின் உறவினர்கள் 3 பேருக்கு நேற்று கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் தேங்காய் வியாபாரம் செய்த சைதாப்பேட்டை பி.எம்.செட்டி தெருவைச் சேர்ந்த 77 வயது முதியவர், நேதாஜி மார்க்கெட்டில் உள்ள காய்கறி கடையில் வேலை பார்த்த கருகம்புத்தூரை சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தேங்காய், காய்கறி கடைகளில் வேலை பார்த்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அருகில் கடை நடத்தி வந்த வியாபாரிகள், ஊழியர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட உள்ளது.
ஏற்கனவே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட ஒருவர் வேலை பார்த்து வந்த, அதே பிஸ்கட் கடையில் வேலை பார்த்த சைதாப்பேட்டையைச் சேர்ந்த 25 வயது வாலிபர் மற்றும் 22 வயது இளம்பெண், காட்பாடி தாராபடவேட்டை சேர்ந்த 47 வயது ஆண், சின்ன லத்தேரியைச் சேர்ந்த 40 வயது ஆண் ஆகியோரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 10 பேருடன் பழகிய குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர்களின் சளி மாதிரியைச் சேகரித்து ஆய்வுக்காக அனுப்பப்பட உள்ளனர். அதன் மூலம் வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 181 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சேர்க்காடு பள்ளி வளாகத்தில் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை மீட்கப்பட்டது. அதனை வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவலம்:
வேலூர் மாவட்டம் திருவலத்தை அடுத்த சேர்க்காட்டில் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இப்பள்ளி வளாகத்தில் பின்புறம் உள்ள சுற்றுச்சுவர் ஓரம் முட்புதரில் இருந்து நேற்று காலை குழந்தை ஒன்றின் அழுகுரல் கேட்டது.
அதனை கேட்ட அப்பகுதி மக்கள் உடனடியாக அங்கு சென்று பார்த்த போது, முட்களால் குத்திய நிலையிலும், எறும்பு கடித்து கொண்டிருந்த நிலையிலும் பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தை உடலில் துணி எதுவும் சுற்றாமல் நிர்வாண நிலையில் அழுது கொண்டிருந்தது.
உடனடியாக அப்பகுதி மக்கள் குழந்தையை மீட்டு, சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் திருவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சேர்க்காடு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் மலர்விழி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, குழந்தையை மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்து, சிகிச்சை அளித்தார். பின்னர் திருவலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிச்சாண்டி மற்றும் டாக்டர் மலர்விழி ஆகியோர் குழந்தையை மேல்சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஈவு இரக்கமின்றி பிறந்து சில மணி நேரமேயான பெண் குழந்தையை அனாதையாக வீசி சென்ற கல் நெஞ்சம் படைத்த தாய் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச அனுமதிக்க கோரி 12-வது நாளாக முருகன் உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வேலூர்:
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளார். கொரோனா தொற்று காரணமாக கைதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்கள் சந்திக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கு மாற்றாக அவர்கள் வாட்ஸ்-அப் வீடியோ காலில் பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் முருகன் உறவினர்களிடம் அவ்வாறு பேச அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும் அவர் தனது மனைவி நளினியிடம் பேசவும் சிறைத்துறை நிர்வாகம் அனுமதி அளிக்கவில்லை.
இதனால் மனமுடைந்த முருகன் கடந்த 1-ந் தேதி முதல் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். நேற்று அவர் 12-வது நாளாக உண்ணாவிரதத்தை தொடர்ந்தார். தொடர் உண்ணாவிரதம் காரணமாக முருகன் மிகவும் சோர்வடைந்து காணப்படுகிறார். அவரின் உடல்நிலை மோசமானால் உடனடியாக மீண்டும் குளுக்கோஸ் ஏற்றப்படும். உண்ணாவிரதத்தை கைவிடுமாறு அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.

வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
வேலூர்:
வேலூர் மாநகராட்சி கமிஷனர் சங்கரன் உத்தரவின்பேரில் வேலூரில் முககவசம் அணியாத நபர்கள் மற்றும் கையுறை, முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று வேலூர் 2,3,4-வது மண்டல சுகாதார அலுவலர்கள் பல்வேறு இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது முககவசம் அணியாத பொதுமக்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு அபராதம் விதித்தனர். 2-வது மண்டலத்தில் ரூ.5 ஆயிரமும், 3-வது மண்டலத்தில் ரூ.1,200-ம், 4-வது மண்டலத்தில் ரூ.13 ஆயிரம் அபராதம் என்று மொத்தம் ரூ.19,200 அபராதம் விதித்து வசூலிக்கப்பட்டது.