என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    சம்பத்ராயன்பேட்டையில் 23 பேருக்கு கொரோனா

    நெமிலியை அடுத்த சம்பத்ராயன்பேட்டையில் 23 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
    பனப்பாக்கம்:

    நெமிலியை அடுத்த சம்பத்ராயன்பேட்டை கிராமத்தை சேர்ந்த துணி வியாபாரி கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னைக்கு சென்று வியாபாரம் செய்து விட்டு கிராமம் திரும்பினார். இதையடுத்து சளிமாதிரி பரிசோதனை செய்தபோது துணி வியாபாரி மற்றும் அவருடைய குடும்பத்தை சேர்ந்த 5 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அதையடுத்து அவர்கள் 6 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

    அதைத்தொடர்ந்து அந்த கிராமத்தில் சளி, இருமல் காணப்பட்ட நபர்களுக்கு சளிமாதிரி சேகரிக்கப்பட்டன. அதன் பரிசோதனை முடிவுகள் வந்தன. இதில் 9 பெண்கள், 14 ஆண்கள் என்று மொத்தம் 23 பேருக்கு கொரோனா உறுதியானது. அதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அந்த கிராமம் முழுவதும் ‘சீல்’ வைக்கப்பட்டது. தெருக்கள் அனைத்தும் அடைக்கப்பட்டு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.

    இதேபோன்று பனப்பாக்கத்தை அடுத்த உளியநல்லூர் கிராமத்தை சேர்ந்த ஒருபெண், 2 ஆண்கள் ஆகிய 3 பேரும் கொரோனாவினால் பாதிக்கப்பட்டனர். அவர்களும் வாலாஜா அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
    Next Story
    ×